படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி

Thursday, August 28, 2008

இயக்குனர் சீமானை கண்டு உலகமே நடுங்குகிறது

தம்பி படத்தில் மாதவன், பூஜாவின் காதலை ஏற்று கொண்டவுடன் தடாலென்று மாதவன் காலில் விழுந்து நன்றி தெரிவிப்பார் பூஜா(மணியம்மையார் பெரியார் காலில் விழுந்ததாக நான் படித்ததில்லை). இதுபோன்ற புரட்சிகரமான காட்சிகளையும். பாஞ்சாலகுறிச்சி படத்தில் வரும் ஒரு பாடலில் "என் சேலை கசங்கிடும் யோகம் இன்னைக்கு போன்ற கருத்துள்ள பாடல்களையும் இயக்கிய சீமானை பார்த்து இந்த உலகமே நடுங்குகிறது.

கோவையில் இவர்கள் நடத்திய விழாவை தடுக்க நினைத்த 15 பேர் கொண்ட ஆர்.ஸ்.ஸ் மதவெறி கும்பலை பெரியார் தொண்டர்கள் நன்கு கவனித்து அனுப்பினார்களாம். அப்புறம் இவர்கள் விழா நடைபெற்ற கோவை, கவுண்டம்பாளையம் ஆர்.ஸ்.ஸ் காரர்களின் கோட்டையாம். அட ராமா... எண்ணிபார்த்தால் ஐம்பது பேர் கூட இருக்க மாட்டார்கள் அந்த இயக்கத்தில். இவர்களை விரட்டி அடித்ததை பெருமையாக கூறி நம்ம நண்பர் மதிமாறன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தகறாறு செய்ய வந்த ரவுடிகளை நோக்கி, “வாடா, தில்லு இருந்தா மோதி பாருடா, நீயா நானா பாத்துருலாம்” என்று நெஞ்சு நிமிர்த்தி நின்ற சீமானின் துணிச்சல் மரியாதைக்குரியதாம். 600 பேர் உடன் இருக்கும் போது 15 பேரை விரட்டி அடிப்பதில் என்ன வீரம் இருக்கிறது.

சேகுவாரா படத்தையும், உறுமும் புலியின் படத்தை போட்ட பனியனை அணிந்தால் வீரம் தானா வந்துவிடுமா. ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் தனியாளாய் நின்று எதிர்த்து கருத்து சொல்லும் தைரியம் இங்கெ எத்தனை பேருக்கு இருக்கு (ரஜினி?). அதை தவிர்த்து மேடையும் மைக்கும் இருந்த்தால் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி கைத்தட்டல் வாங்குவது என்ன பெரிய சாதனையா?

பெரியார் மீண்டும் வந்தால் முதல் வேலையா இவர்கள் எல்லோரையும் ஓட ஓட விரட்டிட்டு தான மறு வேலை பார்பார். சமுக சீர்திருத்தம், பெண் விடுதலை, தீண்டாமை, கடவுள் மறுப்பு, ஜாதி ஒழிப்பு, முட நம்பிக்கையை ஒழிப்பு என பல முகங்களை கொண்ட திரவிட கழகம் இப்பொழுது வெறும் இந்து மத எதிர்ப்பை மட்டுமே தனது கொள்கையாக வைத்துள்ளது.

ஏழைகள் பசியோடு இருக்க சாமி சிலைக்கு பாலை ஊற்றினால் அவன் முகத்தில் காறி துப்பிவிட்டு அடுத்த வேலையை பார். அதை தவிர்த்து போய் பத்து பேரை கூப்பிட்டு, இதையே பொழப்பாக வைத்துக் கொண்டு தெருவுக்கு தெரு மேடை போட்டு, ஊரை கூட்டி அவன் பொழப்பையும் கெடுக்காதீங்க.

அப்புறம் நாலு பேர் மேடையில் கூட இருக்கும் போது யார் யாரை வேண்டுமானாலும் எதிர்க்கலாம் (தி.க.வும், பி.ஜே.பி இருவரும்தான்), ஒத்தைக்கு ஒத்தை வாடான்னு சொல்லலாம். ஆனால் இவர்களில் பெரும்பாலானவர்கள் இரவில் ஒன்னுக்கு போக மனைவியின் துணையை நாடுபவர்களே.

பெரியார் தொண்டர்களும் ஆர்.ஸ்.ஸ் காரர்களும் போடுவது தெருநாய் சண்டை. இரு பிரிவையும் சாரா மக்கள் இவர்களை கண்டால் ஒதுங்கி போவார்களே அன்றி யாருக்கும் ஆதரவு தரமாட்டார்கள்.

