படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி

Monday, July 21, 2008

ரொம்ம்ம்ப நல்லவங்க

ஒரு எம்பிக்கு முப்பது கோடி, சிபு சோரனுக்கு Cabinet Minister, ஒரே இரவில் லக்னோ விமான நிலையத்திற்கு பெயர் மாற்றம், எல்லாம் எதுக்கு?? நமக்காகவும் நமது நாட்டின் முன்னேற்றத்திற்காக மட்டும் தான். பாவம் கைகாசு போட்டு நமக்காக இவ்வளவு பாடு படறத பார்த்தா வடிவேலு சொல்லறதுதான் நியாபகம் வருது. ஆமா, இவங்க ரொம்ம்ம்ப நல்லவங்க.

இருக்க போறது இன்னும் ஆறு மாசம், இதுக்கே இவ்வளவு செலவு பண்ண தயாராக இருக்கிறார்கள் என்றால் இதுவரை எவ்வளவு சம்பாதிச்சிருப்பாங்க? அடுத்த ஆறு மாசதில எவ்வளவோ சம்பாதிப்பாங்க. இன்னொரு விசியம் தெரியுமா குதிரை பேரம் பண்ணகூடாதுனு சட்டம் ஏதும் இல்லையாம்.

ஹ்ம்ம் இருந்தா மட்டும்...

Friday, July 18, 2008

ஓர் இரவில்

முன்று வருடங்களுக்கு முன்பு ஆணி புடுங்கறதுக்காக ஹைதரபாத் போய் இருந்தேன் அதுவரை தமிழ் நாட்டை தாண்டி வேலைக்காக வேறு எந்த மாநிலத்திற்கும் போனதில்லை. ஆங்கே போனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுது ஹிந்தி,தெலுங்கு தெரியலைனா சோறு கிடைகாதுனு. என்னதான் ஹிந்தி மேல அப்படி ஒரு காண்டு இருந்தாலும், இந்த புலிக்கு பசி வந்திருச்சுனா புல்லென்ன, நமிதா போஸ்டர கூட திங்கும்.

சரி என்னடா பண்றதுனு மல்லாக்க படுத்துட்டு யோசிச்ச போது கிடச்சதுதான் இந்த ஐடியா, Learn hindi in 30 days புத்தகம். உடனே ஒடிப்போய் அந்த புத்தகத்த வாங்கி ஆர்வ கோளார்ல இரவு இரண்டு மணிவரை படிச்சிட்டு ச்சே இவ்வளவு தான் ஹிந்தியா, விடிஞ்சதும் முதல் வேளையா வெளியே போய் ஹிந்தி பேசி தூள் கிளப்பனும்னு நினனச்சுக்கிட்டு தூங்கிட்டேன்.

காலைல எழுந்திருச்சு Railway Station போய் டிக்கட் புக் பண்ணிட்டு திரும்பும் போதுதான் அந்த விபரித ஆசை தோனுச்சு. ஏன் நாம ஆட்டோகாரன் கிட்டா ஹிந்தி பேச கூடாதுனு சரினு ஒரு ஆட்டோவ கூப்பிட்டு, டெல்லில பொறந்து வளந்தவன் மாதிரி முஞ்சிய வச்சுகிட்டு "Begumpet ச்லோ ன்னேன்" அவனும் "ஆய்யே சாப் பைட்டோ னான்" ஒகே ஹிந்தி வொர்கவுட் ஆகுது சந்தோசபட்டு அடுத்த பிட்ட போட்டேன், "கித்னா ??" அவனும்"பச்சீஸ் ருப்பீ சாப்னான்"

பச்சீஸ்னா இருபத்தி அஞ்சு ருபாய். பச்சாஸ்னா ஐம்பது ருபாய்.

நான் கொஞ்சம் Confuse ஆய், ரொம்ப ஜபர்தஸ்தா ரஜினி ஸ்டைல "பச்சீஸ் நய்.... பச்ச்சாஸ்ஸ்ஸ்" சொல்ல அவன் ரொம்ப குஷியாக ராஜ மரியாதையோட கொண்டு போய் சேர்த்து, ஐம்பது ருபாயை புடிங்கிட்டு உட்டுட்டான் படுபாவி.

அடுத்த நாள் ஆபிஸ் போனா அசிங்க அசிங்கமா திட்றாங்க, ஏண்டா அவனே இருபத்தஞ்சு ருபா தான கேட்டான், நீயேண்டா ஐம்பது ரூபாய்க்கு பேரம் பேசுனேனு.

காசு போனது கூட மேட்டர் இல்லீங்க, ஆனா அந்த ஆட்டோ ட்ரைவர் என்ன பத்தி என்ன நினனச்சுருப்பானு யோசிக்கும் போதுதான் அழுகை அழுகையா வருது.

அப்ப மூடி வச்சதுதான் அந்த ஹிந்தி புக்கை இன்னைக்கு வரைக்கும் தொறக்கல.