படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி

Friday, May 29, 2009

எதிர்வினைக்கு நீங்களே பதில் சொல்லீடுங்க சாரு

நீங்க எழுதின வன்முறையின் தோல்வி கட்டுரைக்கு வந்த எதிர்வினைகளுக்கு நீங்களே நேரா பதில் சொல்லீடுங்க சாரு. அத விட்டுட்டு என் சங்கத்து ஆள அடிச்சு பாருன்னு பச்ச புள்ளையை சபைக்கு அனுப்பாதீங்க. அது பாட்டுக்கு வந்து செம கடுப்புல இருக்கும் எங்களிடம் , "எங்க அண்ணன் பழம் வாங்கிட்டு வர சொன்னாருன்னு" அப்பாவியா கேட்டுட்டு வாங்கி கட்டீட்டு இருக்கு.

நீங்க நிஜமாவே போடி மஸ்தான் தான் இல்லைன்னா, பிராபகரன் எங்க மாமா, அவரு மாவீரரு,ஹீரோ,ராஜேந்திரச்சோழனை மிஞ்சியவருன்னு சொல்லி சின்ன வயசுல இருந்தே கையில தீபாவளி துப்பாக்கியை வச்சுகிட்டு பிராபகரண் - ஜெயவர்தனே விளையாட்டு விளையாடினவங்களை கூட உங்க வழிக்கு வர வச்சிட்டீங்களே. ரெண்டு வாரம் முன்பு கூட இங்க யாருக்கும் தெரியலை வன்முறையினால் தீர்வு கிடைக்காதுன்னு. இப்படி தீடீர்னு சமிபகால வரலாற்றை புரட்டி பார்க்கும் போது தான் தெரிஞ்சுதாம்.

அப்புறம் உங்க பேர போட்டு எழுதினா முன்னூறு ஹிட்ஸ் ஜாஸ்தி கிடைக்குமாம், அத வச்சுட்டு நாக்கு கூட வழிக்க முடியாது. இந்த கருமத்துக்காக தான் அந்த எழவ நான் என் தளத்திலே போடல. அஞ்சு லட்சம் ஹிட்ஸ், பத்து லட்சம் ஹிட்ஸ் வாங்குனவங்க எல்லாம் என்ன சுஜாதா ஆயிட்டாங்களா இல்ல போயஸ் கார்டன்ல நாலு வீடு வாங்கிட்டாங்களா.

மொக்க பதிவர்கள் வழக்கம் போல உங்க வேலைய பாருங்க, நான் இப்படி தான் தனியா கத்திட்டு இருப்பேன். இங்க ஒருத்தன் ஜெய்ச்சுட்டே இருக்கிற வரைக்கும் தான் கூட இருப்பாங்க தோத்தா போயிட்டே இருப்பாங்க.

Labels:

Thursday, May 14, 2009

பதிவர்களுக்கு பதிவர்களே ஆப்பு !!

நாடறிந்த நகைச்சுவை எழுத்தாளர் சமிபத்தில் நான் கடவுள் படத்தை பற்றி சிலாகித்து எழுதி அதை மலையாளம், லத்தின்,ஃபிரன்ச், ரஷ்ய மொழிகளில் மொழிபெயர்த்து அதை அந்தந்த நாடுகளில் கொண்டாடியது அறிந்ததே. இப்பொழுது அவருடைய நண்பர் ஒருவர் அந்த படத்தை பார்த்து ஒரு கருத்து சொல்ல, இப்பொழுது அந்த படத்தை போய் நான் எப்படி ரசித்தேன்னு ஃபீல் பண்ணீட்டு இருக்காராம்.

இதற்கு முன் இவர் எழுதிய கொரிய படத்தை பற்றி இவர் எழுதிய விமர்சணத்தில் இருந்த தவறுகளை சுட்டி காட்டிய போது அது எல்லாம் எழுத்துப் பிழை அதை திருத்துவது ப்ரூஃப் ரீடரின் வேலைன்னு சொன்னவர், இப்பொழுது நான் கடவுள் படத்தையே நான் சிலாகித்து எழுதி இருக்க கூடாதுனு சொல்லுகிறார். பேசாமல் இனி இவர் எழுதும் கதை,கட்டுரை, விமர்சணங்களுக்கு கீழே, All my reviews and opinions are subject to change. Conditions Applyன்னு போட்டுடலாம்.

வாங்குன காசுக்கு இன்னும் திமுகாவிற்காக கூவும் பதிவர்களே. உங்கள் தலைவருக்கு நீங்க தான் ஓய்வு கொடுக்க மாட்டேங்குறீங்க, போனா போகட்டும் இனி நாங்க கொடுக்குறோம். சனிக்கிழமைக்கு பிறகு கொஞ்சமும், மூனு நாலு மாசத்திற்கு பிறகு நிறையவும் ஓய்வு கிடைக்கும். அப்புறம் என்ன பாசக் கிளிகள் பார்ட்- 2 வரும் பார்த்து மகிழுங்கள்.

நம்முடைய பதிவர்கள் ஜனரஞ்சக பத்திரிக்கைகளில் எழுத ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியே. கதைகள் பத்திரிக்கையில் வந்த ஓரிரு நாளில் சிலர் அக்கதையை டைப் செய்தும், ஸ்கேன் செய்தும் போடுவது கண்டிக்கதக்கது. பத்திரிக்கை தரப்பில் இருந்து அவர்கள் இதற்காக வழக்கு கூட தொடரலாம். இச்செயல் இனியும் நீடித்தால் பதிவர்கள் எழுவதை பத்திரிக்கைகள் வெளியிட நிறைவே யோசிப்பார்கள். ஏன் நீங்கள் எழுதிய புத்தகங்களையும் அப்படியே ஸ்கேன் செய்து போட வேண்டியது தானே, அதுக்கு மட்டும் ஆன்லைனில் வாங்க இங்கே அமுக்கவும் அங்கே அமுக்கவும்னு விளம்பரம் எதுக்கு?

Labels: