படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி

Monday, September 14, 2009

திருட்டு பயலே சுசி கனேசனுக்கு இந்த ஆப்பு பத்தாது

தொற எடுத்த படத்தை ஊர் உலகமே கிழிச்சு தொங்கவுட்ட போது பல்லை கடிச்சிட்டு இருந்தவரு, போன வாரம் ஞானி குமுதத்துல படம் ஊத்திக்கிச்சுன்னு எழுதின உடனே பொங்கி எழுந்து இந்த வார குமுதத்துல வாந்தி எடுத்து வச்சிருக்காரு. சக பத்திரிக்கையாளன் மேலே வருவதை பார்த்து வந்த பொறாமையில் எழுதியதாம். சமுக அக்கறையுடன், யாருக்கும் அஞ்சாமல் தன் மனதிற்க்கு நியாயமாக பட்டதை எழுதும் ஒரு மூத்த எழுத்தாளரை விமர்சிக்க குட்டை பாவாடைகளை காட்டி படம் பண்ணும் இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

நான் கூட கந்தசாமி விமர்சணத்தை படிச்சுட்டு கொஞ்சம் ஓவராதான் போறாங்க நம்மாளுங்க நினைச்சேன், இப்ப இவங்க பண்ற கூத்தை பார்தால் இன்னும் பத்தாதோன்னு தோனுது. நடு நிலை பத்திரிக்கையாளர்கள் இந்த படத்தை பார்த்து அதில் ஒருவர் படம் தோல்வின்னு சொன்னா கூட இவர் படமெடுக்கிறதை நிறுத்திடுவாரம் (யாராச்சும் அதை சீக்கிரமா பண்ணி தொலைங்கப்பா).

அட நீங்க எடுத்த கருமத்தை பத்தி என்னமோ எழுதுங்க, என்னமோ கிறுக்குங்க அதுக்கு ஏன்யா மத்த நல்ல படங்களை குறை சொல்றீங்க. சுப்பிரமணியபுரம், பசங்க, நாடோடிகள் எல்லா நல்ல படமில்லையாம், ஞானி தான் இந்த படங்களை மிகை படுத்தி எழுதிட்டாராம். சுப்பிரமணியபுரம், ரவுடிகளை பற்றிய படமாம். பசங்க சிறுவர்களுக்குன்னு சொல்லி பெரியவங்களுக்கு அறிவுரை சொன்ன படமாம். அப்புறம் நாடோடிகள், ஓடி போறவங்களை சேர்த்து வைக்குற படமாம். காறி துப்புற மாதிரி ஒரு படத்தை எடுத்துட்டு, எதார்த்தமா குறைந்த செலவில் வந்த தரமான படங்களை பற்ற பேச வெட்கமாயில்லை?

கந்தசாமி ஓடும் தியேட்டரில் மக்களோடு மக்களாக உட்கார்ந்து படம் பாருங்க அப்ப தெரியும் மக்கள் கிட்ட உங்க மரியாதை என்னன்னு. அவனவன் கிழிக்குற கிழியுல படத்தில் சம்மந்த பட்ட எல்லாருடைய ஃபேமலியும் அங்கே டோட்டல் டேமேஜ் ஆயிட்டிருக்கு. மெக்சிக்கோவுல பிச்சுமணியை தெரியாதவங்க யாருமே கிடையாதாமாம்? தியேட்டர்ல எவனும் வாயில சிரிக்க மாட்டேங்குறான்.

குழந்தைகளுக்கான படமாம் கந்தசாமி. அடப்பாவிங்களா, குழந்தைகளுக்காக எடுக்க பட்ட காட்சின்னு இந்த படத்தில் ஏதாவது ஒன்றையாவது சொல்லுங்கள் பார்ப்போம். இந்த குப்பையை குழந்தைகளுடன் காண நாங்கள் தயாராயில்லை. வேண்டுமென்றால் படமெடுத்த நீங்களும் அதில் நடித்தவர்களும் உங்கள் குழந்தைகளுடன் பாருங்க, படம் பார்க்கும் போது உங்கள் குழந்தைகள் முமைத்கான் நாக்கில் மாட்டியிருப்பது இருப்பது என்ன? அதை ஏன் அடிக்கடி காமிக்கிறீங்கன்னு கேட்டா என்ன பதில் சொல்லனும்னு யோசிச்சுட்டு படத்தை போடுங்க.

ஜெண்டில்மேன், அந்நியன்,ரமணா படத்திற்கும் கந்தசாமிக்கும் எந்த சம்மந்தமும் இல்லையாம், சிவாஜி படம் கூட ஒரே நேரத்தில் ஷங்கரும் இவரும் யோசித்த கருத்தாம், சொல்றாரு திருட்டு பயலே சுசி.

கந்தசாமி தான் ரெண்டு வாரத்துல ஐம்பத்தைந்து கோடி சம்பாதிருச்சுல, பார்ப்போம் இனி எந்த தயாரிப்பாளர் இந்த மாதிரி பணத்தை அள்ளி கொடுத்து உங்களை படம் எடுக்க சொல்றாருன்னு. ஏன் தானுவையே போய் கேளுங்களேன், இன்னோரு ஐம்பது கோடி கொடுங்க இதே மாதிரி குழந்தைகளுக்காக இன்னோரு படம் எடுத்து தரேன்னு, சொல்ல முடியாது அவர் கொடுத்தாலும் கொடுப்பாரு.

Labels: