தமிழக மீனவர்கள் இனிமேல் ஆணியே புடுங்க வேண்டாம் !
வேற என்ன தான் பண்றது, நம்மாளுங்க அவங்க எல்லையை தாண்டுனா சுடவும் கூடாது, கைதும் பண்ண கூடாது. பேசாம நம்ம கலைஞர் அய்யா கிட்ட சொல்லி தேர்தல் அறிக்கையில இத சேர்க்க சொல்லிடலாம். இனிமே மீனவர்களுக்கு தினமும் எவ்வளவு மீன்கள் வேணுமோ அத ஒரு ஃபோன் போட்டு சொன்னா போதும். மத்ததெல்லாம் கவர்மெண்ட் பாத்துக்கும். நம்ம இலவச வண்ணத்தொலைக்காட்சி பெட்டில் மானாட மயிலாட பாத்துட்டு மனிதவள மேம்பாட்டிற்க்கு நம்மாளான முயற்சியை எடுத்துக் கொண்டிருக்கலாம்.
சிங்கள ராணுவம் நமக்கு தேவையான மீன்களை பிடித்து தினமும் விமானத்தில் அனுப்பிவிடுவார்கள்.
தயவுசெய்து, மீனவர்களுக்கு கடலில் எல்லை தெரியாது, கண்ணு தெரியாது நீச்சலே தெரியாதுன்னு காமெடி பண்ணாதீங்க, இது சீரியஸ் பதிவு. மீனவர்களும் என்ன பண்ணுவாங்க, மீன்கள் எல்லாம் அவங்க இடத்துல தான் இருக்கு போய் எடுத்தா என்ன தப்புன்னு நியாயம் பேசுற பெரிய மனுசங்க அவங்க தெருவுல லாரி தண்ணி வரும் போது ஒரு குடம் தண்ணி அதிகமா பக்கத்து வூட்டுக்கு கொடுப்பாங்களான்னு கேளுங்க.
ஏன்யா சின்ன நாடு நம்மள ஏறி மிதிக்குது பாத்துட்டு சும்மா இருக்கனுமான்னு கேக்குறவங்க. அதே சின்ன நாடு, சின்ன கடற்படையை வைத்து தினமும் எல்லை தாண்டும் மீனவர்களை எப்படி தான் தடுப்பாங்க? மிகப்பெரிய நாட்டில் இருந்து வந்திருக்கிங்க உங்களுக்கு வேணுங்கறத பிடிச்சுட்டு போங்கன்னு சொல்லுவாங்களா? அத நாம வேனா அமரிக்காவுக்கு சொல்லுவோம், அவங்களுக்கெல்லாம் நல்லாவே ரோசம் இருக்கு.
அது எப்படி நூற்றுக்கனக்கான மீனவர்கள் எல்லை தாண்டி கரெக்டா இலங்கை ராணுவத்திடமே மாட்டுறாங்க? நம்ம எல்லையை தாண்டும் போது நம்ம கடற்படை என்ன பண்ணிட்டு இருந்தாங்க, சிறிய கடற்படையான இலங்கை நம்ம ஆளுங்களை ஒருத்தன் விடாம புடிக்கும் போது, உலகின் ரெண்டாவதோ மூனாவதோன்னு பீத்திக்குற பெரிய கடற்படை இதை தடுக்க முடியாதா? இல்லை தடுத்தது போக மிச்ச பேரு தான் உள்ள போய் மாட்டுறாங்களா? ஒன்னும் புரியலை.
நமக்கு அவ்வளவு அக்கறை இருந்தா புலிகளை ஆதரிக்க வேண்டாம், அட்லீஸ்ட் கையை கட்டிட்டு சும்மாவாச்சும் இருந்திருக்கனும். பெரிய பருப்பு மாதிரி ரேடார், ஆயுதங்களை எல்லாம் கொடுத்துட்டு இப்பொ குத்துது குடையுதுன்னா யார் தப்பு.
எல்லா நாட்டிலும் இது தான் சட்டம், எல்லை தாண்டினால் கைது செய்து சிறையில் அடைத்து, தங்கள் நாட்டின் சட்ட திட்டத்தின் படி தண்டனை அளிப்பார்கள். இல்லை தெரியாம தான் கேக்குறேன், இலங்கைக்கு பதில் அரேபியாவோ,அமெரிக்காவோ இல்லை இஸ்ரேலோ இருந்தால் நாமாளுங்க இப்படி பக்கத்து நாட்டுக்கு கபடி ஆடுவார்களா?
என்னவோ போங்க, ரொம்ப நாளைக்கு அப்புறம் தமிழ்மணத்திற்கு வந்திருக்குறேன். பாத்து பக்குவமா திட்டுங்க.
சாரு தேகம் நலமா?

Labels: இலங்கை | மீனவர்கள்