படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி

Monday, July 21, 2008

ரொம்ம்ம்ப நல்லவங்க

ஒரு எம்பிக்கு முப்பது கோடி, சிபு சோரனுக்கு Cabinet Minister, ஒரே இரவில் லக்னோ விமான நிலையத்திற்கு பெயர் மாற்றம், எல்லாம் எதுக்கு?? நமக்காகவும் நமது நாட்டின் முன்னேற்றத்திற்காக மட்டும் தான். பாவம் கைகாசு போட்டு நமக்காக இவ்வளவு பாடு படறத பார்த்தா வடிவேலு சொல்லறதுதான் நியாபகம் வருது. ஆமா, இவங்க ரொம்ம்ம்ப நல்லவங்க.

இருக்க போறது இன்னும் ஆறு மாசம், இதுக்கே இவ்வளவு செலவு பண்ண தயாராக இருக்கிறார்கள் என்றால் இதுவரை எவ்வளவு சம்பாதிச்சிருப்பாங்க? அடுத்த ஆறு மாசதில எவ்வளவோ சம்பாதிப்பாங்க. இன்னொரு விசியம் தெரியுமா குதிரை பேரம் பண்ணகூடாதுனு சட்டம் ஏதும் இல்லையாம்.

ஹ்ம்ம் இருந்தா மட்டும்...

2 Comments:

  • At July 22, 2008 at 10:29 AM , Anonymous Anonymous said...

    பிளீசிங் பவுடரே!

    ஒரு கற்பனை. லஞ்சமே வாங்காத/கொடுக்காத (அதாவது ஒரு நேர்மையான அரசுக்கு, என்னது நேர்மைனா என்னவா?) அரசுக்கு இந்த மாதிரி கவிழக்கூடிய சூழ்நிலை வந்தால் எப்படி சமாளிப்பார்கள்? சமாளிப்பார்களா, இல்லை போடாங்க என்று போய்விடுவார்களா?

     

  • At July 22, 2008 at 1:05 PM , Blogger Bleachingpowder said...

    உங்கள் வருகைக்கு நன்றி மோகன்.

    உங்க கற்பனைக்கு ஒரு அளவேயில்லையா :-). நிங்க சொல்ற மாதிரி ஆளுங்களையெல்லாம் நாம ஆட்சிய புடிக்க வுட்டுறுவமா. நூறு ருபாயும், எவர் சில்வர் குடத்தையும் வாங்கிட்டு ஒட்டு போட்ற மக்கள் இருக்கும் வரை நிங்க சொல்ற அரசு உங்க கற்பனையில் மட்டுமே ஆட்சியமைக்கும்.

    சரி ஒரு பேச்சுக்கு அப்படி எதாவது உங்கள் கற்பனையில் நடந்தால் அவர்கள் கௌரவமாக ராஜினாமா செய்துவிட்டு போய்விடுவார்கள். ஜெயிலுக்கு போய் முப்பது கோடி கொடுத்து கொலைக்காரன் காலில் விழுந்து ஆதரவு பிச்சையெல்லாம் கேட்கமாட்டார்கள்

     

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home