படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி

Tuesday, October 7, 2008

எழுத்துலக சூப்பர் ஸடார் வச்ச ஆப்பு !!

அதிர்ஷ்டதை ஆங்கிலத்தில் குறிக்கும் சொல்லை முதலாவதாக வைத்து பதிவு எழுதிவரும் பதிவர் சமீபத்தில், தன்னுடைய பேரை வைத்து பதிவெழுதி பேரையும், புகழையும் அதனால் வரும் பணத்தை வைத்து போயஸ் கார்டனில் நாலு பங்களாவும், குன்னூரில் நானூறு ஏக்கர் டீ எஸ்டேட்டும், வாங்கி குவிப்பதாக ஒரு பதிவில் கழிந்திருந்தார் சாரி பதிந்திருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

அதே போல் பாருவை திட்டியோ இல்லை பாராட்டியோ அவருக்கு கடிதம் எழுதினால் அவற்றில் ஒரிரெண்டை பொறுக்கி, அவ்வபோது அவர் தளத்தில் வெளியிட்டு வந்தார். இதுவும் அனைவரும் அறிந்ததே. இதை பார்த்த சில பதிவர்கள், தங்களுடைய தளத்தை பற்றி எதாவது எழுத மாட்டாரா அதனால் நாமும் பிரபலாமான எழுத்தாளர் என்று வெளியே போய் பீத்திக்கலாம்னு நினைச்சு, அவரை ஆகா ஒகோனு சிலர் புகழ ஆரம்பிச்சாங்க.

இவங்களுக்கு பாருவை பத்தி இன்னமும் சரியா தெரியல. வசதியில் குறைவென்றாலும் ரோசத்தில் மனுசன் கோடீஸ்வரன். இவருடைய அதிர்ஷ்டம்(??) அவர் ஆன்லைனில் இருக்க, அவரை நீ சும்மா தானா இருக்கே வா பீச்சுக்கு, நாம சுண்டகஞ்சி குடிச்சிட்டே பேசுவோம்ற ரீதியிலா கூப்பிட்டிருக்காரு. இது போதாத பாருவிற்கு அவருடைய தளத்தில் இவரை ,"என்னுடைய இந்த மனிதாபிமானப் பண்பைத் தங்களுக்குச் சாதகமாக நினைத்துக் கொண்டு பலரும் நம்முடைய தலைக்கு மேல் ஏறிக் கொண்டு நம்மைக் கழுதை மேய்க்கப் பார்க்கிறார்கள்னு." கீழி கீழின்னு கீழிச்சு தோரணம் கட்டிட்டாரு.

இதுல பெரிய சோகம் என்னனா அவர் நாகரிகம் கருதியோ என்னமோ கடைசி வரைக்கும் தன்னை கூப்பிட்ட பதிவர் யாருன்னே சொல்லலை. அத அப்படியே விட்டிருக்கலாம்.

ஆனா நம்மாளு திட்டறத தான் திட்டுறாரு நம்ம பேரை போட்டு திட்டுனா, வடிவேலு மாதிரி, எல்லாரும் பாத்துக்கோங்க நானும் ரவுடிதான்னு சொல்லிக்கிலாம்னு பாத்த அவரும் வெறுத்து போய், நான் தான் அவரை அப்படி கூப்பிட்டேன்னு, இப்ப பகிரங்க கடிதம் எழுதியிருக்காரு. பாவம் எப்படி இருந்த டமாரு கொமாரு இப்படி ஆயிட்டாரு.

இப்பதிவின் நீதி : மெலியோரை வலியோர் ஏளனம் செய்தால், அந்த வலியோருக்கு ஆப்படிக்க ஒரு மாதத்திற்குள் அடுத்த ஆள் வருவான்.

டிஸ்கி 1 : இப்பதிவு யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால், அதற்கு நான் ஒன்னும் பண்ண முடியாது.

டிஸ்கி 2 : தமிழ் நாட்டில் நிலவும் மின் வெட்டிற்கும் இந்த பதிவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

டிஸ்கி 3 : நான் அவனில்லை.

Labels:

51 Comments:

  • At October 7, 2008 at 4:21 PM , Blogger வால்பையன் said...

    என்னாங்க இது சினிமா கிசு கிசு மாதிரி இருக்கு

     

  • At October 7, 2008 at 4:21 PM , Blogger வால்பையன் said...

    ஒண்ணுமே புரியல

     

  • At October 7, 2008 at 4:22 PM , Blogger வால்பையன் said...

    நான் தான் பர்ஸ்டா

     

  • At October 7, 2008 at 4:22 PM , Blogger வால்பையன் said...

    ஏன் ரொம்ப நாளா பதிவே எழுதல

     

  • At October 7, 2008 at 4:23 PM , Blogger வால்பையன் said...

    ஆணி ரொம்பவா

     

  • At October 7, 2008 at 4:23 PM , Blogger வால்பையன் said...

    யாரையும் காணோம்

     

  • At October 7, 2008 at 4:23 PM , Blogger வால்பையன் said...

    நானும் கிளம்புறேன்

     

  • At October 7, 2008 at 4:24 PM , Blogger வால்பையன் said...

    என் பங்கிற்கு

     

  • At October 7, 2008 at 4:24 PM , Blogger வால்பையன் said...

    நானும் அவனில்லை

     

  • At October 7, 2008 at 4:24 PM , Blogger வால்பையன் said...

    10

     

  • At October 7, 2008 at 4:33 PM , Blogger Bleachingpowder said...

    //ஏன் ரொம்ப நாளா பதிவே எழுதல//
    //ஆணி ரொம்பவா//

    வாங்க வாலு. புடுங்குன ஆணி எல்லாமே தப்பு, திரும்பவும் போய் புடுங்குனு டேமேஞர் சொல்லிட்டரு.

    அப்புறம் நான் எழுதுனா என்ன நீங்க எழுதுனா என்ன, எல்லாம் ஒன்னுதானுங்களே :))

     

  • At October 7, 2008 at 4:34 PM , Blogger Bleachingpowder said...

    //நானும் அவனில்லை//

    நம்ம கிட்டயேவா :))

     

  • At October 7, 2008 at 4:38 PM , Blogger Bleachingpowder said...

    //என்னாங்க இது சினிமா கிசு கிசு மாதிரி இருக்கு. ஒண்ணுமே புரியல//

    யாருக்கும் புரிய கூடாதுனு தானே அப்படி எழுதிருக்கேன். நிச்சயம் அவர் யாருன்றதை யாரும் கண்டு பிடிக்க முடியாது. ஆனா இதையும் அவர் தானா வந்து என்னை பத்தி பினாயில் பவுடர் இப்படி எழுதிட்டான்னு எதிர் பதிவு போடாம இருந்தா சரி

     

  • At October 7, 2008 at 5:15 PM , Blogger யோசிப்பவர் said...

    ப்ளீச்சிங் பவுடர்,
    எனக்கும் அந்த பிரபல, அதிர்ஷ்டத்தை ஆங்கிலத்தில் பெயராக வைத்துக் கொண்டு, பகுத்தறிவு பதிவுகள் எழுதும் அந்தப் பதிவரின் பெரும்பாலான(கிட்டத்தட்ட அனைத்து) செயல்கள்/கருத்துகளில் உடன்பாடு கிடையாது. ஆனால் அவர் பாருவை அழைத்த விதத்தில், எனக்கு ஒரு குறையும் இருப்பதாகத் தெரியவில்லை. சாட்டில் அழைப்பு விடுத்திருந்தாலும் கூட, அதில் மரியாதையாகத்தான் கூப்பிட்டிருக்கிறார். பாரு அதை மறுப்பது அவரது உரிமை/தனிப்பட்ட விஷயம். ஆனால் அதை அம்பலத்தில் ஏற்றி மறுத்திருக்கிறார். ஆனால் அந்த மறுப்பில் நாகரிகம்தான் மிஸ்ஸிங். என்னை இப்படியா அழைப்பது என்று குதித்திருக்கிறார். பாரு இதை சாட்டில் மறுத்ததோடு நிறுத்தியிருக்கலாமே. சரி வலையேற்றும்பொழுதாவது, அதை நாகரிகமாக சொல்லியிருக்கலாமே!
    //என்னுடைய இந்த மனிதாபிமானப் பண்பைத் தங்களுக்குச் சாதகமாக நினைத்துக் கொண்டு பலரும் நம்முடைய தலைக்கு மேல் ஏறிக் கொண்டு நம்மைக் கழுதை மேய்க்கப் பார்க்கிறார்கள்னு." //
    என்று எழுதும் அளவிற்கு, சாட்டில் நாகரிகமாக அழைப்பு விடுப்பது குற்றமா? இதில் இவரது பண்புக்கு பெயர் மனிதாபிமானம் வேறயாம்.

    ஆக, இதை முதலில் அம்பலத்து கொண்டு வந்தது, "திரு". பாரு அவர்கள். அதற்கு நமது பதிவர் போட்ட எதிர் பதிவும் நாகரிகமாகவே இருந்தது. அதனால அவரை இந்த விஷயத்தில் குறை காணுவது, உங்களது தனி மனித வெறுப்பாகவே எனக்குத் தெரிகிறது.

    ஆனால் ஒன்று. சாட்டில் அழைத்த வரிகள் பற்றி பதிவர் சொல்லி தெரிய வந்ததுதான். அந்த வார்த்தைகள் உண்மையாய் இருக்கும் பட்சத்தில், இந்த விஷயத்தில் நான் பதிவர் பக்கமே!!

    நானும் பெயர்களை குறிப்பிடாமலேயே "நாகரிகமாக" பின்னூட்டமிட்டு விட்டேன்.

     

  • At October 7, 2008 at 5:17 PM , Blogger யோசிப்பவர் said...

    நான் அவன்தான்!!;)

     

  • At October 7, 2008 at 5:26 PM , Blogger யோசிப்பவர் said...

    Dear vaal paiyan/bleaching powder,
    I have seen some bad words in one of the comments of your older post. Please have a good environment.

     

  • At October 7, 2008 at 5:50 PM , Blogger வால்பையன் said...

    யோசிப்பவருக்கு என்னுடைய பதிவில் அடுத்தவர் மனம் புண்படும் போல் பின்னூட்டங்கள் இருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
    இனிமேல் அவ்வாறு நடக்காமல் ஆவன செய்வேன்.

    இப்போதும் சொல்கிறேன்,
    என்னிடம் சொல்ல வேண்டியதை என்னிடம் சொல்லுங்கள்
    ப்ளீச்சிங் பவுடரிடம் சொல்ல வேண்டியதை அவரிடம் சொல்லுங்கள்.
    நான் அவர் இல்லை

     

  • At October 7, 2008 at 5:52 PM , Blogger Bleachingpowder said...

    வாங்க யோசிப்பவர்.

    உங்களுடைய கருத்து சரிதான். இந்த இருவரையுமே எனக்கு பிடிக்காது. so இவங்களோட சண்டைய நான் ஜாலியா வேடிக்கை பார்த்திட்டிருக்கேன். அவ்வளவுதான், யார் மேல தப்புன்ற விவாததிற்குள் எனக்கு போகவே தோனலை. ஆனா அதிர்ஷ்டதை ஆங்கிலத்தில் குறிக்கும் சொல்லை முதலாவதாக வைத்து பதிவு எழுதிவரும் பதிவருக்கு பாருவின் ஆதரவு தேவை. அதனால் தான் அவர் அவ்வளவு கேவலமா எழுதியும், இன்னும் அவர தாஜா பண்ணிட்டிருக்காரு.

    ஆனா இந்த இருவருக்கும் அபாயகரமான ஒற்றுமை நிறைய இருக்கு.
    ஆணவம், என்னை மாதிரி எழுத எவன் இருக்கான்னு நினைக்கிற திமிர்.தவறை சுட்டி காட்டினால் ஒப்புகொள்ளாதது. குடியை பற்றி சிலாகித்து எழுதுவது. கொஞ்சம் திறமை. நிறைய சுய தம்பட்டம்னு சொல்லிட்டு போலாம்.

     

  • At October 7, 2008 at 5:52 PM , Blogger http://urupudaathathu.blogspot.com/ said...

    ///////இப்பதிவின் நீதி : மெலியோரை வலியோர் ஏளனம் செய்தால், அந்த வலியோருக்கு ஆப்படிக்க ஒரு மாதத்திற்குள் அடுத்த ஆள் வருவான்.///


    வழி (கிழி )மொழிகிறேன்..

     

  • At October 7, 2008 at 5:55 PM , Blogger http://urupudaathathu.blogspot.com/ said...

    ஐய்யா , எனக்கு தெரியுமே ... ஆனா சொல்ல மாட்டேன் ..

     

  • At October 7, 2008 at 6:23 PM , Blogger தறுதலை said...

    யாயும் யாயும்
    யாரையோ அழைக்கட்டும்.
    அழைக்காமல் போகட்டும்.

    சந்துல சிந்து பாடுறது மாதிரி
    சூ....த்து..... மண்ணிக்கனும் சூப்பர் ஸ்டார் பட்டத்த கொடுத்ததுதான் தள முடியல. ஏற்கனவே ஒரு சூ..... ஸ்டார வச்சிகிட்டு அதகளப் படுறது போதாதா?

    ------------------------
    தறுதலை
    (தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

     

  • At October 7, 2008 at 6:31 PM , Blogger கார்க்கிபவா said...

    அதுலையும் அவருக்கு ரஜின்யை அழைத்த மாதிரி அழைக்கனுமாம்.. ங்கொய்யால சாரு வடிவேலு மாதிரி.. அவரயெல்லாம் கூப்பிட்டதே அதிகம்.. வாப்பான்னா வர வேண்டியதுதானே..இல்லைன வர மாட்டேனு சொல்ல வேண்டியதுதானெ..

     

  • At October 7, 2008 at 6:34 PM , Anonymous Anonymous said...

    பிளீச்சிங் பவுடர், சூடான இடுகையில் இடம் பிடித்ததற்கு வாழ்த்துகள்.

    உங்கள் பதிவை படிப்பவன் என்கின்ற முறையில் சொல்கின்றேன், வேறு எதையாவது எழுதுங்கள்.

     

  • At October 7, 2008 at 7:10 PM , Blogger Bleachingpowder said...

    //ஐய்யா , எனக்கு தெரியுமே ... ஆனா சொல்ல மாட்டேன் //

    உஷ்ஷ்ஷ்....பேர சொல்லாதீங்க அணிமா:))

    //வழி (கிழி )மொழிகிறேன்..//

    நன்றி உருப்புடாதது அணிமா :))

     

  • At October 7, 2008 at 7:12 PM , Blogger Bleachingpowder said...

    //வாப்பான்னா வர வேண்டியதுதானே..இல்லைன வர மாட்டேனு சொல்ல வேண்டியதுதானெ..
    //

    வாங்க கார்க்கி. என்ன பொறுத்த வரைக்கும் இவங்க ரெண்டு பேரும் குட் காம்பினேஷன் :)

     

  • At October 7, 2008 at 7:18 PM , Blogger ☀நான் ஆதவன்☀ said...

    யோசிப்பவரின் யோசனையை வழிமொழிகிறேன்...
    ஆமா நீங்க அவர் தானே????
    அவர் நீங்க தானே???

     

  • At October 7, 2008 at 7:50 PM , Blogger ஆதவன் said...

    சாரு சாரை வைச்சு விளம்பரம் தேடிய அவருக்கு சாரு சரியான ஆப்பு வைச்சு இருக்கார். அவரு எத்தனை மொள்ளமாறிகளை தன் வாழ்க்கையில் பார்த்து இருப்பாரு.

     

  • At October 7, 2008 at 7:59 PM , Blogger ஆதவன் said...

    இதுல சம்ம காமேடி இந்த மகராசன் அலக்ஸாவில் தினமும் ராங்கிங் பார்த்து சாருவிற்க்கு மடல் அனுப்புவார், கூடவே தன் வலைபூவின் முகவரியை குறிப்பிட்டு. சாரு சார் ஒரு முறை இரு முறை பார்த்து விட்டு அதன் பின் இவரின் வலைபூ முகவரிகளை குறிப்பிடுவதை நிறுத்தி விட்டார்.

    அய்யோ பாவம் எப்படி இருந்த மனுசன் இப்படி ஆயிட்டாரு?

    இவரு எப்போதுமே இப்படிதான். ஜட்டிகதைகள்ன்னு எழுதினாரு. தமிழ்மணம் காயடித்ததும் இரண்டு நாள் தமிழ்மணத்தை எதிர்த்து போர் கொடி அதுவும் எப்படி எல்லா பதிவுலும் அதே பின்னோட்டத்தை போட்டு எதிர்ப்பு தெரிவிப்பது.. பின்னாடி யாருக்கும் தெரியாம அய்ய்யா அய்யா தப்பு பண்ணிட்டேன் என்னை மன்னிச்சு என் பதிவை திரட்டவும் என்று கெஞ்சிய ஆசாமி தானே

    இது பல முறை நடந்து இருக்கிறது. தமிழச்சி , ஓசை செல்லா விலக்கபட்ட நேரத்திலும். இவருக்கு உண்மையிலே பதிவர் வட்டம் இருப்பதேன்றால் இட்லி வடை போல திரட்டியில் இருந்து வெளியே வந்து எழுதி தன் ரீச்சை நிருபிக்கட்டும்.

     

  • At October 7, 2008 at 8:17 PM , Blogger நல்லதந்தி said...

    பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
    பிற்பகல் தாமே வரும். :)

     

  • At October 7, 2008 at 8:19 PM , Blogger நல்லதந்தி said...

    பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
    சுருக்கத்து வேண்டும் உயர்வு.

     

  • At October 7, 2008 at 8:51 PM , Blogger Sanjai Gandhi said...

    என்ன இருந்தாலும் சாருவின் பதில் ரொம்ப மட்டமானது நண்பா... ரஜினி வந்தால் வருவாராம்.. ரஜினியுடன் சேர்ந்து கழுதை மேய்த்தால் பரவா இல்லையா? :))

     

  • At October 7, 2008 at 8:56 PM , Blogger Sanjai Gandhi said...

    //ஆனால் ஒன்று. சாட்டில் அழைத்த வரிகள் பற்றி பதிவர் சொல்லி தெரிய வந்ததுதான். அந்த வார்த்தைகள் உண்மையாய் இருக்கும் பட்சத்தில், இந்த விஷயத்தில் நான் பதிவர் பக்கமே!!//

    நான் சாருவின் தளத்தில் பர்த்தேன்.. அவரும் இதைத் தான் சொல்லி இருக்கிறார்.. இந்த வார்த்தைகள் உண்மை தான் யோசிப்பவரே..

     

  • At October 7, 2008 at 9:06 PM , Blogger Bleachingpowder said...

    pathivu said
    //உங்கள் பதிவை படிப்பவன் என்கின்ற முறையில் சொல்கின்றேன், வேறு எதையாவது எழுதுங்கள்//

    வாங்க பதிவு. நான் எதையுமே யோசித்தோ தீர்மானித்தோ எழுதுவதில்லை.இருந்தாலும் நீங்கள் சொல்வதும் சரிதான். வருகைக்கும் கருத்திற்கு மிக்க நன்றி பதிவு

     

  • At October 7, 2008 at 9:06 PM , Blogger நல்லதந்தி said...

    பாரு இந்த கழிவரை சாரி... பதிவரைத் திட்டியதை விடுங்க.இந்த சந்தடிசாக்கில் அந்த எழுத்தாளரை எழுத்துலக சூப்பர்ஸ்டார்ன்னு சொல்லி ஒரு பெரிய காமெடி பண்ணியிருக்காரே!.அதில தான் எனக்கு மாகா வருத்தம்! :(.
    இதில இன்னொரு சமாச்சாரம். பாரு என்ன உதை கொடுத்தாலும் அவரு ரொம்ப நல்லவர்டா!.என்று வலையுலக வடிவேலு கதறிய போது குலுங்கி குலுங்கிச் சிரிக்கத் தோன்றியது.

     

  • At October 7, 2008 at 9:11 PM , Blogger Bleachingpowder said...

    //சந்துல சிந்து பாடுறது மாதிரி
    சூ....த்து..... மண்ணிக்கனும் சூப்பர் ஸ்டார் பட்டத்த கொடுத்ததுதான் தள முடியல. //

    வாங்க தறுதலை.இந்த பட்டத்தை இவங்களுக்கு யாரும் கொடுக்கலை எல்லாம் அவங்களே போட்டுகிறதுதான். பதிவுலகத்தில் இதெல்லாம் சாதாரணமப்பா :))

     

  • At October 7, 2008 at 9:13 PM , Blogger Bleachingpowder said...

    நான் ஆதவன் said,
    //ஆமா நீங்க அவர் தானே????
    அவர் நீங்க தானே???//

    அவர் நானா என்று தெரியாது, ஆனா நான் அவர் தான் :))

     

  • At October 7, 2008 at 9:21 PM , Blogger Bleachingpowder said...

    spider said,
    //சாரு சாரை வைச்சு விளம்பரம் தேடிய அவருக்கு சாரு சரியான ஆப்பு வைச்சு இருக்கார்//

    இதுக்கு நம்ம நல்லதந்தி சூப்பர ஒரு கவிதை பின்னூட்டத்தில் எழுதிருக்காரு படிச்சீங்களா.

    பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
    பிற்பகல் தாமே வரும்னு.

    //உண்மையிலே பதிவர் வட்டம் இருப்பதேன்றால் இட்லி வடை போல திரட்டியில் இருந்து வெளியே வந்து எழுதி தன் ரீச்சை நிருபிக்கட்டும்.
    //

    இப்பவே அவரோட வண்டி ரொம்ப தள்ளாடுது, என்னைக்கு அவர் பின்னூட்டாம் இடுபவர்களை கழிக்கிறார்கள் அதிலிருந்தே யாரும் அவருக்கு பின்னூட்டமிடுவதில்லை. இதுல தமிழ்மணத்திலிருந்து வெளியே வந்தா அவ்வளவுதான்.

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி spider.

     

  • At October 7, 2008 at 9:24 PM , Blogger நல்லதந்தி said...

    //இதுக்கு நம்ம நல்லதந்தி சூப்பர ஒரு கவிதை பின்னூட்டத்தில் எழுதிருக்காரு படிச்சீங்களா.//

    அய்யா சாமி அது திருக்குறளுங்கோவ்!. :))

     

  • At October 7, 2008 at 9:35 PM , Blogger Bleachingpowder said...

    //பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
    பிற்பகல் தாமே வரும். :)

    பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
    சுருக்கத்து வேண்டும் உயர்வு.
    //

    கவிதையெல்லாம் எழுதி பின்றீங்களே நல்லதந்தி:))

    என்னாச்சு மொத ஆளா வந்து மட மடன்னு பத்து பின்னூட்டத்தை போட்டுட்டு போயிட்டீங்க

    //இந்த சந்தடிசாக்கில் அந்த எழுத்தாளரை எழுத்துலக சூப்பர்ஸ்டார்ன்னு சொல்லி ஒரு பெரிய காமெடி பண்ணியிருக்காரே!.அதில தான் எனக்கு மாகா வருத்தம்! :(.//

    அவருக்கும் வேற வழியில்லை நல்லதந்தி. எப்படியாவது நம்ம பேர் நாலு பத்திரிக்கையில் வராதான்னு இருக்காரு. இந்த மாதிரி சொம்படிச்சா தான் அவர் இவரை பத்தி நாலு வார்த்தை எழுதுவாரு.

    எனக்கு இந்த காதல் படத்துல சினிமா வாய்ப்பு கேட்டு மேன்சனில் இருக்கும் உதவி இயக்குனரை பார்க்க வரும் காட்சி தான் நியாபகத்திற்கு வருகிறது. அவரும் கண்ணா மாமி மெஸ்ல நாலே நாலு இட்லி, கொஞ்சம் கெட்டி சட்னி, அந்த சில்லறையை அப்படியே கொடுத்துட்டு போயிரு ராஜான்னு சொல்லிட்டு, நீ என் மைண்டல இருக்கேன்னு சொல்லுவாரு.

    இங்கேயும் கிட்டதட்ட அதே கதை தான் :))

     

  • At October 7, 2008 at 9:40 PM , Blogger Bleachingpowder said...

    sanjai said,
    //என்ன இருந்தாலும் சாருவின் பதில் ரொம்ப மட்டமானது நண்பா... //

    வாங்க பொடியன் சஞ்சய்,

    கண்டிப்பா அவரோட பதில் மட்டமானது தான், அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது, but he deserves it :))

     

  • At October 7, 2008 at 9:41 PM , Blogger நல்லதந்தி said...

    //என்னாச்சு மொத ஆளா வந்து மட மடன்னு பத்து பின்னூட்டத்தை போட்டுட்டு போயிட்டீங்க//

    :(((
    இதெல்லாம் ரொம்ப அநியாயம்! :)

     

  • At October 7, 2008 at 9:59 PM , Blogger யோசிப்பவர் said...

    எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகனும்.
    வால்பையன் = நல்லதந்தியா?
    வால்பையன் = ப்ளீச்சிங் பவுடரா?
    ப்ளீச்சிங் பவுடர் = நல்லதந்தியா?
    A = B = C யா?

     

  • At October 7, 2008 at 10:13 PM , Blogger Bleachingpowder said...

    யோசிப்பவர்,உங்களுக்கு மட்டும் அந்த ரகசியத்தை சொல்றேன். ப்ளிச்சிங் பவுடர், நல்லதந்தி, வால்பையன். இந்த மூனு பேருல, இரண்டு பேருக்கும் மட்டும் தான் உங்களோட எல்லா கேள்விக்கும் பதில் தெரியும்.

    நல்லதந்தி ரொம்ப கேட்குறார், நீங்களே சொல்லிருங்க :))

     

  • At October 8, 2008 at 1:26 PM , Blogger நிழலின் குரல் said...

    நல்லா பின்னாடி திருப்பி நிக்க வைச்சு எட்டி உதைச்சாரு கவுண்டமணி , வாழ்க

     

  • At October 8, 2008 at 3:52 PM , Anonymous Anonymous said...

    வழி (கிழி )மொழிகிறேன்..

     

  • At October 9, 2008 at 10:46 AM , Blogger Bleachingpowder said...

    //நல்லா பின்னாடி திருப்பி நிக்க வைச்சு எட்டி உதைச்சாரு கவுண்டமணி , வாழ்க//

    வாங்க நிழலின் குரல், எதோ என்னால முடிஞ்சது :)

     

  • At October 9, 2008 at 10:57 AM , Blogger Bleachingpowder said...

    //வழி (கிழி )மொழிகிறேன்..//

    நன்றி சத்திஷ்குமார் :)

     

  • At October 11, 2008 at 7:06 AM , Anonymous Anonymous said...

    கலக்கிடீங்க...

    பக்கிகே இவ்வளவு கர்வம் இருக்கும் போது சாருக்கு இருக்காதா ...

    வால் பையன் , நீங்க & நல்ல தந்தி மூணு பேரு மட்டும் தான் அப்பப்போ ..ஆப்பு வைக்கிறீங்க

     

  • At October 26, 2008 at 3:14 PM , Blogger Known Stranger said...

    oh ipadi vera panuvangalla blogla.. ena olagamada

     

  • At October 26, 2008 at 3:17 PM , Blogger Known Stranger said...

    ada more than your post the comments section are fun filled. kalkurenga nengal alatha val payanum , bleaching powderum. vazhga comments section. verkadala iruntha korichiketay padikalam time pass agum

     

  • At April 24, 2010 at 10:48 AM , Blogger S.SETHU RAMAN said...

    article arumai
    visit my site
    vaalpaiyyan.blogspot.com

     

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home