படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி

Tuesday, September 16, 2008

நடுநிலை தவறாத லக்கியே நீ வாழ்க! பரிசல், FYI...

வழக்கம் போல இந்த முறையும் லக்கி பதிவில் நான் இட்ட பின்னூட்டம் வெளியாக வில்லை. எதிர்பார்த்ததுதான் என்றாலும், ஒரு மூத்த பதிவர் தன் கருத்திற்க்கு எதிராக வரும் சிறிய எதிர்பை கூட பதிய மறுக்கும் போது வருத்தம் வரவில்லை, சுர்ருனு கோவம் தான் வருது.

இந்த இரண்டு மாதங்களில் நான் பார்த்த தமிழ்மணம் சூழல் இதுதான். பதிவர்கள், குறிப்பாக மூத்த பதிவர்கள், வெறும் குழூக்களாக செயல் படுகிறார்கள். இவர்கள் பதிவை பார்த்தால், we will be seeing same set of comments from same set of people. ஒருவருக்கொருவர் முதுகை சொறிந்து கொண்டு, எதை எழுதினாலும் அதை ஆகா ஓகோனு புகழ்ந்து, பதிவுலக சூறாவளி, சிங்கம், டைனோசர், குரங்குனு பட்டம் வேற கொடுத்துக்குறாங்க.

சரி மேட்டருக்கு வருவோம். இன்று லக்கி தன்னோட வலைதளத்தில், சன் குழுமத்தை பந்தாடிய பருத்திவீரன் கலைஞர்னு ஒரு பதிவு போட்டிருந்தார். அதில் "நேற்று பருத்திவீரனுக்கு முன்பாக படையப்பா போணி ஆகவில்லை (ரோபோ வரும் வரை ரஜினியால் ஏது போணி?) " என்று ஒரு வரி எழுதியிருந்தார். இதற்கு பதிலாக, கிழே தரப்பட்டுள்ள பின்னூட்டத்தை அவரது பதிவில் இட்டிருந்தேன்.

//நேற்று பருத்திவீரனுக்கு முன்பாக படையப்பா போணி ஆகவில்லை //
தவறான தகவல். நேற்று பெரும்பாலான வீடுகளில் படையப்பா படம் தான் ஓடிக்கொண்டிருந்தது. என்ன தான் பருத்திவீரன் சிறந்த படமென்றாலும், பெண்கள் குழந்தைகளுடைய சாய்ஸ் படையப்பா தான்.

//(ரோபோ வரும் வரை ரஜினியால் ஏது போணி?)//

ஒரு தோல்வி படம் கொடுத்தால், அடுத்து வெற்றி படம் கொடுக்கும் வரை அவர் படத்தை யாரும் பார்க்கமாட்டார்கள் என பொருள் பட பேசும் உங்கள் அறிவு திறனை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.

இன்னைக்கும் கரகாட்டகாரன் படம் எந்த டிவியில் போட்டாலும் மக்கள் அதை பார்பார்கள். இப்போ ராமராஜனுக்கு மார்க்கெட் இல்லை அதனால் இதை யார் பார்பார்கள் என்று நினைத்தால் அதை விட முட்டாள்தனம் எதுவும் இல்லை.

அப்புறம் அடுத்த வாரம் கலைஞர் டிவில் சிவாஜி போட்டாலும் யாரும் பார்க்க மாட்டார்கள் என்கிறீர்களா?

டி.ஆர்.பி ரேட்டிங்கில் ரஜினி படம் தான் எப்போதுமே நெ.1 என்பதை என்னை விட அத்துறையில் இருக்கும் உங்களுக்கு நன்றாகவே தெரியும் என்று நினைக்கிறேன்.

மேற்கண்ட பின்னூட்டத்தில் ஏதாவது தவறு இருந்தால், அதை தயவு செய்து பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். திருத்திக் கொள்கிறேன்.

தினமும் ஒரு அரை நிர்வாண பெண்ணின் புகைபடத்தை வெளியிடும் அவரை இதுவரை எந்த ஒரு மூத்த பதிவரும் கண்டித்த மாதிரி தெரியவில்லை. இதை விட கொடுமை இன்று அதை பரிசல்காரர் சூப்பர் என்று வர்ணித்தது தான். பரிசல்காரரே மனதை தொட்டு சொல்லுங்கள், லக்கியின் இந்த செயலை நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என்று. பெரும்பாலான பதிவர்களுக்கு இது தவறு என்று தெரிந்தாலும் எங்கே நட்பு கெட்டு விடுமோவோ என்ற சங்கடமோ இல்லை இந்த பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற பயமா என்று தெரியவில்லை.

பாத்து எதாவது செய்யுங்க பாஸ்.

பின் குறிப்பு : கடைசியாக முயற்சியாக "கலைஞர் வாழ்க" னு ஒரு பின்னூட்டத்தை இடுகிறேன், இதுவாவது கண்டிப்பாக வரும் என்ற நம்பிக்கையோடு.

please excuse for any grammer errors in this posting.

Labels:

60 Comments:

 • At September 16, 2008 at 4:51 PM , Blogger Bharath said...

  தலைவா என்னோட 2 கமெண்டும் வரலை.. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..

  ஆனா நீங்க ரொம்பத்தான் கொதிச்சுப் போயிருக்கீங்க.. அந்த படமெல்லாம் நல்லாத்தானே இருக்கு..

   

 • At September 16, 2008 at 5:11 PM , Anonymous Anonymous said...

  நல்ல வேளை, நானும் அவர் சொன்னதை மறுத்து அப்பதிவுக்கு ஒரு பின்னூட்டம் போடலாமென்றிருந்தேன். என்னத்தைச் சொல்ல.
  மோகன்

   

 • At September 16, 2008 at 5:15 PM , Blogger Bleachingpowder said...

  வாங்க பரத். உங்களோட ரெண்டு கமெண்ட் தான் வரல,ஆனா என்னோடது எதுவுமே வரல. இப்போ கடைசியா "கலைஞர் வாழ்க"னு போட்டது மட்டும் உடனே வந்திருச்சு :-)

  அப்புறம் உங்க பேர் பரத்தா, இல்ல பாரத்தா?

   

 • At September 16, 2008 at 5:19 PM , Blogger Bleachingpowder said...

  //நல்ல வேளை, நானும் அவர் சொன்னதை மறுத்து அப்பதிவுக்கு ஒரு பின்னூட்டம் போடலாமென்றிருந்தேன்//

  வாங்க பதிவு, அதுக்கு ஒன்னு நீங்க அவரோட நண்பர இருக்கனும், இல்லை அவர் சொல்றதுக்கெல்லாம் ஆமாம் போடனும். குறைந்த பட்சம் திமுக உறுப்பினர் அட்டையாவது வைத்திருக்கனும் :)

  வருகைக்கு நன்றி பதிவு

   

 • At September 16, 2008 at 5:31 PM , Blogger கார்க்கி said...

  என்னத்த சொல்றது? இந்த விஷயத்தில் மட்டும் லக்கியை புரிந்து கொள்ளவே முடியவில்லை...இந்த விஷயத்தில் நானும் அவருக்கு எதிர்கட்சிதான்..

  இருந்தாலும் அவருக்கு சொந்தமான் வலையில் அவருக்கு பிடிக்காத பின்னூட்டங்களை மட்டறுக்கும் உரிமை அவருக்குண்டு..

   

 • At September 16, 2008 at 6:02 PM , Blogger Bleachingpowder said...

  வாங்க கார்க்கி,


  //அவருக்கு சொந்தமான் வலையில் அவருக்கு பிடிக்காத பின்னூட்டங்களை மட்டறுக்கும் உரிமை அவருக்குண்டு..//

  ஒப்புக்கொள்கிறேன் கார்க்கி, ஆனால் இதற்கு பதிலாக, என் கருத்திற்கு எதிர் கருத்தாக யாரேனும் பின்னூட்டம் இட்டால் அது வெளியிட படாதுனு ஒரு குறிப்பை வைத்திருந்தால், நம்ம நேரமும் மிச்சமாகுமே.

  நான் இட்ட பின்னூட்டங்கள் பல இடங்களில் மட்டறுக்க பட்டுள்ளது. ஆனால் குறைந்த பட்ச நாகரிகம் கருதி, உங்களது பின்னூட்டம் வெளியிட முடியாததை குறித்து வருந்துகிறேன் என்பதை போல, பின்னூட்டத்தை வெளியிடாதன் காரணத்தை அதில் கூறியிருப்பார்கள்.


  இது போன்ற ஒரு நாகரிகத்தை அவர் இது வரை யாரிமும் கடைப்பிடித்தாக எனக்கு நினைவில்லை.

   

 • At September 16, 2008 at 6:14 PM , Blogger பரிசல்காரன் said...

  இன்ஃபர்மேஷனுக்கு நன்றி!

  மிக நல்ல பதிவு!

  சூப்பர்!

  ஆஹா!

  ஓஹோ!!

  பேஷ்!பேஷ்!!

  லக்கிக்கு சரியான கேள்வி!

  சபாஷ்!

   

 • At September 16, 2008 at 6:16 PM , Blogger பரிசல்காரன் said...

  நீங்கதான் அடுத்த பதிவுலக சூறாவளி! சந்தேகமே இல்லை!


  இப்படிக்கு
  பதிவுலக் குரங்கு... வேணாம், ஏற்கனவே குரங்குன்னு ஒருத்தர் இருக்கார்...ம்ம்ம்ம்

  பதிவுலக டைனோசர்?
  ம்கூம்.. நல்லால்ல..

  பதிவுலக எலிக்குட்டின்னு வெச்சுக்கலாம்

   

 • At September 16, 2008 at 6:18 PM , Blogger பரிசல்காரன் said...

  நானும் வெக்கப்படாதீங்க பாஸூக்குப் பதிலா..

  ”வெக்கப்படுங்க பாஸூ.. இவரு மாதிரி இல்லையே-ன்னு” அப்படீன்னு போட்டு பகத்சிங் படம் போட்டிருந்தேன்.

  இது யாருன்னு கேட்டதுகு சுக்தேவ்-ன்னு பல பேர் சொன்னாங்க. &$#*&$ மூடீட்டு அதை எடுத்துட்டேன்.

  நமக்கு யாவாரம் முக்கியம்க.

   

 • At September 16, 2008 at 7:16 PM , Anonymous Anonymous said...

  ரெம்ப உணர்ச்சி வசப்படுறீங்கன்னு தோனுது.

  வலையில தடம் பதிக்க சீனியர் பதிவர்கள் ஆதரவு தேவை. அதுக்காக இங்கு யாரும் யாருக்கும் காவடியெல்லாம் தூக்குவதில்லை.

  அதீத உரிமையில் எல்லோரும் கொஞ்சம் உயர்வு நவிற்சில
  பேசிக்கிறதுதான்.

  பதிவு போட்டுட்டாருங்கிறதுக்காக எல்லோருக்கும் பதில் சொல்லுவதும் சொல்லாததும் அவரது இஷ்டம்.

  அவரு தி மு க ஆதரவாளர்னும், கலைஞர் அபிமானீன்னும் எல்லோருக்கும் தெரியும். நீங்க அவரு எழுதுனதுக்கு எதிர்ப்பாட்டு பாடியே தீருவேன்னு நிக்கிறது சரியில்ல. உங்களுக்கும் ஒரு வலை இருக்கு அதில உங்க கருத்த எழுதுங்க. யார் கருத்து வலுவானதோ அது ஜெயிக்கும்.

  தனி மனிதத் தாக்குதல் தேவையில்லை.

  பரிசல் சொன்னதுனாலதான் லக்கி சூப்பரா எழுதுறாருன்னு இங்க யாரும் நம்பல. அது சூரியனுக்கு டார்ச் அடிக்கும் முயற்சி.

  அதே போல லக்கியின் ஊக்கமும் உற்சாகமும் பரிசல் இந்த அளவுக்கு வளர உதவியது. பரிசலுக்கு எழுதிய லக்கியின் சில பின்னுட்டங்களைப் பார்த்தால் அவருக்கு பரிசல் மேல் இருக்கும் பொறாமை கலந்த கரிசனம் தென்படும்.

  அதே போல இம்மாதிரி பின்னூட்டம் போடுவதலேயே பரிசலின் திறமை ஏதும் நீர்த்துப் போய்விடவில்லை.

  எல்லவாற்றையும் தாண்டி சுஜாதா சொன்னதுபோல் உள்ளடக்கம்தான் (திறமை) ஜெயிக்கும்.

   

 • At September 16, 2008 at 7:17 PM , Blogger Bleachingpowder said...

  வாங்க பரிசல்காரரே, நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் நான் இன்று டேமில்ல பதிவு போடுறதுக்கு காரணம் நீங்கள் தான். ரெண்டு மூனு மாசத்துக்கு முன்னாடி, ஆணி புடுங்குற இடத்துல ஒரு project டை முடிச்சதுல்ல ஒரு பத்து நாள் விடுமுறை கிடைச்சுது. அப்போ எxப்ளோர் பண்ணுனது தான் இந்த ப்ளாக். ஆரம்பிச்ச புதிதில் ஆங்கிலத்தில் எழுதலாம் என்று தான் ஆரம்பித்து ஒரிரெண்டு பதிவு போட்டேன். அப்பொழுது தான் நீங்கள் என் பதிவிற்கு வந்து தமிழில் எழுதுமாறும், தமிழ்மணத்தில் இனையுமாறும் பின்னூட்டமிட்டீர்கள். நீங்கள் ஒரு நாளில் பல பேருக்கு பின்னூட்டமிடுவதால் இது உங்கள் நினைவில் இருக்க வாய்பில்லை. ஆனால் அன்று எனக்கு வந்த ஒரே பின்னூட்டம் உங்களுடையது தான்.

  சின்ன ஃபளாஸ் பேக்:

  பரிசல்காரன் said,

  வலைய்லகத்துக்கு வரவேற்புகள்! தமிழ்மணத்தில் இணைந்து விட்டீர்களா?
  நிறைய எழுதுங்கள்!
  முக்கிய குறிப்பு: முதல் பதிவு போட்டவரின் பிளாக்குக்கு தினமும் சென்று ஒரு நாளைக்கு குறைந்தது பத்து பின்னூட்டம் போட்டால் நூத்தி எட்டு நாட்களுக்குள் உங்கள் பிளாக் கொஞ்சம் ஈயாடலில் இருந்து தப்பிக்கும் என்பது ஐதீகம்!

  ரொம்ப முக்கியமாக - தமிழில் எழுதுங்கள். இல்லை என்றால் உங்கள் பிளாக்கை உங்கள் பெயரைக் கொண்டே கழுவி விடுவோம்! (என்னையா பேரு இது? ரூம் போட்டு யோசிச்சீங்களா?)

  Bleaching powder said,

  என்னோட ப்ளாக்கையும் மதிச்சு பின்னூட்டம் இட்டதற்கு ரொம்ப மகிழ்ச்சி பரிசல்காரரே.

  நாலஞ்சு வருசம ஆணி புடுங்குனதுல்ல தமிழ் எழுத்தே கொஞ்சம் மறந்து போச்சு அதனால தமிழ்ல பதிவு போட ரொம்ப பயமாயிருக்கு (ஆங்கிலம் மட்டும் என்ன வாழுதாம் அதுவும் cut copy paste தான்) அதுவும் தமிழ்மணத்துல சேர்ந்தா சின்ன தப்பிருந்தாலும் டவூசரை அவுத்துடுவாங்க.

  கொஞ்ச வருசம் முன்னாடி வரை எனக்கு தெரிஞ்ச இலக்கிய எழுத்தாளார்கள்னா அது ராஜேஷ்குமாரும் சுபாவும் தான் இலக்கிய இதழ்னா அது விகடன் குமுதம் தான். இந்த அறிவ வச்சுகிட்டு தமிழ்ல எப்படிங்க பதிவு போடுறது.

  இதுபோக எனக்கு எந்த ஒரு கருத்தையும், யாரையும் ஒரு நாளைக்கு மேல ஆதரிக்கவோ எதிர்கவோ முடியாது (இல்லைங்க சின்ன வயசுல தலையில அடியல்லாம் படல)

  அரசியலை பத்தி எழுத சத்தியமா தைரியமில்லை,எவன் அடிவாங்கறது இது பிஞ்சு உடம்பு.

  சரி கடவுளை பக்தி உண்டானு கேட்டா, ஒருவேலை இருந்தாலும் இருக்கும்னு பயந்து சாமி கும்பிடற பகுத்தறிவாதி நான்.

  ஏதாவது பயணகட்டுரை எழுதலாம்ன சமிபத்தில் போன நாடு தாய்லாந்து :-) இதப்போய் நான் எங்க எழுத. இப்பொ சொல்லுங்க பரிசல்காரரே நான் என்னத்த எழுதறது தமிழ்ல.

  பரிசல்காரன் said,

  இப்ப நீங்க எழுதியிருக்கற மேட்டர வைத்து பத்து பதிவு போடலாம்!
  தாய்லாந்து போனதப் பத்தி பதினஞ்சு பதிவு போடலாம்.
  முயற்சியுங்கள். முடியும்! (இல்லீன்னா நாங்க முடிஞ்சுடுவோம்.. அவ்ளோதானே????

  -----------

  உங்களுடைய இந்த பின்னூட்டத்தை பார்த்த பின் தான் எனக்கும் தமிழில் எழுதனும்ற ஆர்வம் வந்துச்சு. நானும் தப்பு தப்பா தமிழ்ல எழுத ஆரம்பிச்சேன்.

  என்னுடைய இந்த ப்ளாக்கில் இதுவரை, எனக்கு எது சரினு தோனுதோ அதை மட்டுமே இது வரை எழுதியிருக்கிறேன். அதேப் போல் இது வரை யாருடைய பின்னூட்டத்தையும் நான் வெளியிடாமல் இருந்ததில்லை. அதே போல் என்னுடைய விவாதமும் ஆரோக்கியமானதாகதான் இருக்கும்.

  பணி நிமித்தமாக hydrabad, bangalore, puneனு பல ஊரு தண்ணிய குடிச்சிட்டிருந்தாலும், நானும் கொங்குத் தமிழன் தான் அதனால தானோ என்னவோ, மரியாதையை ரொம்பவே எதிர்பார்பேன். கார்க்கியிடம் சொன்னதை போல,
  லக்கி, "என் கருத்திற்கு எதிர் கருத்தாக யாரேனும் பின்னூட்டம் இட்டால் அது வெளியிட படாதுனு ஒரு குறிப்பை வைத்திருந்தால், நம்ம நேரமும் மிச்சமாகுமே."

  அப்புறம் லக்கி தளத்தில் இருக்கும் படங்களை குறித்த என்னுடைய கருத்து. Its very serious. I Still don't understand what benefit we get if we get more hits to our blog.

  என்னை பொறுத்த வரை தப்புனா அது தப்பு தான்,அது யார் செய்தாலும். இதை சுட்டி காட்டினால் தவறாக எடுத்துக் கொள்வார்களோ என்ற தயக்கமெல்லாம் என்னிடத்தில் கிடையாது( இது உங்களிடம் நிறைய இருக்கிறது பரிசல்காரரே, யார் மணமும் புண் படாமல் எழுத வேண்டும் என்பதுதான் உங்கள் குறிக்கோள். இதுதான் உங்களை பல கேள்விகளை பலரிடம் கேட்க தயங்க வைக்கிறது.

  லக்கியோட பதிவில் வரும் படங்களில் எந்த ஆபாசமும் இல்லை என்றால் அதை பெரியதாக Frame பண்ணி வீட்டில் மாட்டி கொள்ளாமே

  அப்புறம் என்னுடைய பதிவை படிச்சுட்டு மிக நல்ல பதிவு,சூப்பர்,ஆஹா,ஓஹோ,பேஷ்!பேஷ்,லக்கிக்கு சரியான கேள்வி,
  சபாஷ்னு பாராட்டினதுக்கு ரொம்ப நன்றி. இது வஞ்சிப்புகழ்ச்சினு தெரிஞ்சாலும், படிக்கும் போது மகிழ்ச்சியாக தான் இருக்கிறது :))

  இந்த பின்னூட்டம் கொஞ்சம் பெரிசா போச்சு, எல்லாரும் பெரிய மனசு பண்ணி மன்னிச்சுருங்க

  அப்புறம் Asusual, please excuse for any grammer error in this comments.

   

 • At September 16, 2008 at 7:30 PM , Blogger Bleachingpowder said...

  வாங்க வடகரை வேலன்.

  என்னை பற்றி ஒரு சின்ன குறிப்பு. இப்பவரைக்கும் எனக்கு எங்க ரெண்டு சுழி போடனும், எங்க மூனி சுழி போடனும் கூட தெரியாது. இது தான் என்னோட தமிழ் அறிவு. இதுல நான் எங்க லக்கி, பரிசல்காரரோட எல்லாம் போட்டி போட.

  //பரிசல் சொன்னதுனாலதான் லக்கி சூப்பரா எழுதுறாருன்னு இங்க யாரும் நம்பல. அது சூரியனுக்கு டார்ச் அடிக்கும் முயற்சி.//

  அவரோட திறமையை நான் எங்கேயும் குறை சொல்லவில்லையே. இன்று வரை என்னோட favourites ல இருக்கிறது மூனு பேரோட blog தான் அது இட்லிவடை,லக்கி, பரிசல். ஆணி புடுங்குற இடத்தில் சிறிது ஓய்வு கிடைத்தால் நான் வருவது இவர்களுடைய பக்கங்களுக்கு தான்.

  எல்லவாற்றையும் தாண்டி சுஜாதா சொன்னதுபோல் உள்ளடக்கம்தான் (திறமை) ஜெயிக்கும்.

  மன்னிக்கனும் வடகரை வேலன், இந்த போட்டியில் கலந்து கொள்ள கூட எனக்கு தகுதி கிடையாது. தமிழ் மேல் உள்ள ஆர்வத்தால் மட்டுமே இப்படி தப்பும் தவறுமாக எழுதிக்கொண்டிருக்கிறேன்.

  //ரெம்ப உணர்ச்சி வசப்படுறீங்கன்னு தோனுது.//

  ஆமாம். நீங்கள் சொல்வது சரி. நான் அவ்விதமே. அது தான் என்னை இப்பதிவை எழுத தூண்டியது.

  வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி வடகரை வேலன்.

   

 • At September 16, 2008 at 8:01 PM , Blogger ARUVAI BASKAR said...

  //இருந்தாலும் அவருக்கு சொந்தமான் வலையில் அவருக்கு பிடிக்காத பின்னூட்டங்களை மட்டறுக்கும் உரிமை அவருக்குண்டு..//

  கார்க்கியும் ஜோதியில் ஐக்கியமாகி விட்டாரே ?

   

 • At September 16, 2008 at 8:05 PM , Blogger தீலிபன் said...

  பொய் கூறவில்லை உண்மையில் அவர் கருத்துக்கு ஆதரவாக எழுதிய என் இரு பின்னூட்டங்களும் வரவில்லை.

   

 • At September 16, 2008 at 8:11 PM , Blogger Bleachingpowder said...

  Aruvai Baskar said,

  //கார்க்கியும் ஜோதியில் ஐக்கியமாகி விட்டாரே ?//

  வாங்க Aruvai Baskar, //...இந்த விஷயத்தில் நானும் அவருக்கு எதிர்கட்சிதான்..//

  னு எழுதியிருந்தாரே. அவரும் நம்ம பரிசல் மாதிரிதான், பாசக்கார பய, யாரையும் ஒரு வார்த்தை சுடு சொல்லா பேச மாட்டாரு.

   

 • At September 16, 2008 at 8:16 PM , Blogger Bleachingpowder said...

  திலிபன் Said,

  //பொய் கூறவில்லை உண்மையில் அவர் கருத்துக்கு ஆதரவாக எழுதிய என் இரு பின்னூட்டங்களும் வரவில்லை.//

  ஆனால் உங்கள் பின்னூட்டம் வராத்தற்கும், என் பின்னூட்டம் வராததற்கும் காரணம் நிச்சயம் வேறாக தானே இருக்கும். உங்களுடைய பின்னூட்டம் வெளிவராமல் இருக்க கண்டிப்பாக ஏதாவது ஒரு genuine reason இருக்கும்.

  நான் அவர் மேல் பொதுவான குற்றம் சாட்ட வில்லை. என்னுடை பின்னூட்டத்தை வெளியிடவில்லை என்று தான் குறிப்பிட்டிருக்கிறேன்.

   

 • At September 16, 2008 at 8:18 PM , Blogger Bleachingpowder said...

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி திலிபன்

   

 • At September 16, 2008 at 8:25 PM , Blogger Arun as Butterfly said...

  அண்ணே அவர் தொடர்பாக பல பக்கம் எழுதலாம் :) விடுங்க திருந்தாத கேசு எதுக்கு உங்க நேரத்தை வேஸ்ட் செய்றீங்க?

   

 • At September 16, 2008 at 8:29 PM , Blogger Yazh said...

  oh! avana nee!!??

   

 • At September 16, 2008 at 9:01 PM , Blogger ஜோசப் பால்ராஜ் said...

  நானும் லக்கியும் முதலில் எனது ஒரு பதிவின் மூலமாக கடுமையாக விவாதங்கள் புரிந்தோம். அவரது கொள்கைகளை விடாமல் அவர் வாதம் செய்வார், ஆனால் நல்ல நண்பர். நட்பு வேறு கொள்கை வேறு என்பதில் அவருக்கும் சரி, எனக்கும் சரி மிகுந்த நம்பிக்கை உண்டு. சமீபத்தில் இட ஒதுக்கீடு குறித்து எனக்கும் அவருக்கும் ஒரு பெரிய மின்னஞ்சல் வாக்குவாதமே நடந்ததது.

  நீங்கள் சொல்வது போல் நான் அவருக்கு இட்ட பின்னூட்டங்களை வெளியிடாமல் இருந்ததில்லை.

  அவர் வலையில் இருக்கும் படங்கள் -எனக்கும் அதில் உடன்பாடு இல்லை.

   

 • At September 16, 2008 at 9:08 PM , Blogger VIKNESHWARAN said...

  //இது வஞ்சிப்புகழ்ச்சினு தெரிஞ்சாலும், படிக்கும் போது மகிழ்ச்சியாக தான் இருக்கிறது :))//


  ஹா ஹா ஹா...

  அண்ணே... பிலிச்சிங் பவிடர் போட்டு தமிழ்மணத்தை சுத்தப்படுத்த போறிங்களா? உங்க பின்னூட்டம் வரலைனுதானே கவலை.. அவர் தளத்தில் அவர் போடும் படத்தில் என்ன வந்தது. அவர் யாரையும் அழைத்து படிக்க சொல்லலியே...

  //படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி//

  ஆபத்தான வாசகமா இருக்கே...

  தொடர்ந்து எழுதுங்கள்.. படிக்கிறோம்...

  கோப படதிங்க பாஸூ...

   

 • At September 16, 2008 at 9:31 PM , Blogger Bleachingpowder said...

  வருகைக்கும் கருத்திற்கு மிக்க நன்றி Arun as butterfully.

   

 • At September 16, 2008 at 9:31 PM , Blogger Bleachingpowder said...

  yazh said,
  oh! avana nee!!??
  அவனே தான் நான் :)

   

 • At September 16, 2008 at 9:32 PM , Blogger Bleachingpowder said...

  ஜோசப் பால்ராஜ் said,
  //நீங்கள் சொல்வது போல் நான் அவருக்கு இட்ட பின்னூட்டங்களை வெளியிடாமல் இருந்ததில்லை.//

  ஒரு வேளை நீங்கள் ஏற்கனவே அவருக்கு அறிமுகமானவராக இருப்பதால் கூட இருக்கலாம். அவர் என்னுடைய எதிர் பின்னூட்டத்தை இட மறுக்கிறார் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன். அவருடைய நண்பர்களாகிய நீங்கள் என்ன கருத்து கூறினாலும் அதை அவர் spotive வாக எடுத்து கொள்வார் என்பதையும் நான் கவணித்துள்ளேன்.

  //அவர் வலையில் இருக்கும் படங்கள் -எனக்கும் அதில் உடன்பாடு இல்லை//


  என் கருத்திற்கு ஆதரவளித்ததற்கு மிக்க நன்றி.இதை அவரிடம் கூறியிருக்கிறீர்களா :))

   

 • At September 16, 2008 at 10:01 PM , Blogger Bleachingpowder said...

  வாங்க Vikneshwaran, சரியான நேரத்தில் வந்திருக்கிறீர்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு, உங்கள் பதிவில் நான் இட்ட பின்னூட்டத்தை வெளியிடமுடியாததை எவ்வளவு நயமாக கூறினீர்கள் (அதை அப்புறம் வெளியிட்டீர்கள் என்பது வேறு விசியம் :)) )

  அப்பொழுதும் நான் உங்களிடம் கூறியது இதுதான், "இது உங்கள் பதிவு, என் பின்னூட்டத்தை பிரசுரிக்கவும், நிராகரிக்க எல்லா உரிமையும் உங்களுக்கு உண்டு.

  ஆனால் நான் எதிர்பார்பதெல்லாம் ஒரு சின்ன acknowledgement அவ்வளவுதான்.

  //அண்ணே... பிலிச்சிங் பவிடர் போட்டு தமிழ்மணத்தை சுத்தப்படுத்த போறிங்களா? உங்க பின்னூட்டம் வரலைனுதானே கவலை//

  சுத்தப்படுத்தறதெல்லாம் நம்ம வேலை இல்லீங்க. ஒய்வு நேரம் கிடைக்கும் போது மட்டும் தாங்க இங்க வரேன். இன்னும் சொல்ல போனா, சும்மா டைம் பாஸ் தான் மச்சி :)

  //அவர் தளத்தில் அவர் போடும் படத்தில் என்ன வந்தது. அவர் யாரையும் அழைத்து படிக்க சொல்லலியே... //

  லக்கி இந்த படத்த அவரோட desktop, laptop, mobile ல வச்ச நான் ஏன் கேட்க போறேன். எல்லாரும் படிக்கனும், பாக்கனும்றதுக்காக தான google லோட public blog ல போட்டிருகிறார்.

  லக்கி எப்படி திரைபடங்களை பார்த்து அதில் இருக்கும் நிறை குறைகளை விமர்சிக்க அவருக்கு உரிமை இருக்கோ(அவர் என்ன producer, director அழைப்பின் பேரிலா எல்லா படங்களையும் பார்க்கிறார்),அதெப்போல் அவருடைய ப்ளாக்கை பற்றி கூற எனக்கும் உரிமை இருக்கு. அட உங்களுக்கும் இருக்குங்க, நீங்களும் தைரியமா எழுதுங்க :))

  ////படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி

  ஆபத்தான வாசகமா இருக்கே...//

  நிஜதானுங்களே :)

  //தொடர்ந்து எழுதுங்கள்.. படிக்கிறோம்...//

  நன்றி.

  //கோப படதிங்க பாஸூ...//

  வருதே, இப்போ நான் என்ன செய்ய.....:))

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி Vikneshwaran

   

 • At September 16, 2008 at 10:21 PM , Blogger நல்லதந்தி said...

  //வழக்கம் போல இந்த முறையும் லக்கி பதிவில் நான் இட்ட பின்னூட்டம் வெளியாக வில்லை. எதிர்பார்த்ததுதான் என்றாலும், ஒரு மூத்த பதிவர் தன் கருத்திற்க்கு எதிராக வரும் சிறிய எதிர்பை கூட பதிய மறுக்கும் போது வருத்தம் வரவில்லை, சுர்ருனு கோவம் தான் வருது.//
  நீங்க எழுதிட்டீங்க.நான் எழுதலை.அதுதான் வித்தியாசம்.நீங்க சொன்ன ஒவ்வொரு வரியையும் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும்.திரு லக்கிலுக் அவர்களின் பதிவில் ஏதாவது ஒரு சிறிய எதிர்ப்பை மட்டும் அல்ல,சிறு தவறைச் சுட்டிக்காட்டினாலும் அது வெளிவருவதில்லை.நேற்று கூட அவருடைய பதிவில் அண்ணாவைப் பற்றி ஒரு கட்டுரையில் அண்ணாவினுடைய மரணத்திற்கு ஒன்றறை கோடி பேர் வந்ததாக எழுதியிருந்தார்.இதைவிட மடத்தனமான புள்ளிவிபரம் இருக்கமுடியுமா?. அன்றைய,ஜனத்தொகையே அவர்களுடைய தி.மு.க பிரச்சாரப் பாடல் மூலமாக சொன்னது...(!) "நான்கு கோடி மக்களுக்குத்தலைவர் அண்ணா நல்லதம்பி என்றழைத்த கலைஞர்" என்ற அதி அற்புதமான வரிகளின் மூலம் தமிழக மக்கள் தொகை அன்று நான்கு கோடி என்று!.அதில் ஆண் இரண்டு கோடி பெண் இரண்டு கோடி என்று வைத்துக் கொண்டாலும்,இரண்டு கோடி ஆண்களில் ஐம்பது லட்சம் பேர் குழந்தைகள் என்று வைத்துக் கொண்டாலும் இருக்கிற ஆண் தொகையான ஒன்றறை கோடி பேரும் சென்னைக்கு வந்துவிட்டார்களா?.இதை ஒரு வாத தமாஷுக்கு இப்போது சொன்னேன்.லக்கிலுக் பதிவில் அன்று நிஜமாகவே வந்த ஜனத்தொகையான,நான் கேள்விப் பட்ட, தொகையான 10 லட்சம் பேர்தான் என்று எழுதியதற்கே அந்த மறுமொழி வெளியிடப்பட வில்லை...இந்த கொடுமையை என்ன சொல்ல!.அவரால் சிறு விஷயத்தைக் கூடத் தாங்கமுடியவில்லையா?.தெரியவில்லை.ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது.ரொம்ப மிதப்பில் இருக்கிற ஆசாமி அவர் என்பது மட்டும்! :)

   

 • At September 16, 2008 at 10:51 PM , Blogger Ganesh said...

  தம்பீ உனது ஆர்வம் புரிகிறது , நீ லக்கியை சொறிந்து புகழடைய எண்ணுகிறாயா , அது தற்காலிகமானது தம்பீ , உனது கருத்துக்களை மக்களுக்கு பிடித்தது போல சொன்னால் நீயும் அந்த லக்கி பக்கி புக்கி என்று யாரையும் விட அதிக புகழுடன் வலையுலகில் பின்னி பிடலெடுக்கலாம் அதை விடுத்து அது போல வலையில் புகழ் வாய்ந்த லக்கி போன்ற பதிவர்களை வம்புக்கிழுத்து நீ உனது வலைப்பதிவிற்கு விளம்பரம் செய்யாதே...

  உன்னை பார்த்தால் படித்தவன் போல இருக்கிறது , போய் உன் பிள்ளை குட்டிகளை படிக்க வைக்கும் வழியை பார் , அதை விட்டு விட்டு என்னோட டவுசர கழட்டல ஜட்டிய கழட்டலனு எதற்கு இந்த வீண் வேலை ..

  உனக்கு எல்லாம் வல்ல பழனிமலை முருகப்பெருமான் அருள் புரியட்டும்

  இப்படிக்கு உன் மீது மதிப்பு மரியாதை எதையும் வைக்காத உனக்கு ஆகாத

  உட்டாலக்கடி தமிழன்....

   

 • At September 16, 2008 at 11:05 PM , Blogger Bleachingpowder said...

  வாங்க நல்லதந்தி, அங்கேயும் same blood தானா :)) நானும் அந்த ஒன்னறை கோடி பேர் காமெடியை படிச்சேன், ஆணி புடுங்குற வேலை கொஞ்சம் ஜாஸ்தியா இருந்ததுனால,பின்னூட்டம் போடல, போட்டாலும் வந்திருக்காது, அது வேற விசியம் :)).

  இந்த பதிவ டைப் அடித்தபின், சும்மா கலைஞர் வாழ்க னு ஒரு பின்னூட்டம் போடலாம்னு, போட்டா ஐந்தே நிமிடங்களில் பின்னூட்டம் வெளிவந்து விட்டது :)

  //அவரால் சிறு விஷயத்தைக் கூடத் தாங்கமுடியவில்லையா?.தெரியவில்லை.ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது.ரொம்ப மிதப்பில் இருக்கிற ஆசாமி அவர் என்பது மட்டும்! :)
  //

  எனக்கென்னவோ எதிர்கருதிடுபவருக்கு இவரிடம் பதில் இல்லை என்றால், அதை வெளியிட மாட்டார் என்றே தோன்றுகிறது. நாம் இங்கே எல்லரும் மூத்த பதிவராகவும், ரோல் மாடலாகவும் இருக்கிறோம், அப்படியிருக்கா எடக்கு மடக்கான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியமல் போனால் மற்ற பதிவர்கள் நம்மை பரிதாபமாக பார்பார்களோ என்ற அச்சமாக இருக்குமோ என்றே தோன்றுகிறது

  வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நல்லதந்தி.

   

 • At September 16, 2008 at 11:12 PM , Blogger VIKNESHWARAN said...

  பிலிச்சிங் நீங்க இங்கதான் இருக்கிங்களா... இப்பதான் ஒரு கெமேண்ட் ரிலிஸ் ஆனத கண்ணால பார்த்தேன் அதான் கோக்குறேன்..

  அது ஒன்னும் இல்லை பாஸூ...
  வீட்டுக்கு வந்து உங்க பதிவ கொஞ்சம் சுத்தி பார்த்தேன்... பாருங்களேன் இதுக்கு கூட நீங்க லக்கிய பத்தி போட்ட பதிவு தான் காரணமா இருக்கு...

  ஒன்னு கேட்குறேன் பாஸூ தப்பா எடுத்துக்காதிங்க...

  ஏற்கனவே குசேலன் பட பின்னூட்டத்தை போட்டு லக்கிய புகழ்ந்து இருந்திங்க... பார்க்கவே சந்தோஷமா இருந்துச்சி... பாஸூ நீங்க லக்கி பதிவ தவற வேற பதிவ பார்க்குறதில்லையா... ஒரு நாளைக்கு ஒரு பதிவர்னு போட்டா இலவச விளம்பரம் கிடைக்கும் இல்லையா... எல்லாம் ஒரு அல்ப்ப ஆசை தான்...

  சரி பாஸூ தூங்க போறேன்... குட் நைட்...

   

 • At September 16, 2008 at 11:21 PM , Blogger பின்னூட்டம் பெரியசாமி.. said...

  நல்லவை சேர்த்து அல்லவை ஒதுக்கவே பின்னூட்ட மட்டுறுத்தல் இருப்பதாகத் தெரிகிறது. ஆகவே வெளியிடுவதும் வெளியிடாமல் மறுப்பதும் கடைக்காரர்(வலைப் பூவின் உரிமையாளர்) விருப்பம் என்பது எனது தாழ்மையான கருத்து.

   

 • At September 16, 2008 at 11:22 PM , Blogger Bleachingpowder said...

  தம்பி கனேஷா,

  இங்க நான் இருக்கறதே உங்க லக்கி சொல்ற மாதிரி, சும்மா டைம் பாஸ் மச்சி.

  சும்மா டைம் பாஸ் மச்சினு சொல்லிட்டு, தமிழ்மணத்திலேயே குத்த வச்சுட்டு இருக்க நான் ஒன்னும் உங்கள மாதிரி வேலை வெட்டி இல்லாம இல்ல.

  இல்ல பேருக்கு ஒரு வேலைல இருந்துட்டு ஒரு நாளைக்கும் முனு படம் பார்த்துட்டு விமர்சணம் எழுதிட்டு, பிச்சுல சுண்டல் சாப்பிட்டு வெட்டி கூட்டம் போட எனக்கு நேரமும் இல்லை. கிட்ட தட்ட ஒரு மாசதுக்கு அப்புறம் இப்ப தான் இந்த பதிவ எழுதுறேன். அதனால யாரையும் சொறிஞ்சு அதனால கிடைக்குற புகழெல்லாம் ( haiyo..haiyo) எனக்கு தேவையும் இல்லை.

  //உன்னை பார்த்தால் படித்தவன் போல இருக்கிறது //

  நிஜாமா அப்படியா தெரியுது... தேங்ஸ்பா

  //அதை விட்டு விட்டு என்னோட டவுசர கழட்டல ஜட்டிய கழட்டலனு எதற்கு இந்த வீண் வேலை ..
  //

  இது அபாண்டமான குற்றச்சாட்டு, உன் டவுசர், ஜட்டிய நான் எப்போங்க கழட்டுனேன்.வேனும்னா அடிக்கடி ஒருத்தர் தாவு தீருது, டவுசர் கிழியுது சொல்லுவாரு, அவர போய் கேளு.

  //இப்படிக்கு உன் மீது மதிப்பு மரியாதை எதையும் வைக்காத உனக்கு ஆகாத//

  என்னமோ இப்போ நீ ஒருத்தன் தான் எம்மேல மரியாத வக்காத மாதிரிய பேசுர.

  //உட்டாலக்கடி தமிழன்....//

  அத எதுக்கு சொல்லீட்டு, பாத்தாலே தெரியுது


  பின் குறிப்பு : கேள்வி தரம் எப்படியோ, அதே தரத்தில் தான் பதிலும் என்னிடத்தில் கிடைக்கும்.

  புர்ஞ்தா....

   

 • At September 16, 2008 at 11:34 PM , Blogger ஈர வெங்காயம் said...

  அடடே...வெளுப்புத்தூள், நீங்களும் ஆணிதான் புடுங்கறீங்களா...???
  தேவையான ஆணி / தேவையில்லாத ஆணி எப்படி கண்டு புடிப்பீங்க..?

   

 • At September 16, 2008 at 11:46 PM , Blogger Bleachingpowder said...

  வாங்க ர்ர வெங்காயம்,

  நான் புடுங்கறது எல்லாமே தேவையில்லாத ஆணிதான் :))

  வருகைக்கு மிக்க நன்றி

   

 • At September 16, 2008 at 11:47 PM , Blogger Bleachingpowder said...

  ரொம்ப தூக்கம் வருவது, திட்றவங்க எல்லாம் திட்டி வையுங்க, காலைல பதில் சொல்றேன் :))

   

 • At September 17, 2008 at 12:26 AM , Blogger குட்டிபிசாசு said...

  //நேற்று பெரும்பாலான வீடுகளில் படையப்பா படம் தான் ஓடிக்கொண்டிருந்தது. என்ன தான் பருத்திவீரன் சிறந்த படமென்றாலும், பெண்கள் குழந்தைகளுடைய சாய்ஸ் படையப்பா தான்.//

  பிளீச்,

  மத்தவங்களை பற்றி எனக்கு தெரியாது. எங்க வீட்டில் இருக்கிற குட்டீஸ் "படையப்பா" தான் பார்த்துக் கொண்டிருந்ததுகள்.

   

 • At September 17, 2008 at 1:55 AM , Blogger சென்ஷி said...

  சான்ஸே இல்ல.. இந்த மாதிரி யாராச்சும் நாக்க பிடுங்க மாட்டாங்களான்னு ஏங்கிட்டு இருந்தேன். இப்ப பாருங்க. இதை வச்சு நான் ஒரு மொக்கைய போட முடிஞ்சது..

  http://senshe-kathalan.blogspot.com/2008/09/blog-post_17.html

  வாழ்க உங்கள் தமிழ்த்தொண்டு. :)

  ஷார்ஜாவிலிருந்து,
  சென்ஷி

   

 • At September 17, 2008 at 4:39 AM , Blogger King... said...

  அவர் கொள்கைகள் அவருக்கு விடுங்கப்பா....

   

 • At September 17, 2008 at 9:30 AM , Blogger கார்க்கி said...

  பாஸ்கர் அண்ணே.. எந்த ஜோதியின் நான் ஐக்கியம் ஆயிட்டேன்? என்னுடைய ஆரமப கால பதிவில் நான் கோவி.கண்னனை ஒரு சந்தேகம் (சுட்டி கொடுக்க முடியல)என்ற பெயரில் கேள்வி கேட்டேன்.. அவரும் வந்து பதில் சொன்னார்.. பின் என் வலையில் அவருக்கு இணைப்பும் அவரும் என் வலைக்கு இணைப்பும் கொடுத்திருக்கிறோம்.. தவறென்றால் நானும் சொல்லிவிடுவேன்.. எனக்கென்னவோ இது பதிவருடைய விருப்பம் என்றுதான் தோண்றுகிறது நண்பரே.. உடன்பிறப்புக்கு சில கேள்விகள் என்ற ப்திவை படிச்சீங்களா? லக்கிக்கு அதை பிடிக்கும் என் நினைக்கிறீர்களா? அடிக்கடி நம்ம கடைக்கும் வர்ற ஆள் நீங்க.. இப்படி தப்பா நினைச்சிட்டீங்களே?


  //னு எழுதியிருந்தாரே. அவரும் நம்ம பரிசல் மாதிரிதான், பாசக்கார பய, யாரையும் ஒரு வார்த்தை சுடு சொல்லா பேச மாட்டாரு.//

  நன்றி ப்ளீச்சிங்..

   

 • At September 17, 2008 at 10:01 AM , Blogger ARUVAI BASKAR said...

  //எந்த ஜோதியின் நான் ஐக்கியம் ஆயிட்டேன்?//
  அன்பு கார்க்கி ,
  அன்று அவ்வளவு கோபத்தில் இருந்தீர்கள் .

  இன்று இவ்வளவு பாசத்துடன் இருக்கிறீர்கள் .

  என்ன மாயமோ ?

  தூங்குகிறவர்களை எழுப்பலாம் . ஆனால் தூங்குவதுபோல் நடிப்பவர்களை எழுப்ப முடியுமா ?

   

 • At September 17, 2008 at 11:00 AM , Blogger Bleachingpowder said...

  //ஏற்கனவே குசேலன் பட பின்னூட்டத்தை போட்டு லக்கிய புகழ்ந்து இருந்திங்க... பார்க்கவே சந்தோஷமா இருந்துச்சி... பாஸூ நீங்க லக்கி பதிவ தவற வேற பதிவ பார்க்குறதில்லையா... ஒரு நாளைக்கு ஒரு பதிவர்னு போட்டா இலவச விளம்பரம் கிடைக்கும் இல்லையா... எல்லாம் ஒரு அல்ப்ப ஆசை தான்...//

  திரும்பவும் சொல்கிறேன் Vikhneswaran, நான் இங்கே எழுதுவது விளம்பரத்திற்காகவோ, புகழுக்காகவோ(??) இல்லை. இன்னும் சொல்ல போனால் என்னுடய தளத்தில் நான் இன்னமும் Hitcount டை கூட configure பன்னலை. குசேலன் பதிவிற்கு எவ்வளவு பேர் வந்தார்கள் என்பதும் எனக்கு தெரியாது. இந்த பதிவிற்கு எத்தனை பேர் வந்தார்களென்றும் எனக்கு தெரியாது. தெரிந்து கொள்ள ஆர்வமும் இல்லை.


  நீங்கள் சொல்லும் இந்த புகழ், விளம்பரங்களினால் எனக்கென்ன சங்கரும், மணிரத்திணமும் அடுத்த படத்தில் கதை எழுத என்னை கூப்பிடவா போகிறார்கள்? இல்லை இங்கே என்னுடைய பதிவில் பின்னூட்டமிட்ட லட்சகனாக்கான பதிவர்கள் வைத்து கட்சி ஆரம்பித்து, சட்டசபை தேர்தலில் முதலமைச்சர் நாற்காலிக்கு லக்கியோடு போட்டி போட போகிறேனா. எனக்கு ஒய்வு நேரம் கிடைக்கும் போது மட்டும் இங்கே வந்து எனக்கு தோனுகிறதை எழுதுகிறேன். நீங்கள் சொல்வதை போல எனக்கு இந்த அல்ப ஆசையெல்லாம் கிடையாது, நீங்கள் நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி :)

   

 • At September 17, 2008 at 11:03 AM , Blogger Bleachingpowder said...

  பின்னூட்டம் பெரியசாமி said,

  //ஆகவே வெளியிடுவதும் வெளியிடாமல் மறுப்பதும் கடைக்காரர்(வலைப் பூவின் உரிமையாளர்) விருப்பம் என்பது எனது தாழ்மையான கருத்து.//

  ஒப்புக்கொள்கிறேன். அதே சமயம் அது சரிதான என்பதை சுட்டிக்காட்ட எனக்கும் உரிமையுள்ளது தானே.

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பின்னூட்ட பெரியசாமி

   

 • At September 17, 2008 at 11:09 AM , Blogger Bleachingpowder said...

  குட்டிபிசாசு said,

  //மத்தவங்களை பற்றி எனக்கு தெரியாது. எங்க வீட்டில் இருக்கிற குட்டீஸ் "படையப்பா" தான் பார்த்துக் கொண்டிருந்ததுகள்//

  படையப்பா படம் கே.டிவியில் ஒடுவதை சொன்னதே என்னுடைய சித்தி குழந்தைகள் தான். அவர்கள் எனக்கு மட்டுமல்ல, அவளுக்கு இதை சொன்னது அவளுடைய classmate. எந்த ஒரு வீட்டிற்கு போனாலும் டிவி ரிமோட் குழந்தைகள் கையில் தான் இருக்கும், இல்லை என்றால் தாய்குலம் கையில். இவர்கள் பார்பதை தான் நாமும் பார்க்கவேண்டும். இந்நிலையில் பருத்திவீரனா, படையப்பாவா என்றால் அது நிச்சயம் படையப்பா தான். இது லக்கிக்கும் நல்லா தெரியும், சும்மா வீம்புக்கு அவர் அப்படி எழுதியிருக்கிறார்.

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி குட்டி பிசாசு.

   

 • At September 17, 2008 at 11:12 AM , Blogger Bleachingpowder said...

  சென்ஷி said,

  //சான்ஸே இல்ல.. இந்த மாதிரி யாராச்சும் நாக்க பிடுங்க மாட்டாங்களான்னு ஏங்கிட்டு இருந்தேன்.//

  நிங்க கலாய்கிறீங்கலா, இல்லை நிஜமாதான் சொல்றீங்களானு தெரியலையே சென்ஷீ:))

  //இப்ப பாருங்க. இதை வச்சு நான் ஒரு மொக்கைய போட முடிஞ்சது..
  //

  என்ன வச்சு காமெடி, கீமடி பண்ணலையே :))

  வருகைக்கு கருத்திற்கு மிக்க நன்றி சென்ஷி.

   

 • At September 17, 2008 at 11:14 AM , Blogger Bleachingpowder said...

  king said,
  //அவர் கொள்கைகள் அவருக்கு விடுங்கப்பா....//

  அதே மாதிரி நமக்கும் கொஞ்சம் கொள்கை எல்லாம் இருக்குங்க :)

  வருகைக்கு நன்றி king

   

 • At September 17, 2008 at 12:13 PM , Blogger SurveySan said...

  bleachingpowder,

  பின்னூட்டத்தை அனுமதிப்பதும் அனுமதிக்காகதும் அவரவர் விருப்பம்.

  ஆனா, தனிமனித தாக்குதல், கெட்ட வார்த்தைகள்னு எதுவும் இல்லாத சாதா பின்னூட்டங்களை ஒரு பதிவர் அனுமதிக்காதது சரியில்லை. அதுவும், லக்கி இப்படி பண்றாருன்னா நம்ப முடியல்ல.
  லக்கி, whatsup?

  மத்தபடி, அவரு பதிவுல இருக்கர குஜால் படமெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. புடிக்கலைன்னா, வல்து கண்ணை மூடிக்கிட்டு, கருத்தை மட்டும் படிச்சிட்டு எஸ்கேப்பிடலாம் ;)
  முழு நிர்வாணம் ஆயிடுச்சுன்னா, கண்டனத்தை தெரிவிச்சிடலாம் ;)

   

 • At September 17, 2008 at 12:46 PM , Blogger சென்ஷி said...

  //நீங்கள் சொல்லும் இந்த புகழ், விளம்பரங்களினால் எனக்கென்ன சங்கரும், மணிரத்திணமும் அடுத்த படத்தில் கதை எழுத என்னை கூப்பிடவா போகிறார்கள்? இல்லை இங்கே என்னுடைய பதிவில் பின்னூட்டமிட்ட லட்சகனாக்கான பதிவர்கள் வைத்து கட்சி ஆரம்பித்து, சட்டசபை தேர்தலில் முதலமைச்சர் நாற்காலிக்கு லக்கியோடு போட்டி போட போகிறேனா. எனக்கு ஒய்வு நேரம் கிடைக்கும் போது மட்டும் இங்கே வந்து எனக்கு தோனுகிறதை எழுதுகிறேன். நீங்கள் சொல்வதை போல எனக்கு இந்த அல்ப ஆசையெல்லாம் கிடையாது, நீங்கள் நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி :)
  //

  ஆஹா.. ரெண்டு நாள் லீவு கேட்டாலும் நம்மளை அடுத்த மொக்கைய போடவிடாம அடங்கமாட்டாரு போலருக்கே பவுடர்காரரு :)

   

 • At September 17, 2008 at 12:48 PM , Blogger சென்ஷி said...

  //முழு நிர்வாணம் ஆயிடுச்சுன்னா, கண்டனத்தை தெரிவிச்சிடலாம் ;)//

  ஹி..ஹி.. லக்கி, சர்வேசனும் ரெடியாகிட்டாரு.. நாங்க கண்டன ஊர்வலம் நடத்தற அளவுக்கு ஒரு போட்டோவ போட்டுடு :)

   

 • At September 17, 2008 at 1:01 PM , Blogger Bleachingpowder said...

  Surveysan said,

  //ஆனா, தனிமனித தாக்குதல், கெட்ட வார்த்தைகள்னு எதுவும் இல்லாத சாதா பின்னூட்டங்களை ஒரு பதிவர் அனுமதிக்காதது சரியில்லை. அதுவும், லக்கி இப்படி பண்றாருன்னா நம்ப முடியல்ல.
  லக்கி, whatsup?//

  வாங்க சர்வேசன், நான் எதிர்பார்பதெல்லாம் ஒரு சின்ன Acknowledgement அவ்வளவுதான். இந்த குறைந்த பட்ச நாகரிகத்தை மட்டுமே அவரிடம் எதிர்பார்க்கிறேன்.

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சர்வேசன்

   

 • At September 17, 2008 at 3:00 PM , Blogger கார்க்கி said...

  //எந்த ஜோதியின் நான் ஐக்கியம் ஆயிட்டேன்?//
  அன்பு கார்க்கி ,
  அன்று அவ்வளவு கோபத்தில் இருந்தீர்கள் .

  இன்று இவ்வளவு பாசத்துடன் இருக்கிறீர்கள் .

  என்ன மாயமோ ?

  தூங்குகிறவர்களை எழுப்பலாம் . ஆனால் தூங்குவதுபோல் நடிப்பவர்களை எழுப்ப முடியுமா //

  இதற்கு எனக்கு அர்த்தம் புரியவில்லை நண்பரே.. எப்போது கோவபட்டேன், எப்போது பாசத்துடன் இருக்கிறேன்? யார் மீது? ஆனால் கடைசி வரி என்னை வேதனைபடுத்தியது.. என்ன விஷயம் சொல்லுங்க..

   

 • At September 17, 2008 at 4:03 PM , Blogger Kamal said...

  பிளீச்சிங்..
  எனக்கும் லக்கியின் எழுத்து ரொம்ப பிடிக்கும்...ஆனால் நான் படிப்பதோடு சரி...:)))
  அப்படியே பின்னூட்டம் போட்டாலும் அதை உடனே மறந்தும விடுவேன்....
  நம்ம ஞாபக சக்தி அப்படி.... :))))

  மற்றபடி நீங்கள் கேட்பது நியாயம்தான்....பார்ப்போம் இதுக்கு என்ன நீதி கிடைக்குதுனு :)))

   

 • At September 17, 2008 at 6:40 PM , Blogger நல்லதந்தி said...

  பிளீச்சிங் பெளடர்...நீங்க லக்கிலுக்கப் பத்தி இந்த பதிவைப் போட்டதுமே நான் இதுக்கு முன்னே லக்கிலுக் அவருடைய வலைப்பூவில்,எதிர் விமர்சனமோ,அல்லது எதாவது தவறு கண்டுபிடித்தோ பின்னூட்டம்...கவனிக்க எந்தவொரு கடின வார்த்தையையும் பயன்படுத்தாமல் பின்னூட்டம் போட்டால் கூட வருவதில்லை என்று யாரோ ஒரு வலைப்பதிவர் குறைசொன்னப்போ நானும் இதை ஆமோதித்து பின்னூட்டம் போட்டோமே யார் அந்த பதிவர் என்று கொஞ்சம் யோசித்தேன்....அட அது நீங்கதான்னு இப்பதான் பார்த்தேன்.அந்தப் பின்னூட்டத்தை கீழே எடுத்துப் போட்டு இருக்கிறேன்.சேம் பிளட். சேம் சேம் பிளட்!! :)(அதில் நான் கலைஞர் வாழ்க! எனப்போட்டால் உடனே வெளியிடுவார் என்று எழுதி இருந்தேன்..அதை இப்போ ஃபாலோ செஞ்சதுக்கு ஒரு சிரிப்பு! :) )


  At August 6, 2008 6:51 PM , நல்லதந்தி said...

  //வாங்க இந்தியன். அதான் நீங்களே கேள்வி கேட்டு நீங்களே பதிலும் சொல்லீட்டிங்களே. இனி நான் என்ன சொல்றது. உங்க கருத்துதான் என்னோடதும். தசவதாரம் வெளிவந்த போது கமல் ரசிகனும் இதெயேதான் செய்தான். வில்லு படம் வந்தால் விஜய் ரசிகனும் இதைதான் செய்வான். But என்னை பொறுத்தவரை இவர்கள் எல்லாம் harmless to the society. புது படம் ரிலீஸ் ஆனா ரெண்டு நாள் ஆட்டம் போட்டுட்டு அவன் பொழப்ப பாக்க போயிடுவான்.

  ஆன அரசியல்ல தொண்டன் அப்படியில்லை, தினமும் அவன் தலைவன் காலை நக்கீட்டு, போடுற எழும்பு துண்ட வாயில கவ்விட்டு, குடும்பம் புள்ளகுட்டிய கவணிக்காம இருக்கானே அவனைதான் முதல்ல திருத்தனும்.//


  இதுதான் மேட்டர். :)

  லக்கிலுக் அவரோட கட்சியையோ,தலைவரையோ,கேள்வி கேட்டு ஒரு பின்னூட்டம் போட்டால் கூட வெளியிடுவதில்லை.அவ்வளவு நடுநிலைமை.எனக்கும் இந்த அனுபவம் இருக்கு.
  அவருடைய எந்த பதிவைப் படிச்சாலும் சூப்பர்.அற்புதம்,வாழ்க,இந்த ரீதியிலேயே பின்னூட்டம் போட்டால் உடனே வந்துவிடும்.கலைஞர் வாழ்க என்று போட்டால் அதற்கு நன்றி சொல்லி பதிலும் அவரிடமிருந்து வரும். :)

   

 • At September 17, 2008 at 9:01 PM , Blogger Bleachingpowder said...

  WOWWWWW...superrrr...:))))))))கலைஞர் வாழ்கனு டைப் அடிக்கும் போது எனக்கும் தோனிச்சு நல்லதந்தி, இது நம்ம டயலாக் இல்ல, இதுக்கு முன்னாடி யாரொ சொல்லியிருக்காங்கனு, ஆனா அது நீங்க நம்ம பதிவுல சொன்னது தான்னு தெரியாம போச்சே. Smart people think alike :))

  அவர் இப்படிதான்னு இருப்பார்னு தோனுது, நம்ம இப்பதிவிற்கு part1,2,3,4... போட்டு போக வேண்டியதுதான்.

   

 • At September 17, 2008 at 9:04 PM , Blogger Bleachingpowder said...

  kamal said,
  //மற்றபடி நீங்கள் கேட்பதும் நியாயம்தான்....பார்ப்போம் இதுக்கு என்ன நீதி கிடைக்குதுனு :)))//

  நமக்கு நீதி, நியாயம் எல்லாம் வேண்டாங்கோ. இந்த மாதிரி இருக்கிறது, நிறைய பேருக்கு பிடிக்கலைனு தெரிஞ்சா கூட போதும்.

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கமல்

   

 • At September 17, 2008 at 10:22 PM , Blogger அவனும் அவளும் said...

  வணக்கம். லக்கி வலைல உள்ள படங்கள் மேல என்ன பிரச்சனை உங்களுக்கு ? எனக்கு பிடிச்சி தான் இருக்கு. ஒன்னும் பயங்கர அசிங்கமா இல்லையே ! அவர் ஒன்னும் போர்னோ படம் போடலையே ? இல்லாட்டி அது தான் பிரச்சனையா ? இது மாதிரி பிரச்சனை கிளப்பிவுட்டு அவர் படத்த எடுத்துட போறாரு...சில மாதங்களா அவரு சட்டி கதை கூட எழுதறது இல்ல.

  அதே மாதிரி லக்கி அவரால பதில் சொல்ல முடிஞ்சா சொல்லுவாரு.....இல்லாட்டி ஹாயா வேற விஷயத்த பத்தி பேசுவாரு... இதுல என்ன பிரச்சனை உங்களுக்கு ?
  ஒருவேள ஏகப்பட்ட பின்னூட்டம் வருதோ என்னவோ ? எத வச்சி நீங்க போட்ட பின்னூட்டம் மட்டும் பிரசுரம் பண்ண முடியாதுன்னு சொல்றாருன்னு நினைக்கறீங்க.

  "மதியாதார் வாசல் மிதியாதேன்னு" அப்படின்னு சமஸ்க்ருத ஸ்லோகத்தின் தமிழாக்கம் கூட கோவிகண்ணன் எழுதி இருந்தாரே....படிக்கலையா ?

   

 • At September 17, 2008 at 11:28 PM , Blogger புதிய கோணங்கி ! said...

  என்னமோ போங்க!

  நீங்க என்னடானா உங்க பின்னூட்டத்தை அவர் வெளியிடலன்றீங்க, அவர் என்னடானா நீங்க பாப்புலர் ஆவதற்கு அவர் பேரை பயன்படுத்திறீங்கனு சொல்றாரு.

  ஒண்ணுமே புரியல போங்க.

  ஆனா ஒரு விஷயத்தை நாம ஒப்புக்கதான் வேணும். அவருக்கு ஆணவம் அல்லது கர்வம் கொஞ்சம் அதிகம்தான்.

  அதான் உங்களை ஒரு அனாதைனு சொல்றாரு.

  மனுசனுக்கு கொஞ்சம் நாவடக்கம் தேவை.

  இதோ அந்த பதிவில் உங்களைப்பற்றி கேள்வி கேட்ட சர்வேசனுக்கு லக்கியின் பதில் :


  //
  SurveySan said...
  fyi,

  =====================
  bleachingpowder,

  பின்னூட்டத்தை அனுமதிப்பதும் அனுமதிக்காகதும் அவரவர் விருப்பம்.

  ஆனா, தனிமனித தாக்குதல், கெட்ட வார்த்தைகள்னு எதுவும் இல்லாத சாதா பின்னூட்டங்களை ஒரு பதிவர் அனுமதிக்காதது சரியில்லை. அதுவும், லக்கி இப்படி பண்றாருன்னா நம்ப முடியல்ல.
  லக்கி, whatsup?

  மத்தபடி, அவரு பதிவுல இருக்கர குஜால் படமெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. புடிக்கலைன்னா, வல்து கண்ணை மூடிக்கிட்டு, கருத்தை மட்டும் படிச்சிட்டு எஸ்கேப்பிடலாம் ;)
  முழு நிர்வாணம் ஆயிடுச்சுன்னா, கண்டனத்தை தெரிவிச்சிடலாம் ;)
  ==============
  நாராயண, நாராயண!
  12:21 PM, September 17, 2008

  லக்கிலுக் said...
  சர்வேசன்!

  வழக்கம்போல நீங்கள் என்ன சொல்லுகிறீகள் என்று தெரியவில்லை. எனக்கு வரும் எல்லாப் பின்னூட்டத்தையும் மட்டுறுத்தாமல் வெளியிட்டு விடுகிறேன்.

  சில பேர் தங்களின் இருப்பை தக்கவைக்க ஒருவேளை ‘லக்கிலுக்' பெயரில் தலைப்பு போட்டால் ஹிட்டுகள் வருகிறதென்று இதுபோல சில அனாதைகள் கதறுகிறார்களா என்று தெரியவில்லை. என் பெயரை சொன்னால் அவர்களுக்கு பொழைப்பு ஓடுகிறது என்றால் பாவம் பிழைத்துப் போகட்டும்.

  இந்த தொல்லையை தவிர்க்க பேசாமல் கமெண்டு மாடரேஷனை எடுத்துவிடலாமா என்று சில நேரம் யோசிக்கிறேன். எடுத்துவிட்டால் என்ன ஆகும் என்று உங்களுக்கே தெரியும் என்பதால் கமெண்டு மாடரேஷனை வேறுவழியில்லாமல் வைத்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.
  12:26 PM, September 17, 2008//

   

 • At September 18, 2008 at 3:14 PM , Blogger Bleachingpowder said...

  புதிய கோணங்க said,

  //இதோ அந்த பதிவில் உங்களைப்பற்றி கேள்வி கேட்ட சர்வேசனுக்கு லக்கியின் பதில் :


  சில பேர் தங்களின் இருப்பை தக்கவைக்க ஒருவேளை ‘லக்கிலுக்' பெயரில் தலைப்பு போட்டால் ஹிட்டுகள் வருகிறதென்று இதுபோல சில அனாதைகள் கதறுகிறார்களா என்று தெரியவில்லை.//

  நூறு தடவ சொல்லியாச்சு, இந்த குருட்டு கபோதிங்க கிட்ட, டேய் என்னோட ப்ளாக்ல நான் அந்த கருமம் புடிச்ச Hitcount டை யெல்லாம் configure பன்னல. என்னோட blogக்கு எத்தனை பேர் வரான், போறான்ற கணக்கு எல்லாம் எனக்கு தேவையில்லைனு. திரும்ப திரும்ப சொன்னதையே திரும்ப சொன்னா நான் என்ன பன்றது.

  லக்கிய எதிர்தால் புகழ் கிடைக்குமாம். ஐய்யோ ராமா, இவங்க பன்ற காமெடிக்கு ஒரு அளவே இல்லையா.
  தமிழ்மணத்திற்கு வெளில போன அந்த ஆளையே பத்து பேறுக்கு மேல தெரியாது, இத்தனைக்கும் ஒரு நாளைக்கு குறைஞ்சது மூனு பதிவு போடுவாரு, நான் மாசத்துல ஒன்னு எழுதுனால பெரிய விசியம்ம் இதுல லட்சனத்துல புகழாவது, புடலங்காய்யாவது


  இப்போ பாருங்க என்னோட புகழ் உலகமெல்லாம் பரவிடுச்சு. இரண்டு நாளா அப்துல் கலாம்,மன்மோகன் சிங்,அத்வானி,ஒபாமா, ஜார்ஜ் புஷ் எல்லாம் போன் போட்டு நலம் விசாரிக்குறாங்க. நேத்து காலைலே பேக்கரில டீ குடிக்க போனா, கடைக்காரன் காசு வாங்க மாட்டேங்கறான், நீங்க வந்த மட்டும் போதுங்கறான். ஒரே நாள்ல நாயகன் கமல் மாதிரி ஆயிட்டேன்.

  இது பத்தாதுனு, லக்கியை எதிர்த்த அஞ்சா நெஞ்சன் ப்ளிச்சீங் பவுடர் வாழ்கனு அண்ணா சாலையில் நூறு அடி கட் அவுட் வேற வச்சுருக்காங்க.

  திமுக,அதிமுக,பாமக,காங்கிரஸ் கட்சிகளிடமிருந்து வேற ஒயாமல் அழைப்பு, எங்க கட்சியின் சார்பா முதலமைச்சர் வேட்பாளரா நீங்க தான் நிக்கனும்னு.

  இந்த பதிவ ஒரு நாலு மாசம் முன்னாடி போட்டிருந்து ஒபாமாவுக்கு சரியான போட்டியா இருக்கும். கொஞ்சம் இருங்க யாரோ நெல்சன் மண்டேலாவாம், ஐநா சபை தூதுவரோட என்னை பார்க்க வெளியே நின்னுட்டு இருக்காறாம்,லக்கியெ எதிர்த்து பதிவு போட்டத பத்தி எதோ பேசனுமாம். போய்ட்டு வந்தறேன்.

  வருகைக்கும் கருத்திற்கு நன்றி புதிய கோணங்கி

   

 • At September 18, 2008 at 5:38 PM , Blogger Bleachingpowder said...

  வருகைக்கு நன்றி அவனும் அவளும்.

   

 • At September 25, 2008 at 11:07 PM , Blogger Kasi Arumugam - காசி said...

  This comment has been removed by the author.

   

 • At October 26, 2008 at 3:23 PM , Blogger Known Stranger said...

  oh ippadi yellam kuda panuvangalla blog worldla ithuku ellam neram iruka.

   

 • At November 8, 2008 at 7:05 PM , Blogger Basaki said...

  //வலையில தடம் பதிக்க சீனியர் பதிவர்கள் ஆதரவு தேவை//

  இதுல எனக்கு சுத்தமா உடன்பாடு இல்லைங்க

   

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home