படிச்ச முட்டாள், பயந்த புத்திசாலி

Sunday, February 19, 2012

சாரு, நீங்க ஒரு காமெடி பீஸ்

என்ன மாயமோ மந்திரமோ தெரியலை, தினமும் காலை சாருவின் பதிவை அல்லது facebook statusயை‌ டாய்லட்டில் படித்தால் தான் எனக்கு ஆய் போகிறது. உலகில் இது போல் வேறு எந்த‌ எழுத்தாளர்களுக்கு இந்த மாதிரி பவர் உள்ளது என்று தெரியவில்லை. சரி அத விடுங்க‌, இரண்டு வாரம் முன்பு, என் புருசனும் கச்சேரிக்கு போறான்னு சொல்ற மாதிரி இவரும் ஜெய்பூர் இலக்கிய விழாவிற்கு போனார். இலக்கிய விழாவிற்கு இவர் ஏன் போனார் நீங்கள் யோசிக்கிறது புரியுது, விடுங்க அன்னா ஹாசரேவை விஜய் பார்க்க போன மாதிரின்னு வச்சுக்கோங்க.

இவர் போன நேரம் பார்த்து அங்க நிஜமான எழுத்தாளர்களோட கலந்துரையாடல் ஒன்று நடைபெற இருந்திருக்கிறது, இவர் போட்டிருக்கிற இரண்டாயிரம் ருபா ஜட்டியை பார்த்து கூப்பிடாங்களோ, இல்லை நாலாயிரம் ருபாய் ஃபேன்ஸி பனியனை பார்த்து கூப்பிடாங்களான்னு தெரியலை, ஒரு கை குறையுது வரிங்களான்னு கேட்ட ஓடனே, பலியாடு மாதிரி தலையாட்டிட்டு போயிட்டாரு. அங்க போய் உட்கார்ந்த உடனே பெரிய ஜபர்தஸ்த்தா சேர் கிட்டே இருந்த மினரல் வாட்டர் எடுத்து குடித்து தொண்டையை சரி செய்து ஒபாமா மாதிரி உக்காந்துகிட்டார்.

கலந்துரையாடல் தொடங்கியது.ம‌த்த அஞ்சு பேரும் ஆங்கிலத்தில் பொளந்து கட்ட வாட் ஷி இஸ் டெல்லிங் ன்னு பேந்த பேந்த முழிச்சிட்டு இருந்தாரு. கடைசில‌ எது ந‌ட‌க்க‌ கூடாதுன்னு நாம‌ நினைச்ச‌மோ அது ந‌ட‌ந்திடுச்சு, ஆமா மைக்கை இவ‌ர் கையில‌ கொடுத்துட்டாங்க‌, ப்ளாக்ல‌ சிங்க‌ம் மாதிரி உறுமுற‌ த‌ல‌, அங்க‌ புலிகுட்டி த‌ம்பி பூனைக்குட்டி மாதிரி என்ன‌ பேச‌றாருன்னு கடைசி வரைக்கும் யாருக்கும் புரியலை. ம‌னுசன் எவ்வ‌ள‌வு நேரம் தான் சும்மா உட்கார‌‌ முடியும், அவ‌ங்க‌ளும் இப்ப‌டி ஒருத்த‌ர் ந‌ம்ம‌ கூட‌ இருக்காருன்னே க‌ண்டுக்காம‌, அவ‌ங்க‌ பாட்டுக்கு பேசிட்டு இருதாங்க‌. ந‌ம்மாளு பார்த்தாரு கொஞ்ச‌ நேர‌த்துல‌ மெதுவா எந்திரிச்சு, அங்க‌ நிக‌ழ்ச்சியை தொகுத்து வ‌ழ‌ங்கிட்டு இருந்த‌ பெண்ணிட‌ம்(பேர‌ழ‌கி) மே ஐ கோ டு த‌ டாய்ல‌ட்னு என்ன‌வோ சொல்லிட்டு ந‌ழுவிட்டாரு. ஒரு க‌ல‌ந்துரையாட‌ல் ந‌டைபெற்று கொண்டிருக்கும் பொழுது இப்ப‌டி அசிங்க‌மா பாதியில‌ எழுந்திருச்சு போற‌து எவ்வ‌ள‌வு கேவலம். கேட்டா நோபல் க‌மிட்டில் இருந்து ஒரு ஃபோன், உட‌னே அடுத்த‌ ஃபைளைட் புடிச்சு ஸ்வீட‌ன் வ‌ர‌ சொல்லீட்டாங்க‌னு எதாச்சும் புருடா விடுவாரு. அட‌ ந‌ம‌க்கு த‌மிழே த‌ற்குறி, விக்கிலீக்ஸ் விம‌ல் என்று சாருவால் அன்புட‌ன் அழைக்க‌ப‌ட்டும் மாம‌ல்ல‌ன் தின‌மும் காலை அவ‌ருடையை ப‌திவில் இருந்து ஒரு மேற்க்கோள் காட்டி அவருடைய‌ த‌மிழை திருத்திக்கொண்டிருக்கிறார், இந்த‌ ல‌ட்ச‌ண‌த்துல‌ அங்க‌ போய் மேடை ஏறி த‌மிழ்நாட்டோட‌ ஒட்டு மொத்த‌ மானத்தையும் வாங்க‌னுமா?

அந்த‌ க‌ரும‌த்தை பார்க்க‌னும்னு நினைக்குற‌வ‌ங்க‌ இங்க‌ போய் பாருங்க‌
http://vimeo.com/moogaloop.swf?clip_id=35430352&server=vimeo.com&show_title=0&show_byline=0&show_portrait=0&color&fullscreen=1

ஒரு எழுத்தாளன் எப்போதும் உண்மையை பேசனும் நினைக்குற அளவிற்கு நான் ஒன்னும் கூமுட்டை இல்லை அதுக்காக காலையில எந்திருச்சு காப்பி குடிக்குறதுல கூட பொய் பேசுவேன்னு சொன்னா எப்படி? மாசத்துல எப்படியும் ரெண்டு பதிவுலையாவது, காலையில நாலு மணிக்கு எந்திருச்சு எழுதுறேன், ஏழு மணிக்கு காப்பி குடிச்சே ஆகனும், ஆனா போட்டு கொடுக்க ஆளே இல்லை நடந்தே போய் சரவணபவன்ல காப்பி குடிக்குறேன். இது தான் ஒரு எழுத்தாளனுக்கு தமிழ்நாட்டில் உள்ள மரியாதைன்னு பொல‌ம்பிட்டு இருப்பாரு, ரெண்டு வாரம் முன்னாடி கூட அதை பத்தி எழுதியிருந்தார்..பார்க்க.. http://charuonline.com/blog/?p=2883//மயிலாப்பூரின் அந்தப் பிரபலமான ஓட்டலுக்கு பார்க்கிலிருந்து நடந்தே சென்ற போது மணி எட்டேகால். நம்ப மாட்டீர்கள். ஒரே ஒரு காப்பிக்காக முக்கால் மணி நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று. அப்படியும் காப்பி ஆறிப் போயிருந்தது.//இன்னைக்கு என்னடானா திடீர்னு நான் காலையில காபி குடிக்கிறதை விட்டு மூனு வருசமாச்சு இப்ப டெய்லி மாட்டு மூத்திரம் மட்டும் தான் குடிக்குறேன்னு அடிச்சாரு பாருங்க பல்டி. http://charuonline.com/blog/?p=2974//காலையில் எழுந்ததும் ஃபில்டர் காப்பி குடித்தே ஆக வேண்டும். ஆனால் மூன்று ஆண்டுகளாக காலை காப்பியை விட்டு விட்டேன்//ஒரு வேளை இவர் பாலோ பண்றது ஃபிரஞ்ச் அல்லது லத்தின் காலை நேரமோ? என்ன எழவோ, இதை ப‌டிச்சிட்டு அவ‌ரோடு குஞ்சுங்க‌ எத்த‌னை பேர் கால‌ங்காத்தால‌ சொம்பை எடுத்துட்டு மாட்டுக்கு பின்னாடி போய் நிக்க‌ போறாங்க‌ளோ, அவ‌ங்க‌ளை அந்த‌ நித்தி தான் காப்பாத்த‌னும்.

இதை எல்லாம் புதுசா படிக்குறவங்க‌, இவர் தான் பெரிய காமெடியன்னு நினைக்காதீங்க, இவருக்கு facebookல் ஒரு group இருக்கு அட..அட..அட அங்க போய் பாருங்க, ஒவ்வொரு போஸ்டும் நெனைச்சு நெனைச்சு சிரிக்குற மாதிரி இருக்கும். இன்றைய சாம்பிள்:
பிச்சைகாரன்: எல்லைகள் கடந்து சிறகடிக்கும் சாருவை கவுரவிக்க அவருக்கு பாலாபிஷேகம் செய்ய நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறேன்இதுக்கும் நம்ம இதய தெய்வம் சாருவின் பதில்: பாலாபிஷேகம் செய்வது போன்ற காரியங்கள் நம் எதிரிகள் நம்மைப் பார்த்து ஏளனம் செய்ய ஏதுவாகி விடும். அதாவது, பாலாபிஷேகம் செய்யறதுக்கும் இவருக்கு ok தானாம் ஆனா என்ன கழுத மத்த பயபுள்ளைங்க எதாச்சாசும் சொலீட்டா என்ன பண்றதுன்னு ஒரு பீலீங்க் அவ்வளவு தான். மேல மேல இன்னும் உங்க கிட்ட இருந்து நாங்க நிறைய எதிர்பார்க்கிறோம், பாலாபிஷேகதிற்கு பிறகு என்ன ? லிங்க தரிசனமா?? இது தான்யா பின்நவினதுவம் ச்சே முன்நவினதுவம்.

எஸ்.ரா ரஜினியை அழைத்து கூட்டம் சேர்த்துட்டார்ன்னு இவரும், இவரோட போர்படை தளபதிகள் ஆறு பேரும் சேர்ந்து எக்ஸைல் விமர்சண கூட்டம்ன்னு ஒன்னை போட்டாங்க, சரியா எண்ணிப் பார்த்தா இருபத்தி மூனு பேர், சாருவையும் சேர்த்து வந்திருப்பார்கள், இதில பத்து பேர் வெளியில வெயில் ஜாஸ்தியா இருக்குன்னு உள்ள வந்தவங்க. எப்படியோ கையில கால்ல விழுந்து ஞானியையும் கூட்டிட்டு வந்துட்டாங்க, அவர் எதோ சாருவை ஓபாமா ரேஞ்சுக்கு புகழ்ந்து தள்ளப் போகிறார்ன்னு சப்பு கொட்டிட்டு வந்தவங்களுக்கு சாணியை கரைச்சு மூஞ்சியில ஊத்துன மாதிரி, அந்த புக்கையும் சாருவையும் கிழி கிழின்னு கிழிச்சுட்டாரு. இனிமேலாச்சும் விடல பசங்களுக்கு பிடிக்குற மாதிரி எழுதறத விட்டு உருப்படியா எதாச்சும் எழுத பாருன்னு சொல்லிட்டு போயிட்டாரு. சும்மா விடுவாரா, இன்னைக்கு வந்து அவரோட ப்ளாக்குல‌ பக்கம் பக்கமா பேண்டு வச்சுட்டாரு.

கொஞ்ச‌ நாளா, என்ன‌மோ ப‌ண்ணி தொலைய‌ட்டும் யாரும் க‌ண்டுக்காம‌ விட்ட‌ இவ‌ரை இப்போ எல்லாரும் திரும்ப‌வும் ர‌வுண்டு க‌ட்ட‌ ஆர‌ம்பிச்சிடாங்க‌. மாம‌ல்ல‌ன்( விக்கிலீக்ஸ் விம‌ல்) தின‌மும் இவ‌ர் ட‌வுச‌ரை உருவிக்கொண்டு இருக்கிறார். அதுவும் சாருவோட‌ லிங்கையை கொடுத்து அவ‌ர் எழுதியிருக்கும் கோமாளித‌ன‌த்தை ப‌கிர‌ங்க‌ ப‌டுத்தி வ‌ருகிறார். எப்ப‌டி நித்தி மேட்ட‌ர் வெளியான‌ உட‌னே ஒரு வைர‌ஸ் வ‌ந்து க‌ரெட்டா சாரு நித்தியை ப‌த்தி எழுதின கட்டுரைகளை ம‌ட்டும் டெலிட் ப‌ண்ணிட்டு போச்சோ அதே போல‌ ஒரு ‌வைர‌ஸ் கூடி சீக்கிர‌ம் திரும்பி வ‌ரும்னு நினைக்குறேன்.

இவ்வ‌ள‌வு நாளா அந்த பொண்ணு chat விவ‌கார‌த்திற்கும் என‌க்கும் எந்த‌ ச‌ம்ம‌ந்த‌மும் இல்லைன்னு(த‌ப்பில்லைனா போலிஸ் கிட்ட‌ போக‌ வேண்டிய‌து தானே) ம‌ழுப்பிட்டு இருந்தவர் இன்று அவ‌ருடைய‌ த‌ள‌த்தில் என்ன‌ கூறியிருக்கிறார் பாருங்க‌ள். http://charuonline.com/blog/?p=2970 //துக்ளக்கில் ஒருவர் எழுதவேண்டுமென்றால் அவர் கறைபடியாதவராக இருக்க வேண்டும். என் எழுத்தை விரும்பாதவர்கள், திட்டமிட்டு, வேண்டுமென்றே என்னை ஒரு Scandal லில் மாட்ட வைத்தார்கள். அந்தக் கறை என்மீது பதிந்துவிட்டதால் என் எழுத்தும் நிறுத்தப்பட்டது.// இதுவ‌ரை எனக்கும் அந்த ற்கும் எந்த‌ ச‌ம்ம‌ந்த‌மும் இல்லைன்னு சொன்ன‌வ‌ர் இப்போ அவரை திட்ட‌மிட்டு மாட்ட‌ வைத்துவிட்டார்க‌ளாம். so அந்த உரையாடல் நடந்தது உண்மைன்னு அவரே ஒத்துக்கிட்டார்.கொஞ்ச‌ நாள் ஆயிடுச்சே எல்லாரும் ம‌ற‌ந்திருப்பாங்க‌ன்னு நினைச்சு இப்ப அடுத்த‌ பிட்டை போட‌ ஆர‌ம்பிச்சுட்டாரு என்னன்னா, இவ‌ரு மேட்ட‌ர் ப‌ண்ற‌ விசிய‌த்துல‌ யாருமே இவ‌ரை அடிச்சிக்க‌ முடியாதாம், இருப‌த்தி அஞ்சு வ‌ய‌து இளைஞ‌ன் கூட‌ இவ‌ர் கூட‌ போட்டி போட‌ முடியாதாம், கேட்டுக்கோங்க‌ப்பா இனி திரும்ப‌வும் ஆர‌ம்பிச்சிடுவாரு, ப‌தினேலு வ‌ய‌து பேர‌ழ‌கி என்னை திரும‌ண‌ம் செய்ய‌ வ‌ற்புறுத்திகிறார், பெங்க‌ளுரில் ஒரு மாததிற்கு மூன்று ல‌ட்ச‌ம் ச‌ம்பாதிக்கும் ஒரு இள‌ம்பெண் என் மூல‌மாக‌ ஒரு வாரிசு வேணும்னு உயிரெடுக்குறாள். நேற்று காபி ஷாப்பில் மூன்று பெண்கள் என்னை ஒரு வெறியோடு பார்த்தார்கள்ன்னு உலகத் தொலைகாட்சியில் முதல் முறையாகன்னு ஒரு வீடியோ எவிட‌ன்ஸ் மாட்டாமலா போயிடும், அதுவும் அநேக‌மாக‌ அவ‌ரோட‌ ப‌டைத்த‌ள‌ப‌திக‌ள் கிட்ட‌ இருந்தே தான் வெளிவ‌ரும்ன்னு ப‌ட்சி சொல்லுது. ந‌ம்பிக்கையுட‌ன் காத்திருப்போம்.சாரு அடிக்க‌டி யானையை புண‌ந்த‌ கொசு கதை சொல்லுவாரு. ர‌ஜினி மேட்ட‌ர் கூட‌ அப்ப‌டி தான், இவ‌ர் பாட்டுக்கு ர‌ஜினிட‌ம் கேள்வி கேட்குறேன், ச‌வால் விடுகிறேன்னு முழ‌ங்கிட்டு இருக்கிறாரு. பாவம் ர‌ஜினி,யாரு இந்த‌ ம‌னுச‌ன், ந‌ம்ம‌ கூட‌ எந்த‌ ப‌ட‌த்துலையாவ‌து ந‌டிச்சிருக்காரான்னு த‌னிமையில் உட்கார்ந்து யோசித்து கொண்டிருக்கிறாராம்.

Labels:

Monday, September 14, 2009

திருட்டு பயலே சுசி கனேசனுக்கு இந்த ஆப்பு பத்தாது

தொற எடுத்த படத்தை ஊர் உலகமே கிழிச்சு தொங்கவுட்ட போது பல்லை கடிச்சிட்டு இருந்தவரு, போன வாரம் ஞானி குமுதத்துல படம் ஊத்திக்கிச்சுன்னு எழுதின உடனே பொங்கி எழுந்து இந்த வார குமுதத்துல வாந்தி எடுத்து வச்சிருக்காரு. சக பத்திரிக்கையாளன் மேலே வருவதை பார்த்து வந்த பொறாமையில் எழுதியதாம். சமுக அக்கறையுடன், யாருக்கும் அஞ்சாமல் தன் மனதிற்க்கு நியாயமாக பட்டதை எழுதும் ஒரு மூத்த எழுத்தாளரை விமர்சிக்க குட்டை பாவாடைகளை காட்டி படம் பண்ணும் இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

நான் கூட கந்தசாமி விமர்சணத்தை படிச்சுட்டு கொஞ்சம் ஓவராதான் போறாங்க நம்மாளுங்க நினைச்சேன், இப்ப இவங்க பண்ற கூத்தை பார்தால் இன்னும் பத்தாதோன்னு தோனுது. நடு நிலை பத்திரிக்கையாளர்கள் இந்த படத்தை பார்த்து அதில் ஒருவர் படம் தோல்வின்னு சொன்னா கூட இவர் படமெடுக்கிறதை நிறுத்திடுவாரம் (யாராச்சும் அதை சீக்கிரமா பண்ணி தொலைங்கப்பா).

அட நீங்க எடுத்த கருமத்தை பத்தி என்னமோ எழுதுங்க, என்னமோ கிறுக்குங்க அதுக்கு ஏன்யா மத்த நல்ல படங்களை குறை சொல்றீங்க. சுப்பிரமணியபுரம், பசங்க, நாடோடிகள் எல்லா நல்ல படமில்லையாம், ஞானி தான் இந்த படங்களை மிகை படுத்தி எழுதிட்டாராம். சுப்பிரமணியபுரம், ரவுடிகளை பற்றிய படமாம். பசங்க சிறுவர்களுக்குன்னு சொல்லி பெரியவங்களுக்கு அறிவுரை சொன்ன படமாம். அப்புறம் நாடோடிகள், ஓடி போறவங்களை சேர்த்து வைக்குற படமாம். காறி துப்புற மாதிரி ஒரு படத்தை எடுத்துட்டு, எதார்த்தமா குறைந்த செலவில் வந்த தரமான படங்களை பற்ற பேச வெட்கமாயில்லை?

கந்தசாமி ஓடும் தியேட்டரில் மக்களோடு மக்களாக உட்கார்ந்து படம் பாருங்க அப்ப தெரியும் மக்கள் கிட்ட உங்க மரியாதை என்னன்னு. அவனவன் கிழிக்குற கிழியுல படத்தில் சம்மந்த பட்ட எல்லாருடைய ஃபேமலியும் அங்கே டோட்டல் டேமேஜ் ஆயிட்டிருக்கு. மெக்சிக்கோவுல பிச்சுமணியை தெரியாதவங்க யாருமே கிடையாதாமாம்? தியேட்டர்ல எவனும் வாயில சிரிக்க மாட்டேங்குறான்.

குழந்தைகளுக்கான படமாம் கந்தசாமி. அடப்பாவிங்களா, குழந்தைகளுக்காக எடுக்க பட்ட காட்சின்னு இந்த படத்தில் ஏதாவது ஒன்றையாவது சொல்லுங்கள் பார்ப்போம். இந்த குப்பையை குழந்தைகளுடன் காண நாங்கள் தயாராயில்லை. வேண்டுமென்றால் படமெடுத்த நீங்களும் அதில் நடித்தவர்களும் உங்கள் குழந்தைகளுடன் பாருங்க, படம் பார்க்கும் போது உங்கள் குழந்தைகள் முமைத்கான் நாக்கில் மாட்டியிருப்பது இருப்பது என்ன? அதை ஏன் அடிக்கடி காமிக்கிறீங்கன்னு கேட்டா என்ன பதில் சொல்லனும்னு யோசிச்சுட்டு படத்தை போடுங்க.

ஜெண்டில்மேன், அந்நியன்,ரமணா படத்திற்கும் கந்தசாமிக்கும் எந்த சம்மந்தமும் இல்லையாம், சிவாஜி படம் கூட ஒரே நேரத்தில் ஷங்கரும் இவரும் யோசித்த கருத்தாம், சொல்றாரு திருட்டு பயலே சுசி.

கந்தசாமி தான் ரெண்டு வாரத்துல ஐம்பத்தைந்து கோடி சம்பாதிருச்சுல, பார்ப்போம் இனி எந்த தயாரிப்பாளர் இந்த மாதிரி பணத்தை அள்ளி கொடுத்து உங்களை படம் எடுக்க சொல்றாருன்னு. ஏன் தானுவையே போய் கேளுங்களேன், இன்னோரு ஐம்பது கோடி கொடுங்க இதே மாதிரி குழந்தைகளுக்காக இன்னோரு படம் எடுத்து தரேன்னு, சொல்ல முடியாது அவர் கொடுத்தாலும் கொடுப்பாரு.

