நாகரிக கோமாளி சாரு
சாரு தன்னுடைய வலைதளத்தில் Kim ki duk இயக்கிய The Isle படத்தை பற்றி சிலாகித்து எழுதி, கமலஹாசன் இது போன்ற படங்களை எடுக்க முன்வராமல் தசவதாரம் போன்ற குப்பை படங்களையே எடுத்து வருகிறார் என்று சாடியுள்ளார். கமல் குப்பை படங்களை எடுக்கிறாரா இல்லையா என்பதை பற்றி பின்னர் பார்ப்போம். இப்பொழுது அவர் நிஜமாகவே இந்த படத்தை பார்த்தாரா இல்லை IMDB யில் plot, summaryயை படித்து விட்டு இங்கே வந்து படம் பார்த்ததாக பீலா வுட்டாரா என்பதை பார்ப்போம்.
சாருவின் முதல் கண்டுபிடிப்பு, நாயகிக்கு பேச வராதாம். //ஹீ ஜின்னுக்குப் பேச வராது. சைகையாலும் அவ்வளவாகப் பேசுவதில்லை. (மொழி, ஜோதிகா எல்லாவற்றையும் சுத்தமாக மறந்து விடுங்கள்).//
இந்த கொடுமையை என்னவென்று சொல்ல, ஹ்யூன் ஷிக் அவளுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள முயற்சிக்கும் பொழுது, நாயகி அதை தவிர்த்து கரைக்கு வந்து விபச்சாரியை ஃபோனில் அழைத்து வர சொல்லுவாள். அவள் ஃபோனில் பேசுவதையும் தெளிவாக காட்டுவார்கள். இந்த காட்சியெல்லாம் உலக படங்களை அலசும் சாருவிற்கு கண்களுக்கு மட்டும் தெரியவில்லை போலிருக்கு. இவருடைய பிதாமகன் விமர்சணத்தையும் பார்க்கனும், யாருக்கு தெரியும், விக்ரமையும் ஊமைனு சொன்னாலும் சொல்லியிருப்பார். இந்த அழகுல நாங்க மொழி ஜோதிகாவை சுத்தமா மறந்துடனுமாம்.
அப்புறம் ஹ்யூன் ஹ்யூன் தற்கொலை முயற்சி, //படகு வீட்டில் இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சி செய்கிறான்.// இரண்டாவது முறை தற்கொலை முயற்சி, அவன் விருப்பப் பட்டு செய்வது அல்ல. போலிஸ் ஒவ்வொரு படகு இல்லத்திலும் சோதணை நடத்துவதை பார்த்து அடுத்து தன்னிடம் வருகிறார்கள் என்பதை தெரிந்தவுடன், இவர்களிடம் அகப்பட்டு அல்லல் படுவதை விட தற்கொலை செய்து விடலாம் என முடிவு செய்து, உடனடியாக தற்கொலை செய்ய வேறு எந்த உபகர்ணமும் நேரமும் இல்லாதால் வேறு வழியின்றி, மீன் தூண்டிலை விழுங்கி தற்கொலை செய்ய முயற்சிக்கிறான். கதை இவ்வாறு இருக்க பொத்தாம் பொதுவாக படகு வீட்டில் இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சிக்கிறான் என்று உலக மகா விமர்சகர் எழுதலாமா?
அடுத்த அபத்தம், ஹீ ஜின்னை எதோ சீரியல் கில்லர் போல் இவர் கூறியிருப்பது. //பொறாமை கொள்ளும் ஹீ ஜின், அந்த வேசியை ஏரியில் மூழ்கடித்துக் கொன்று விட்டு ஹ்யூன் ஷிக்குடன் நெருங்கிப் பழகுகிறாள்// ஜீ ஜின் அந்த வேசியை மிரட்டுவதற்காக ஒரு படகு வீட்டில் வாயை பொத்தி, கை கால்களை கட்டி போட்டிருப்பாள், அந்த வேசி, ஜீ ஜின் இல்லாத நேரத்தில் தப்பிக்க முயற்சித்து தண்ணீரில் விழுந்து இறந்து விடுவாள். அடுத்த நாள் காலை அவளை விடுவிப்பதற்காக அவள் அந்த படகு வீட்டிற்கு போகயில் தான் அவளுடைய உடல் தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பதை பார்ப்பாள். அதற்கு பின் அவளுடைய உடலை அவள் ஸ்கூட்டரோடு சேர்த்து கட்டி தண்ணீரில் முழ்கடித்து விடுவாள்.
கதை இப்படி இருக்க, அவர் பாட்டுக்கு அளந்து விட்டிருக்கிறார், எவன் இந்த படத்தையெல்லாம் பார்த்துட்டு கேள்வி கேட்க போறான்னு. இந்த லட்சனத்துல கமலுக்கு அட்வைஸ் வேற. கமல் இந்த மாதிரி படங்களின் ஒவ்வொரு Frameயையும் விரல் இடுக்கில் வைத்திருப்பார். சாருவின் இந்த பதிவையெல்லாம் அவர் படித்தால் வாயில சிரிக்க மாட்டார்.
இது போக இவர் படம் எடுத்தால் இது மாதிரி ஒரு படத்தை தான் எடுப்பாராம், ஏன் நீங்க எழுதின இந்த கதையையே எடுக்கலாமே. அதான் படத்தின் முக்கியமான plot எல்லாத்தையும் நீங்களே மாத்தீடீங்களே அப்புறம் என்ன.
அதே போல் ஹீ ஜின்னிற்கு ஏற்கனவே கணவனோ பாய் ஃபிரண்டோ இருந்ததையும் உணர்த்த இயக்குனர் சில காட்சிகள் வைத்திருப்பார். இதையெல்லாம் குறிப்பிட அவருக்கு தோனவில்லை. அவருக்கு படத்தில் வரும் செக்ஸ், வன்முறை,மிருக வதைகளை பற்றி மட்டும் எழுதி, என்னை வாசிப்பவனுக்கு எது பிடிக்குமோ அதை மட்டும் எழுதினால் போதும்னு நினைச்சுட்டார் போல.
இளையராஜாவை பற்றி இவரது விமர்சணத்தை படித்தாலே, இவருக்கு சினிமாவும், இசையும் எவ்வளவு தெரியும் என்பது விளங்கும்.
கொரியா படம் இரானிய திரைப்படத்தை பற்றி விமர்சித்தால் தன்னை எல்லாரும் மேதாவி என நினைப்பார்கள் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். நீங்கள் எழுதுவது மாலை முரசிலோ இல்லை தினத்தந்தியிலோ இல்லை. Kim ki duk கை தமிழ் திரையுலகோடு ஒப்பிடும் உங்களை, நாங்கள் English/Latin/French/பாரதி போன்ற எழுத்தார்களை உங்களுடன் ஒப்பிட்டால்(அட ஒரு பேச்சுக்கு தாங்க) அது சரியாகுமா? உங்களுக்கு எது வருமோ அல்லது எது முடியுமோ அதை தான் நீங்கள் எழுத முடியும், அதே போல் தான் தமிழ் திரையுலகமும்.
சரி இப்போ இது போன்ற படங்களை கமல் போன்றவர்கள் தமிழ் நாட்டில் எடுக்க முன்வராதது ஏன் பார்ப்போம். சாருவே கூறியிருப்பது போல, இந்த ஜென்மத்தில் இது போன்ற படங்கள் தமிழில் வர வாய்ப்பே இல்லை. இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்த்தால் எத்தனை காட்சிகள் சென்சாரின் கத்திரியில் இருந்து தேறும். அப்படியே தப்பி தவறி படம் வெளிவந்தாலும் அவ்வளவு தான். ஏஸி காரில் பவனி வரும் மாதர் சங்கம் தான் முதலில் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பார்கள். நாயகியை விபச்சாரம் செய்யவதாகவும், பெண்களை கூட்டி கொடுப்பதாகவும் காட்டி நம் நாட்டு பெண்களை இயக்குனர் இழிவு படுத்திவிட்டார் என்று காட்டு கூச்சல் போடுவார்கள். இந்தியாவில் தான் விபச்சாரம், கள்ள தொடர்பு எல்லாம் கிடையவே கிடையாதே.
அடுத்தது Blue Cross எனும் காமெடி பீஸுகள் வீட்டில் சிக்கன் 65, மட்டன் சுக்காவை வெட்டிட்டு வந்து போராட்டத்தை தொடங்குவார்கள். இம்சை அரசனில் வடிவேலு குதிரையில் ஏறி வலம் வந்ததையே எதிர்க்கும் இவர்கள் இதையா விட்டு வைப்பார்கள்.
பிறகு வன்முறை காட்சிகள். காடு வெட்டி குரு தலைமையில், தமிழ் படங்களில் வன்முறை தலை விரித்தாடுகிறது. வன்முறை செய்ய எங்களுக்கு மட்டுமே உரிமையுள்ளது, மற்றவர்கள் அதை படத்திலோ, நிஜத்திலோ செய்ய கூடாதுன்னு ரோட்டோரங்களில் இருக்கும் மரங்களை வெட்டி தமிழகத்தை ஸ்தம்பிக்க வைப்பார்கள்.
இது போக வேலையத்தவர்கள் எல்லாம் ஒன்னா சேர்ந்து இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு போடுவார்கள்.
இந்த லட்சனத்தில் இது போன்ற உலக படத்தை எப்படி எடுத்து வெளியிடுவது. படத்தை மக்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பது வேறு பிரச்சனை, முதலில் அது தமிழ்நாட்டில் வெளிவரனும்ல.
தமிழ் திரையுலகம் இப்பொழுது Transition period இல் இருக்கிறது. The Isle படத்தின் பட்ஜெட் வில்லு படத்தின் பட்ஜெட்டில் கால்வாசி கூட இருக்காது. கமலஹாசனும் இது போன்ற பல படங்களை படங்களை பார்த்திருப்பார், ஆனால் இது போன்ற படங்களை எடுக்கும் சூழல் இங்கே கிடையாது. நினைத்தை எல்லாம் இங்கே படமாக்க முடியாது. தமிழ் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு எடுத்து போவதற்கு முன்னால் தமிழ் ரசிகர்களை அதற்கு தயார் படுத்த வேண்டியிருக்கிறது. அதை தான் கமலஹாசன், பாலா, பாலு மகேந்திரன் போன்றவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களின் ரசனை மாறாமல் இருக்கும் வரை இங்கே இது போன்ற படங்கள் மட்டுமே வெளிவரும். அதற்காக இங்கெ உள்ளவர்களுக்கு உலக தரத்தில் படம் எடுக்க தெரியாதவர்கள் என்று அர்த்தமல்ல.
சந்தியா ராகம் படத்தின் நெகட்டீவ் அழிந்து விட்டது என்று கூறி அழுத பாலு மகேந்திரனின் நிலை தான் இன்றைய யதார்த்தம்.
IMDB தரத்தில் முதலிடத்தில் உள்ள Shawashank Redemption கூட தோல்வி படம் தான். அங்கே தயராகும் அர்னால்ட், சில்வெஸ்டர் படங்களுக்கும் இங்க தயாரிக்க படும் ரஜினி படங்களுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. உலக தரத்தில் படங்கள் எடுக்கும் நாட்டில் தான் அர்னால்ட் கலிஃபோர்னியா மாகானத்தில் கவர்னராக தேர்ந்தெடுக்க பட்டிருக்கிறார்.
உலக படங்களை ஒன்றுவிடாமல் பார்க்கும் சாருவிற்கே கதை புரியவில்லை என்றால் சாமானிய மக்களுக்கு எப்படி புரியும். தமிழ் படமோ, கொரியா படமோ மொதல்ல படத்தை பார்த்துட்டு விமர்சணம் எழுதுங்கப்பா.
Please excuse for any grammer mistakes in this post.
Labels: சாரு | விமர்சணம் எதிர்வினை
64 Comments:
At March 25, 2009 at 12:13 PM ,
☀நான் ஆதவன்☀ said...
//ஹ்யூன் ஷிக் அவளுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள முயற்சிக்கும் பொழுது, நாயகி அதை தவிர்த்து கரைக்கு வந்து விபச்சாரியை ஃபோனில் அழைத்து வர சொல்லுவாள்//
தல நல்லா பாருங்க...அவ போன எடுத்து காதுல வைப்பா ஆனா பேசறத காண்பிக்க மாட்டார்கள்
At March 25, 2009 at 12:14 PM ,
☀நான் ஆதவன்☀ said...
//இரண்டாவது முறை தற்கொலை முயற்சி, அவன் விருப்பப் பட்டு செய்வது அல்ல//
இது கரெக்ட்டு...
//ஜீ ஜின் அந்த வேசியை மிரட்டுவதற்காக ஒரு படகு வீட்டில் வாயை பொத்தி, கை கால்களை கட்டி போட்டிருப்பாள், அந்த வேசி, ஜீ ஜின் இல்லாத நேரத்தில் தப்பிக்க முயற்சித்து தண்ணீரில் விழுந்து இறந்து விடுவாள்//
இதுவும் ரொம்ப கரெக்ட்..நான் கூட சாருவோட விமர்சனத்தை பார்த்துட்டு அவ வேண்டுமென்றே கொல்வாள் என்று நினைத்தேன்
At March 25, 2009 at 12:16 PM ,
☀நான் ஆதவன்☀ said...
//அதே போல் ஹீ ஜின்னிற்கு ஏற்கனவே கணவனோ பாய் ஃபிரண்டோ இருந்ததையும் உணர்த்த இயக்குனர் சில காட்சிகள் வைத்திருப்பார்//
அந்த பைக் மேட்டர் தானே??? ஹா...ஹா நானும் அதை நினைச்சேன்
At March 25, 2009 at 12:34 PM ,
☀நான் ஆதவன்☀ said...
மொத்தத்தில டைம் வேஸ்ட்
At March 25, 2009 at 12:41 PM ,
பரிசல்காரன் said...
ச்சும்மவே இருக்கறது.. கேப் கிடைச்சா சிகஸரடிக்கறது.. அடங்கமாட்டீங்களாய்யா?
:-)
அப்பறம்.. உங்களுக்கு எங்கெங்க மூணு சுழி ‘ண’ போடணும்னு தோணுதோ அங்கெல்லாம் ரெண்டு சுழி ‘ன’ போடுங்க.. சரியாயிருக்கும்!!! :-)
At March 25, 2009 at 12:42 PM ,
Bleachingpowder said...
//நான் ஆதவன் said...
தல நல்லா பாருங்க...அவ போன எடுத்து காதுல வைப்பா ஆனா பேசறத காண்பிக்க மாட்டார்கள்
//
வாங்க தல, நீங்க தான் முத போனி.28.55 - 29:15 இன்னோரு தடவ பாருங்க தல, நானும் முதல்ல அப்படி தான் நினைச்சேன், போனை எடுத்து டயல் பண்ணியவுடன், லாங்க் ஷாட்டுல அவள் வாயசைவது தெரியும்.
//அந்த பைக் மேட்டர் தானே??? ஹா...ஹா நானும் அதை நினைச்சேன்
//
ஆமாம் தல, நிங்களும் படத்த பிரிச்சு மேஞ்சிருக்கீங்க போல :). அவளுடைய பாய் பிரண்டோட டீ ஷர்டை ஹ்யூன் ஷிக் கொடுக்கும் காட்சியிலும் இயக்குனர் அதை உணர்த்தியிருப்பார்.
At March 25, 2009 at 12:52 PM ,
Bleachingpowder said...
//பரிசல்காரன் said...
ச்சும்மவே இருக்கறது.. கேப் கிடைச்சா சிகஸரடிக்கறது.. அடங்கமாட்டீங்களாய்யா?
:-)//
என்ன தல பண்றது, சும்மா சும்மா கமலையே சொறிஞ்ட்டு இருக்காரு.
//அப்பறம்.. உங்களுக்கு எங்கெங்க மூணு சுழி ‘ண’ போடணும்னு தோணுதோ அங்கெல்லாம் ரெண்டு சுழி ‘ன’ போடுங்க.. சரியாயிருக்கும்!!! :-)
//
இதுக்கு தான் தல பதிவே போடறதில்லை.எவ்வளவு தான் தமிழ்மணத்தை மேஞ்சாலும், இந்த ரெண்டு சுழி, மூனு சுழி மட்டும் சரியாவே வர மாட்டேங்குது :(
At March 25, 2009 at 1:02 PM ,
கிரி said...
//அடுத்தது Blue Cross எனும் காமெடி பீஸுகள் வீட்டில் சிக்கன் 65, மட்டன் சுக்காவை வெட்டிட்டு வந்து போராட்டத்தை தொடங்குவார்கள்//
:-)))))))))
எப்படியோ சாருவை சுக்கா வறுவல் செய்துட்டீங்க :-)))))))
At March 25, 2009 at 1:13 PM ,
வால்பையன் said...
திருந்தாத ஜென்மங்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது தல!
கொரிய இயக்குனரின் 3IRON படத்திலிருந்து காட்சிகளை சுட்டு லாடம் என்ற படத்தில் வைத்திருக்கிறார்களாம்.
சரி அதை கூட விடுங்க!
சாருவின் அந்த பதிவில் கேட்கபட்ட கேள்வி தேவ்-டி படத்தை பற்றி, ஆனால் பதிலை பாருங்கள், மிருகவதை, ஆண் நிர்வாணம்.
இவர் படமெடுத்தால் ஆண்களைத்தான் நிர்வாணமாக காட்டுவாராம்,
இவருக்கு பிடித்தது மற்றவர்களுக்கும் பிடிக்க வேண்டும் என்று நினைப்பது மனநோயில் எந்த வகையை சேர்ந்தது என்று டாக்டர் ருத்ரனை விசாரிக்க வேண்டும்
காவல் கோட்டம் நாவலை பற்றி கேட்டால் 1100 ரூபாய் ஜட்டி கதை வரும்.
அந்த கொரிய இயக்குனரும் இவரும் ஒண்ணாமாம்! எனக்கு சிரிப்பு தாங்க முடியல!
At March 25, 2009 at 1:30 PM ,
நல்லதந்தி said...
ரொம்ம சூடா இருக்கு! போய் இளநீ குடிக்கோணும்!.வெய்ய காலத்தில வெளுத்து வாங்கறீங்களே தல! :)
At March 25, 2009 at 1:33 PM ,
உண்மைத்தமிழன் said...
ஏம்ப்பா..
மெட்ராஸ்லயே டிவிடி கிடைக்க மாட்டேங்குதேன்னு இருக்கேன்..
ஈரோட்டுலேயும், திருப்பூர்லேயும் எங்கப்பா கிடைக்குது..?!
At March 25, 2009 at 1:35 PM ,
வால்பையன் said...
//மெட்ராஸ்லயே டிவிடி கிடைக்க மாட்டேங்குதேன்னு இருக்கேன்..
ஈரோட்டுலேயும், திருப்பூர்லேயும் எங்கப்பா கிடைக்குது..?! //
டோரண்டில் இல்லாத படமேயில்லை.
ஆறு மணி நேரத்தில் ஒரு படம் டவுன்லோடு ஆகிவிடும். தேவையானதெல்லாம் அன்லிமிட்டேட் இணைய இணைப்பும். தரமான கணிணியும் தான்
At March 25, 2009 at 1:36 PM ,
உண்மைத்தமிழன் said...
ஆமா.. பிளீச்சிங்கு..
உங்களுக்கு பாரத் ஸ்டூடண்ட்டு விளம்பரம் கிடைச்சிருக்கு போலிருக்கு..!
கமெண்ட்ஸ் பக்கத்தை கிளிக் பண்ணா அதுவும் சேர்ந்தே வருது..!
ஈரோட்டுல இருந்துக்கின்னு எப்படிங்கண்ணா இப்படி..?!
At March 25, 2009 at 1:37 PM ,
வால்பையன் said...
//ஆமா.. பிளீச்சிங்கு..
உங்களுக்கு பாரத் ஸ்டூடண்ட்டு விளம்பரம் கிடைச்சிருக்கு போலிருக்கு..!
கமெண்ட்ஸ் பக்கத்தை கிளிக் பண்ணா அதுவும் சேர்ந்தே வருது..!
ஈரோட்டுல இருந்துக்கின்னு எப்படிங்கண்ணா இப்படி..?! //
இதே மாதிரி நல்லதந்திக்கும் வரும்.
வால்பையன் ப்ளாக்குல மட்டும் வச்சிக்கல!
உங்களுக்கும் வேணுமா!
At March 25, 2009 at 1:37 PM ,
உண்மைத்தமிழன் said...
டோரண்ட்டா..?
அப்படீன்னா..?
ஒரு படம் டவுன்லோடு ஆக ஆறு மணி நேரம்னா..
முருகா அதுக்கு நேரம் வேணுமே? பகல் முழுக்க ஆத்துல இருக்கணுமே..!
என் வீட்ல ஜிமெயிலின் முகப்புப் பக்கம் திறக்கவே 2 நிமிஷம் ஆகுது.. இந்த லட்சணத்துல டோரண்ட்டுல இறக்குமதி செய்ய ஆரம்பிச்சா விடிஞ்சிடும்..!
At March 25, 2009 at 1:38 PM ,
உண்மைத்தமிழன் said...
விளம்பரம் வைச்சுக்கலாம்தான்..
ஆனா காசு வருமா..? அதுதான் முக்கியம்..!
At March 25, 2009 at 1:40 PM ,
வால்பையன் said...
//முருகா அதுக்கு நேரம் வேணுமே? பகல் முழுக்க ஆத்துல இருக்கணுமே..!//
ஆத்துல என்ன பண்றிங்க!
இது மிக சுலபம்,
எப்போதெல்லாம் கம்ப்யூட்டர் ஆன்ல இருக்கோ அப்போ டோரண்டையும் ஆன் பண்ணி விடுங்கள்! மற்ற வேலைகள் நடக்கும் நேரத்தில் டவுன்லோடும் ஆகும்.
இடையில் நிறுத்துவதால் படத்திற்கு ஒன்றும் ஆகாது!
விளம்பரம் காசுக்காக அல்ல!
இந்திய தளத்தை உலகிற்கு காட்ட
(எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு)
At March 25, 2009 at 1:46 PM ,
உண்மைத்தமிழன் said...
டோரண்ட் முகவரி ப்ளீஸ்..?
At March 25, 2009 at 2:05 PM ,
கிரி said...
//என் வீட்ல ஜிமெயிலின் முகப்புப் பக்கம் திறக்கவே 2 நிமிஷம் ஆகுது.. இந்த லட்சணத்துல டோரண்ட்டுல இறக்குமதி செய்ய ஆரம்பிச்சா விடிஞ்சிடும்..!//
இரண்டு வாரம் ஆகும் :-))) இந்த வேகத்தில் தரவிறக்கம் செய்தால்
At March 25, 2009 at 2:27 PM ,
ஆ! இதழ்கள் said...
அட... பிரிச்சு மேஞ்சுட்டீங்க.
At March 25, 2009 at 2:34 PM ,
Unknown said...
சாரு, ராஜா இசையை romanticize
செய்கிறார், என்று சொல்லுகிறார்.
தமிழ் சினிமா ஒரு வணிகம்.
நடப்பதெல்லாம் புனைவு.கதா பாத்திரங்கள் கற்பனை.பொழுது போக்கு.பார்க்கில் டூயட் பாடுவது அபத்தம் என்று சாரு சொல்லுவதில்லை ஆனால் அவர்கள் பாடும் பாடலின் இசையை romantizise செய்கிறார் என்று சொல்லுவாராம்.
அவர் எழுத்தில் அச்சு பிச்சுத்தனம்
(அசட்டுத்தனம்) ஜாஸ்தி.
(romantizise இதற்கு அர்த்தம் -ஒன்றை அதன் இயல்பு நிலையைவிட
உயர்த்திச் சொல்லுதல்.இப்படி சொல்வது/செய்வது/நம்புவது அதன் தோற்றத்தை கூட்டும்)
”அந்தி மழை பொழி”பாட்டிற்க்கு கமலின் வாக்கிங் ஸ்டிக்கிலேயே மட்டும் தட்டி தட்டிப் பாடும்படி பின்னணியாக வைத்திருக்கலாம்.
இது மாதிரி எல்லா படமும்.
இவர் ரசித்த “மொழி” படத்தின் பாடலான “காற்றின் ஓலி” பாட்டு
தாரை/தப்பட்டை/உடுக்கு/உறுமி மேளம்/கொன்னக்கோல்,தண்டை பின்னணியாக வைத்துப் போட்ட பாட்டா?
At March 25, 2009 at 2:43 PM ,
Bleachingpowder said...
//கிரி said...
எப்படியோ சாருவை சுக்கா வறுவல் செய்துட்டீங்க :-)))))))
//
வாங்க கிரி, அவர் எல்லாரையும் கலாய்கலாம், நாம அவர கலாய்க்க கூடாதா அதுவும் லட்டு மாதிரி ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது :))
At March 25, 2009 at 2:45 PM ,
Rajaraman said...
என்ன தல சாருவை போன்ற குடிகார கோமாளிகளை போய் சீரியசாய் எடுத்துக்கறீங்க. விட்டுத்தள்ளுங்க.
At March 25, 2009 at 2:51 PM ,
Bleachingpowder said...
//வால்பையன் said...
திருந்தாத ஜென்மங்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது தல!
வாங்க தல, புரிய வேண்டாம், கொஞ்சம் உறைச்சா கூட போதும். கொரிய படம்ன்னு சொன்னா மிரண்டு போயிடுவாங்க அவர் நினைச்சிட்டு இருக்காரு.
//சரி அதை கூட விடுங்க!
சாருவின் அந்த பதிவில் கேட்கபட்ட கேள்வி தேவ்-டி படத்தை பற்றி, ஆனால் பதிலை பாருங்கள், மிருகவதை, ஆண் நிர்வாணம்.//
அந்த தேவ்-டி படம் கூட கிட்டதட்ட அப்படி தான் drugs & Sex, இது ரெண்டும் தான் படம் முழுவதும்.
//இவர் படமெடுத்தால் ஆண்களைத்தான் நிர்வாணமாக காட்டுவாராம்,
இவருக்கு பிடித்தது மற்றவர்களுக்கும் பிடிக்க வேண்டும் என்று நினைப்பது மனநோயில் எந்த வகையை சேர்ந்தது என்று டாக்டர் ருத்ரனை விசாரிக்க வேண்டும்//
இவருக்கு பிடித்தது மற்றவருக்கு பிடிக்கனும்னு நினைக்கிறது கூட பரவாயில்லை தல, ஆனா அது தான் உலக தரம், மற்றதெல்லாம் குப்பைன்னு சொல்ல இவர் யாருனு தெரியல.
//காவல் கோட்டம் நாவலை பற்றி கேட்டால் 1100 ரூபாய் ஜட்டி கதை வரும்.//
:))) அவர் என்ன ஜட்டி போடுறாருன்னு சொல்றதுக்கு ஒரு பதிவு...கடவுளே!!
At March 25, 2009 at 2:53 PM ,
Bleachingpowder said...
/நல்லதந்தி said...
ரொம்ம சூடா இருக்கு! போய் இளநீ குடிக்கோணும்!.வெய்ய காலத்தில வெளுத்து வாங்கறீங்களே தல! :)
//
வாங்க தல, போய் சீக்கிரமா படத்தை பார்த்துட்டு வந்து ஜோதியில ஐக்கியமாகுங்க.
At March 25, 2009 at 3:11 PM ,
Raj said...
//இவர் படமெடுத்தால் ஆண்களைத்தான் நிர்வாணமாக காட்டுவாராம்//
ஏன் சார் அப்படி...அந்த ஆள் அந்த மாதிரியா என்ன?
At March 25, 2009 at 3:12 PM ,
Bleachingpowder said...
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ஏம்ப்பா..
மெட்ராஸ்லயே டிவிடி கிடைக்க மாட்டேங்குதேன்னு இருக்கேன்..
ஈரோட்டுலேயும், திருப்பூர்லேயும் எங்கப்பா கிடைக்குது..?!
//
வாங்க உண்மை தமிழன். சென்னையில் Cinema Paradisoவில் முயற்சி செய்து பாருங்கள். அங்கே நிச்சயமாக கிடைக்கும். ஆழ்வார்பேட்டையில் இருக்குதுனு கேள்வி பட்டிருக்கிறேன்.
//என் வீட்ல ஜிமெயிலின் முகப்புப் பக்கம் திறக்கவே 2 நிமிஷம் ஆகுது.. இந்த லட்சணத்துல டோரண்ட்டுல இறக்குமதி செய்ய ஆரம்பிச்சா விடிஞ்சிடும்..!//
அப்போ நிங்க டோரண்டை மறந்துடுங்க :)) கிரி சொன்ன மாதிரி, உங்க கணினியை ஆஃப் பண்ணாமல் ரெண்டு மூனு வாரம் இருந்தா தான் டவுன்லோட் ஆகும்.
At March 25, 2009 at 3:13 PM ,
Bleachingpowder said...
//ஆ! இதழ்கள் said...
அட... பிரிச்சு மேஞ்சுட்டீங்க.
//
வாங்க ஆ இதழ்கள், சிலம்பாட்டம் சிம்பு மாதிரியே சொல்றீங்க :)))
At March 25, 2009 at 3:13 PM ,
KARTHIK said...
// அவள் ஃபோனில் பேசுவதையும் தெளிவாக காட்டுவார்கள்.//
அப்போ தம் அடிக்கப்போயிருப்பார்.அதனால காட்னத இவர் பாத்திருக்கமாட்டார்.
At March 25, 2009 at 3:19 PM ,
Bleachingpowder said...
//கே.ரவிஷங்கர் said...
சாரு, ராஜா இசையை romanticize
செய்கிறார், என்று சொல்லுகிறார்.
//
வாங்க ரவிஷங்கர். தெரியாத விசியங்களில் தலையை நுழைப்பதே அநாகரிகம். இவர் அதையும் தாண்டி, ராஜாவின் இசையை பற்றி விமர்சணம் என்ற பேரில் தத்து பித்துனு உளறிட்டி இருக்கார். யேசுதாஸ் பாடல்களை கேட்டால் இவருக்கு வாந்து வருத்தாம். என்னத்த சொல்ல.
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரவிஷங்கர்.
At March 25, 2009 at 3:24 PM ,
Bleachingpowder said...
//Rajaraman said...
என்ன தல சாருவை போன்ற குடிகார கோமாளிகளை போய் சீரியசாய் எடுத்துக்கறீங்க. விட்டுத்தள்ளுங்க.
//
வாங்க தல. இவர் லத்தின், கொரிய திரைப்படங்களை தலை தூக்கி வைத்து ஆடட்டும் யார் வேண்டாங்குற, ஆனா அதுக்கு ஏன் நம்ம ராஜாவையும், கமலையும் மட்டம் தட்டனும். போக வேண்டியது தானே Kim ki duk கிற்கு கதை எழுத யாரு கையை பிடிச்சா.
At March 25, 2009 at 3:27 PM ,
Bleachingpowder said...
//கார்த்திக் said...
அப்போ தம் அடிக்கப்போயிருப்பார்.அதனால காட்னத இவர் பாத்திருக்கமாட்டார்.
//
அட அவரு படமே பாத்திருக்க மாட்டாருன்னு நான் சொல்றேன், நீங்க என்ன கார்த்திக் தம் அடிக்க போயிருப்பாருனு சொல்றீங்க :))
At March 25, 2009 at 3:30 PM ,
Bleachingpowder said...
//Raj said...
//இவர் படமெடுத்தால் ஆண்களைத்தான் நிர்வாணமாக காட்டுவாராம்//
ஏன் சார் அப்படி...அந்த ஆள் அந்த மாதிரியா என்ன?
//
வாங்க ராஜ்.அப்ப தானே நாம அவர வித்தியசாம படமெடுக்கிறார்னு சொல்லுவோம். இது ஒரு மேனியாங்க, எல்லாரும் நல்லாயிருக்குன்னு சொன்னா நல்லாயில்லைனு சொல்றது. நல்லாயில்லைனு சொன்னா, நல்லாயிருக்குனு சொல்றது.
At March 25, 2009 at 3:38 PM ,
KARTHIK said...
BP r வால் r நல்ல தந்தி
//அட அவரு படமே பாத்திருக்க மாட்டாருன்னு நான் சொல்றேன்,//
Spring summer,3 iron பாத்தீங்க தெரியும்
ஆனா இது எப்போ பாத்தீங்க.
சரி கேசட்குடுங்க
At March 25, 2009 at 4:23 PM ,
Bleachingpowder said...
//கார்த்திக் said...
BP r வால் r நல்ல தந்தி
Spring summer,3 iron பாத்தீங்க தெரியும்
சரி கேசட்குடுங்க
//
3 ironஐ பற்றி அவ்வளவா தெரியாது. Spring, summer, fall, winter and Spring பாருங்க கார்த்திக். அருமையான படம். Cinema paradisoவில் ட்ரை பண்ணுங்க கிடைக்கவில்லை என்றால் டாராண்டவரே துணை.
At March 25, 2009 at 4:27 PM ,
மணிகண்டன் said...
ஜேசுதாஸ் பாட்ட கேட்டா அவருக்கு தான் வாந்தி வருதுன்னு சொல்லி இருக்காரு. நமக்கு வரும்ன்னு சொல்லல ! சாரு அவருக்கு அந்த சமயம் என்ன தோணுதோ அத எழுதறாருன்னு நினைக்கறேன். அதுல inconsistencies இருக்கதான் செய்யும். ஆனா அது ஒரு வகையில உண்மையான எழுத்து தான்.
அவரு கமல சொரியறது கொஞ்சம் ஓவர் தான். நம்ப சாரு பேர் போட்டு ஒரு பதிவு எழுதினா எப்படி சூடாகுதோ அதே மாதிரி கமல் பேர யூஸ் பண்ணினா அவருடைய புகழ் பரவும் போல. அதே மாதிரி அவரு இளையராஜா மியூசிக் ஏன் பிடிக்கலைன்னு எழுதி இருக்காரு. அதோட விட்டு இருந்தா ஒரு விமர்சனம் தான். ஆனா இசைய விமர்சனம் செய்யும் போது ஒருபடி மேல போய் இளையராஜாவ character assasination பண்னறாரு. அது கொஞ்சம் இடறல் தான்.
சாரு தமிழ் படம் எடுப்பேன்னு சொல்லலியே ! அதுனால சென்சார் கிட்ட மாட்ட மாட்டாரு. producer தான் இவர் கிட்ட மாட்டி அவதி படுவாரு !
உங்களோட பதிவுல நான் மிகவும் ரசிச்ச இடம் இது தான் ! படிச்சுட்டு விழுந்து விழுந்து சிரிச்சேன்.
******
இது போக இவர் படம் எடுத்தால் இது மாதிரி ஒரு படத்தை தான் எடுப்பாராம், ஏன் நீங்க எழுதின இந்த கதையையே எடுக்கலாமே. அதான் படத்தின் முக்கியமான plot எல்லாத்தையும் நீங்களே மாத்தீடீங்களே அப்புறம் என்ன
******
நீங்க முன்னாடி எழுதின போஸ்ட் எல்லாத்தையும் விட, இது படிக்க மிகவும் எளிதான நடையில தான் இருக்கு.
அடிக்கடி எழுதுங்க.
At March 25, 2009 at 4:33 PM ,
மணிகண்டன் said...
****
உங்களுக்கு எங்கெங்க மூணு சுழி ‘ண’ போடணும்னு தோணுதோ அங்கெல்லாம் ரெண்டு சுழி ‘ன’ போடுங்க.. சரியாயிருக்கும்
*****
:)-
At March 25, 2009 at 4:57 PM ,
நல்லதந்தி said...
டோரண்ட் முகவரியை உண்மைத்தமிழன் அண்ணாச்சி கேட்டிருந்தாரு!. யாராவது சொன்னீங்களா. சொன்னா சந்தடிசாக்குல நானும் பாக்கலாமுன்னு பாத்தா யாருமே வாயை திறக்க மாட்டேங்குறீங்களே!. வால் நீங்களாவது சொல்லக் கூடாதா!
At March 25, 2009 at 4:59 PM ,
குடுகுடுப்பை said...
பிறகு வன்முறை காட்சிகள். காடு வெட்டி குரு தலைமையில், தமிழ் படங்களில் வன்முறை தலை விரித்தாடுகிறது. வன்முறை செய்ய எங்களுக்கு மட்டுமே உரிமையுள்ளது,//
சாரு பேர வெச்சிட்டு விமர்சனம் வேறு தளம் வரை செல்கிறது.
உங்கள் துணிச்சலை பாராட்டுகிறேன்
At March 25, 2009 at 5:00 PM ,
நல்லதந்தி said...
வர்றவங்க ஒரு ஓட்டைப் போட்டுட்டு போகலாமில்லை.இவ்வளவு சூடான பதிவை தமிழ்மணத்து மேல ஏத்த வேண்டாமா? :)
At March 25, 2009 at 5:00 PM ,
வால்பையன் said...
டோரண்ட் முகவரியை உண்மைத்தமிழன் அண்ணாச்சி கேட்டிருந்தாரு!. யாராவது சொன்னீங்களா. சொன்னா சந்தடிசாக்குல நானும் பாக்கலாமுன்னு பாத்தா யாருமே வாயை திறக்க மாட்டேங்குறீங்களே!. வால் நீங்களாவது சொல்லக் கூடாதா!
At March 25, 2009 at 5:01 PM ,
வால்பையன் said...
அடடே நல்லதந்தி ஐடியில போட்டப்ப எர்ரர் வந்தது. தெரியாம வால்பையன் ஐடியில ஒருக்கா போட்டு தொலைச்சிட்டேனே!
At March 25, 2009 at 5:17 PM ,
Bleachingpowder said...
//மணிகண்டன் said...
அவரு கமல சொரியறது கொஞ்சம் ஓவர் தான். நம்ப சாரு பேர் போட்டு ஒரு பதிவு எழுதினா எப்படி சூடாகுதோ அதே மாதிரி கமல் பேர யூஸ் பண்ணினா அவருடைய புகழ் பரவும் போல. அதே மாதிரி அவரு இளையராஜா மியூசிக் ஏன் பிடிக்கலைன்னு எழுதி இருக்காரு. அதோட விட்டு இருந்தா ஒரு விமர்சனம் தான். ஆனா இசைய விமர்சனம் செய்யும் போது ஒருபடி மேல போய் இளையராஜாவ character assasination பண்னறாரு. அது கொஞ்சம் இடறல் தான்.//
ரொம்ப சரியா சொல்லியிருகீங்க மணிகண்டன்.
//உங்களோட பதிவுல நான் மிகவும் ரசிச்ச இடம் இது தான் ! படிச்சுட்டு விழுந்து விழுந்து சிரிச்சேன்.
******
இது போக இவர் படம் எடுத்தால் இது மாதிரி ஒரு படத்தை தான் எடுப்பாராம், ஏன் நீங்க எழுதின இந்த கதையையே எடுக்கலாமே. அதான் படத்தின் முக்கியமான plot எல்லாத்தையும் நீங்களே மாத்தீடீங்களே அப்புறம் என்ன
******//
:)) முப்பது வருசமா உலக திரைப்படங்களுக்கு விமர்சணம் எழுதுறேன் சொல்லீட்டு, கதையை கூட சரியா சொல்லாமல் தப்பு தப்பா சொல்லறாரு.kim ki duk மட்டும் இவரோட விமர்சனத்தை படிச்சா மீன் தூண்டிலோட வந்துடுவாரு :)
//நீங்க முன்னாடி எழுதின போஸ்ட் எல்லாத்தையும் விட, இது படிக்க மிகவும் எளிதான நடையில தான் இருக்கு.//
நன்றி மணிகண்டன்.
//அடிக்கடி எழுதுங்க.//
பரிசல்காரரோட கமெண்டை பார்த்தீங்கல்ல, ரெண்டு சுழி,மூனு சுழி மேட்டர் தான் நம்மள பாடா படுத்துது. நானும் ஒரு பதிவாவது எழுத்து பிழையில்லாமல் போட்டனும்னு பார்க்கிறேன் எங்க :))
//
At March 25, 2009 at 5:19 PM ,
Bleachingpowder said...
//வால்பையன் said...
அடடே நல்லதந்தி ஐடியில போட்டப்ப எர்ரர் வந்தது. தெரியாம வால்பையன் ஐடியில ஒருக்கா போட்டு தொலைச்சிட்டேனே!
//
பரவால்ல லூசுல விடுங்க, ப்ளீச்சீங் என்ன சொல்லுறாருன்னு பார்ப்போம்
At March 25, 2009 at 5:20 PM ,
T.V.ராதாகிருஷ்ணன் said...
ப்ளீச்சிங்க்...சென்னையில வெயில் ஏற்கனவே அதிகம்...அப்புறம் நீங்க வேற...
At March 25, 2009 at 5:20 PM ,
Bleachingpowder said...
//நல்லதந்தி said...
வர்றவங்க ஒரு ஓட்டைப் போட்டுட்டு போகலாமில்லை.இவ்வளவு சூடான பதிவை தமிழ்மணத்து மேல ஏத்த வேண்டாமா? :)
//
நமக்கு இருக்கிற நல்ல பேருக்கு ஓட்டு வேற போட சொன்னா அவ்வளவு தான் தல :))
At March 25, 2009 at 5:22 PM ,
Bleachingpowder said...
//குடுகுடுப்பை said...
சாரு பேர வெச்சிட்டு விமர்சனம் வேறு தளம் வரை செல்கிறது.
உங்கள் துணிச்சலை பாராட்டுகிறேன்
//
வாங்க குடுகுடுப்பை, நீங்கெல்லாம் இருக்கிற தைரியம் தான். பிரச்சனைன்னு சொன்னா ஓடி வந்துட மாட்டீங்களா என்ன :))
At March 25, 2009 at 5:26 PM ,
Bleachingpowder said...
// T.V.Radhakrishnan said...
ப்ளீச்சிங்க்...சென்னையில வெயில் ஏற்கனவே அதிகம்...அப்புறம் நீங்க வேற...
//
ஹே...ஹேஹே..ஹேஹேஹே...இதெல்லாம் நாளைக்கு சரித்திரத்துல வரும், ஸ்டுடண்ட்ஸ் எல்லாம் நோட்ஸ் எடுப்ப்பாங்க... என்ன பண்றது பொது வாழ்க்கைக்கு வந்துட்டா இந்த மாதிரி சில தியாகங்களை செஞ்சு தானே ஆகனும்
At March 25, 2009 at 8:53 PM ,
உட்டாலக்கடித்தமிழன் said...
\\ரொம்ம சூடா இருக்கு! போய் இளநீ குடிக்கோணும்!.வெய்ய காலத்தில வெளுத்து வாங்கறீங்களே தல! \\
மழைகாலத்தில் வெளுத்துகாலத்தில் வெளுத்து வாங்க முடியாதில்ல அதான்.
இவ்ளோ வயசாகியும் இன்னும் சூடு தணியவில்லயா.
At March 25, 2009 at 8:55 PM ,
உட்டாலக்கடித்தமிழன் said...
சாருவே ஒரு லூசு அந்த லூச பத்தி பதிவு போட்டா அத படிச்சிட்டு இத்தன பேரு பின்னூட்டம் போட்டுருக்காங்களே.
என்ன கொடுமை சார் இது?
At March 25, 2009 at 8:56 PM ,
உட்டாலக்கடித்தமிழன் said...
\\இவ்வளவு சூடான பதிவை தமிழ்மணத்து மேல ஏத்த வேண்டாமா? :)\\
பாத்து ஏத்துங்கோ மாட்டிக்க போகுது
At March 26, 2009 at 12:36 AM ,
☀நான் ஆதவன்☀ said...
//வாங்க தல, நீங்க தான் முத போனி.28.55 - 29:15 இன்னோரு தடவ பாருங்க தல, நானும் முதல்ல அப்படி தான் நினைச்சேன், போனை எடுத்து டயல் பண்ணியவுடன், லாங்க் ஷாட்டுல அவள் வாயசைவது தெரியும்.
//
ஆமாம் தல..இப்ப தான் பார்த்தேன். வாய் அசையுது :)))
At March 26, 2009 at 12:31 PM ,
செல்லையா முத்துசாமி said...
பேரரசு என்பவர் வடிகட்டி மீந்த பேரரசு. பேரரசுவை தரம்பிரிக்கையில் கிடைக்கும் முதல்தரமான பேரரசுதான் இயக்குனர் பாலா. ஹீரோயிசத்தை வேறுவிதமான கதைப்பின்னணியில் தொடர்ந்து படமாக்கிவரும் பாலாவை காலில் விழுந்து பாராட்டும் சாருவின் எழுத்துக்களை, பிறமொழிப் படங்களைப்பற்றி எழுதுவதை, புனைவென்று கருதி வாசிக்கலாம். பொருட்படுத்தத் தேவையில்லை.
At March 26, 2009 at 1:21 PM ,
Bleachingpowder said...
//உட்டாலக்கடித்தமிழன் said...
சாருவே ஒரு லூசு அந்த லூச பத்தி பதிவு போட்டா அத படிச்சிட்டு இத்தன பேரு பின்னூட்டம் போட்டுருக்காங்களே.
//
வாங்க வாங்க உட்டாலக்கடி, நீங்களூம் வந்து ஜோதியில ஐக்கியமாகுங்க :)
At March 26, 2009 at 1:24 PM ,
Bleachingpowder said...
//செல்லையா முத்துசாமி said...
பேரரசுவை தரம்பிரிக்கையில் கிடைக்கும் முதல்தரமான பேரரசுதான் இயக்குனர் பாலா.
//
நீங்க கூறியவாறு தரம் பிரித்தால், அதில் முதல் இடம் மணிரத்தினத்திற்கு தான். சரி தானே? முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி செல்லையா முத்துசாமி
At March 26, 2009 at 5:59 PM ,
Cable சங்கர் said...
அவரை முதல்ல ஒழுங்கா எழுத சொல்லுங்க.. அப்புறம் படமெடுக்கலாம்னு சொல்லுங்க..
At March 27, 2009 at 1:28 AM ,
Tech Shankar said...
நீங்க எப்படி? அடடடடா! இப்பவே கண்ணைக் கட்டுதே
//IMDB யில் plot, summaryயை படித்து விட்டு இங்கே வந்து படம் பார்த்ததாக பீலா வுட்டாரா என்பதை பார்ப்போம்.
At March 27, 2009 at 3:30 AM ,
கோபிநாத் said...
தல
இதுதான் முதல் முறை உங்க பக்கத்துக்கு வரேன். அதுவும் சூடான பதிவுக்கு.. நம்ம ஆதவன் வழிகாட்டி ;))
சும்மா சொல்லக்கூடாது கொளுத்திட்டிங்க ;))
At April 21, 2009 at 3:19 PM ,
VIKNESHWARAN ADAKKALAM said...
பிலிச்சிங் நானும் இப்படி தான் ஒன்னு படிச்சிட்டு புரியாம எழுதினேன்...
நோ கமெண்ட்....
http://vaazkaipayanam.blogspot.com/2009/04/blog-post_1402.html
வேணுனா இத பாருங்க,....
At April 22, 2009 at 10:12 AM ,
Bleachingpowder said...
//Cable Sankar said...
அவரை முதல்ல ஒழுங்கா எழுத சொல்லுங்க.. அப்புறம் படமெடுக்கலாம்னு சொல்லுங்க..
//
வாங்க கேபிளு. கேட்டா என் எழுத்த கேரளாவில் கொண்டாடுறாங்க, லத்தின்ல மொழிபெயர்குறாங்கனு கலர் கலரா ரீல் வுடுவாரு.
//தமிழ்நெஞ்சம் said...
நீங்க எப்படி? அடடடடா! இப்பவே கண்ணைக் கட்டுதே
//
வாங்க தமிழ்நெஞ்சம், முதல் முறையா நம்ம இடத்துக்கு வந்திருக்கீங்க,அடிக்கடி வாங்க )
// கோபிநாத் said...
தல
இதுதான் முதல் முறை உங்க பக்கத்துக்கு வரேன். அதுவும் சூடான பதிவுக்கு.. நம்ம ஆதவன் வழிகாட்டி ;))
//
முதல் வருகைக்கு நன்றி கோபிநாத். ஆதவன் நம்ம தோஸ்த்துங்க,எப்ப பதிவ போட்டாலும் மொத ஆளா வந்து கை கொடுப்பாரு.
//VIKNESHWARAN said...
பிலிச்சிங் நானும் இப்படி தான் ஒன்னு படிச்சிட்டு புரியாம எழுதினேன்...
//
வாங்க விக்னேஷ், என்ன இவ்வளவு லேட்டா வரீங்க, அப்புறம் புரியிற மாதிரி எழுதினா நமக்கும் அவங்களுக்கும் என்ன வித்தியாசம் :)
At April 30, 2009 at 9:32 PM ,
Anonymous said...
குறுகிய காலத்தில் உலக மகா தலைவர்களை பற்றி இரண்டு புத்தகங்கள் எழுதிய எழுத்தாளரை கண்டு தமிழ்மணத்தில் இருக்கும் சில பதிவர்களுக்கு பொச்சரிப்பாம். அவரோட குருவின் புத்தகம், காகமாய் கரைந்து, குயிலாய் கூவி, பஸ்ஸில் நோட்டீஸ் எல்லாம் கொடுத்தும் இதுவரை முப்பது பிரதி விற்றிருக்கிறதாம். இவரோட புத்தகம் குறைந்தது முப்பத்தைந்தாவது விற்று குருவை மிஞ்சிய சிஷ்யன் என பெயறெடுப்பார் என எதிர்பார்க்க படுகிறது. அது போக இந்த வாரம் ஆணந்த விகடனில் அவர் எழுதிய சிறுகதையை படித்து விட்டு கிம்கிடுக் அதை திரைபடமாக எடுக்க அனுமதிக்குமாறு அந்த எழுத்தாளரிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறாராம்.
At May 12, 2009 at 12:00 PM ,
Anonymous said...
ஏம்ப்பா அவரைப் பத்தி இப்படி எல்லாம் எழுதறீங்க ? பாவம். ரொம்ப feel பண்றாரு பாருங்க
At May 12, 2009 at 12:13 PM ,
Anonymous said...
முதல்ல அவர நிறுத்தச் சொல்லுங்க அப்புறம் நாங்க நிறுத்தறோம். இலக்கியவாதிகளிடம் மட்டும் தான் நான் ஹலோ சொல்லுவேன், மற்ற யாராவது என்னிடம் வந்து சர்குலேஷனை எப்படி உயர்த்துவதுன்னு உபதேசம் செய்தால், அவனை மல்லாக்க படுக்க வைத்து கொட்டையிலேயே மிதிக்கனும் போல இருக்குன்னு சொன்னவரை முதல்ல நிறுத்த சொல்லுங்க
At December 22, 2012 at 12:17 AM ,
Anonymous said...
[url=http://www.yzpace.com/index.php?do=/HermanB/info/]Marvelous[/url]. I have added you in my social bookmark...and i am waiting for your next post I really love the way information is presented in your post.[url=http://www.yzpace.com/index.php?do=/EJavier/info/].[/url]
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home