படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி

Sunday, February 19, 2012

சாரு, நீங்க ஒரு காமெடி பீஸ்

என்ன மாயமோ மந்திரமோ தெரியலை, தினமும் காலை சாருவின் பதிவை அல்லது facebook statusயை‌ டாய்லட்டில் படித்தால் தான் எனக்கு ஆய் போகிறது. உலகில் இது போல் வேறு எந்த‌ எழுத்தாளர்களுக்கு இந்த மாதிரி பவர் உள்ளது என்று தெரியவில்லை. சரி அத விடுங்க‌, இரண்டு வாரம் முன்பு, என் புருசனும் கச்சேரிக்கு போறான்னு சொல்ற மாதிரி இவரும் ஜெய்பூர் இலக்கிய விழாவிற்கு போனார். இலக்கிய விழாவிற்கு இவர் ஏன் போனார் நீங்கள் யோசிக்கிறது புரியுது, விடுங்க அன்னா ஹாசரேவை விஜய் பார்க்க போன மாதிரின்னு வச்சுக்கோங்க.

இவர் போன நேரம் பார்த்து அங்க நிஜமான எழுத்தாளர்களோட கலந்துரையாடல் ஒன்று நடைபெற இருந்திருக்கிறது, இவர் போட்டிருக்கிற இரண்டாயிரம் ருபா ஜட்டியை பார்த்து கூப்பிடாங்களோ, இல்லை நாலாயிரம் ருபாய் ஃபேன்ஸி பனியனை பார்த்து கூப்பிடாங்களான்னு தெரியலை, ஒரு கை குறையுது வரிங்களான்னு கேட்ட ஓடனே, பலியாடு மாதிரி தலையாட்டிட்டு போயிட்டாரு. அங்க போய் உட்கார்ந்த உடனே பெரிய ஜபர்தஸ்த்தா சேர் கிட்டே இருந்த மினரல் வாட்டர் எடுத்து குடித்து தொண்டையை சரி செய்து ஒபாமா மாதிரி உக்காந்துகிட்டார்.

கலந்துரையாடல் தொடங்கியது.ம‌த்த அஞ்சு பேரும் ஆங்கிலத்தில் பொலந்து கட்ட வாட் ஷி இஸ் டெல்லிங் ன்னு பேந்த பேந்த முழிச்சிட்டு இருந்தாரு. கடைசில‌ எது ந‌ட‌க்க‌ கூடாதுன்னு நாம‌ நினைச்ச‌மோ அது ந‌ட‌ந்திடுச்சு, ஆமா மைக்கை இவ‌ர் கையில‌ கொடுத்துட்டாங்க‌, ப்ளாகுல‌ சிங்க‌ம் போல‌ உறுமுற‌ த‌ல‌, அங்க‌ புலிகுட்டி த‌ம்பி பூனைக்குட்டி மாதிரி என்ன‌ பேச‌றாருன்னு கடைசி வரைக்கும் யாருக்கும் புரியலை. ம‌னுசன் எவ்வ‌ள‌வு நேரம் தான் சும்மா உட்கார‌‌ முடியும், அவ‌ங்க‌ளும் இப்ப‌டி ஒருத்த‌ர் ந‌ம்ம‌ கூட‌ இருக்காருன்னே க‌ண்டுக்காம‌, அவ‌ங்க‌ பாட்டுக்கு பேசிட்டு இருதாங்க‌. ந‌ம்மாளு பார்த்தாரு கொஞ்ச‌ நேர‌த்துல‌ மெதுவா எந்திரிச்சு, அங்க‌ நிக‌ழ்ச்சியை தொகுத்து வ‌ழ‌ங்கிட்டு இருந்த‌ பெண்ணிட‌ம்(பேர‌ழ‌கி) மே ஐ கோ டு த‌ டாய்ல‌ட்னு என்ன‌வோ சொல்லிட்டு ந‌ழுவிட்டாரு. ஒரு க‌ல‌ந்துரையாட‌ல் ந‌டைபெற்று கொண்டிருக்கும் பொழுது இப்ப‌டி அசிங்க‌மா பாதியில‌ எழுந்திருச்சு போற‌து எவ்வ‌ள‌வு கேவலம். கேட்டா நோபல் க‌மிட்டில் இருந்து ஒரு ஃபோன், உட‌னே அடுத்த‌ ஃபைளைட் புடிச்சு ஸ்வீட‌ன் வ‌ர‌ சொல்லீட்டாங்க‌னு எதாச்சும் புருடா விடுவாரு. அட‌ ந‌ம‌க்கு த‌மிழே த‌ற்குறி, விக்கிலீக்ஸ் விம‌ல் என்று சாருவால் அன்புட‌ன் அழைக்க‌ப‌ட்டும் மாம‌ல்ல‌ன் தின‌மும் காலை அவ‌ருடையை ப‌திவில் இருந்து ஒரு மேற்க்கோள் காட்டி அவருடைய‌ த‌மிழை திருத்திக்கொண்டிருக்கிறார், இந்த‌ ல‌ட்ச‌ண‌த்துல‌ அங்க‌ போய் மேடை ஏறி த‌மிழ்நாட்டோட‌ ஒட்டு மொத்த‌ மானத்தையும் வாங்க‌னுமா?

அந்த‌ க‌ரும‌த்தை பார்க்க‌னும்னு நினைக்குற‌வ‌ங்க‌ இங்க‌ போய் பாருங்க‌
http://vimeo.com/moogaloop.swf?clip_id=35430352&server=vimeo.com&show_title=0&show_byline=0&show_portrait=0&color&fullscreen=1

ஒரு எழுத்தாளன் எப்போதும் உண்மையை பேசனும் நினைக்குற அளவிற்கு நான் ஒன்னும் கூமுட்டை இல்லை அதுக்காக காலையில எந்திருச்சு காப்பி குடிக்குறதுல கூட பொய் பேசுவேன்னு சொன்னா எப்படி? மாசத்துல எப்படியும் ரெண்டு பதிவுலையாவது, காலையில நாலு மணிக்கு எந்திருச்சு எழுதுறேன், ஏழு மணிக்கு காப்பி குடிச்சே ஆகனும், ஆனா போட்டு கொடுக்க ஆளே இல்லை நடந்தே போய் சரவணபவன்ல காப்பி குடிக்குறேன். இது தான் ஒரு எழுத்தாளனுக்கு தமிழ்நாட்டில் உள்ள மரியாதைன்னு பொல‌ம்பிட்டு இருப்பாரு, ரெண்டு வாரம் முன்னாடி கூட அதை பத்தி எழுதியிருந்தார்..பார்க்க.. http://charuonline.com/blog/?p=2883//மயிலாப்பூரின் அந்தப் பிரபலமான ஓட்டலுக்கு பார்க்கிலிருந்து நடந்தே சென்ற போது மணி எட்டேகால். நம்ப மாட்டீர்கள். ஒரே ஒரு காப்பிக்காக முக்கால் மணி நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. அப்படியும் காப்பி ஆறிப் போயிருந்தது.//இன்னைக்கு என்னடானா திடீர்னு நான் காலையில காபி குடிக்கிறதை விட்டு மூனு வருசமாச்சு இப்ப டெய்லி மாட்டு மூத்திரம் மட்டும் தான் குடிக்குறேன்னு அடிச்சாரு பாருங்க பல்டி. http://charuonline.com/blog/?p=2974//காலையில் எழுந்ததும் ஃபில்டர் காப்பி குடித்தே ஆக வேண்டும். ஆனால் மூன்று ஆண்டுகளாக காலை காப்பியை விட்டு விட்டேன்//ஒரு வேளை இவர் பாலோ பண்றது ஃபிரஞ்ச் அல்லது லத்தின் காலை நேரமோ? என்ன எழவோ, இதை ப‌டிச்சிட்டு அவ‌ரோடு குஞ்சுங்க‌ எத்த‌னை பேர் கால‌ங்காத்தால‌ சொம்பை எடுத்துட்டு மாட்டுக்கு பின்னாடி போய் நிக்க‌ போறாங்க‌ளோ, அவ‌ங்க‌ளை அந்த‌ நித்தி தான் காப்பாத்த‌னும்.

இதை எல்லாம் புதுசா படிக்குறவங்க‌, இவர் தான் பெரிய காமெடியன்னு நினைக்காதீங்க, இவருக்கு facebookல் ஒரு group இருக்கு அட..அட..அட அங்க போய் பாருங்க, ஒவ்வொரு போஸ்டும் நெனைச்சு நெனைச்சு சிரிக்குற மாதிரி இருக்கும். இன்றைய சாம்பிள்:
பிச்சைகாரன்: எல்லைகள் கடந்து சிறகடிக்கும் சாருவை கவுரவிக்க அவருக்கு பாலாபிஷேகம் செய்ய நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறேன்இதுக்கும் நம்ம இதய தெய்வம் சாருவின் பதில்: பாலாபிஷேகம் செய்வது போன்ற காரியங்கள் நம் எதிரிகள் நம்மைப் பார்த்து ஏளனம் செய்ய ஏதுவாகி விடும். அதாவது, பாலாபிஷேகம் செய்யறதுக்கும் இவருக்கு ok தானாம் ஆனா என்ன கழுத மத்த பயபுள்ளைங்க எதாச்சாசும் சொலீட்டா என்ன பண்றதுன்னு ஒரு பீலீங்க் அவ்வளவு தான். மேல மேல இன்னும் உங்க கிட்ட இருந்து நாங்க நிறைய எதிர்பார்க்கிறோம், பாலாபிஷேகதிற்கு பிறகு என்ன ? லிங்க தரிசனமா?? இது தான்யா பின்நவினதுவம் ச்சே முன்நவினதுவம்.

எஸ்.ரா ரஜினியை அழைத்து கூட்டம் சேர்த்துட்டார்ன்னு இவரும், இவரோட போர்படை தளபதிகள் ஆறு பேரும் சேர்ந்து எக்ஸைல் விமர்சண கூட்டம்ன்னு ஒன்னை போட்டாங்க, சரியா எண்ணிப் பார்த்தா இருபத்தி மூனு பேர், சாருவையும் சேர்த்து வந்திருப்பார்கள், இதில பத்து பேர் வெளியில வெயில் ஜாஸ்தியா இருக்குன்னு உள்ள வந்தவங்க. எப்படியோ கையில கால்ல விழுந்து ஞானியையும் கூட்டிட்டு வந்துட்டாங்க, அவர் எதோ சாருவை ஓபாமா ரேஞ்சுக்கு புகழ்ந்து தள்ளப் போகிறார்ன்னு சப்பு கொட்டிட்டு வந்தவங்களுக்கு சாணியை கரைச்சு மூஞ்சியில ஊத்துன மாதிரி, அந்த புக்கையும் சாருவையும் கிழி கிழின்னு கிழிச்சுட்டாரு. இனிமேலாச்சும் விடல பசங்களுக்கு பிடிக்குற மாதிரி எழுதறத விட்டு உருப்படியா எதாச்சும் எழுத பாருன்னு சொல்லிட்டு போயிட்டாரு. சும்மா விடுவாரா, இன்னைக்கு வந்து அவரோட ப்ளாக்குல‌ பக்கம் பக்கமா பேண்டு வச்சுட்டாரு.

கொஞ்ச‌ நாளா, என்ன‌மோ ப‌ண்ணி தொலைய‌ட்டும் யாரும் க‌ண்டுக்காம‌ விட்ட‌ இவ‌ரை இப்போ எல்லாரும் திரும்ப‌வும் ர‌வுண்டு க‌ட்ட‌ ஆர‌ம்பிச்சிடாங்க‌. மாம‌ல்ல‌ன்( விக்கிலீக்ஸ் விம‌ல்) தின‌மும் இவ‌ர் ட‌வுச‌ரை உருவிக்கொண்டு இருக்கிறார். அதுவும் சாருவோட‌ லிங்கையை கொடுத்து அவ‌ர் எழுதியிருக்கும் கோமாளித‌ன‌த்தை ப‌கிர‌ங்க‌ ப‌டுத்தி வ‌ருகிறார். எப்ப‌டி நித்தி மேட்ட‌ர் வெளியான‌ உட‌னே ஒரு வைர‌ஸ் வ‌ந்து க‌ரெட்டா சாரு நித்தியை ப‌த்தி எழுதின கட்டுரைகளை ம‌ட்டும் டெலிட் ப‌ண்ணிட்டு போச்சோ அதே போல‌ ஒரு ‌வைர‌ஸ் கூடி சீக்கிர‌ம் திரும்பி வ‌ரும்னு நினைக்குறேன்.

இவ்வ‌ள‌வு நாளா அந்த பொண்ணு chat விவ‌கார‌த்திற்கும் என‌க்கும் எந்த‌ ச‌ம்ம‌ந்த‌மும் இல்லைன்னு(த‌ப்பில்லைனா போலிஸ் கிட்ட‌ போக‌ வேண்டிய‌து தானே) ம‌ழுப்பிட்டு இருந்தவர் இன்று அவ‌ருடைய‌ த‌ள‌த்தில் என்ன‌ கூறியிருக்கிறார் பாருங்க‌ள். http://charuonline.com/blog/?p=2970 //துக்ளக்கில் ஒருவர் எழுதவேண்டுமென்றால் அவர் கறைபடியாதவராக இருக்க வேண்டும். என் எழுத்தை விரும்பாதவர்கள், திட்டமிட்டு, வேண்டுமென்றே என்னை ஒரு Scandal லில் மாட்ட வைத்தார்கள். அந்தக் கறை என்மீது பதிந்துவிட்டதால் என் எழுத்தும் நிறுத்தப்பட்டது.// இதுவ‌ரை எனக்கும் அந்த ற்கும் எந்த‌ ச‌ம்ம‌ந்த‌மும் இல்லைன்னு சொன்ன‌வ‌ர் இப்போ அவரை திட்ட‌மிட்டு மாட்ட‌ வைத்துவிட்டார்க‌ளாம். so அந்த உரையாடல் நடந்தது உண்மைன்னு அவரே ஒத்துக்கிட்டார்.கொஞ்ச‌ நாள் ஆயிடுச்சே எல்லாரும் ம‌ற‌ந்திருப்பாங்க‌ன்னு நினைச்சு இப்ப அடுத்த‌ பிட்டை போட‌ ஆர‌ம்பிச்சுட்டாரு என்னன்னா, இவ‌ரு மேட்ட‌ர் ப‌ண்ற‌ விசிய‌த்துல‌ யாருமே இவ‌ரை அடிச்சிக்க‌ முடியாதாம், இருப‌த்தி அஞ்சு வ‌ய‌து இளைஞ‌ன் கூட‌ இவ‌ர் கூட‌ போட்டி போட‌ முடியாதாம், கேட்டுக்கோங்க‌ப்பா இனி திரும்ப‌வும் ஆர‌ம்பிச்சிடுவாரு, ப‌தினேலு வ‌ய‌து பேர‌ழ‌கி என்னை திரும‌ண‌ம் செய்ய‌ வ‌ற்புறுத்திகிறார், பெங்க‌ளுரில் ஒரு மாததிற்கு மூன்று ல‌ட்ச‌ம் ச‌ம்பாதிக்கும் ஒரு இள‌ம்பெண் என் மூல‌மாக‌ ஒரு வாரிசு வேணும்னு உயிரெடுக்குறாள். நேற்று காபி ஷாப்பில் மூன்று பெண்கள் என்னை ஒரு வெறியோடு பார்த்தார்கள்ன்னு உலகத் தொலைகாட்சியில் முதல் முறையாகன்னு ஒரு வீடியோ எவிட‌ன்ஸ் மாட்டாமலா போயிடும், அதுவும் அநேக‌மாக‌ அவ‌ரோட‌ ப‌டைத்த‌ள‌ப‌திக‌ள் கிட்ட‌ இருந்தே தான் வெளிவ‌ரும்ன்னு ப‌ட்சி சொல்லுது. ந‌ம்பிக்கையுட‌ன் காத்திருப்போம்.சாரு அடிக்க‌டி யானையை புண‌ந்த‌ கொசு கதை சொல்லுவாரு. ர‌ஜினி மேட்ட‌ர் கூட‌ அப்ப‌டி தான், இவ‌ர் பாட்டுக்கு ர‌ஜினிட‌ம் கேள்வி கேட்குறேன், ச‌வால் விடுகிறேன்னு முழ‌ங்கிட்டு இருக்கிறாரு. பாவம் ர‌ஜினி,யாரு இந்த‌ ம‌னுச‌ன், ந‌ம்ம‌ கூட‌ எந்த‌ ப‌ட‌த்துலையாவ‌து ந‌டிச்சிருக்காரான்னு த‌னிமையில் உட்கார்ந்து யோசித்து கொண்டிருக்கிறாராம்.

Labels:

23 Comments:

  • At February 20, 2012 7:26 AM , Blogger கிரி said...

    // எப்ப‌டி நித்தி மேட்ட‌ர் வெளியான‌ உட‌னே ஒரு வைர‌ஸ் வ‌ந்து க‌ரெட்டா சாரு நித்தியை ப‌த்தி எழுதின கட்டுரைகளை ம‌ட்டும் டெலிட் ப‌ண்ணிட்டு போச்சோ அதே போல‌ ஒரு ‌வைர‌ஸ் கூடி சீக்கிர‌ம் திரும்பி வ‌ரும்னு நினைக்குறேன்.//

    ஹி ஹி ஹி :-)

    அருண் இப்படி சாருவ சாறு பிழியறீங்களே! :-) செம காமெடி போங்க.

    //பாவம் ர‌ஜினி,யாரு இந்த‌ ம‌னுச‌ன், ந‌ம்ம‌ கூட‌ எந்த‌ ப‌ட‌த்துலையாவ‌து ந‌டிச்சிருக்காரான்னு த‌னிமையில் உட்கார்ந்து யோசித்து கொண்டிருக்கிறாராம்.//

    ஹா ஹா ஹா சூப்பரு!

     

  • At February 20, 2012 7:49 AM , Blogger பழனி.கந்தசாமி said...

    பரவாயில்லீங்க, இப்படி ஒரு பயித்தக்காரன் இல்லைன்னா நாம யாரைப்பத்தி இப்படி எழுதமுடியும்? வாழ்க காமெடி பீஸ் எழுத்தாளர்கள்!

     

  • At February 20, 2012 10:38 PM , Anonymous Anonymous said...

    இதுல உச்சபட்ச காமெடி என்னான்னா, பாலியல் வறட்சி பத்தி இவர் டிவி-ல lecture அடிக்கிறார்...என்னை கொடுமை சார் இது!

     

  • At February 23, 2012 1:04 PM , Blogger கார்த்திக் said...

    யாரோ இவருக்கு நல்லா தெரிஞ்ச நாலுபேரு தான் இவருக்கு மெய்ல் போட்டு உசுப்பேத்துராங்க...
    அது புரியாம இவரும்....

    நீங்க பதிவு போடவாவது,இவர் இப்படி லூசுத்தனமா எழுதனும் தல...

    அப்போப்போ எழுதுங்க தல :-)))

     

  • At February 23, 2012 2:34 PM , Anonymous Anonymous said...

    This comment has been removed by a blog administrator.

     

  • At February 24, 2012 1:03 AM , Blogger கோம்பை சண்முகம் said...

    இந்த அனானி யாரென்று ஒத்துக்கொள்ளாதவரை, சாருவென்றே கொள்ளப்படுவார்..

     

  • At February 24, 2012 7:29 PM , Blogger வால்பையன் said...

    நம்ம பேரு ஏந்தான் இப்படி ஒத்து போச்சோ தெரியல, உன் பதிவிலிலயே போடலாமேன்னு ஏகப்பட்ட மெயில்கள்.

    கொஞ்சம் முகத்தை காட்டுங்க தல!

     

  • At February 25, 2012 4:00 AM , Blogger வருண் said...

    First of all, please clean up the ugly comments.

    I watched this video. What an opportunity for Charu to speak about freedom of speech/expression. The most interesting topic!! I am sure he would love to speak!!

    Unfortunately he fucked up very badly. :( He was not speaking loud enough as he was not fluent in his English?? His hands spoke more than his mouth! LOL

    He should have turned down the invitation if he is not fluent in English.

    The worst part of this debate is that he is putting down Tamils and praising malayaalis, going and sitting there!! Leave others, what the other writers (who are debating with him) would think about this moron?? He is known as Tamil writer. He is being disloyal to people of Tamilnadu!!

    What an IDIOT!!

    If he can only "jerk off" in his blog and can't speak well in English, why the fuck he goes there??

    He insulted himself!! And advertised the world that he is a moron!!

    What a fuck up!!!

     

  • At February 25, 2012 1:07 PM , Anonymous Anonymous said...

    This comment has been removed by a blog administrator.

     

  • At February 25, 2012 3:22 PM , Anonymous Anonymous said...

    jettly sekar dont post vulgar commetns

     

  • At February 26, 2012 2:36 PM , Blogger விடுதலை கரடி said...

    This comment has been removed by the author.

     

  • At February 26, 2012 2:37 PM , Blogger வடக்குபட்டி ராம்சாமி said...

    ஏற்கெனவே நான் ஒரு கெடா வெட்டு நடத்தினேன்!பயபுள்ள நீயும் அதை செய்வது செம மஜாவா இருக்கு!

     

  • At February 27, 2012 2:09 AM , Blogger Vijay Anand said...

    விக்கிலீக்ஸ் விமலுக்கு :) அப்புறம் இன்னொரு GUTS & REAL பதிவர் .... தொடரட்டும் உங்கள் பணி

     

  • At February 27, 2012 3:00 AM , Blogger அது சரி(18185106603874041862) said...

    ||/பாவம் ர‌ஜினி,யாரு இந்த‌ ம‌னுச‌ன், ந‌ம்ம‌ கூட‌ எந்த‌ ப‌ட‌த்துலையாவ‌து ந‌டிச்சிருக்காரான்னு த‌னிமையில் உட்கார்ந்து யோசித்து கொண்டிருக்கிறாராம்.||

    :))))))))))))))))))

    க்ளாஸ் :))....பாவம் உலகத்தின் நம்பர் ஒன் எழுத்தாளர்...ஜெயமோகன், எஸ்ரா மாதிரி சினிமாவுல கதை வசனம் தான் எழுத வாய்ப்பு கிடைக்கலை. குத்தாட்டம் போடவாவது வாய்ப்பு கிடைக்கும்னு பார்த்தா ஒன் செகண்ட் காட்டிட்டு அதையும் ஏமாத்திட்டாங்க. நானும் ரெவுடிதான்னு காமிக்கிறதுக்கு எப்பிடில்லாமோ சவுண்டு விட்டு பார்க்கறாரு...ம்ஹூம்...வட்டத்து உறுப்பினர்ஸ் தவிர யாரும் சீண்டற மாதிரி தெரியல...

     

  • At February 28, 2012 10:39 AM , Blogger Bleachingpowder said...

    கில்லி கிளம்பிடுச்சு... http://valpaiyan.blogspot.in/2012/02/blog-post_24.html

     

  • At February 28, 2012 11:06 AM , Blogger Bleachingpowder said...

    //கிரிsaid...

    அருண் இப்படி சாருவ சாறு பிழியறீங்களே! :-) செம காமெடி போங்க.
    //

    வாங்க தல :))), அதையேன் கேக்குறீங்க ரொம்ப நாளைக்கு அப்புறம் போர் அடிக்குதேன்னு அதோட வாசகர் வட்டத்துக்கு போனா, அதுங்க அடிக்குற கூத்து தாங்க முடியலை. அப்புறம் ரொம்ப சாரி கிரி, எதோ ஒரு அனானி பொறம்போக்கு உங்களை அசிங்கமா திட்டிடுச்சு, நானும் கவனிக்கலை.

     

  • At February 28, 2012 11:12 AM , Blogger Bleachingpowder said...

    //பழனி.கந்தசாமிsaid...
    பரவாயில்லீங்க, இப்படி ஒரு பயித்தக்காரன் இல்லைன்னா நாம யாரைப்பத்தி இப்படி எழுதமுடியும்?//
    அவரு ஒரு அமுத சுரபி மாதிரி, இதுவரைக்கும் உளறுனதை வச்சே இன்னும் அம்பது வருசத்துக்கு ஓட்டலாம் ;)

    //கார்த்திக்said...
    நீங்க பதிவு போடவாவது,இவர் இப்படி லூசுத்தனமா எழுதனும் தல...
    அப்போப்போ எழுதுங்க தல :-)))
    //
    வாங்க கார்த்திக், கவலையே படாதிங்க, கல்லை எடுத்து எறிஞ்சா நாய் கொஞ்ச தூரம் ஓடிட்டு திரும்ப வந்துரும், நம்ம திரும்பவும் அடிப்போம் :)

    //கோம்பை சண்முகம்said//

    அட, நீங்க என்ன விட கோவக்காரரா இருக்கீங்களே :)

    //வால்பையன்said...
    நம்ம பேரு ஏந்தான் இப்படி ஒத்து போச்சோ தெரியல, உன் பதிவிலிலயே போடலாமேன்னு ஏகப்பட்ட மெயில்கள்.
    //
    விடுங்க தல, நடந்தது நடந்து போச்சு, இனி ரெண்டு ஐ.டி வேண்டாம்ன்னு அறிவிச்சுடலாமா

     

  • At February 28, 2012 3:45 PM , Anonymous Anonymous said...

    பாலாபிஷேக கமெண்ட் பத்தி..ஒரு கமெண்ட் வந்துச்சி வட்டத்துல .. 5 mins la அந்த கம்மெண்ட தூக்கிடாணுவ .அந்த கமெண்ட் கீழே..
    //
    திரு பிச்சை, உங்க பாலபிஷேக ஐடியா சூப்பர் ..வருகிற வட்ட சந்திப்பில் நடக்க வாய்ப்பு உள்ளதா? . பாலபிஷேகதோட, ஒரு பட்டமளிப்பு விழாவும் நம்ம ஸ்டார் ரைட்டர்கு நடத்தினா என்ன? 'இலக்கிய வானில் ஒரு ஜொலிக்கும் நட்சத்திரம்', ( "சோழர் பரம்பரையில் ஒரு MLA மாதிரி").எத்தனையோ நட்சத்திரங்கள் இந்த வானில் இருந்தாலும் நம்ம சாரு தான் 'வால்' நட்சத்திரம் ( மடைய திருப்பி விட்டுராதீக ...இது தமிழ் வால் இல்லீங்கோ, இது இங்கிலீஷ் WALL )

    "சர்" பட்டம் கூட குடுக்கலாம், ஆனா ரைட்ஸ் பிரச்சனைன்னு ஒன்னு இருக்கு ..!! யோசிச்சு பார்த்தா "பவர் ரைட்டர்" சாரு நிவேதிதா, நல்ல பொருத்தமாவே இருக்கு !!

    [பி.கு: பவர் ஸ்டார்க்கும் , இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதுங்கோ....] //

    Balaji.

     

  • At February 28, 2012 6:40 PM , Anonymous Anonymous said...

    He could have talked in Tamil in that lit-fest rather speaking in English.

     

  • At March 8, 2012 3:52 PM , Blogger புதுகை.அப்துல்லா said...

    இன்னா தலைவா ரொம்ம்ம்ம்ப நாளா ஆளேக் காணோம்???

     

  • At March 8, 2012 8:28 PM , Blogger jaisankar jaganathan said...

    அருமை

     

  • At March 15, 2012 8:23 PM , Anonymous P.Kumar said...

    என்ன தான் பெரிய கஷ்டம் வந்தாலும்.. சாரு ப்ளாகையும், பேஸ்புக்கையும் பாத போதும் கஷ்டம் எங்க போவுதுனே தெரிய மாட்டுது பாஸ்...
    all time அர போதைலே இருப்பார் போல!!!

     

  • At May 27, 2012 1:09 AM , Anonymous Anonymous said...

    good article...keep going..









    Maakkaan

     

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home