Labels:

Friday, May 29, 2009

எதிர்வினைக்கு நீங்களே பதில் சொல்லீடுங்க சாரு

நீங்க எழுதின வன்முறையின் தோல்வி கட்டுரைக்கு வந்த எதிர்வினைகளுக்கு நீங்களே நேரா பதில் சொல்லீடுங்க சாரு. அத விட்டுட்டு என் சங்கத்து ஆள அடிச்சு பாருன்னு பச்ச புள்ளையை சபைக்கு அனுப்பாதீங்க. அது பாட்டுக்கு வந்து செம கடுப்புல இருக்கும் எங்களிடம் , "எங்க அண்ணன் பழம் வாங்கிட்டு வர சொன்னாருன்னு" அப்பாவியா கேட்டுட்டு வாங்கி கட்டீட்டு இருக்கு.

நீங்க நிஜமாவே போடி மஸ்தான் தான் இல்லைன்னா, பிராபகரன் எங்க மாமா, அவரு மாவீரரு,ஹீரோ,ராஜேந்திரச்சோழனை மிஞ்சியவருன்னு சொல்லி சின்ன வயசுல இருந்தே கையில தீபாவளி துப்பாக்கியை வச்சுகிட்டு பிராபகரண் - ஜெயவர்தனே விளையாட்டு விளையாடினவங்களை கூட உங்க வழிக்கு வர வச்சிட்டீங்களே. ரெண்டு வாரம் முன்பு கூட இங்க யாருக்கும் தெரியலை வன்முறையினால் தீர்வு கிடைக்காதுன்னு. இப்படி தீடீர்னு சமிபகால வரலாற்றை புரட்டி பார்க்கும் போது தான் தெரிஞ்சுதாம்.

அப்புறம் உங்க பேர போட்டு எழுதினா முன்னூறு ஹிட்ஸ் ஜாஸ்தி கிடைக்குமாம், அத வச்சுட்டு நாக்கு கூட வழிக்க முடியாது. இந்த கருமத்துக்காக தான் அந்த எழவ நான் என் தளத்திலே போடல. அஞ்சு லட்சம் ஹிட்ஸ், பத்து லட்சம் ஹிட்ஸ் வாங்குனவங்க எல்லாம் என்ன சுஜாதா ஆயிட்டாங்களா இல்ல போயஸ் கார்டன்ல நாலு வீடு வாங்கிட்டாங்களா.

மொக்க பதிவர்கள் வழக்கம் போல உங்க வேலைய பாருங்க, நான் இப்படி தான் தனியா கத்திட்டு இருப்பேன். இங்க ஒருத்தன் ஜெய்ச்சுட்டே இருக்கிற வரைக்கும் தான் கூட இருப்பாங்க தோத்தா போயிட்டே இருப்பாங்க.

Labels:

Thursday, May 14, 2009

பதிவர்களுக்கு பதிவர்களே ஆப்பு !!

நாடறிந்த நகைச்சுவை எழுத்தாளர் சமிபத்தில் நான் கடவுள் படத்தை பற்றி சிலாகித்து எழுதி அதை மலையாளம், லத்தின்,ஃபிரன்ச், ரஷ்ய மொழிகளில் மொழிபெயர்த்து அதை அந்தந்த நாடுகளில் கொண்டாடியது அறிந்ததே. இப்பொழுது அவருடைய நண்பர் ஒருவர் அந்த படத்தை பார்த்து ஒரு கருத்து சொல்ல, இப்பொழுது அந்த படத்தை போய் நான் எப்படி ரசித்தேன்னு ஃபீல் பண்ணீட்டு இருக்காராம்.

இதற்கு முன் இவர் எழுதிய கொரிய படத்தை பற்றி இவர் எழுதிய விமர்சணத்தில் இருந்த தவறுகளை சுட்டி காட்டிய போது அது எல்லாம் எழுத்துப் பிழை அதை திருத்துவது ப்ரூஃப் ரீடரின் வேலைன்னு சொன்னவர், இப்பொழுது நான் கடவுள் படத்தையே நான் சிலாகித்து எழுதி இருக்க கூடாதுனு சொல்லுகிறார். பேசாமல் இனி இவர் எழுதும் கதை,கட்டுரை, விமர்சணங்களுக்கு கீழே, All my reviews and opinions are subject to change. Conditions Applyன்னு போட்டுடலாம்.

வாங்குன காசுக்கு இன்னும் திமுகாவிற்காக கூவும் பதிவர்களே. உங்கள் தலைவருக்கு நீங்க தான் ஓய்வு கொடுக்க மாட்டேங்குறீங்க, போனா போகட்டும் இனி நாங்க கொடுக்குறோம். சனிக்கிழமைக்கு பிறகு கொஞ்சமும், மூனு நாலு மாசத்திற்கு பிறகு நிறையவும் ஓய்வு கிடைக்கும். அப்புறம் என்ன பாசக் கிளிகள் பார்ட்- 2 வரும் பார்த்து மகிழுங்கள்.

நம்முடைய பதிவர்கள் ஜனரஞ்சக பத்திரிக்கைகளில் எழுத ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியே. கதைகள் பத்திரிக்கையில் வந்த ஓரிரு நாளில் சிலர் அக்கதையை டைப் செய்தும், ஸ்கேன் செய்தும் போடுவது கண்டிக்கதக்கது. பத்திரிக்கை தரப்பில் இருந்து அவர்கள் இதற்காக வழக்கு கூட தொடரலாம். இச்செயல் இனியும் நீடித்தால் பதிவர்கள் எழுவதை பத்திரிக்கைகள் வெளியிட நிறைவே யோசிப்பார்கள். ஏன் நீங்கள் எழுதிய புத்தகங்களையும் அப்படியே ஸ்கேன் செய்து போட வேண்டியது தானே, அதுக்கு மட்டும் ஆன்லைனில் வாங்க இங்கே அமுக்கவும் அங்கே அமுக்கவும்னு விளம்பரம் எதுக்கு?

Labels:

Wednesday, March 25, 2009

நாகரிக கோமாளி சாரு

சாரு தன்னுடைய வலைதளத்தில் Kim ki duk இயக்கிய The Isle படத்தை பற்றி சிலாகித்து எழுதி, கமலஹாசன் இது போன்ற படங்களை எடுக்க முன்வராமல் தசவதாரம் போன்ற குப்பை படங்களையே எடுத்து வருகிறார் என்று சாடியுள்ளார். கமல் குப்பை படங்களை எடுக்கிறாரா இல்லையா என்பதை பற்றி பின்னர் பார்ப்போம். இப்பொழுது அவர் நிஜமாகவே இந்த படத்தை பார்த்தாரா இல்லை IMDB யில் plot, summaryயை படித்து விட்டு இங்கே வந்து படம் பார்த்ததாக பீலா வுட்டாரா என்பதை பார்ப்போம்.

சாருவின் முதல் கண்டுபிடிப்பு, நாயகிக்கு பேச வராதாம். //ஹீ ஜின்னுக்குப் பேச வராது. சைகையாலும் அவ்வளவாகப் பேசுவதில்லை. (மொழி, ஜோதிகா எல்லாவற்றையும் சுத்தமாக மறந்து விடுங்கள்).//

இந்த கொடுமையை என்னவென்று சொல்ல, ஹ்யூன் ஷிக் அவளுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள முயற்சிக்கும் பொழுது, நாயகி அதை தவிர்த்து கரைக்கு வந்து விபச்சாரியை ஃபோனில் அழைத்து வர சொல்லுவாள். அவள் ஃபோனில் பேசுவதையும் தெளிவாக காட்டுவார்கள். இந்த காட்சியெல்லாம் உலக படங்களை அலசும் சாருவிற்கு கண்களுக்கு மட்டும் தெரியவில்லை போலிருக்கு. இவருடைய பிதாமகன் விமர்சணத்தையும் பார்க்கனும், யாருக்கு தெரியும், விக்ரமையும் ஊமைனு சொன்னாலும் சொல்லியிருப்பார். இந்த அழகுல நாங்க மொழி ஜோதிகாவை சுத்தமா மறந்துடனுமாம்.

அப்புறம் ஹ்யூன் ஹ்யூன் தற்கொலை முயற்சி, //படகு வீட்டில் இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சி செய்கிறான்.// இரண்டாவது முறை தற்கொலை முயற்சி, அவன் விருப்பப் பட்டு செய்வது அல்ல. போலிஸ் ஒவ்வொரு படகு இல்லத்திலும் சோதணை நடத்துவதை பார்த்து அடுத்து தன்னிடம் வருகிறார்கள் என்பதை தெரிந்தவுடன், இவர்களிடம் அகப்பட்டு அல்லல் படுவதை விட தற்கொலை செய்து விடலாம் என முடிவு செய்து, உடனடியாக தற்கொலை செய்ய வேறு எந்த உபகர்ணமும் நேரமும் இல்லாதால் வேறு வழியின்றி, மீன் தூண்டிலை விழுங்கி தற்கொலை செய்ய முயற்சிக்கிறான். கதை இவ்வாறு இருக்க பொத்தாம் பொதுவாக படகு வீட்டில் இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சிக்கிறான் என்று உலக மகா விமர்சகர் எழுதலாமா?

அடுத்த அபத்தம், ஹீ ஜின்னை எதோ சீரியல் கில்லர் போல் இவர் கூறியிருப்பது. //பொறாமை கொள்ளும் ஹீ ஜின், அந்த வேசியை ஏரியில் மூழ்கடித்துக் கொன்று விட்டு ஹ்யூன் ஷிக்குடன் நெருங்கிப் பழகுகிறாள்// ஜீ ஜின் அந்த வேசியை மிரட்டுவதற்காக ஒரு படகு வீட்டில் வாயை பொத்தி, கை கால்களை கட்டி போட்டிருப்பாள், அந்த வேசி, ஜீ ஜின் இல்லாத நேரத்தில் தப்பிக்க முயற்சித்து தண்ணீரில் விழுந்து இறந்து விடுவாள். அடுத்த நாள் காலை அவளை விடுவிப்பதற்காக அவள் அந்த படகு வீட்டிற்கு போகயில் தான் அவளுடைய உடல் தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பதை பார்ப்பாள். அதற்கு பின் அவளுடைய உடலை அவள் ஸ்கூட்டரோடு சேர்த்து கட்டி தண்ணீரில் முழ்கடித்து விடுவாள்.

கதை இப்படி இருக்க, அவர் பாட்டுக்கு அளந்து விட்டிருக்கிறார், எவன் இந்த படத்தையெல்லாம் பார்த்துட்டு கேள்வி கேட்க போறான்னு. இந்த லட்சனத்துல கமலுக்கு அட்வைஸ் வேற. கமல் இந்த மாதிரி படங்களின் ஒவ்வொரு Frameயையும் விரல் இடுக்கில் வைத்திருப்பார். சாருவின் இந்த பதிவையெல்லாம் அவர் படித்தால் வாயில சிரிக்க மாட்டார்.

இது போக இவர் படம் எடுத்தால் இது மாதிரி ஒரு படத்தை தான் எடுப்பாராம், ஏன் நீங்க எழுதின இந்த கதையையே எடுக்கலாமே. அதான் படத்தின் முக்கியமான plot எல்லாத்தையும் நீங்களே மாத்தீடீங்களே அப்புறம் என்ன.

அதே போல் ஹீ ஜின்னிற்கு ஏற்கனவே கணவனோ பாய் ஃபிரண்டோ இருந்ததையும் உணர்த்த இயக்குனர் சில காட்சிகள் வைத்திருப்பார். இதையெல்லாம் குறிப்பிட அவருக்கு தோனவில்லை. அவருக்கு படத்தில் வரும் செக்ஸ், வன்முறை,மிருக வதைகளை பற்றி மட்டும் எழுதி, என்னை வாசிப்பவனுக்கு எது பிடிக்குமோ அதை மட்டும் எழுதினால் போதும்னு நினைச்சுட்டார் போல.

இளையராஜாவை பற்றி இவரது விமர்சணத்தை படித்தாலே, இவருக்கு சினிமாவும், இசையும் எவ்வளவு தெரியும் என்பது விளங்கும்.

கொரியா படம் இரானிய திரைப்படத்தை பற்றி விமர்சித்தால் தன்னை எல்லாரும் மேதாவி என நினைப்பார்கள் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். நீங்கள் எழுதுவது மாலை முரசிலோ இல்லை தினத்தந்தியிலோ இல்லை. Kim ki duk கை தமிழ் திரையுலகோடு ஒப்பிடும் உங்களை, நாங்கள் English/Latin/French/பாரதி போன்ற எழுத்தார்களை உங்களுடன் ஒப்பிட்டால்(அட ஒரு பேச்சுக்கு தாங்க) அது சரியாகுமா? உங்களுக்கு எது வருமோ அல்லது எது முடியுமோ அதை தான் நீங்கள் எழுத முடியும், அதே போல் தான் தமிழ் திரையுலகமும்.

சரி இப்போ இது போன்ற படங்களை கமல் போன்றவர்கள் தமிழ் நாட்டில் எடுக்க முன்வராதது ஏன் பார்ப்போம். சாருவே கூறியிருப்பது போல, இந்த ஜென்மத்தில் இது போன்ற படங்கள் தமிழில் வர வாய்ப்பே இல்லை. இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்த்தால் எத்தனை காட்சிகள் சென்சாரின் கத்திரியில் இருந்து தேறும். அப்படியே தப்பி தவறி படம் வெளிவந்தாலும் அவ்வளவு தான். ஏஸி காரில் பவனி வரும் மாதர் சங்கம் தான் முதலில் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பார்கள். நாயகியை விபச்சாரம் செய்யவதாகவும், பெண்களை கூட்டி கொடுப்பதாகவும் காட்டி நம் நாட்டு பெண்களை இயக்குனர் இழிவு படுத்திவிட்டார் என்று காட்டு கூச்சல் போடுவார்கள். இந்தியாவில் தான் விபச்சாரம், கள்ள தொடர்பு எல்லாம் கிடையவே கிடையாதே.

அடுத்தது Blue Cross எனும் காமெடி பீஸுகள் வீட்டில் சிக்கன் 65, மட்டன் சுக்காவை வெட்டிட்டு வந்து போராட்டத்தை தொடங்குவார்கள். இம்சை அரசனில் வடிவேலு குதிரையில் ஏறி வலம் வந்ததையே எதிர்க்கும் இவர்கள் இதையா விட்டு வைப்பார்கள்.

பிறகு வன்முறை காட்சிகள். காடு வெட்டி குரு தலைமையில், தமிழ் படங்களில் வன்முறை தலை விரித்தாடுகிறது. வன்முறை செய்ய எங்களுக்கு மட்டுமே உரிமையுள்ளது, மற்றவர்கள் அதை படத்திலோ, நிஜத்திலோ செய்ய கூடாதுன்னு ரோட்டோரங்களில் இருக்கும் மரங்களை வெட்டி தமிழகத்தை ஸ்தம்பிக்க வைப்பார்கள்.

இது போக வேலையத்தவர்கள் எல்லாம் ஒன்னா சேர்ந்து இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு போடுவார்கள்.

இந்த லட்சனத்தில் இது போன்ற உலக படத்தை எப்படி எடுத்து வெளியிடுவது. படத்தை மக்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பது வேறு பிரச்சனை, முதலில் அது தமிழ்நாட்டில் வெளிவரனும்ல.

தமிழ் திரையுலகம் இப்பொழுது Transition period இல் இருக்கிறது. The Isle படத்தின் பட்ஜெட் வில்லு படத்தின் பட்ஜெட்டில் கால்வாசி கூட இருக்காது. கமலஹாசனும் இது போன்ற பல படங்களை படங்களை பார்த்திருப்பார், ஆனால் இது போன்ற படங்களை எடுக்கும் சூழல் இங்கே கிடையாது. நினைத்தை எல்லாம் இங்கே படமாக்க முடியாது. தமிழ் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு எடுத்து போவதற்கு முன்னால் தமிழ் ரசிகர்களை அதற்கு தயார் படுத்த வேண்டியிருக்கிறது. அதை தான் கமலஹாசன், பாலா, பாலு மகேந்திரன் போன்றவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களின் ரசனை மாறாமல் இருக்கும் வரை இங்கே இது போன்ற படங்கள் மட்டுமே வெளிவரும். அதற்காக இங்கெ உள்ளவர்களுக்கு உலக தரத்தில் படம் எடுக்க தெரியாதவர்கள் என்று அர்த்தமல்ல.

சந்தியா ராகம் படத்தின் நெகட்டீவ் அழிந்து விட்டது என்று கூறி அழுத பாலு மகேந்திரனின் நிலை தான் இன்றைய யதார்த்தம்.

IMDB தரத்தில் முதலிடத்தில் உள்ள Shawashank Redemption கூட தோல்வி படம் தான். அங்கே தயராகும் அர்னால்ட், சில்வெஸ்டர் படங்களுக்கும் இங்க தயாரிக்க படும் ரஜினி படங்களுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. உலக தரத்தில் படங்கள் எடுக்கும் நாட்டில் தான் அர்னால்ட் கலிஃபோர்னியா மாகானத்தில் கவர்னராக தேர்ந்தெடுக்க பட்டிருக்கிறார்.

உலக படங்களை ஒன்றுவிடாமல் பார்க்கும் சாருவிற்கே கதை புரியவில்லை என்றால் சாமானிய மக்களுக்கு எப்படி புரியும். தமிழ் படமோ, கொரியா படமோ மொதல்ல படத்தை பார்த்துட்டு விமர்சணம் எழுதுங்கப்பா.

Please excuse for any grammer mistakes in this post.

Labels:

Tuesday, February 24, 2009

நான் கடவுள் - பதிவர்களின் விமர்சணத்திற்கு ஜெயமோகன் பதில்

கவனமில்லாமல் எடுத்த எந்தக் காட்சியும் படத்தில் இல்லை என்பதே நான் உணர்ந்தது. அவர் அளித்த கவனமும் உழைப்பும் பத்து சதவீதம் கூட பார்வையாளர்களால் ,அதிலும் தேர்ந்த பார்வையாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களால், கவனிக்கப்படவில்லை.

மேலும் படிக்க...

http://jeyamohan.in/?p=1869

http://jeyamohan.in/?p=1873

Labels:

Thursday, February 19, 2009

மீண்டும் தரணியுடன் இனைகிறார் டாக்டர்.விஜய்

எது நடக்க கூடாதுன்னு நம்ம நினைச்சு பயந்திட்டு இருந்தமோ அது நடக்க போகுது! விஜயின் ஐம்பதாவது படத்தை தரணி இயக்கவிருக்கிறார்.

கதை விவாதம் பாண்டிச்சேரிக்கு அருகில் இருக்கும் ஒரு பீச் ரிசார்டில் நடந்து வருகிறது. அதில் பங்கு பெற்ற ஒரு உதவி இயக்குனரும் பதிவருமான (அதான் இப்ப எந்த பதிவர கேட்டாலும், நான் சினிமால இருக்கேன்னு சொல்றது ஃபேஷனாயிடுச்சே) எனது நண்பர் படத்தின் கடைசி இருபது நிமிட திரைக்கதையை அனுப்பியுள்ளார்.

பிரகாஷ்ராஜ், விஜயின் அம்மாவை கொலை செய்து, தங்கச்சியை கற்பழித்து. வீட்டையும் கொளுத்தி விட்டு நயண்தாராவை அமெரிக்காவிற்கு கடத்தி போய் விடுகிறார். விஜய் உடனே காதலியை காப்பாற்ற அமெரிக்கா போக வேண்டிய கட்டாயம், ஆனால் தளபதியிடம் விசா,பாஸ்போர்ட், கையில காசு, எதுவுமே இல்லை. இப்ப இளைய தளபதி என்ன பண்ண போறாரோனு ரசிகர்கள் எல்லா டென்ஷனா இருக்க. மீனாம்பாக்கத்திற்கு மீன் பாடி வண்டியில வேகமா போயிட்டிருந்தவர் அப்படியே வண்டிய ஒரு யூ டர்ன் அடிச்சி, மவுண்ட் ரோடில் இருக்கும் எல்.ஐ.சி பில்டிங்கிற்கு வந்து ரெண்டே ஜம்பில் மொட்டை மாடிக்கு போயிடறாரு...அப்போ பார்த்து கரெட்டா சென்னை to அமெரிக்கா
போர்டை தொங்க விட்டு ஒரு ஏர் டெக்கான் ஃபளைட் அந்த பக்கமா போறத விஜய் பார்த்துட்டாரு. ரசிகர்களும் சரி தளபதி ஒரே டைவில் விமானத்தோட இறக்கையை புடிச்சுட்டே அமெரிக்கா போயிடுவாருன்னு நினைச்சு விசிலடிக்க தயாராக அங்க தான் ஒரு ட்விஸ்ட்......

மொட்டை மாடியில் இருந்து டைவ் அடித்தது என்னவோ உண்மை, ஆனா அவர் அப்படியே நேர போய் விமானத்தை பிடிக்கவில்லை அதற்கு பதிலா தனது ரெண்டு கையையும் இறக்கை மாதிரி வைத்துக் கொண்டு ஏர்லையே பனிரெண்டு மணிநேரமா மிதக்குறார். அவர் மிதந்தா என்ன பூமி தான் சுத்துதே, பனிரெண்டு மணி நேரம் கழிச்சு அவர் கீழே குதிச்சா அது அமெரிக்கா!!!

அப்புறம் என்ன, முகத்துல சந்தனத்தை பூசிட்டு எல்லா வில்லன்களையும் கொன்று விட்டு நயந்தாராவை அழைச்சுட்டு அதே ஸ்டைலில் இருவரும் இந்தியாவில் லேண்டாகிறார்கள்.

டிஸ்கி 1: sms ல வந்ததை கொஞ்சம் உப்பு, புளி,காரம் போட்டு கலந்திருக்கிறேன்..

டிஸ்கி 2: sms ல வந்தது ஒன் லைன் ஸ்டோரி தான். ஆனா திரைக்கதை எழுதியது நானு(ஹைய்... இப்ப நானும் சினிமால இருக்கேன்) அதனால என்னை கேட்காம விஜயோ அல்லது வேறு எந்த நடிகராவது இதை பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்..

Labels: