படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி

Monday, September 14, 2009

திருட்டு பயலே சுசி கனேசனுக்கு இந்த ஆப்பு பத்தாது

தொற எடுத்த படத்தை ஊர் உலகமே கிழிச்சு தொங்கவுட்ட போது பல்லை கடிச்சிட்டு இருந்தவரு, போன வாரம் ஞானி குமுதத்துல படம் ஊத்திக்கிச்சுன்னு எழுதின உடனே பொங்கி எழுந்து இந்த வார குமுதத்துல வாந்தி எடுத்து வச்சிருக்காரு. சக பத்திரிக்கையாளன் மேலே வருவதை பார்த்து வந்த பொறாமையில் எழுதியதாம். சமுக அக்கறையுடன், யாருக்கும் அஞ்சாமல் தன் மனதிற்க்கு நியாயமாக பட்டதை எழுதும் ஒரு மூத்த எழுத்தாளரை விமர்சிக்க குட்டை பாவாடைகளை காட்டி படம் பண்ணும் இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

நான் கூட கந்தசாமி விமர்சணத்தை படிச்சுட்டு கொஞ்சம் ஓவராதான் போறாங்க நம்மாளுங்க நினைச்சேன், இப்ப இவங்க பண்ற கூத்தை பார்தால் இன்னும் பத்தாதோன்னு தோனுது. நடு நிலை பத்திரிக்கையாளர்கள் இந்த படத்தை பார்த்து அதில் ஒருவர் படம் தோல்வின்னு சொன்னா கூட இவர் படமெடுக்கிறதை நிறுத்திடுவாரம் (யாராச்சும் அதை சீக்கிரமா பண்ணி தொலைங்கப்பா).

அட நீங்க எடுத்த கருமத்தை பத்தி என்னமோ எழுதுங்க, என்னமோ கிறுக்குங்க அதுக்கு ஏன்யா மத்த நல்ல படங்களை குறை சொல்றீங்க. சுப்பிரமணியபுரம், பசங்க, நாடோடிகள் எல்லா நல்ல படமில்லையாம், ஞானி தான் இந்த படங்களை மிகை படுத்தி எழுதிட்டாராம். சுப்பிரமணியபுரம், ரவுடிகளை பற்றிய படமாம். பசங்க சிறுவர்களுக்குன்னு சொல்லி பெரியவங்களுக்கு அறிவுரை சொன்ன படமாம். அப்புறம் நாடோடிகள், ஓடி போறவங்களை சேர்த்து வைக்குற படமாம். காறி துப்புற மாதிரி ஒரு படத்தை எடுத்துட்டு, எதார்த்தமா குறைந்த செலவில் வந்த தரமான படங்களை பற்ற பேச வெட்கமாயில்லை?

கந்தசாமி ஓடும் தியேட்டரில் மக்களோடு மக்களாக உட்கார்ந்து படம் பாருங்க அப்ப தெரியும் மக்கள் கிட்ட உங்க மரியாதை என்னன்னு. அவனவன் கிழிக்குற கிழியுல படத்தில் சம்மந்த பட்ட எல்லாருடைய ஃபேமலியும் அங்கே டோட்டல் டேமேஜ் ஆயிட்டிருக்கு. மெக்சிக்கோவுல பிச்சுமணியை தெரியாதவங்க யாருமே கிடையாதாமாம்? தியேட்டர்ல எவனும் வாயில சிரிக்க மாட்டேங்குறான்.

குழந்தைகளுக்கான படமாம் கந்தசாமி. அடப்பாவிங்களா, குழந்தைகளுக்காக எடுக்க பட்ட காட்சின்னு இந்த படத்தில் ஏதாவது ஒன்றையாவது சொல்லுங்கள் பார்ப்போம். இந்த குப்பையை குழந்தைகளுடன் காண நாங்கள் தயாராயில்லை. வேண்டுமென்றால் படமெடுத்த நீங்களும் அதில் நடித்தவர்களும் உங்கள் குழந்தைகளுடன் பாருங்க, படம் பார்க்கும் போது உங்கள் குழந்தைகள் முமைத்கான் நாக்கில் மாட்டியிருப்பது இருப்பது என்ன? அதை ஏன் அடிக்கடி காமிக்கிறீங்கன்னு கேட்டா என்ன பதில் சொல்லனும்னு யோசிச்சுட்டு படத்தை போடுங்க.

ஜெண்டில்மேன், அந்நியன்,ரமணா படத்திற்கும் கந்தசாமிக்கும் எந்த சம்மந்தமும் இல்லையாம், சிவாஜி படம் கூட ஒரே நேரத்தில் ஷங்கரும் இவரும் யோசித்த கருத்தாம், சொல்றாரு திருட்டு பயலே சுசி.

கந்தசாமி தான் ரெண்டு வாரத்துல ஐம்பத்தைந்து கோடி சம்பாதிருச்சுல, பார்ப்போம் இனி எந்த தயாரிப்பாளர் இந்த மாதிரி பணத்தை அள்ளி கொடுத்து உங்களை படம் எடுக்க சொல்றாருன்னு. ஏன் தானுவையே போய் கேளுங்களேன், இன்னோரு ஐம்பது கோடி கொடுங்க இதே மாதிரி குழந்தைகளுக்காக இன்னோரு படம் எடுத்து தரேன்னு, சொல்ல முடியாது அவர் கொடுத்தாலும் கொடுப்பாரு.

Labels:

23 Comments:

  • At September 14, 2009 at 3:48 PM , Blogger Bleachingpowder said...

    இதுக்காகவே எல்லாரும் பாமகவுக்கு ஓட்டு போடுங்கப்பா, காடு வெட்டி வந்த்து சொல்ற மாதிரி சொன்னா தான் திருந்துங்க.

     

  • At September 14, 2009 at 4:11 PM , Blogger அமுதா கிருஷ்ணா said...

    பாடல்களை டிவியில் பார்க்கவே சசிக்கவில்லை.எந்த தைரியத்தில் குழந்தைகளுக்குனு சொல்றாங்க...

     

  • At September 14, 2009 at 4:15 PM , Blogger சென்ஷி said...

    வெல்கம் தலைவரே! :)

     

  • At September 14, 2009 at 4:17 PM , Blogger கிரி said...

    //குழந்தைகள் மும்தாஜ் கான் நாக்கில் மாட்டியிருப்பது இருப்பது என்ன? அதை ஏன் அடிக்கடி காமிக்கிறீங்கன்னு கேட்டா என்ன பதில் சொல்றது யோசிச்சுட்டு படத்தை போடுங்க.//

    கடுமையான கண்டனங்கள் முமைத்கான் பேரை மாற்றி கூறியதற்கு ;-)

     

  • At September 14, 2009 at 4:33 PM , Blogger ரவி said...

    :))))))

     

  • At September 14, 2009 at 4:41 PM , Blogger வந்தியத்தேவன் said...

    சென்ற வாரம் சூப்பர் சிங்கர் ஜீனியரில் கூட விக்ரம் இந்தப் படம் சிறுவர்களுக்கான படம் என்கின்றார். இவர்கள் இதுவரை சிறுவர்கள் படம் பார்க்கவில்லை என நினைக்கின்றேன். சுசிக்கும் விக்ரத்திற்க்கும் யாராவது நல்ல சிறுவர்கள் படம் போட்டுக்காட்டுங்கப்பா.

     

  • At September 14, 2009 at 4:45 PM , Blogger ☀நான் ஆதவன்☀ said...

    ஆகா வந்துட்டீங்களா :)

    என் விமர்சனத்தை படிக்காம இருந்திருப்பாரோ? :)

     

  • At September 14, 2009 at 5:29 PM , Blogger Bleachingpowder said...

    //அமுதா கிருஷ்ணா said...
    பாடல்களை டிவியில் பார்க்கவே சசிக்கவில்லை.எந்த தைரியத்தில் குழந்தைகளுக்குனு சொல்றாங்க...
    //

    கேட்க ஆளில்லை என்கிற தைரியத்தில் தான். குழந்தைகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய படம், இப்படத்தின் பாடல்களை தொலைகாட்சியில் ஒளிபரப்புவதை கூட அனுமதிக்க கூடாது

    //சென்ஷி said...
    வெல்கம் தலைவரே! :)
    //
    ஹிஹிஹிஹி...இப்பல்லாம் சென்னையை விட துபாய் பதிவர் கூட்டத்துல தான் கூட்டம் அள்ளுதுன்னு கேள்விபட்டேன், தூள் கிளப்புங்க :))

    //கிரி said...
    கடுமையான கண்டனங்கள் முமைத்கான் பேரை மாற்றி கூறியதற்கு ;-)
    //

    வாங்க கிரி, சரித்திர பிழையை மாத்தியாச்சு :)))

    நமிதாவுல இருந்து இப்பொ முமைத்கானுக்கு மாறியாச்சா :))

    //செந்தழல் ரவி said...
    :))))))
    //

    வாங் செந்தழல் ரவி, நீங்க சிரிக்கிறதை பார்த்த, படம் பாக்காம எஸ்கேப் ஆயிட்டீகன்னு நினைக்குறேன் :)

    //வந்தியத்தேவன் said...
    சுசிக்கும் விக்ரத்திற்க்கும் யாராவது நல்ல சிறுவர்கள் படம் போட்டுக்காட்டுங்கப்பா.
    //

    வாங்க வாந்தியதேவன்,இவனுக எடுக்குற குப்பை ஆபாசத்தை குழந்தைளும் பார்க்கனும்னு நினைக்கிறதே இவர்களோட வக்கிர புத்தியை காட்டுகிறது.

    //நான் ஆதவன்☀ said...
    ஆகா வந்துட்டீங்களா :)

    என் விமர்சனத்தை படிக்காம இருந்திருப்பாரோ? :)
    //

    வாங்க தல, client networkல எல்லாத்தையும் புடிங்கிட்டானுவ, அதான் கடை பக்கம் அவ்வளவா வர முடியலை. இடைத் தேர்தல்ல கவரும், கலர் டிவியும் நேர்ல வந்தா தான் கொடுப்போம்னு சொன்ன உடன தமிழ்நாட்டிற்கு வந்தீங்கனு கேள்வி பட்டேன், திரும்பி போயாச்சா இல்லையா?

     

  • At September 14, 2009 at 5:51 PM , Blogger கிரி said...

    //நமிதாவுல இருந்து இப்பொ முமைத்கானுக்கு மாறியாச்சா :))//

    இதற்கும் என்னோட மிக கடுமையான கண்டனங்கள் ..ஃப்ரோபைல இருக்கிறது மாளவிகா அவ்வ்வ்வ்வ்

    யாருப்பா அங்கே ..இதுக்காகவே நாலு பேர் நம்ம அருணை கும்முங்கப்பா!

     

  • At September 14, 2009 at 6:42 PM , Blogger கார்க்கிபவா said...

    தலைவா, அடுத்த ஆட்டமா? ஆட்டம் பாம் மாதிரி இருக்கட்டும்.. நடத்துங்க சகா

     

  • At September 14, 2009 at 8:17 PM , Blogger இரும்புத்திரை said...

    பீளிச்சிங்

    அன்னிக்கு கார்க்கி பதிவுல அப்படி கொதிச்சி விமர்சனம் எழுதுற எல்லாரையும் திட்டினீங்க.இப்போ தெரியுதா தல சுசிகணேசன் விமர்சனம் எழுதின எப்படி இருக்கும்னு பசங்க படத்த பத்தி அவரோட ஒரு கருத்து போதும்..

     

  • At September 14, 2009 at 8:21 PM , Blogger Bleachingpowder said...

    //கார்க்கி said...
    தலைவா, அடுத்த ஆட்டமா? ஆட்டம் பாம் மாதிரி இருக்கட்டும்.. நடத்துங்க சகா
    //
    வாங்க தல, எங்க ஆட வுடறாங்க. blogஐ firewallல்ல போட்டு ஆப்படிச்சுடாங்க :((.


    //கிரி said...
    இதற்கும் என்னோட மிக கடுமையான கண்டனங்கள் ..ஃப்ரோபைல இருக்கிறது மாளவிகா அவ்வ்வ்வ்வ்//

    இன்னமுமா !!!!!! வாள மீன் சூறா மீனாய் ரொம்ப நாளாச்சு,ஆனாலும் கிரி நீங்க ரொம்ப தான் ஓல்டாகவும் போல்டாகவும் திங்க் பன்றீங்க :))

     

  • At September 14, 2009 at 8:27 PM , Blogger Bleachingpowder said...

    //இரும்புத்திரை அரவிந்த் said...
    பீளிச்சிங்

    அன்னிக்கு கார்க்கி பதிவுல அப்படி கொதிச்சி விமர்சனம் எழுதுற எல்லாரையும் திட்டினீங்க.இப்போ தெரியுதா தல சுசிகணேசன் விமர்சனம் எழுதின எப்படி இருக்கும்னு பசங்க படத்த பத்தி அவரோட ஒரு கருத்து போதும்..
    //

    தப்பு என்மேல தான் அரவிந்த், இந்தாளு ஆபாச குப்பையை எடுத்தது கூட சகிச்சுக்கலாம் அதுக்காக மற்ற தரமான படத்தை இந்த கழிவுடன் அவர் ஒப்பிட்டது ஆனவத்தின் உச்சம்

     

  • At September 14, 2009 at 8:28 PM , Blogger அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

    வெல்கம் நண்பரே !!!

     

  • At September 14, 2009 at 10:10 PM , Blogger முத்துலெட்சுமி/muthuletchumi said...


    ந்

    சா
    மீ ந்னு எதோ ரைம்ஸ் பாடறமாதிரி பாடறாரேன்னு கிண்டல் செய்தது அவர் காதில் விழுந்து தடால்ன்னு குழந்தைங்க படம்ன்னு ப்ளேட்டை திருப்பிட்டாரோ.. கொடுமை .. :(

     

  • At September 14, 2009 at 10:47 PM , Blogger மணிகண்டன் said...

    கந்தசாமி படம் நல்லா தான் இருக்கு. மியாவ் மியாவ் பூனைக்குட்டி பாட்டு குட்டிப்பசங்க கிட்ட பயங்கர பாப்புலர்.

    உண்மையாவே சுசி கணேசன் நாடோடிகள் பத்தி அப்படி ஒரு கருத்து சொல்லி இருந்தா, அவருக்கு எனது வாழ்த்துக்களும் / நன்றிகளும். சரியான லூசு படம்.

    ஞானியோட விமர்சனம் படிக்கல. ஆனா அவர் சினிமாவை பத்தி நார்மலா விமர்சனம் பண்ண மாட்டார். நான் கடவுள் படத்துல நடிச்சவங்களை பாலா கொடுமைபடுத்தினாருன்னு அர்த்தம் வரும் மாதிரி அந்தப்படம் விமர்சனம் எழுதினார். ஞானி எதிர்பார்க்கும் மாதிரி படம் பத்து / பதினைந்து கோடிகளில் எடுக்க முடியாது.

    ஸ்ரேயாவுக்கு குட்டைப் பாவாடை ஒன்றும் ஆபாசமாக தெரியவில்லை.

    படம் எடுத்தவர்கள் படத்தின் லாப கணக்கை பற்றி முதல் சில வாரங்களில் கூட்டி தான் சொல்வார்கள். இதற்கு எல்லாம் அறச்சீற்றம் தேவை இல்லை !

    பசங்க படம் பற்றி சுசி கணேசன் ஏன் அப்படி சொன்னார் என்று தெரியவில்லை. எனக்கு பிடித்து இருந்தது. (குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான படம்!)

    நான் இன்னும் சுப்ரமணியபுரம் பார்க்கவில்லை. சாருவின் விமர்சனம் படித்தேன். உங்களுக்கு மற்றும் சாருவிற்கு பிடித்து இருந்தால் நல்ல படமாக தான் இருக்கும். ஞானி உண்மையிலேயே இந்த படத்திற்கு விமர்சனம் எழுதினாரா ?

     

  • At September 15, 2009 at 9:15 AM , Blogger Bleachingpowder said...

    //அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
    வெல்கம் நண்பரே !!!//

    வாங்க பாஸ்கர், ரொம்ப நாளாச்சு ;)

    // முத்துலெட்சுமி/muthuletchumi said...

    ந்

    சா
    மீ ந்னு எதோ ரைம்ஸ் பாடறமாதிரி பாடறாரேன்னு கிண்டல் செய்தது அவர் காதில் விழுந்து தடால்ன்னு குழந்தைங்க படம்ன்னு ப்ளேட்டை திருப்பிட்டாரோ.. கொடுமை .. :(
    //

    எனகென்னவோ அது ரைம்ஸ் மாதிரி தெரியலை முத்துலெட்சுமி, எதோ சுடுகாட்டுல சங்கு ஊதுற மாதிரி தான் கேட்குது.

    //மணிகண்டன் said...
    கந்தசாமி படம் நல்லா தான் இருக்கு. மியாவ் மியாவ் பூனைக்குட்டி பாட்டு குட்டிப்பசங்க கிட்ட பயங்கர பாப்புலர்.//

    அதான் பிரச்சனையே மணிகண்டன், அந்த பாடல் படமாக்கபட்ட விதமும், பாடல் வரிகளும் குழந்தைகளுக்கான் பாடல் மாதிரியா இருக்கும்.


    //படம் எடுத்தவர்கள் படத்தின் லாப கணக்கை பற்றி முதல் சில வாரங்களில் கூட்டி தான் சொல்வார்கள். இதற்கு எல்லாம் அறச்சீற்றம் தேவை இல்லை !//

    என்னுடைய கோபம் அவர்கள் லாபம் சம்பாதித்தார்களா இல்லையா என்பதல்ல, இது குழந்தைகாளுக்கான் படம்ன்னு திரும்ப திரும்ப விளம்பர படுத்துவது, ஒரு மூத்த எழுத்தாளரின் நடு நிலையான பார்வையை கீழ்தரமாக விமர்சிப்பது, சமிபத்தில் வந்து வெற்றியடைந்த யதார்தமான படங்களை குறை சொன்னது தான்.

    //நான் இன்னும் சுப்ரமணியபுரம் பார்க்கவில்லை.//

    நேரம் கிடைக்கும் போது பாருங்கள் மணிகண்டன், நல்ல படம்.

    //ஞானி உண்மையிலேயே இந்த படத்திற்கு விமர்சனம் எழுதினாரா ?//

    போன வாரம் குமுதம் கிடைத்தால் பாருங்கள், அதை விமர்சணமாக கருத முடியாது, அவருடைய பார்வையில் படத்தை அலசி அதை ஒரு தோல்வி படம் என்று குறிப்பிட்டிருப்பார்

     

  • At September 15, 2009 at 10:08 AM , Blogger வால்பையன் said...

    //மெக்சிக்கோவுல பிச்சுமணியை தெரியாதவங்க யாருமே கிடையாதாமாம்? //

    இங்கே கூட ஒரு பிராபலம் தன்னை கேரளாவில் சிறு குழந்தைக்கு கூட தெரியும்னு சொல்லிகிட்டு திரியுது!

     

  • At September 15, 2009 at 10:12 AM , Blogger வால்பையன் said...

    //சிவாஜி படம் கூட ஒரே நேரத்தில் ஷங்கரும் இவரும் யோசித்த கருத்தாம், சொல்றாரு திருட்டு பயலே சுசி.//

    அப்படி பார்த்தால் திருட்டுப்பயலேவும், கெளதம் மேனன் எடுத்த பச்சைகிளி முத்து சரத்திற்கும் மெல்லிய இழை ஓடும்!

    அது ஆங்கில படத்தின் தழுவல் என்பது அனைவருக்கும் தெரியும்! இதில் கொஞ்சம் மசாலா சேர்த்திருக்கலாம்!

     

  • At September 15, 2009 at 10:54 AM , Blogger தீப்பெட்டி said...

    :)))

     

  • At September 15, 2009 at 11:28 AM , Blogger பாசகி said...

    //இன்னமுமா !!!!!! வாள மீன் சூறா மீனாய் ரொம்ப நாளாச்சு,ஆனாலும் கிரி நீங்க ரொம்ப தான் ஓல்டாகவும் போல்டாகவும் திங்க் பன்றீங்க :))//

    ஹா ஹா :)))

     

  • At September 16, 2009 at 2:25 PM , Blogger IKrishs said...

    Ippodhan kumudham padichen..Susi ganesan than unmai sorubathai kaati vitar...Than padathai uyavaga solla ,pathirikayalargalayum,saga kalaingargalyaiyum seendi irukiraar..vanmayaga kandikkthakkadhu...gnani madhiri jolna pathirikaiyalaraga irukka vendaam yena ninathu cinema vukku vandhaaraam...Nalladhu .pathirikkayulgam "Vimarsaban porukkatha oru aarai vekkatidam " irundhu thappithadu..!

     

  • At December 21, 2009 at 8:22 PM , Blogger Paul said...

    எனகென்னவோ ஞாநி பல நேரங்களில் மிகப் படுத்தி எழுதுவதாக தோன்றியதுண்டு.. எனக்கு கந்தசாமி படம் மிகவும் பிடித்திருந்தாலும், ஞாநி அந்த படத்தை குறைவாக விமர்சனம் செய்ததாக கேள்விப் பட்டேன் (நான் படிக்க வில்லை..) எனகென்னவோ தனிப்பட்ட மனிதனின் உணர்வுகளை அவனுக்குள் வைத்துக் கொள்ளலாம். அல்லது நான் இப்படி நினைக்கிறேன் என்று சொல்லலாம். அவனது கருத்துக்களை மற்றவர்கள் மீது திணிக்காமல் இருந்தால் சரி தான். அது என் கருத்து.. :)

     

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home