Labels:

Wednesday, August 13, 2008

தமிழ்மணத்தில் உங்கள் பதிவு சூடான இடுகையில் வர வேண்டுமா

தமிழ்மணத்தில் உங்கள் பதிவு சூடான இடுகையில் வர வேண்டுமா. இங்கே கொடுக்கபட்டிருக்கும் தலைப்பில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து, பதிவு போடுங்கள். எங்கள் பதிவு சூடான இடுகையில் வருவது எங்கள் நோக்கமல்ல, தரமான பதிவைதான் நாங்கள் பதிவோம் என்று கூறுபவர்கள், இப்பதிவின் கடைசி பகுதில் உள்ள தலைப்புகளை உபயோகபடுத்தி கொள்ளலாம்.

முதலில் சூடான தலைப்புகள்.

அப்துல் காலம் கண்ட கணவுகள்
அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு
இளைஞர்கள் முன்னேற கடைப்பிடிக்க வேண்டியவை.
விவேகாநந்தரின் பொன் மொழிகள்.
தினம் ஒரு திருக்குறள்
மரம் வளர்ப்பதின் பயன்கள்
ப்ளாஸ்டிக் உபயோகபடுதுவதன் முலம் வரும் கேடுகள்.
இயற்கை முறையில் விவசாயம்.
மரம் வளர்ப்போம் பயன் பெறுவோம்.
இந்தியா முன்னேற நாம் செய்ய வேண்டியது என்ன??
மூலிகை மருத்துவம்.
சுதந்திர போராட்ட தியாகிகள் - சிறு குறிப்பு

தரமான தலைப்புகள்.

ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவியை கற்பழித்த காம வெறியன்
மூன்றெழுத்து நடிகை அடிக்கடி வெளிநாடு போகும் மர்மம்.
குருவி பார்ட் 2 - நடிகர் விஜய் அறிவிப்பு
தமிழின துரோகி ரஜினி - சத்தியராஜ்.
ஆசை அண்ணி - சிறுகதை
சிங்கள ராணுவம் மீண்டும் அட்டுழியம்.
இந்தியாவில் குண்டு வெடிப்பதற்கு காரணம் இந்து வெறியர்களே.
மல்கோவா மாமி, சுவைக்கும் சுமதி - லக்கி லுக் திரைவிமர்சணம்
தமிழ்மண நிர்வாகிகளுக்கு ஒரு பகிரங்க கடிதம்
நீச்சல் உடையில் நயன்தாரா.
சென்னையில் விபச்சாரம் - நேரடி ரிப்போர்ட்

Labels:

Tuesday, August 12, 2008

'ப்ரியா' விகடன் திரை விமர்சனம் (1978) 52/100

ஜாய்ஃபுல் சிங்கப்பூரையும், கலர்ஃபுல் மலேசியாவையும் ப்ரியாவுக்காக சுருட்டிக் கொண்டு வந்திருக்கிறார்கள் எஸ்.பி.டி. பிலிம் சார். கவர்சிகரமான டைட்டில்களுக்காக பிரசாத் புரொடக்ஷனுக்கு முதுகில் ஒரு தட்டு தட்டலாம் !

ஜூலியஸ் சீசர் நாடகத்தில் ரஜினியின் நடை, உடை, பாவனை உறுமல் ஆனாலும் சிவாஜியை நினைவுபடுத்தும் படியாக செய்திருக்க வேண்டாம் !

அடிக்கடி 'ரைட்' என்ற மேனரிசம். அதை ரஜினி வெளூத்துக் கட்டுகிறார். ஆனால் தியேட்டரில் 'ஹோல் டான்' என்று கத்துமளவுக்கு ஓவர் டோஸ் !

கண்ணுக்கு குளிர்சியான சிங்கப்பூர் காட்சிகள். கிளிகள் சர்க்கஸ் செய்யும் அழகு, துள்ளி விளையாடும் நீர் நாய்கள் வந்து விளையாடுவது, இவை எல்லாமே குழந்தைகளோடு பெரியவர்களூம் கண்களை அகல விரித்துப் பார்க்கும் படியான காட்சிகள். இதற்கே நாம் கொடுக்கும் காசு செரித்துப் போகிறது.

ரீ ரீகாட்டிங்கில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறார் இளையராஜா. ஆனால் பாடல்களில் அவருடைய வழக்கமான 'பெப்' இல்லையே..! டார்லிங்...டார்லிங் தவிர.

ஆங்கிலப் படங்களுக்கு இணையாக ஒரு கார் சேஸை இணைக்க வேண்டிய (ஒட்டு வேலை பிரமாதம்!) இடத்தில் இணைத்திருக்கிறார்கள். ஹாட் லி சேஸ் காவல் மாதிரி விறு விறுப்பு!

தே.சீனிவாசனின் தயாரிப்பாளர் - டைரக்டர் காமெடி நயமான ஸடயைர். பக்கோட காதர் கூட ரொம்ப பிஸி என்னும் போது தியேட்டரில் தான் எத்தனை கைதட்டல்! ( கன்னடத்து தங்கவேலு) சிவராமுடன் சேர்ந்து நல்ல கலகலப்பு. அந்த உடம்பு பிடிப்பு காட்சி உச்சம்!

ரஜினியைக் கொலை செய்ய வில்லன் கூட்டம் கொக்கின் தலையில் வெண்ணையைத் தடவுகிறது. 'சீஸர்' நாடகத்தில் நிஜக்கத்தியை வைத்து விடுவதன் முலம். ( அந்த காலத்து இல்லற ஜோதியில் 'சாக்ரடீஸ்' நாடகத்தில் சிவாஜியைக் கொல்ல உண்மையான விஷத்தை வைத்து விடுவார்கள்.) இதில் ரஜினி தப்பிய மர்மம்? அவர் என்ன வக்கீலா அல்லது மந்திரவாதியா?

இறந்ததாகச் சொல்லி காட்டப் பட்ட ப்ரியா, மெழுகு பொம்மை என்கிறார் இன்ஸ்பெக்டர் கடைசியில் இந்த 'ப்ரியா' கொலை மர்மம், மூலக் கதையில் அழகாகப் பின்னப் பட்டிருந்தது. அதைப் படத்தில் கொலை செய்த்து விட்டார்கள்.

சிங்கப்பூர் 97% கதை 3% - கலவை விகிதம் சரியாக இல்லையே!

ஒரு ரகசியம்: குமுதத்தில் சுஜாதா 'ப்ரியா' என்ற தலைப்பில் தொடர் கதை ஒன்று எழுதியிருந்தார். அதிலிருந்து 'நைஸாக' இரண்டொரு காட்சிகளை இந்தப் படத்தில் 'காப்பி' அடித்து விட்டார்களோ என்ற சந்தேகம் லேசாக உண்டாகிறது - நம்கேன் வம்பு!

Tailpiece: இந்த படத்தை அண்ணா தியேட்டரில் பார்த்தோம். படம் முடிந்து வெளியே வர தியேட்டரில் ஒரே வழிதான். அதுவும் எங்கோ பாதாளத்துக்குப் போய், மாடிப் படி ஏறி, எட்டுப் படி இறங்கி.... மவுண்ட் ரோடிலிருந்து மந்தை வெளிப்பாக்கத்துக்குப் போகிறோமோ என்ற பிரமை! ஆபத்து என்றால் தப்பி ஓடக் கூட வழியில்லையே!!

முன்பாதி 28/50 + பின்பாதி 24/50 = மொத்தம் 52/100
-விகடன் விமர்சனக்குழு

Labels:

Wednesday, August 6, 2008

குசேலன் - லக்கிலுக் பதிவில் வெளிவராத பின்னூட்டங்கள்

நம்ம லக்கிலுக் குசெலன் படம் பாத்த பாவத்தை கழுவ பத்து பத்து படம் பார்த்தாராம். படமும் எப்படினா "நல்ல' சாப்ட் ஃபோர்னோ கம் த்ரில்லராம்" கேட்டுக்கோங்க ஜனங்களே. இது பத்தாதுனு சோனா படத்த வேற பதிவுல போட்டு தூள் கிளப்பிருக்காரு. அதை இன்னும் பாக்காதவங்க உடனே http://madippakkam.blogspot.com/2008/08/blog-post_04.html போய் பார்த்து உங்க பிறவி பயனை அடைஞ்சுருங்க.

அவரோட பதிவ படிச்சுட்டு நானும் ஒரு பின்னூட்டம் போட்டு வச்சேன். எப்படீனா,உங்க தலைவர் கலை விழா என்ற பேரில் மேடையில் லைவ்வா பாக்குறதை நீங்க தியேட்டர்ல பார்க்கூறீங்க..தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழி...கலக்குங்க...வாழ்க தமிழ்நாடு.

ஆனா பாருங்க, இந்த மாதிரியெல்லாம் பின்னூட்டம் போட்டா, ஜெயலலிதா, சுப்பரமணியசாமியோட திட்டமிட்ட சதியோ என்னமோ தெரியில, நம்ம பின்னூட்டம் அவர் பதிவுல வரவே மாட்டேங்கறது. ஆனா நம்ம லக்கி ரொம்ப நடுநிலையான விமர்சகர் ஆச்சே, இந்த விசயம் தெரிஞ்சா ரொம்ப feel பண்ணுவாரே, அதான் என்னோட பதிவில போட்டுட்டேன்.

அப்புறம் பத்து பத்து' - குசேலனை விட பத்து மடங்கு தரமாம். கொஞ்ச நாளைக்கு முன்பு சுட்ட பழம்னு ஒரு பின் நவினதுவ இலக்கிய படம் ஒன்றையும் பாராட்டி எழுதியிருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடதக்கது.

அஞ்சரைக்குள்ள வண்டி, சுவைக்கும் சுமதி, மல்கோவா மாமி போன்ற பின்நவினதுவ கலைப்படங்களையும் பார்த்து படங்களுடன் விமர்சணம் போடுங்கள். ம்ம்ம்.. தமிழை வளர்க்க என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கறது.

அப்புறம் சோனாவிற்கு இந்தாண்டு கலைமாமணி பட்டம் உங்க தலைவர் கையால கிடைச்சுரும்ல ??

Labels: