படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி

Sunday, February 19, 2012

சாரு, நீங்க ஒரு காமெடி பீஸ்

என்ன மாயமோ மந்திரமோ தெரியலை, தினமும் காலை சாருவின் பதிவை அல்லது facebook statusயை‌ டாய்லட்டில் படித்தால் தான் எனக்கு ஆய் போகிறது. உலகில் இது போல் வேறு எந்த‌ எழுத்தாளர்களுக்கு இந்த மாதிரி பவர் உள்ளது என்று தெரியவில்லை. சரி அத விடுங்க‌, இரண்டு வாரம் முன்பு, என் புருசனும் கச்சேரிக்கு போறான்னு சொல்ற மாதிரி இவரும் ஜெய்பூர் இலக்கிய விழாவிற்கு போனார். இலக்கிய விழாவிற்கு இவர் ஏன் போனார் நீங்கள் யோசிக்கிறது புரியுது, விடுங்க அன்னா ஹாசரேவை விஜய் பார்க்க போன மாதிரின்னு வச்சுக்கோங்க.

இவர் போன நேரம் பார்த்து அங்க நிஜமான எழுத்தாளர்களோட கலந்துரையாடல் ஒன்று நடைபெற இருந்திருக்கிறது, இவர் போட்டிருக்கிற இரண்டாயிரம் ருபா ஜட்டியை பார்த்து கூப்பிடாங்களோ, இல்லை நாலாயிரம் ருபாய் ஃபேன்ஸி பனியனை பார்த்து கூப்பிடாங்களான்னு தெரியலை, ஒரு கை குறையுது வரிங்களான்னு கேட்ட ஓடனே, பலியாடு மாதிரி தலையாட்டிட்டு போயிட்டாரு. அங்க போய் உட்கார்ந்த உடனே பெரிய ஜபர்தஸ்த்தா சேர் கிட்டே இருந்த மினரல் வாட்டர் எடுத்து குடித்து தொண்டையை சரி செய்து ஒபாமா மாதிரி உக்காந்துகிட்டார்.

கலந்துரையாடல் தொடங்கியது.ம‌த்த அஞ்சு பேரும் ஆங்கிலத்தில் பொலந்து கட்ட வாட் ஷி இஸ் டெல்லிங் ன்னு பேந்த பேந்த முழிச்சிட்டு இருந்தாரு. கடைசில‌ எது ந‌ட‌க்க‌ கூடாதுன்னு நாம‌ நினைச்ச‌மோ அது ந‌ட‌ந்திடுச்சு, ஆமா மைக்கை இவ‌ர் கையில‌ கொடுத்துட்டாங்க‌, ப்ளாகுல‌ சிங்க‌ம் போல‌ உறுமுற‌ த‌ல‌, அங்க‌ புலிகுட்டி த‌ம்பி பூனைக்குட்டி மாதிரி என்ன‌ பேச‌றாருன்னு கடைசி வரைக்கும் யாருக்கும் புரியலை. ம‌னுசன் எவ்வ‌ள‌வு நேரம் தான் சும்மா உட்கார‌‌ முடியும், அவ‌ங்க‌ளும் இப்ப‌டி ஒருத்த‌ர் ந‌ம்ம‌ கூட‌ இருக்காருன்னே க‌ண்டுக்காம‌, அவ‌ங்க‌ பாட்டுக்கு பேசிட்டு இருதாங்க‌. ந‌ம்மாளு பார்த்தாரு கொஞ்ச‌ நேர‌த்துல‌ மெதுவா எந்திரிச்சு, அங்க‌ நிக‌ழ்ச்சியை தொகுத்து வ‌ழ‌ங்கிட்டு இருந்த‌ பெண்ணிட‌ம்(பேர‌ழ‌கி) மே ஐ கோ டு த‌ டாய்ல‌ட்னு என்ன‌வோ சொல்லிட்டு ந‌ழுவிட்டாரு. ஒரு க‌ல‌ந்துரையாட‌ல் ந‌டைபெற்று கொண்டிருக்கும் பொழுது இப்ப‌டி அசிங்க‌மா பாதியில‌ எழுந்திருச்சு போற‌து எவ்வ‌ள‌வு கேவலம். கேட்டா நோபல் க‌மிட்டில் இருந்து ஒரு ஃபோன், உட‌னே அடுத்த‌ ஃபைளைட் புடிச்சு ஸ்வீட‌ன் வ‌ர‌ சொல்லீட்டாங்க‌னு எதாச்சும் புருடா விடுவாரு. அட‌ ந‌ம‌க்கு த‌மிழே த‌ற்குறி, விக்கிலீக்ஸ் விம‌ல் என்று சாருவால் அன்புட‌ன் அழைக்க‌ப‌ட்டும் மாம‌ல்ல‌ன் தின‌மும் காலை அவ‌ருடையை ப‌திவில் இருந்து ஒரு மேற்க்கோள் காட்டி அவருடைய‌ த‌மிழை திருத்திக்கொண்டிருக்கிறார், இந்த‌ ல‌ட்ச‌ண‌த்துல‌ அங்க‌ போய் மேடை ஏறி த‌மிழ்நாட்டோட‌ ஒட்டு மொத்த‌ மானத்தையும் வாங்க‌னுமா?

அந்த‌ க‌ரும‌த்தை பார்க்க‌னும்னு நினைக்குற‌வ‌ங்க‌ இங்க‌ போய் பாருங்க‌
http://vimeo.com/moogaloop.swf?clip_id=35430352&server=vimeo.com&show_title=0&show_byline=0&show_portrait=0&color&fullscreen=1

ஒரு எழுத்தாளன் எப்போதும் உண்மையை பேசனும் நினைக்குற அளவிற்கு நான் ஒன்னும் கூமுட்டை இல்லை அதுக்காக காலையில எந்திருச்சு காப்பி குடிக்குறதுல கூட பொய் பேசுவேன்னு சொன்னா எப்படி? மாசத்துல எப்படியும் ரெண்டு பதிவுலையாவது, காலையில நாலு மணிக்கு எந்திருச்சு எழுதுறேன், ஏழு மணிக்கு காப்பி குடிச்சே ஆகனும், ஆனா போட்டு கொடுக்க ஆளே இல்லை நடந்தே போய் சரவணபவன்ல காப்பி குடிக்குறேன். இது தான் ஒரு எழுத்தாளனுக்கு தமிழ்நாட்டில் உள்ள மரியாதைன்னு பொல‌ம்பிட்டு இருப்பாரு, ரெண்டு வாரம் முன்னாடி கூட அதை பத்தி எழுதியிருந்தார்..பார்க்க.. http://charuonline.com/blog/?p=2883//மயிலாப்பூரின் அந்தப் பிரபலமான ஓட்டலுக்கு பார்க்கிலிருந்து நடந்தே சென்ற போது மணி எட்டேகால். நம்ப மாட்டீர்கள். ஒரே ஒரு காப்பிக்காக முக்கால் மணி நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. அப்படியும் காப்பி ஆறிப் போயிருந்தது.//இன்னைக்கு என்னடானா திடீர்னு நான் காலையில காபி குடிக்கிறதை விட்டு மூனு வருசமாச்சு இப்ப டெய்லி மாட்டு மூத்திரம் மட்டும் தான் குடிக்குறேன்னு அடிச்சாரு பாருங்க பல்டி. http://charuonline.com/blog/?p=2974//காலையில் எழுந்ததும் ஃபில்டர் காப்பி குடித்தே ஆக வேண்டும். ஆனால் மூன்று ஆண்டுகளாக காலை காப்பியை விட்டு விட்டேன்//ஒரு வேளை இவர் பாலோ பண்றது ஃபிரஞ்ச் அல்லது லத்தின் காலை நேரமோ? என்ன எழவோ, இதை ப‌டிச்சிட்டு அவ‌ரோடு குஞ்சுங்க‌ எத்த‌னை பேர் கால‌ங்காத்தால‌ சொம்பை எடுத்துட்டு மாட்டுக்கு பின்னாடி போய் நிக்க‌ போறாங்க‌ளோ, அவ‌ங்க‌ளை அந்த‌ நித்தி தான் காப்பாத்த‌னும்.

இதை எல்லாம் புதுசா படிக்குறவங்க‌, இவர் தான் பெரிய காமெடியன்னு நினைக்காதீங்க, இவருக்கு facebookல் ஒரு group இருக்கு அட..அட..அட அங்க போய் பாருங்க, ஒவ்வொரு போஸ்டும் நெனைச்சு நெனைச்சு சிரிக்குற மாதிரி இருக்கும். இன்றைய சாம்பிள்:
பிச்சைகாரன்: எல்லைகள் கடந்து சிறகடிக்கும் சாருவை கவுரவிக்க அவருக்கு பாலாபிஷேகம் செய்ய நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறேன்இதுக்கும் நம்ம இதய தெய்வம் சாருவின் பதில்: பாலாபிஷேகம் செய்வது போன்ற காரியங்கள் நம் எதிரிகள் நம்மைப் பார்த்து ஏளனம் செய்ய ஏதுவாகி விடும். அதாவது, பாலாபிஷேகம் செய்யறதுக்கும் இவருக்கு ok தானாம் ஆனா என்ன கழுத மத்த பயபுள்ளைங்க எதாச்சாசும் சொலீட்டா என்ன பண்றதுன்னு ஒரு பீலீங்க் அவ்வளவு தான். மேல மேல இன்னும் உங்க கிட்ட இருந்து நாங்க நிறைய எதிர்பார்க்கிறோம், பாலாபிஷேகதிற்கு பிறகு என்ன ? லிங்க தரிசனமா?? இது தான்யா பின்நவினதுவம் ச்சே முன்நவினதுவம்.

எஸ்.ரா ரஜினியை அழைத்து கூட்டம் சேர்த்துட்டார்ன்னு இவரும், இவரோட போர்படை தளபதிகள் ஆறு பேரும் சேர்ந்து எக்ஸைல் விமர்சண கூட்டம்ன்னு ஒன்னை போட்டாங்க, சரியா எண்ணிப் பார்த்தா இருபத்தி மூனு பேர், சாருவையும் சேர்த்து வந்திருப்பார்கள், இதில பத்து பேர் வெளியில வெயில் ஜாஸ்தியா இருக்குன்னு உள்ள வந்தவங்க. எப்படியோ கையில கால்ல விழுந்து ஞானியையும் கூட்டிட்டு வந்துட்டாங்க, அவர் எதோ சாருவை ஓபாமா ரேஞ்சுக்கு புகழ்ந்து தள்ளப் போகிறார்ன்னு சப்பு கொட்டிட்டு வந்தவங்களுக்கு சாணியை கரைச்சு மூஞ்சியில ஊத்துன மாதிரி, அந்த புக்கையும் சாருவையும் கிழி கிழின்னு கிழிச்சுட்டாரு. இனிமேலாச்சும் விடல பசங்களுக்கு பிடிக்குற மாதிரி எழுதறத விட்டு உருப்படியா எதாச்சும் எழுத பாருன்னு சொல்லிட்டு போயிட்டாரு. சும்மா விடுவாரா, இன்னைக்கு வந்து அவரோட ப்ளாக்குல‌ பக்கம் பக்கமா பேண்டு வச்சுட்டாரு.

கொஞ்ச‌ நாளா, என்ன‌மோ ப‌ண்ணி தொலைய‌ட்டும் யாரும் க‌ண்டுக்காம‌ விட்ட‌ இவ‌ரை இப்போ எல்லாரும் திரும்ப‌வும் ர‌வுண்டு க‌ட்ட‌ ஆர‌ம்பிச்சிடாங்க‌. மாம‌ல்ல‌ன்( விக்கிலீக்ஸ் விம‌ல்) தின‌மும் இவ‌ர் ட‌வுச‌ரை உருவிக்கொண்டு இருக்கிறார். அதுவும் சாருவோட‌ லிங்கையை கொடுத்து அவ‌ர் எழுதியிருக்கும் கோமாளித‌ன‌த்தை ப‌கிர‌ங்க‌ ப‌டுத்தி வ‌ருகிறார். எப்ப‌டி நித்தி மேட்ட‌ர் வெளியான‌ உட‌னே ஒரு வைர‌ஸ் வ‌ந்து க‌ரெட்டா சாரு நித்தியை ப‌த்தி எழுதின கட்டுரைகளை ம‌ட்டும் டெலிட் ப‌ண்ணிட்டு போச்சோ அதே போல‌ ஒரு ‌வைர‌ஸ் கூடி சீக்கிர‌ம் திரும்பி வ‌ரும்னு நினைக்குறேன்.

இவ்வ‌ள‌வு நாளா அந்த பொண்ணு chat விவ‌கார‌த்திற்கும் என‌க்கும் எந்த‌ ச‌ம்ம‌ந்த‌மும் இல்லைன்னு(த‌ப்பில்லைனா போலிஸ் கிட்ட‌ போக‌ வேண்டிய‌து தானே) ம‌ழுப்பிட்டு இருந்தவர் இன்று அவ‌ருடைய‌ த‌ள‌த்தில் என்ன‌ கூறியிருக்கிறார் பாருங்க‌ள். http://charuonline.com/blog/?p=2970 //துக்ளக்கில் ஒருவர் எழுதவேண்டுமென்றால் அவர் கறைபடியாதவராக இருக்க வேண்டும். என் எழுத்தை விரும்பாதவர்கள், திட்டமிட்டு, வேண்டுமென்றே என்னை ஒரு Scandal லில் மாட்ட வைத்தார்கள். அந்தக் கறை என்மீது பதிந்துவிட்டதால் என் எழுத்தும் நிறுத்தப்பட்டது.// இதுவ‌ரை எனக்கும் அந்த ற்கும் எந்த‌ ச‌ம்ம‌ந்த‌மும் இல்லைன்னு சொன்ன‌வ‌ர் இப்போ அவரை திட்ட‌மிட்டு மாட்ட‌ வைத்துவிட்டார்க‌ளாம். so அந்த உரையாடல் நடந்தது உண்மைன்னு அவரே ஒத்துக்கிட்டார்.கொஞ்ச‌ நாள் ஆயிடுச்சே எல்லாரும் ம‌ற‌ந்திருப்பாங்க‌ன்னு நினைச்சு இப்ப அடுத்த‌ பிட்டை போட‌ ஆர‌ம்பிச்சுட்டாரு என்னன்னா, இவ‌ரு மேட்ட‌ர் ப‌ண்ற‌ விசிய‌த்துல‌ யாருமே இவ‌ரை அடிச்சிக்க‌ முடியாதாம், இருப‌த்தி அஞ்சு வ‌ய‌து இளைஞ‌ன் கூட‌ இவ‌ர் கூட‌ போட்டி போட‌ முடியாதாம், கேட்டுக்கோங்க‌ப்பா இனி திரும்ப‌வும் ஆர‌ம்பிச்சிடுவாரு, ப‌தினேலு வ‌ய‌து பேர‌ழ‌கி என்னை திரும‌ண‌ம் செய்ய‌ வ‌ற்புறுத்திகிறார், பெங்க‌ளுரில் ஒரு மாததிற்கு மூன்று ல‌ட்ச‌ம் ச‌ம்பாதிக்கும் ஒரு இள‌ம்பெண் என் மூல‌மாக‌ ஒரு வாரிசு வேணும்னு உயிரெடுக்குறாள். நேற்று காபி ஷாப்பில் மூன்று பெண்கள் என்னை ஒரு வெறியோடு பார்த்தார்கள்ன்னு உலகத் தொலைகாட்சியில் முதல் முறையாகன்னு ஒரு வீடியோ எவிட‌ன்ஸ் மாட்டாமலா போயிடும், அதுவும் அநேக‌மாக‌ அவ‌ரோட‌ ப‌டைத்த‌ள‌ப‌திக‌ள் கிட்ட‌ இருந்தே தான் வெளிவ‌ரும்ன்னு ப‌ட்சி சொல்லுது. ந‌ம்பிக்கையுட‌ன் காத்திருப்போம்.சாரு அடிக்க‌டி யானையை புண‌ந்த‌ கொசு கதை சொல்லுவாரு. ர‌ஜினி மேட்ட‌ர் கூட‌ அப்ப‌டி தான், இவ‌ர் பாட்டுக்கு ர‌ஜினிட‌ம் கேள்வி கேட்குறேன், ச‌வால் விடுகிறேன்னு முழ‌ங்கிட்டு இருக்கிறாரு. பாவம் ர‌ஜினி,யாரு இந்த‌ ம‌னுச‌ன், ந‌ம்ம‌ கூட‌ எந்த‌ ப‌ட‌த்துலையாவ‌து ந‌டிச்சிருக்காரான்னு த‌னிமையில் உட்கார்ந்து யோசித்து கொண்டிருக்கிறாராம்.

Labels:

Thursday, February 17, 2011

தமிழக மீனவர்கள் இனிமேல் ஆணியே புடுங்க வேண்டாம் !

வேற என்ன தான் பண்றது, நம்மாளுங்க அவங்க எல்லையை தாண்டுனா சுடவும் கூடாது, கைதும் பண்ண கூடாது. பேசாம நம்ம கலைஞர் அய்யா கிட்ட சொல்லி தேர்தல் அறிக்கையில இத சேர்க்க சொல்லிடலாம். இனிமே மீனவர்களுக்கு தினமும் எவ்வளவு மீன்கள் வேணுமோ அத ஒரு ஃபோன் போட்டு சொன்னா போதும். மத்ததெல்லாம் கவர்மெண்ட் பாத்துக்கும். நம்ம இலவச வண்ணத்தொலைக்காட்சி பெட்டில் மானாட மயிலாட பாத்துட்டு மனிதவள மேம்பாட்டிற்க்கு நம்மாளான முயற்சியை எடுத்துக் கொண்டிருக்கலாம்.

சிங்கள ராணுவம் நமக்கு தேவையான மீன்களை பிடித்து தினமும் விமானத்தில் அனுப்பிவிடுவார்கள்.

தயவுசெய்து, மீனவர்களுக்கு கடலில் எல்லை தெரியாது, கண்ணு தெரியாது நீச்சலே தெரியாதுன்னு காமெடி பண்ணாதீங்க, இது சீரியஸ் பதிவு. மீனவர்களும் என்ன பண்ணுவாங்க, மீன்கள் எல்லாம் அவங்க இடத்துல தான் இருக்கு போய் எடுத்தா என்ன தப்புன்னு நியாயம் பேசுற பெரிய மனுசங்க அவங்க தெருவுல லாரி தண்ணி வரும் போது ஒரு குடம் தண்ணி அதிகமா பக்கத்து வூட்டுக்கு கொடுப்பாங்களான்னு கேளுங்க.

ஏன்யா சின்ன நாடு நம்மள ஏறி மிதிக்குது பாத்துட்டு சும்மா இருக்கனுமான்னு கேக்குறவங்க. அதே சின்ன நாடு, சின்ன கடற்படையை வைத்து தினமும் எல்லை தாண்டும் மீனவர்களை எப்படி தான் தடுப்பாங்க? மிகப்பெரிய நாட்டில் இருந்து வந்திருக்கிங்க உங்களுக்கு வேணுங்கறத பிடிச்சுட்டு போங்கன்னு சொல்லுவாங்களா? அத நாம வேனா அமரிக்காவுக்கு சொல்லுவோம், அவங்களுக்கெல்லாம் நல்லாவே ரோசம் இருக்கு.

அது எப்படி நூற்றுக்கனக்கான மீனவர்கள் எல்லை தாண்டி கரெக்டா இலங்கை ராணுவத்திடமே மாட்டுறாங்க? நம்ம எல்லையை தாண்டும் போது நம்ம கடற்படை என்ன பண்ணிட்டு இருந்தாங்க, சிறிய கடற்படையான இலங்கை நம்ம ஆளுங்களை ஒருத்தன் விடாம புடிக்கும் போது, உலகின் ரெண்டாவதோ மூனாவதோன்னு பீத்திக்குற பெரிய கடற்படை இதை தடுக்க முடியாதா? இல்லை தடுத்தது போக மிச்ச பேரு தான் உள்ள போய் மாட்டுறாங்களா? ஒன்னும் புரியலை.

நமக்கு அவ்வளவு அக்கறை இருந்தா புலிகளை ஆதரிக்க வேண்டாம், அட்லீஸ்ட் கையை கட்டிட்டு சும்மாவாச்சும் இருந்திருக்கனும். பெரிய பருப்பு மாதிரி ரேடார், ஆயுதங்களை எல்லாம் கொடுத்துட்டு இப்பொ குத்துது குடையுதுன்னா யார் தப்பு.

எல்லா நாட்டிலும் இது தான் சட்டம், எல்லை தாண்டினால் கைது செய்து சிறையில் அடைத்து, தங்கள் நாட்டின் சட்ட திட்டத்தின் படி தண்டனை அளிப்பார்கள். இல்லை தெரியாம தான் கேக்குறேன், இலங்கைக்கு பதில் அரேபியாவோ,அமெரிக்காவோ இல்லை இஸ்ரேலோ இருந்தால் நாமாளுங்க இப்படி பக்கத்து நாட்டுக்கு கபடி ஆடுவார்களா?

என்னவோ போங்க, ரொம்ப நாளைக்கு அப்புறம் தமிழ்மணத்திற்கு வந்திருக்குறேன். பாத்து பக்குவமா திட்டுங்க.

சாரு தேகம் நலமா?

Labels:

Monday, September 14, 2009

திருட்டு பயலே சுசி கனேசனுக்கு இந்த ஆப்பு பத்தாது

தொற எடுத்த படத்தை ஊர் உலகமே கிழிச்சு தொங்கவுட்ட போது பல்லை கடிச்சிட்டு இருந்தவரு, போன வாரம் ஞானி குமுதத்துல படம் ஊத்திக்கிச்சுன்னு எழுதின உடனே பொங்கி எழுந்து இந்த வார குமுதத்துல வாந்தி எடுத்து வச்சிருக்காரு. சக பத்திரிக்கையாளன் மேலே வருவதை பார்த்து வந்த பொறாமையில் எழுதியதாம். சமுக அக்கறையுடன், யாருக்கும் அஞ்சாமல் தன் மனதிற்க்கு நியாயமாக பட்டதை எழுதும் ஒரு மூத்த எழுத்தாளரை விமர்சிக்க குட்டை பாவாடைகளை காட்டி படம் பண்ணும் இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

நான் கூட கந்தசாமி விமர்சணத்தை படிச்சுட்டு கொஞ்சம் ஓவராதான் போறாங்க நம்மாளுங்க நினைச்சேன், இப்ப இவங்க பண்ற கூத்தை பார்தால் இன்னும் பத்தாதோன்னு தோனுது. நடு நிலை பத்திரிக்கையாளர்கள் இந்த படத்தை பார்த்து அதில் ஒருவர் படம் தோல்வின்னு சொன்னா கூட இவர் படமெடுக்கிறதை நிறுத்திடுவாரம் (யாராச்சும் அதை சீக்கிரமா பண்ணி தொலைங்கப்பா).

அட நீங்க எடுத்த கருமத்தை பத்தி என்னமோ எழுதுங்க, என்னமோ கிறுக்குங்க அதுக்கு ஏன்யா மத்த நல்ல படங்களை குறை சொல்றீங்க. சுப்பிரமணியபுரம், பசங்க, நாடோடிகள் எல்லா நல்ல படமில்லையாம், ஞானி தான் இந்த படங்களை மிகை படுத்தி எழுதிட்டாராம். சுப்பிரமணியபுரம், ரவுடிகளை பற்றிய படமாம். பசங்க சிறுவர்களுக்குன்னு சொல்லி பெரியவங்களுக்கு அறிவுரை சொன்ன படமாம். அப்புறம் நாடோடிகள், ஓடி போறவங்களை சேர்த்து வைக்குற படமாம். காறி துப்புற மாதிரி ஒரு படத்தை எடுத்துட்டு, எதார்த்தமா குறைந்த செலவில் வந்த தரமான படங்களை பற்ற பேச வெட்கமாயில்லை?

கந்தசாமி ஓடும் தியேட்டரில் மக்களோடு மக்களாக உட்கார்ந்து படம் பாருங்க அப்ப தெரியும் மக்கள் கிட்ட உங்க மரியாதை என்னன்னு. அவனவன் கிழிக்குற கிழியுல படத்தில் சம்மந்த பட்ட எல்லாருடைய ஃபேமலியும் அங்கே டோட்டல் டேமேஜ் ஆயிட்டிருக்கு. மெக்சிக்கோவுல பிச்சுமணியை தெரியாதவங்க யாருமே கிடையாதாமாம்? தியேட்டர்ல எவனும் வாயில சிரிக்க மாட்டேங்குறான்.

குழந்தைகளுக்கான படமாம் கந்தசாமி. அடப்பாவிங்களா, குழந்தைகளுக்காக எடுக்க பட்ட காட்சின்னு இந்த படத்தில் ஏதாவது ஒன்றையாவது சொல்லுங்கள் பார்ப்போம். இந்த குப்பையை குழந்தைகளுடன் காண நாங்கள் தயாராயில்லை. வேண்டுமென்றால் படமெடுத்த நீங்களும் அதில் நடித்தவர்களும் உங்கள் குழந்தைகளுடன் பாருங்க, படம் பார்க்கும் போது உங்கள் குழந்தைகள் முமைத்கான் நாக்கில் மாட்டியிருப்பது இருப்பது என்ன? அதை ஏன் அடிக்கடி காமிக்கிறீங்கன்னு கேட்டா என்ன பதில் சொல்லனும்னு யோசிச்சுட்டு படத்தை போடுங்க.

ஜெண்டில்மேன், அந்நியன்,ரமணா படத்திற்கும் கந்தசாமிக்கும் எந்த சம்மந்தமும் இல்லையாம், சிவாஜி படம் கூட ஒரே நேரத்தில் ஷங்கரும் இவரும் யோசித்த கருத்தாம், சொல்றாரு திருட்டு பயலே சுசி.

கந்தசாமி தான் ரெண்டு வாரத்துல ஐம்பத்தைந்து கோடி சம்பாதிருச்சுல, பார்ப்போம் இனி எந்த தயாரிப்பாளர் இந்த மாதிரி பணத்தை அள்ளி கொடுத்து உங்களை படம் எடுக்க சொல்றாருன்னு. ஏன் தானுவையே போய் கேளுங்களேன், இன்னோரு ஐம்பது கோடி கொடுங்க இதே மாதிரி குழந்தைகளுக்காக இன்னோரு படம் எடுத்து தரேன்னு, சொல்ல முடியாது அவர் கொடுத்தாலும் கொடுப்பாரு.

Labels:

Friday, May 29, 2009

எதிர்வினைக்கு நீங்களே பதில் சொல்லீடுங்க சாரு

நீங்க எழுதின வன்முறையின் தோல்வி கட்டுரைக்கு வந்த எதிர்வினைகளுக்கு நீங்களே நேரா பதில் சொல்லீடுங்க சாரு. அத விட்டுட்டு என் சங்கத்து ஆள அடிச்சு பாருன்னு பச்ச புள்ளையை சபைக்கு அனுப்பாதீங்க. அது பாட்டுக்கு வந்து செம கடுப்புல இருக்கும் எங்களிடம் , "எங்க அண்ணன் பழம் வாங்கிட்டு வர சொன்னாருன்னு" அப்பாவியா கேட்டுட்டு வாங்கி கட்டீட்டு இருக்கு.

நீங்க நிஜமாவே போடி மஸ்தான் தான் இல்லைன்னா, பிராபகரன் எங்க மாமா, அவரு மாவீரரு,ஹீரோ,ராஜேந்திரச்சோழனை மிஞ்சியவருன்னு சொல்லி சின்ன வயசுல இருந்தே கையில தீபாவளி துப்பாக்கியை வச்சுகிட்டு பிராபகரண் - ஜெயவர்தனே விளையாட்டு விளையாடினவங்களை கூட உங்க வழிக்கு வர வச்சிட்டீங்களே. ரெண்டு வாரம் முன்பு கூட இங்க யாருக்கும் தெரியலை வன்முறையினால் தீர்வு கிடைக்காதுன்னு. இப்படி தீடீர்னு சமிபகால வரலாற்றை புரட்டி பார்க்கும் போது தான் தெரிஞ்சுதாம்.

அப்புறம் உங்க பேர போட்டு எழுதினா முன்னூறு ஹிட்ஸ் ஜாஸ்தி கிடைக்குமாம், அத வச்சுட்டு நாக்கு கூட வழிக்க முடியாது. இந்த கருமத்துக்காக தான் அந்த எழவ நான் என் தளத்திலே போடல. அஞ்சு லட்சம் ஹிட்ஸ், பத்து லட்சம் ஹிட்ஸ் வாங்குனவங்க எல்லாம் என்ன சுஜாதா ஆயிட்டாங்களா இல்ல போயஸ் கார்டன்ல நாலு வீடு வாங்கிட்டாங்களா.

மொக்க பதிவர்கள் வழக்கம் போல உங்க வேலைய பாருங்க, நான் இப்படி தான் தனியா கத்திட்டு இருப்பேன். இங்க ஒருத்தன் ஜெய்ச்சுட்டே இருக்கிற வரைக்கும் தான் கூட இருப்பாங்க தோத்தா போயிட்டே இருப்பாங்க.

Labels:

Thursday, May 21, 2009

ப்ளிச்சிங் பவுடரும் நாற்பது திருடர்களும்

கேள்வி: அனுமதி வாங்கிக் கொண்டு தான் ஸ்கேன் செய்து போட்டாராமே?

பதில்: அந்த பதிவின் நோக்கமே அப்படி செய்வது Unethicalன்னு புரிய வைக்க தான். அதை சொன்னா காப்பிரைட்ஸ் கரைச்சு குடிச்ச கபோதிகளுக்கு(Boomarang) புரிய மாட்டேங்குது. அச்சில் வந்த அன்றே எல்லா பதிவர்களும் தங்களுடைய படைப்பை இனையதளத்தில் இலவசமாக பார்க்குமாறு வெளியிட்டால், அக்கதையை பிரசுகரித்த பத்திரிக்கைகளுக்கு கோபம் வராதா? மயிரே போச்சு, யாரோ எதையோ எழுதட்டும், அதை எந்த கபோதி வேண்டுமானாலும் ஸ்கேன் செய்து போடட்டும். ஒருவர் முதுகை ஒருவர் நக்கி கொண்டிருக்கும் இவர்களுக்கு என்ன சொன்னாலும் மண்டையில் ஏறாது.

கேள்வி: தனிமனித தாக்குதல் சரியா?
பதில்:டயனோசர் எருமை சண்டை, மம்மி ரிட்டர்ன்ஸ், கண்ட கருமாந்திர கபோதிகள் சரின்னா இதுவும் சரி.

கேள்வி:தமிழ்மண பதிவர்களின் ஒற்றுமை எப்படி இருக்கிறது?
பதில்: பரிசல்,கார்க்கி போன்றவர்கள், "இன்றைக்கு வெள்ளிக்கிழமை"ன்னு பதிவு போட்டாலும், அதற்கும் "ரிப்பீட்டு","உபயோகமான தகவலுக்கு நன்றி","மீ த பர்ஸ்ட்", "மாஸ்டர் பீஸ்","அவ்வ்வ்வ்"னு மறக்காமல் பின்னுட்டமிடுபவர்கள் புது பதிவர்களை கண்டு கொள்வதே இல்லை.

கேள்வி:பிரபாகரண் பற்றிய செய்தி, கருணாநிதியை எட்டியவுடன் அவருடைய ரியாக்ஷன் என்னவாக இருந்திருக்கும்?
பதில்:அப்பாடா.... ஜஸ்ட் எஸ்கேப்

கேள்வி: வைகோ?
பதில்: ஐயகோ !!!

கேள்வி: தமிழ்நாட்டில் விலைவாசி எந்தளவில் உள்ளது?
பதில்: ரொம்ப சீப், ஒரு வோட்டு ஐந்நூறு ருபாய் தான்.

கேள்வி: காங்கிரஸ் திமுகாவிற்கு எந்த துறையை ஒதுக்க வேண்டும்.
பதில்: எந்த துறையை கொடுத்தாலும் அவர்கள் ஒதுக்குவார்கள்.

கேள்வி:சாருவும் நாற்பது கோமாளிகளும் தலைப்பு எப்படி?
பதில்:சாருவும் நாற்பது திருடர்களும் வைத்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.

Labels:

Tuesday, May 19, 2009

பதிவர்களே போய் மகிந்தாவின் மூத்திரத்தை குடியுங்கள்

ஒரு இனமே அழிந்து விட்ட நிலையில், டெல்லியில் மகன்,மகள்,பேரனுக்கு முடி சூட்டும் வரை பிரபாகரன் உயிரோடு இருந்தால் போதும்னு இனையத்தில் நூறு ருபாய்க்கு பதிவு போடும் பதிவர்கள் போய் மகிந்தாவின் மூத்திரத்தை குடிகட்டும் !


மற்றவர்கள் சற்று அமைதியாக இருங்கள். உங்கள் எழுத்துப்புலமை, இரங்கல் கவிதை,புலனாய்வு திறமையை காட்டுவதற்கு இது நேரமும் அல்ல. அதை படிக்கும் நிலையில் எந்த ஈழத்தமிழனும் இல்லை.



நாய் சண்டை போடும் மனநிலையில் நான் இல்லாத காரணத்தினால், பின்னூட்டம் இடுவதை தற்காலிகமாக நீக்கியுள்ளேன்

Labels:

Thursday, May 14, 2009

பதிவர்களுக்கு பதிவர்களே ஆப்பு !!

நாடறிந்த நகைச்சுவை எழுத்தாளர் சமிபத்தில் நான் கடவுள் படத்தை பற்றி சிலாகித்து எழுதி அதை மலையாளம், லத்தின்,ஃபிரன்ச், ரஷ்ய மொழிகளில் மொழிபெயர்த்து அதை அந்தந்த நாடுகளில் கொண்டாடியது அறிந்ததே. இப்பொழுது அவருடைய நண்பர் ஒருவர் அந்த படத்தை பார்த்து ஒரு கருத்து சொல்ல, இப்பொழுது அந்த படத்தை போய் நான் எப்படி ரசித்தேன்னு ஃபீல் பண்ணீட்டு இருக்காராம்.

இதற்கு முன் இவர் எழுதிய கொரிய படத்தை பற்றி இவர் எழுதிய விமர்சணத்தில் இருந்த தவறுகளை சுட்டி காட்டிய போது அது எல்லாம் எழுத்துப் பிழை அதை திருத்துவது ப்ரூஃப் ரீடரின் வேலைன்னு சொன்னவர், இப்பொழுது நான் கடவுள் படத்தையே நான் சிலாகித்து எழுதி இருக்க கூடாதுனு சொல்லுகிறார். பேசாமல் இனி இவர் எழுதும் கதை,கட்டுரை, விமர்சணங்களுக்கு கீழே, All my reviews and opinions are subject to change. Conditions Applyன்னு போட்டுடலாம்.

வாங்குன காசுக்கு இன்னும் திமுகாவிற்காக கூவும் பதிவர்களே. உங்கள் தலைவருக்கு நீங்க தான் ஓய்வு கொடுக்க மாட்டேங்குறீங்க, போனா போகட்டும் இனி நாங்க கொடுக்குறோம். சனிக்கிழமைக்கு பிறகு கொஞ்சமும், மூனு நாலு மாசத்திற்கு பிறகு நிறையவும் ஓய்வு கிடைக்கும். அப்புறம் என்ன பாசக் கிளிகள் பார்ட்- 2 வரும் பார்த்து மகிழுங்கள்.

நம்முடைய பதிவர்கள் ஜனரஞ்சக பத்திரிக்கைகளில் எழுத ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியே. கதைகள் பத்திரிக்கையில் வந்த ஓரிரு நாளில் சிலர் அக்கதையை டைப் செய்தும், ஸ்கேன் செய்தும் போடுவது கண்டிக்கதக்கது. பத்திரிக்கை தரப்பில் இருந்து அவர்கள் இதற்காக வழக்கு கூட தொடரலாம். இச்செயல் இனியும் நீடித்தால் பதிவர்கள் எழுவதை பத்திரிக்கைகள் வெளியிட நிறைவே யோசிப்பார்கள். ஏன் நீங்கள் எழுதிய புத்தகங்களையும் அப்படியே ஸ்கேன் செய்து போட வேண்டியது தானே, அதுக்கு மட்டும் ஆன்லைனில் வாங்க இங்கே அமுக்கவும் அங்கே அமுக்கவும்னு விளம்பரம் எதுக்கு?

Labels: