படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி

Thursday, February 19, 2009

மீண்டும் தரணியுடன் இனைகிறார் டாக்டர்.விஜய்

எது நடக்க கூடாதுன்னு நம்ம நினைச்சு பயந்திட்டு இருந்தமோ அது நடக்க போகுது! விஜயின் ஐம்பதாவது படத்தை தரணி இயக்கவிருக்கிறார்.

கதை விவாதம் பாண்டிச்சேரிக்கு அருகில் இருக்கும் ஒரு பீச் ரிசார்டில் நடந்து வருகிறது. அதில் பங்கு பெற்ற ஒரு உதவி இயக்குனரும் பதிவருமான (அதான் இப்ப எந்த பதிவர கேட்டாலும், நான் சினிமால இருக்கேன்னு சொல்றது ஃபேஷனாயிடுச்சே) எனது நண்பர் படத்தின் கடைசி இருபது நிமிட திரைக்கதையை அனுப்பியுள்ளார்.

பிரகாஷ்ராஜ், விஜயின் அம்மாவை கொலை செய்து, தங்கச்சியை கற்பழித்து. வீட்டையும் கொளுத்தி விட்டு நயண்தாராவை அமெரிக்காவிற்கு கடத்தி போய் விடுகிறார். விஜய் உடனே காதலியை காப்பாற்ற அமெரிக்கா போக வேண்டிய கட்டாயம், ஆனால் தளபதியிடம் விசா,பாஸ்போர்ட், கையில காசு, எதுவுமே இல்லை. இப்ப இளைய தளபதி என்ன பண்ண போறாரோனு ரசிகர்கள் எல்லா டென்ஷனா இருக்க. மீனாம்பாக்கத்திற்கு மீன் பாடி வண்டியில வேகமா போயிட்டிருந்தவர் அப்படியே வண்டிய ஒரு யூ டர்ன் அடிச்சி, மவுண்ட் ரோடில் இருக்கும் எல்.ஐ.சி பில்டிங்கிற்கு வந்து ரெண்டே ஜம்பில் மொட்டை மாடிக்கு போயிடறாரு...அப்போ பார்த்து கரெட்டா சென்னை to அமெரிக்கா
போர்டை தொங்க விட்டு ஒரு ஏர் டெக்கான் ஃபளைட் அந்த பக்கமா போறத விஜய் பார்த்துட்டாரு. ரசிகர்களும் சரி தளபதி ஒரே டைவில் விமானத்தோட இறக்கையை புடிச்சுட்டே அமெரிக்கா போயிடுவாருன்னு நினைச்சு விசிலடிக்க தயாராக அங்க தான் ஒரு ட்விஸ்ட்......

மொட்டை மாடியில் இருந்து டைவ் அடித்தது என்னவோ உண்மை, ஆனா அவர் அப்படியே நேர போய் விமானத்தை பிடிக்கவில்லை அதற்கு பதிலா தனது ரெண்டு கையையும் இறக்கை மாதிரி வைத்துக் கொண்டு ஏர்லையே பனிரெண்டு மணிநேரமா மிதக்குறார். அவர் மிதந்தா என்ன பூமி தான் சுத்துதே, பனிரெண்டு மணி நேரம் கழிச்சு அவர் கீழே குதிச்சா அது அமெரிக்கா!!!

அப்புறம் என்ன, முகத்துல சந்தனத்தை பூசிட்டு எல்லா வில்லன்களையும் கொன்று விட்டு நயந்தாராவை அழைச்சுட்டு அதே ஸ்டைலில் இருவரும் இந்தியாவில் லேண்டாகிறார்கள்.

டிஸ்கி 1: sms ல வந்ததை கொஞ்சம் உப்பு, புளி,காரம் போட்டு கலந்திருக்கிறேன்..

டிஸ்கி 2: sms ல வந்தது ஒன் லைன் ஸ்டோரி தான். ஆனா திரைக்கதை எழுதியது நானு(ஹைய்... இப்ப நானும் சினிமால இருக்கேன்) அதனால என்னை கேட்காம விஜயோ அல்லது வேறு எந்த நடிகராவது இதை பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்..

Labels:

47 Comments:

 • At February 19, 2009 at 4:31 PM , Blogger கார்க்கி said...

  இதுக்கு நான் மீ த ஃபர்ஸ்ட் போடனுமா?

   

 • At February 19, 2009 at 4:31 PM , Blogger கார்க்கி said...

  லேபிளை தயவு செய்து டாக்டர். விஜய் என்று மாற்றவும்

   

 • At February 19, 2009 at 4:35 PM , Blogger வால்பையன் said...

  //மீண்டும் தரணியுடன் இனைகிறார் விஜய்//


  அந்த தெலுங்கு படத்தோட பெயர் என்ன?

   

 • At February 19, 2009 at 4:38 PM , Blogger Bleachingpowder said...

  //கார்க்கி said...
  லேபிளை தயவு செய்து டாக்டர். விஜய் என்று மாற்றவும்
  //

  நீங்க கேட்டு இல்லைன்னு சொல்ல முடியுமா? உங்களுக்காக லேபிள் என்ன தலைப்பிலே டாக்டர் விஜய்னு போட்டாச்சு...பீ ஹேப்பி :)

   

 • At February 19, 2009 at 4:39 PM , Blogger Bleachingpowder said...

  //வால்பையன் said...
  அந்த தெலுங்கு படத்தோட பெயர் என்ன?
  //

  சமோசகுள்ள ரொட்டியாம் தல...

   

 • At February 19, 2009 at 4:42 PM , Blogger வால்பையன் said...

  திரைகதை அருமையா இருக்கு!
  சன் பிக்சர்ஸ் இதை தயாரித்தால் பொருத்தமாக இருக்கும்!

   

 • At February 19, 2009 at 4:44 PM , Blogger வால்பையன் said...

  சமோசகுள்ள ரொட்டியாம் தல..//

  தெலுங்கு டைட்டில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்
  ஆனால் சமீப காலமாக தளபதி எம.டாக்டர்.விஜய் மூன்றெழுத்து டைட்டிலில் மட்டும் தான் நடிப்பார், அதற்கு ஒரு நல்ல டைட்டில் ச்சூஸ் பண்ணுங்க!

   

 • At February 19, 2009 at 4:44 PM , Blogger Bleachingpowder said...

  //வால்பையன் said...

  திரைகதை அருமையா இருக்கு!
  சன் பிக்சர்ஸ் இதை தயாரித்தால் பொருத்தமாக இருக்கும்!
  //

  நல்ல ரேட் வந்தா நானும் வித்துரலாம்னு தான் இருக்கேன் தல...நல்ல பார்ட்டி எதாவது மாட்டுனா கொஞ்சம் இங்க தள்ளி வுடுங்க :)

   

 • At February 19, 2009 at 4:47 PM , Blogger வால்பையன் said...

  //நல்ல பார்ட்டி எதாவது மாட்டுனா கொஞ்சம் இங்க தள்ளி வுடுங்க :) //

  பெரிய குழியா வெட்டி வையுங்க!
  தள்ளி விட்டுடலாம்.

   

 • At February 19, 2009 at 4:48 PM , Blogger Bleachingpowder said...

  //வால்பையன் said...
  தெலுங்கு டைட்டில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்
  ஆனால் சமீப காலமாக தளபதி எம.டாக்டர்.விஜய் மூன்றெழுத்து டைட்டிலில் மட்டும் தான் நடிப்பார், அதற்கு ஒரு நல்ல டைட்டில் ச்சூஸ் பண்ணுங்க!
  //

  எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா...கழுகு,கொக்கு,தவளைனு எதாவது ஒன்ன வச்சிடுவோம்.

   

 • At February 19, 2009 at 4:51 PM , Blogger வால்பையன் said...

  //எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா...கழுகு,கொக்கு,தவளைனு எதாவது ஒன்ன வச்சிடுவோம்.//

  ஜூப்பரு!
  எதுக்கும் உங்க ப்ரெண்டு கார்க்கிகிட்ட ஒரு வார்த்தை கேட்டுறுங்க!

   

 • At February 19, 2009 at 4:51 PM , Blogger Bleachingpowder said...

  //வால்பையன் said...
  பெரிய குழியா வெட்டி வையுங்க!
  தள்ளி விட்டுடலாம்.
  //

  அதான் அவர வச்சு படமே எடுக்க போறோமே,குழி வேற தனியா வெட்டனுமா தல

   

 • At February 19, 2009 at 4:54 PM , Blogger Bleachingpowder said...

  //வால்பையன் said...
  ஜூப்பரு!
  எதுக்கும் உங்க ப்ரெண்டு கார்க்கிகிட்ட ஒரு வார்த்தை கேட்டுறுங்க!
  //

  படத்துக்கு வசனமே அவர் தானே எழுத போறாரு. அட்வான்ஸ் எல்லாம் கொடுத்தாச்சு

   

 • At February 19, 2009 at 5:17 PM , Blogger Bleachingpowder said...

  test

   

 • At February 19, 2009 at 5:41 PM , Blogger நான் ஆதவன் said...

  பத்து பதினைஞ்சு ஆட்டோவில பொருளோட ஆள உங்க ரூமுக்கு அனுப்புறதுக்கு கார்க்கி பேரம் பேசிட்டிருக்கறதா உளவுத்துறை தகவல் தந்திருக்கு....உசார் தல....

   

 • At February 19, 2009 at 5:54 PM , Blogger ஆனந்த் said...

  Niriya thappu irukku.
  Nayanthara cannot be next heroine..Vijay Range-ae vera - So could be Ileiyana, Anushka or Tamanna

  Vijay side la yaarume eppavum weak aaga maatanga...so nobody rapes vijay's sister.

  Pls add Vijay's dialogue & punch to villain

  3 duet (2 kuthu + 1 ordinary), oru intro song, oru remix/rap

  4-5 fight, athula 2 severe chasing, 1 unbelievable heroism, 1 comedy
  6-8 punch dialogue, 2-3 style/mannerism
  (ithukke kanna kattuthey)
  ithellam serthu kattina, vijay package ready. atha vittutu, kathai yellam solli asingapadutha padaathu...

   

 • At February 19, 2009 at 6:50 PM , Blogger அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

  :-))))))

   

 • At February 19, 2009 at 7:24 PM , Blogger ஆ! இதழ்கள் said...

  அதற்கு பதிலா தனது ரெண்டு கையையும் இறக்கை மாதிரி வைத்துக் கொண்டு ஏர்லையே பனிரெண்டு மணிநேரமா மிதக்குறார். அவர் மிதந்தா என்ன பூமி தான் சுத்துதே, பனிரெண்டு மணி நேரம் கழிச்சு அவர் கீழே குதிச்சா அது அமெரிக்கா!!!//

  இந்த ஒரு சீனுக்கே படம் பிச்சுகிட்டு ஓடுமே... ஐடியாவ குறைஞ்ச விலைக்கு வித்துறாதீங்க...

   

 • At February 19, 2009 at 8:05 PM , Blogger இசை said...

  very old matter..

   

 • At February 19, 2009 at 8:19 PM , Blogger Bleachingpowder said...

  //நான் ஆதவன் said...
  பத்து பதினைஞ்சு ஆட்டோவில பொருளோட ஆள உங்க ரூமுக்கு அனுப்புறதுக்கு கார்க்கி பேரம் பேசிட்டிருக்கறதா உளவுத்துறை தகவல் தந்திருக்கு....உசார் தல....
  //

  நெனைச்சேன் தல..தெரு முனையில் ஒரு பத்து பதினைஞ்சு பேரு முகத்துல சந்தனத்தை பூசிட்டு நின்னுட்டு இருந்தாங்க, அப்பவே மைல்டா ஓரு டவுட் வந்துச்சு. இவர் வேலை தானா...சரி கடையை ஒரு வாரத்திற்கு மூடிற வேண்டியது தான்

   

 • At February 19, 2009 at 8:25 PM , Blogger Bleachingpowder said...

  //ஆனந்த் said...
  Niriya thappu irukku.
  3 duet (2 kuthu + 1 ordinary), oru intro song, oru remix/rap
  4-5 fight, athula 2 severe chasing, 1 unbelievable heroism, 1 comedy
  6-8 punch dialogue, 2-3 style/mannerism
  (ithukke kanna kattuthey)
  ithellam serthu kattina, vijay package ready.
  //

  இதுவும் ரெடி ஆனந்த். பத்து தெலுங்கு படம், இரண்டு ஹிந்தி படம், மூனு ஹாலிவுட் படம், ஒரு பழைய ரஜினி படம் எல்லாத்திலையும் ரெண்ட சீன உருவி கதையை ரெடி பண்ணியிருக்கிறேன். பார்க்கலாம் எந்த தயாரிப்பாளருக்கு அதிர்ஷ்டம் இருக்குனு..

  வருகைக்கு நன்றி ஆனந்த்

   

 • At February 19, 2009 at 8:28 PM , Anonymous Anonymous said...

  கவுண்டமணியும், வில்லு பட விஜயும்


  கவுண்டமணி: ச்சே.. போன எடுத்தா நச்சு நச்சுன்னுராங்கப்பா.. ஏதோ வில்லுன்னு விஜய் படமாம்.. அத விஜய் ரசிகங்களாலேயே பார்க்க முடியலையாம்.. என்ன பாக்க சொல்றாங்க.. அட இது பரவா இல்ல.. சோசியல் மேட்டர், பண்ணிக்கலாம்.. ஆனா விஜய் பாட்டுக்கெல்லாம் என்ன ஆட சொல்றாங்கப்பா.. நான் என்ன விஜய் மாதிரி ஆடுகாலியா இல்ல பரதேசியா? ஒரே குஷ்டமப்பா.. ச்சீ... கஷ்டமப்பா..

  விஜய்: ங்கண்ணா.. போன் வயரு பிஞ்சு ஒரு வாரம் ஆகுதுங்கன்னா..


  கவுண்டமணி: ஹே ஹே.. ஹெய்ஹெய்.. டே டப்சா தலையா.. இது செல்போன்டா.. உன்னயல்லாம் ஹீரோவா போட்டு படம் எடுக்குறான் பாரு அவன சொல்லணும்..

  விஜய்: போங்கண்ணா.. உங்களுக்கு ஒரே குறும்பு.. கம்பெனி சீக்ரட் எல்லாம் வெளியில சொல்லிக்கிட்டு.. சரி சரி.. இப்போ நம்ம பாட்ட கேளுங்க..
  "ஹே ராமா ராமா ராமன்கிட்ட வில்ல கேட்டேன்
  பீமா பீமா பீமன்கிட்ட கதைய கேட்டேன்
  முருகு முருகு முருகன்கிட்ட மயில கேட்டேன்..
  ஈசன் ஈசன் ஈசன் கிட்ட மலைய கேட்டேன்"

  கவுண்டமணி:நிறுத்துடா ஆப்பிரிக்கா வாயா.. இவ்வளவு கேட்டியே.. பிரபுதேவாகிட்ட கதை என்னன்னு கேட்டியா?

   

 • At February 19, 2009 at 8:30 PM , Blogger Bleachingpowder said...

  //அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
  :-))))))
  //

  வருகைக்கு நன்றி பாஸ்கர் :)

   

 • At February 19, 2009 at 8:38 PM , Blogger Bleachingpowder said...

  //ஆ! இதழ்கள் said...
  இந்த ஒரு சீனுக்கே படம் பிச்சுகிட்டு ஓடுமே... ஐடியாவ குறைஞ்ச விலைக்கு வித்துறாதீங்க...
  //

  இப்பவே ஆந்திராவுல இருந்து ஒரே போன் கால்ஸ், பதில் சொல்லி முடியல...யாரோ சீரஞ்சீவியாம், நம்ம ப்ளாகை படிச்சுட்டு எவ்வளவு செலவானாலும் பரவால முழு ஸ்கிரிப்டையும் என்கிட்ட கொடுதிடுங்கனு கேட்டாரு நான் "நோ"னு சொல்லீட்டேன். இந்த ஸ்கிரிப்டுக்கு டாக்டர் நடிச்சாதான் ஒரு மரியாதையே. என்ன சார் நான் சொல்லுறது.

  முதல் வருகை நன்றி ஆ இதழ்கள் :)

   

 • At February 19, 2009 at 8:40 PM , Blogger Bleachingpowder said...

  //இசை said...
  very old matter..
  //
  ஆமாங்க :)

   

 • At February 19, 2009 at 8:43 PM , Blogger Bleachingpowder said...

  //அட இது பரவா இல்ல.. சோசியல் மேட்டர், பண்ணிக்கலாம்.. ஆனா விஜய் பாட்டுக்கெல்லாம் என்ன ஆட சொல்றாங்கப்பா.. நான் என்ன விஜய் மாதிரி ஆடுகாலியா இல்ல பரதேசியா? ஒரே குஷ்டமப்பா.. ச்சீ... கஷ்டமப்பா..
  //

  செம லொள்ளுங்க இது. இதை ஏற்கனவே எங்கேயோ படிச்ச நியாபகம்.

   

 • At February 19, 2009 at 8:46 PM , Blogger Bleachingpowder said...

  கும்மிகளே. இந்த பதிவு சும்மா ஜாலிக்கு தான். யாரும் சீரியஸா எடுத்துகாதீங்க. நான் எழுதுறத யாருமே சீரியஸா எடுத்துக்க மாட்டீங்கன்னு தெரியும், இருந்தாலும் சொல்லிக்கிறேன்

   

 • At February 19, 2009 at 11:06 PM , Anonymous Anonymous said...

  ////வால்பையன் said...
  தெலுங்கு டைட்டில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்
  ஆனால் சமீப காலமாக தளபதி எம.டாக்டர்.விஜய் மூன்றெழுத்து டைட்டிலில் மட்டும் தான் நடிப்பார், அதற்கு ஒரு நல்ல டைட்டில் ச்சூஸ் பண்ணுங்க!
  //

  எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா...கழுகு,கொக்கு,தவளைனு எதாவது ஒன்ன வச்சிடுவோம்.//

  பன்னி டைட்டில் கூட நல்ல் தான் இருக்கு

   

 • At February 20, 2009 at 5:25 AM , Anonymous நோயாளி said...

  This comment has been removed by a blog administrator.

   

 • At February 20, 2009 at 5:27 AM , Anonymous நோயாளி said...

  This comment has been removed by a blog administrator.

   

 • At February 20, 2009 at 6:48 AM , Blogger Swami www ji said...

  This comment has been removed by the author.

   

 • At February 20, 2009 at 6:48 AM , Blogger Swami www ji said...

  aha inum oru vijay padama!!! Thala sutthudhu da sami... vijay arasiyaluku pogudhu nu sonnanga appuram edhuku innum padam kuduthu kollanum? idhellam andhra pakkam veratunka da sami tholla thanga mudiyala!

   

 • At February 20, 2009 at 7:10 AM , Blogger Bleachingpowder said...

  ஹேய் அனானிஸ்...நோ பேட் வேர்ட்ஸ்...

   

 • At February 20, 2009 at 7:14 AM , Blogger Bleachingpowder said...

  deleting abusing comments posted by Anonymous.Also temporarly blocking them posting comments

  மக்களே திரும்பவும் சொல்றேன் சும்மா ஜாலியா கலாய்ச்சா போதும்.

   

 • At February 20, 2009 at 10:41 AM , Blogger Anbu said...

  அண்ணா திரைக்கதை நன்றாக உள்ளது. \\தனது ரெண்டு கையையும் இறக்கை மாதிரி வைத்துக் கொண்டு ஏர்லையே பனிரெண்டு மணிநேரமா மிதக்குறார்\\ இது ரொம்ப அதிகம் அண்ணா.வெறும் பத்து நிமிடம் போதும் டாக்டர்.விஜய் அமெரிக்கா போக!!
  முதன்முறை உங்கள் பதிவிற்கு பின்னூட்டமிடுகிறேன்!!

   

 • At February 20, 2009 at 10:51 AM , Blogger ஷாஜி said...

  உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது...

   

 • At February 20, 2009 at 12:40 PM , Blogger Bleachingpowder said...

  //Swami www ji said...
  idhellam andhra pakkam veratunka da sami tholla thanga mudiyala!
  //

  வாங்க சுவாமிஜி...என்ன இப்படி சொல்லீடீங்க, இப்பெல்லாம் தெலுங்குல சூப்பர படம் எடுக்க ஆரம்பிச்சுடாங்க. நம்ம தான் இன்னும் சுமோவையும், அருவாளையும் வச்சு படமெடுத்துட்டு இருக்கோம்

   

 • At February 20, 2009 at 12:46 PM , Blogger Bleachingpowder said...

  //Anbu said...
  அண்ணா திரைக்கதை நன்றாக உள்ளது.
  //

  ஹீஹீஹி...நெம்ப நன்றிங்க :)

  //இது ரொம்ப அதிகம் அண்ணா.வெறும் பத்து நிமிடம் போதும் டாக்டர்.விஜய் அமெரிக்கா போக!!
  //

  கரெட்டு ஆனா அப்படி படமெடுத்தா, படம் சீக்கரமா முடிஞ்சிடுமே

  //முதன்முறை உங்கள் பதிவிற்கு பின்னூட்டமிடுகிறேன்!!//

  ரொம்ப நன்றி.அடிக்கடி வாங்க அன்பு :)

   

 • At February 20, 2009 at 12:49 PM , Blogger Bleachingpowder said...

  //ஷாஜி said...
  உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது...
  //

  அது ஊர்க்குருவி. இந்த குருவி பறக்கும், பாயும், பல்டி அடிக்கும், ரொமேண்டிக்கா ஒரு லுக்கு கூட வுடும்.

  வருகைக்கு நன்றி ஷாஜி.

   

 • At February 20, 2009 at 3:24 PM , Blogger VIKNESHWARAN said...

  :))

   

 • At February 20, 2009 at 3:40 PM , Blogger Swami www ji said...

  aama bealching,

  andhra karan kooda thirundhitan ...tamilanukku dhan innum vidivukaalam(edhulayum n engayum) pirakala :-(

   

 • At February 20, 2009 at 4:44 PM , Anonymous Anonymous said...

  //இப்பவே ஆந்திராவுல இருந்து ஒரே போன் கால்ஸ், பதில் சொல்லி முடியல...யாரோ சீரஞ்சீவியாம், நம்ம ப்ளாகை படிச்சுட்டு எவ்வளவு செலவானாலும் பரவால முழு ஸ்கிரிப்டையும் என்கிட்ட கொடுதிடுங்கனு கேட்டாரு நான் "நோ"னு சொல்லீட்டேன். இந்த ஸ்கிரிப்டுக்கு டாக்டர் நடிச்சாதான் ஒரு மரியாதையே. என்ன சார் நான் சொல்லுறது

  அங்கயும் ஒரு டாக்டர் (ராஜசேகர்) இருக்காருங்கோவ்

   

 • At February 20, 2009 at 5:57 PM , Blogger Bleachingpowder said...

  //suttapalam said...
  //இப்பவே ஆந்திராவுல இருந்து ஒரே போன் கால்ஸ், பதில் சொல்லி முடியல...யாரோ சீரஞ்சீவியாம், நம்ம ப்ளாகை படிச்சுட்டு எவ்வளவு செலவானாலும் பரவால முழு ஸ்கிரிப்டையும் என்கிட்ட கொடுதிடுங்கனு கேட்டாரு நான் "நோ"னு சொல்லீட்டேன். இந்த ஸ்கிரிப்டுக்கு டாக்டர் நடிச்சாதான் ஒரு மரியாதையே. என்ன சார் நான் சொல்லுறது

  அங்கயும் ஒரு டாக்டர் (ராஜசேகர்) இருக்காருங்கோவ்
  ////

  ண்ணா...அவர் அந்த டாக்டர் பட்டத்தை கஷ்டப்பட்டு படிச்சு வாங்குனாருங்கன்னா...நம்மாளுக்கு டாக்டர் பட்டம் வீடு தேடி வந்துச்சு அதனால நம்ம டாக்டர் பட்டம் தான் பெருசு :)

   

 • At February 20, 2009 at 5:58 PM , Blogger Bleachingpowder said...

  //VIKNESHWARAN said...
  :))
  //

  வாங்க விக்னேஷ், நம்ம கடைக்கு ரொம்ப நாளைக்கு பிறகு வந்துருக்கீங்க

   

 • At February 20, 2009 at 8:25 PM , Blogger HS said...

  உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

  கேள்வி. நெட்

   

 • At February 23, 2009 at 9:43 PM , Blogger MayVee said...

  mudiyala sami.....


  erndu lime juice kudithu vitu varugiren

   

 • At February 24, 2009 at 12:40 PM , Blogger Bleachingpowder said...

  //MayVee said...
  mudiyala sami.....
  erndu lime juice kudithu vitu varugiren
  //

  :)))))) இப்பவே கண்ண கட்டிருச்சா உங்களுக்கு

   

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home