படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி

Friday, October 24, 2008

பொழச்சு போங்க !!!!

யட்சன்,நல்லதந்தி,நான் ஆதவன், யோசிப்பவர் போன்ற நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று என்னுடய முந்தய பதிவான தமிழ்மண சிங்கம் கர்ஜிக்கிறது பதிவை எடுத்து விட்டேன்.என்னோட நண்பர்கள் சொன்னா அது சரியாக தான் இருக்கும்

என்ன அவர கேட்க ஆளில்லாம போயிடும்னு பார்த்தேன். சரி வுடுங்க. ஆணவத்தின் உச்சம் தான் அந்த பதிவு.

Labels:

Tuesday, October 14, 2008

பிரபல பதிவர்கள் மட்டும் படிக்க வேண்டிய பதிவு

தமிழ்மணத்தில் பதிவெழுதி நாமளும் கொஞ்சம் பிரபலம் ஆகிவிட்டால் அடுத்து செய்ய வேண்டியது என்ன என்பதை சில மூத்த பதிவர்களை பதிவை பார்த்து நான் கற்றுக்கொண்டதை உங்களுடம் பகிர்ந்து கொள்ள வேண்டியே இப்பதிவு. சரி இப்போ ஆக வேண்டிய காரியத்தை பார்ப்போம்.

1. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் விளக்கமாக நன்றி, பதில் எழுதுவதை உடனே நிறுத்த வேண்டும்.

2. எக்காரணத்தை கொண்டும் புதிய பதிவர்கள் எழுதிய பதிவிற்கு, மூத்த பதிவர்கள் பின்னூட்டமிட கூடவே கூடாது. அது போன்ற அகௌரவமான செயல் வேறெதுவுமில்லை.

3. நம் பேரை தலைப்பாக போட்டு யாராவது பதிவு எழுத மாட்டாங்களானு ஏங்கிட்டு இருக்கும் போது, அப்படி யாராவது பதிவெழுதினால் அந்த சந்தோஷத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல். வாட் நான்சென்ஸ் இஸ் திஸ்... ஐ டோண்ட் லைக் ஆல் திஸ் திங்க்ஸ்... எனக்கு ரொம்ப uneasyயா இருக்குனு சொல்லனும்.

4. அப்பப்போ யாருக்காவது பகிரங்க கடிதம் எழுதிட்டே இருக்கனும்.

5. யாராவது பதில் சொல்ல முடியாத படி ஏடாகூடமான கேள்வியை பின்னூட்டத்தில் கேட்டால், தப்பி தவறி கூட அதை வெளியிட கூடாது.

6. அப்படியும் எதாவது ஒரு நல்லவன் அத பதிவா போட்டுட்டான்னா, அவன் என் பேர யுஸ் பண்ணி அமெரிக்க ஜனாதிபதி ஆக முயற்சி பண்றானு ஒரு அறிக்கை விடனும்.

7. வாரம் ஐந்து படங்களுக்கு திரை விமர்சணம் எழுதியே ஆகனும்.

8. நமக்கு பிடித்த ஜால்ரா போடுற பதிவரை பத்தி யாராவது தவறுதலா உன்மையை எழுதினாலும், அந்த பதிவிற்கு எக்காரணம் கொண்டும் பின்னூட்டமிட்டு நம் நண்பர்களை பகைத்துக் கொள்ள கூடாது.

9. நான் ஒரு பகுத்தறிவாதி. நாட்டில் நடக்கும் அனைத்து திவிரவாத தாக்குதலுக்கும் காரணம் இந்து வெறியர்களே, இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. பண உதவி, பொருளுதவி செய்து கட்டாய மத மாற்றம் செய்வது இந்துக்களே, கிறித்துவ சகோதரர்களுக்கு சேவை செய்வதை தவிர வேறெதுவும் தெரியாது என்று நடுநிலையாக எழுத வேண்டும்.

10.அடுத்து ரொம்ப முக்கியமானது பார்பாணிய எதிர்ப்பு பதிவு. வாரம் ஒரு முறையாவது, இந்த சமுகத்தை அசிங்கப் படுத்தி எழுதியே ஆக வேண்டும். ஏன்னா இவங்களை எவ்வளவு அசிங்கப்படுத்தினாலும், அதை ஒதுக்கி விட்டு நல்லா படிச்சு அமெரிக்கா போய் செட்டில் ஆகிடுவாங்க. பதிவு எழுதினவங்க தான் முக்கி முக்கி படிச்சு ஏதாவது இடஒதுக்கீட்டுல வேலை கிடைக்காதானு அரசாங்கத்திற்கு மனு எழுதிட்டு இருப்பாங்க.

11. பின்நவினதுவ இலக்கியம் பற்றி தெரியுதோ இல்லையோ, சும்மா எதையாச்சும் கிறுக்கி வையுங்க. யாருக்கும் புரியாது, நமக்கு புரியலைனு தெரிஞ்சா மத்தவன் தப்பா நினைப்பான்னு எல்லாரும் ஆஹா...ஒஹோ..சூப்பர்...கலக்கிடீங்கனு அள்ளி விடுவாங்க. விசியம் தெரிஞ்சவன் எவனும் நம்ம பதிவ படிக்க மாட்டான், அதனால கவலையே படாதீங்க.


12. சாரு, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்னன் போன்ற எழுத்தாளர்கள் யாராவது அவர்கள் நடத்தும் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தால்(வீடாவிட்டாலும்) மொத ஆள போய் அங்க எடுபிடி வேலையாவது செஞ்சு, உங்க பேர அவர்கிட்ட சொல்லிடுங்க. அப்ப தான் பதிவர் கூட்டத்தில், " ஆமா சாரு கூட கேட்டான், என்னுடைய கட்டுரையை கொஞ்சம் திருத்திக் கொடுக்க முடியுமானு, நான் முடியாதுன்னு சொல்லீட்டேனு" பீலா உட முடியும்.


13. அப்புறம் முக்கியமானது தலைப்பு. க்வட்டரும் கோழிப் பிரியாணியும், பாலக்காட்டு பால்காரி, சுவைக்கும் சுமதி, மிலிட்டரிகாரன் பொண்டாட்டி, மல்கோவா ஆண்டி போன்ற நாகரிகமான தலைப்பையே வைக்க வேண்டும்.


இப்போதைக்கு எனக்கு தோனுனது இவ்வளவு தான் மக்களே. ஏதாச்சும் விட்டு போயிருந்தா பின்னூட்டத்துல சொல்லுங்க.

Labels:

Tuesday, October 7, 2008

எழுத்துலக சூப்பர் ஸடார் வச்ச ஆப்பு !!

அதிர்ஷ்டதை ஆங்கிலத்தில் குறிக்கும் சொல்லை முதலாவதாக வைத்து பதிவு எழுதிவரும் பதிவர் சமீபத்தில், தன்னுடைய பேரை வைத்து பதிவெழுதி பேரையும், புகழையும் அதனால் வரும் பணத்தை வைத்து போயஸ் கார்டனில் நாலு பங்களாவும், குன்னூரில் நானூறு ஏக்கர் டீ எஸ்டேட்டும், வாங்கி குவிப்பதாக ஒரு பதிவில் கழிந்திருந்தார் சாரி பதிந்திருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

அதே போல் பாருவை திட்டியோ இல்லை பாராட்டியோ அவருக்கு கடிதம் எழுதினால் அவற்றில் ஒரிரெண்டை பொறுக்கி, அவ்வபோது அவர் தளத்தில் வெளியிட்டு வந்தார். இதுவும் அனைவரும் அறிந்ததே. இதை பார்த்த சில பதிவர்கள், தங்களுடைய தளத்தை பற்றி எதாவது எழுத மாட்டாரா அதனால் நாமும் பிரபலாமான எழுத்தாளர் என்று வெளியே போய் பீத்திக்கலாம்னு நினைச்சு, அவரை ஆகா ஒகோனு சிலர் புகழ ஆரம்பிச்சாங்க.

இவங்களுக்கு பாருவை பத்தி இன்னமும் சரியா தெரியல. வசதியில் குறைவென்றாலும் ரோசத்தில் மனுசன் கோடீஸ்வரன். இவருடைய அதிர்ஷ்டம்(??) அவர் ஆன்லைனில் இருக்க, அவரை நீ சும்மா தானா இருக்கே வா பீச்சுக்கு, நாம சுண்டகஞ்சி குடிச்சிட்டே பேசுவோம்ற ரீதியிலா கூப்பிட்டிருக்காரு. இது போதாத பாருவிற்கு அவருடைய தளத்தில் இவரை ,"என்னுடைய இந்த மனிதாபிமானப் பண்பைத் தங்களுக்குச் சாதகமாக நினைத்துக் கொண்டு பலரும் நம்முடைய தலைக்கு மேல் ஏறிக் கொண்டு நம்மைக் கழுதை மேய்க்கப் பார்க்கிறார்கள்னு." கீழி கீழின்னு கீழிச்சு தோரணம் கட்டிட்டாரு.

இதுல பெரிய சோகம் என்னனா அவர் நாகரிகம் கருதியோ என்னமோ கடைசி வரைக்கும் தன்னை கூப்பிட்ட பதிவர் யாருன்னே சொல்லலை. அத அப்படியே விட்டிருக்கலாம்.

ஆனா நம்மாளு திட்டறத தான் திட்டுறாரு நம்ம பேரை போட்டு திட்டுனா, வடிவேலு மாதிரி, எல்லாரும் பாத்துக்கோங்க நானும் ரவுடிதான்னு சொல்லிக்கிலாம்னு பாத்த அவரும் வெறுத்து போய், நான் தான் அவரை அப்படி கூப்பிட்டேன்னு, இப்ப பகிரங்க கடிதம் எழுதியிருக்காரு. பாவம் எப்படி இருந்த டமாரு கொமாரு இப்படி ஆயிட்டாரு.

இப்பதிவின் நீதி : மெலியோரை வலியோர் ஏளனம் செய்தால், அந்த வலியோருக்கு ஆப்படிக்க ஒரு மாதத்திற்குள் அடுத்த ஆள் வருவான்.

டிஸ்கி 1 : இப்பதிவு யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால், அதற்கு நான் ஒன்னும் பண்ண முடியாது.

டிஸ்கி 2 : தமிழ் நாட்டில் நிலவும் மின் வெட்டிற்கும் இந்த பதிவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

டிஸ்கி 3 : நான் அவனில்லை.

Labels: