படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி

Tuesday, September 16, 2008

நடுநிலை தவறாத லக்கியே நீ வாழ்க! பரிசல், FYI...

வழக்கம் போல இந்த முறையும் லக்கி பதிவில் நான் இட்ட பின்னூட்டம் வெளியாக வில்லை. எதிர்பார்த்ததுதான் என்றாலும், ஒரு மூத்த பதிவர் தன் கருத்திற்க்கு எதிராக வரும் சிறிய எதிர்பை கூட பதிய மறுக்கும் போது வருத்தம் வரவில்லை, சுர்ருனு கோவம் தான் வருது.

இந்த இரண்டு மாதங்களில் நான் பார்த்த தமிழ்மணம் சூழல் இதுதான். பதிவர்கள், குறிப்பாக மூத்த பதிவர்கள், வெறும் குழூக்களாக செயல் படுகிறார்கள். இவர்கள் பதிவை பார்த்தால், we will be seeing same set of comments from same set of people. ஒருவருக்கொருவர் முதுகை சொறிந்து கொண்டு, எதை எழுதினாலும் அதை ஆகா ஓகோனு புகழ்ந்து, பதிவுலக சூறாவளி, சிங்கம், டைனோசர், குரங்குனு பட்டம் வேற கொடுத்துக்குறாங்க.

சரி மேட்டருக்கு வருவோம். இன்று லக்கி தன்னோட வலைதளத்தில், சன் குழுமத்தை பந்தாடிய பருத்திவீரன் கலைஞர்னு ஒரு பதிவு போட்டிருந்தார். அதில் "நேற்று பருத்திவீரனுக்கு முன்பாக படையப்பா போணி ஆகவில்லை (ரோபோ வரும் வரை ரஜினியால் ஏது போணி?) " என்று ஒரு வரி எழுதியிருந்தார். இதற்கு பதிலாக, கிழே தரப்பட்டுள்ள பின்னூட்டத்தை அவரது பதிவில் இட்டிருந்தேன்.

//நேற்று பருத்திவீரனுக்கு முன்பாக படையப்பா போணி ஆகவில்லை //
தவறான தகவல். நேற்று பெரும்பாலான வீடுகளில் படையப்பா படம் தான் ஓடிக்கொண்டிருந்தது. என்ன தான் பருத்திவீரன் சிறந்த படமென்றாலும், பெண்கள் குழந்தைகளுடைய சாய்ஸ் படையப்பா தான்.

//(ரோபோ வரும் வரை ரஜினியால் ஏது போணி?)//

ஒரு தோல்வி படம் கொடுத்தால், அடுத்து வெற்றி படம் கொடுக்கும் வரை அவர் படத்தை யாரும் பார்க்கமாட்டார்கள் என பொருள் பட பேசும் உங்கள் அறிவு திறனை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.

இன்னைக்கும் கரகாட்டகாரன் படம் எந்த டிவியில் போட்டாலும் மக்கள் அதை பார்பார்கள். இப்போ ராமராஜனுக்கு மார்க்கெட் இல்லை அதனால் இதை யார் பார்பார்கள் என்று நினைத்தால் அதை விட முட்டாள்தனம் எதுவும் இல்லை.

அப்புறம் அடுத்த வாரம் கலைஞர் டிவில் சிவாஜி போட்டாலும் யாரும் பார்க்க மாட்டார்கள் என்கிறீர்களா?

டி.ஆர்.பி ரேட்டிங்கில் ரஜினி படம் தான் எப்போதுமே நெ.1 என்பதை என்னை விட அத்துறையில் இருக்கும் உங்களுக்கு நன்றாகவே தெரியும் என்று நினைக்கிறேன்.

மேற்கண்ட பின்னூட்டத்தில் ஏதாவது தவறு இருந்தால், அதை தயவு செய்து பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். திருத்திக் கொள்கிறேன்.

தினமும் ஒரு அரை நிர்வாண பெண்ணின் புகைபடத்தை வெளியிடும் அவரை இதுவரை எந்த ஒரு மூத்த பதிவரும் கண்டித்த மாதிரி தெரியவில்லை. இதை விட கொடுமை இன்று அதை பரிசல்காரர் சூப்பர் என்று வர்ணித்தது தான். பரிசல்காரரே மனதை தொட்டு சொல்லுங்கள், லக்கியின் இந்த செயலை நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என்று. பெரும்பாலான பதிவர்களுக்கு இது தவறு என்று தெரிந்தாலும் எங்கே நட்பு கெட்டு விடுமோவோ என்ற சங்கடமோ இல்லை இந்த பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற பயமா என்று தெரியவில்லை.

பாத்து எதாவது செய்யுங்க பாஸ்.

பின் குறிப்பு : கடைசியாக முயற்சியாக "கலைஞர் வாழ்க" னு ஒரு பின்னூட்டத்தை இடுகிறேன், இதுவாவது கண்டிப்பாக வரும் என்ற நம்பிக்கையோடு.

please excuse for any grammer errors in this posting.

Labels: