தமிழ்நாட்டில் யாருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்
ப்ளாட்பாரத்துல வண்டி ஓட்டுறவன், சில்லறை தராத கண்டக்டர்,பான் பராக் போட்டுட்டு தியேட்டர்ல எச்சி துப்புறவன், காது கிழிய ஹாரன் அடிச்சிட்டு போற பஸ்,லாரி.....இப்படி அம்பி மாதிரி காலையில ஆபிஸ் போய் திரும்பி வர வரைக்கும் இவங்க பண்ற அநியாத்தை பார்த்து ஒன்னும் பன்ன முடியாமல், யாருக்கும் அக்கறையில்லை பொலம்பிட்டே தலை தண்ணி ஊத்துறத தவிர வேற ஒன்னும் பண்ண முடியல. இவங்களை எல்லாம்.........பல்ல கடிச்சுட்டு மனசுல தோனுமே அதை தான் இங்கே சொல்லியிருக்கிறேன். படிச்சிட்டு நீங்களா இருந்தா என்ன செஞ்சிருப்பிங்கன்னு சொல்லீட்டு போங்க.
நகரத்தில் ஏர் ஹாரன் உபயோக படுத்த கூடாதுனு சட்டம் இருந்தாலும், அதை காதுல வாங்காமல் ஏர் ஹாரனை கத்தவுட்டு வண்டி ஓட்டும் பஸ், லாரி டிரைவர்களை ஒரு கண்ணாடி அறையில் கட்டி வைத்து அவன் காதருகிலில் ரெண்டு குழாய் ஸ்பீக்கரை மாட்டி ஒரு ரெண்டு நாளைக்கு விடாமல் ஏர் ஹாரனை நேர அவன் காதுக்குள்ள அடிக்கனும்.
ப்ளாட்பாரத்துல பைக் ஓட்டறவன் டயர்ல காத்தை புடுங்கி விட்டுடனும் (பெங்களுருல இவனுக தொல்ல வர வர தாங்க முடியல)
திரையரங்கில் இருக்கைக்கு கீழே பான்பராக் போட்டு எச்சி துப்புறவனை புடிச்சு அவனை சட்டையை கழட்டி அதாலையே தியேட்டர்ல இருக்கிற அத்தனை இருக்கைகளையும் துடைக்க சொல்லனும்.
ஆட்டோகாரன் எழுபது ருபாய் கேட்டால், நூறு ருபா குடுத்துட்டு, கீப் த சேஞ்சுனு ஃபிகர் முன்னாடி பிலிம் காட்டி ஆட்டோகாரனை கெடுக்கும் ஐ.டி காரனை ஒரு எண்ணூறு கிலோ மீட்டர் தூரத்தில் வேறொரு மாநிலத்தில் கொண்டு போய் விட்டுட்டு வெறும் passenger train fareஐயும், டவுன் பஸ் காசையும் மட்டும் எண்ணி கொடுத்துட்டு ஊருக்கு போய் சேருன்னு துரத்தி விட்டுடனும்.
ஐம்பது பைசா சில்லறை கொடுக்காத கண்டக்டருக்கெல்லாம் அவர்கள் மாத சம்பளம் முழுவதையும் ஐம்பது பைசா சில்லறையாக கொடுக்கனும்.
பெண்களிடம் சில்மிஷம் செய்பவர்களுக்கு புடவையை கட்டிவிட்டு, நகர் முழுவது ஊர்வலமா சுத்தி வந்து கடைசியில் அவன் வசிக்கும் தெரு முனையில் ஒரு பொட்ட நாயோடு சேர்த்து ரெண்டு மூனு நாள் கட்டி விட்டுடனும் (நாய் பாவமோ?)
தமிழ் தான் என் பேச்சு, மூச்சு, வாச்சுன்னு பேசிட்டு மகனுக்கு கோட்டு சூட்டை மாட்டி விட்டு டெல்லிக்கு அனுப்பி விட்டு, பேரன் பேத்திகளை டெல்லி கான்வென்டில் சேர்த்து ஆங்கிலம், இந்தியை படிக்க சொல்லிட்டு, தமிழகத்தில் இருக்கும் மக்களை மட்டும் பொழைக்க விடாமல் தடுக்கும் புத்திசாலிகளை, வெறும் காட்டுவாசிகள் மட்டுமே வசிக்கும் ஏதாவது ஒரு தீவில் ரெண்டு வருசம் விட்டுட்டு வந்திடனும். நல்ல தமிழ தண்ணி ஊத்தி வளர்த்துங்கனு சொல்லீட்டு.
கடைசியாக, ஈழத்தில் அடிப்படை மருத்துவ வசதி கூட எதுவுமில்லாமல் அப்பாவி மக்கள் குண்டு வீச்சுக்கு பலயாகி கொண்டிருக்க, அதை தடுக்க வேண்டியவர்கள் குளு குளு மருத்துவமனையில் இருந்து கொண்டு, டெல்லியில் இருந்து வந்த தலைமை மருத்துவர், அவருக்கு கீழ் இருபது டாக்டர்கள், பணிவிடை செய்ய நூறு பேருன்னு ஹாயாக இருப்பவர்களை. ஒரு மூனு நாள் அரசு பொது மருத்துவமனை, ஜெனரல் வார்டுக்கு மாத்தி அந்த அனுபவம் எப்படி இருக்குனு பார்க்க சொல்லனும் (இந்த வசதி கூட இல்லாம தானே அங்கே ஆயிரக்கனக்கான மக்கள் இருக்கிறார்கள்)

Labels: தண்டனை | ஒழுங்கீனம்

31 Comments:
At February 18, 2009 2:42 PM ,
வால்பையன் said...
கலக்கல் தலை!
இந்த மாதிரி அடிக்கடி எதாவது போட்டு தாக்குங்களேன்
At February 18, 2009 3:07 PM ,
Bleachingpowder said...
//வால்பையன் said...
இந்த மாதிரி அடிக்கடி எதாவது போட்டு தாக்குங்களேன்
//
நீங்க மட்டும் ம்னு சொல்லுங்க தல, திரும்ப ஆரம்பிச்சுடலாம். நல்ல தந்திய வேற ரொம்ப நாளா ஆளையே கானோம். பார்த்தா ரொம்ப கேட்டதாக சொலுங்க
At February 18, 2009 3:11 PM ,
Arun Kumar said...
சூப்பரா எழுதி இருக்கீங்க :)
அடிக்கடி எழுதுங்க
At February 18, 2009 3:11 PM ,
வால்பையன் said...
//நீங்க மட்டும் ம்னு சொல்லுங்க தல, திரும்ப ஆரம்பிச்சுடலாம். நல்ல தந்திய வேற ரொம்ப நாளா ஆளையே கானோம். பார்த்தா ரொம்ப கேட்டதாக சொலுங்க //
நான் ம்னு சொல்லி ரொம்ப நாளாச்சு.நீங்க தான் பிஸியாவே இருக்குக்கிங்க,
நல்ல தந்தி பிஸினஸில் பிஸியாக இருக்கிறாராம், அவரும் உங்களை கேட்டதாக சொல்ல சொன்னார்.
At February 18, 2009 3:15 PM ,
கிரி said...
அருண் நடைமுறையில் இது சாத்தியம் இல்லை என்றாலும் ..கேட்க நல்லா இருக்கு :-)))
நீங்க கூறி இருக்கிற எடுத்துக்காட்டுகள் ஹி ஹி ஹி சூப்பர்
At February 18, 2009 3:17 PM ,
கிரி said...
//கண்ணாடி அறையில் கட்டி வைத்து அவன் காதருகிலில் ரெண்டு குழாய் ஸ்பீக்கரை மாட்டி ஒரு ரெண்டு நாளைக்கு விடாமல் ஏர் ஹாரனை நேர அவன் காதுக்குள்ள அடிக்கனும்.//
10 நிமிஷம் அடித்தாலே அப்புறம் அவனுக்கு சங்கு சத்தம் தான் கேட்கும் :-))))
At February 18, 2009 3:19 PM ,
கிரி said...
//ஆட்டோகாரன் எழுபது ருபாய் கேட்டால், நூறு ருபா குடுத்துட்டு, கீப் த சேஞ்சுனு ஃபிகர் முன்னாடி பிலிம் காட்டி ஆட்டோகாரனை கெடுக்கும் ஐ.டி காரனை ஒரு எண்ணூறு கிலோ மீட்டர் தூரத்தில் வேறொரு மாநிலத்தில் கொண்டு போய் விட்டுட்டு வெறும் passenger train fareஐயும், டவுன் பஸ் காசையும் மட்டும் எண்ணி கொடுத்துட்டு ஊருக்கு போய் சேருன்னு துரத்தி விட்டுடனும்.//
நான் கூட வித் அவுட் ல வர சொல்லிடுவீங்களோன்னு நினைத்தேன் :-)))
At February 18, 2009 3:47 PM ,
Bleachingpowder said...
//கிரி said...
நீங்க கூறி இருக்கிற எடுத்துக்காட்டுகள் ஹி ஹி ஹி சூப்பர்//
கிட்டதட்ட இது எல்லாத்தையுமே அனுபவிச்சிருக்கிறேன் கிரி. நேற்று இளநீர் குடிக்கலாம்னு போனா ஆபிஸ் எதிரில் இருக்கும் கடைக்கு போனா ஐயர் குடிமி மாதிரி இருகிற இளநீர் பதினாலு ருபாய்ங்கறான், நான் பத்து ருபாய்க்கு பேரம் பேசிட்டு இருக்கும் போது பக்கத்துல இருக்குற Oracle பொண்ணு இருபது ருபாய கொடுத்துட்டு கீப் த சேஞ்னு சொல்லிட்டு போய்ட்டான்.
நான் ஒருத்தன் தான் பதினெஞ்சு ருபாய் கொடுத்து மீதி ஒரு ருபாயை கேட்டு வாங்கினேன் :(
At February 18, 2009 3:58 PM ,
வடுவூர் குமார் said...
தேவையில்லாமல் ஹாரன் அடிப்பவர்கள் மீது மட்டும் எனக்கு ஒரு காண்டு.... நானும் யோசித்துப்பார்ததில்,நன்றாக தூங்கிக்கொண்டு இருக்கும் போது அவன் வீட்டில் உள்ளே இந்த மாதிரி அடிக்கனும் தோனும்.
At February 18, 2009 4:29 PM ,
Bleachingpowder said...
//Arun Kumar said...
சூப்பரா எழுதி இருக்கீங்க :)
அடிக்கடி எழுதுங்க
//
நன்றி நண்பரே. நீங்களும் அடிக்கடி வாங்க :)
At February 18, 2009 4:32 PM ,
Bleachingpowder said...
//வடுவூர் குமார் said...
நன்றாக தூங்கிக்கொண்டு இருக்கும் போது அவன் வீட்டில் உள்ளே இந்த மாதிரி அடிக்கனும் தோனும்.
//
ஹாஹாஹா...இது சூப்பர் ஐடியாங்க, இதையும் நம்ம லிஸ்டுல சேர்திடலாம்.
At February 18, 2009 4:47 PM ,
Valaipookkal said...
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
At February 18, 2009 4:48 PM ,
கார்க்கி said...
/இருக்குற Oracle பொண்ணு இருபது ருபாய கொடுத்துட்டு கீப் த சேஞ்னு சொல்லிட்டு போய்ட்டான்//
oracle பொண்ணுங்களே இப்படித்தான் எசமான்.. குத்துங்க எசமான் குத்துங்க.. :)))
ரொம்ப சூடோ?
At February 18, 2009 5:06 PM ,
வல்லிசிம்ஹன் said...
வெத்து ஆம்புலன்ஸ் விரட்டிட்டு, சைரனை ஊதறவங்களுக்கு என்ன தண்டனை???
At February 18, 2009 5:07 PM ,
Bleachingpowder said...
// கார்க்கி said...
போய்ட்டான்//
oracle பொண்ணுங்களே இப்படித்தான் எசமான்.. குத்துங்க எசமான் குத்துங்க.. :)))
//
வாங்க தல..உள்காயம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு போல இருக்கே :))
At February 18, 2009 5:10 PM ,
Bleachingpowder said...
//வல்லிசிம்ஹன் said...
வெத்து ஆம்புலன்ஸ் விரட்டிட்டு, சைரனை ஊதறவங்களுக்கு என்ன தண்டனை???
//
நல்லா கவணிச்சு அதே ஆம்புலன்ஸ்ல படுக்க வச்சுடலாம், என்ன நான் சொல்றது.
வருகைக்கு நன்றி வல்லிசிம்ஹன்
At February 18, 2009 7:22 PM ,
பாஸ்கர் said...
//தமிழ் தான் என் பேச்சு, மூச்சு, வாச்சுன்னு பேசிட்டு மகனுக்கு கோட்டு சூட்டை மாட்டி விட்டு டெல்லிக்கு அனுப்பி விட்டு, பேரன் பேத்திகளை டெல்லி கான்வென்டில் சேர்த்து ஆங்கிலம், இந்தியை படிக்க சொல்லிட்டு, தமிழகத்தில் இருக்கும் மக்களை மட்டும் பொழைக்க விடாமல் தடுக்கும் புத்திசாலிகளை//
அவிங்க நடத்துற டிவியை பார்த்து நாம் அதே போல தமிழ் பேசினால் நாக்கு சுழன்று பல் எல்லாம் கொட்டிவிடும் !
At February 18, 2009 10:58 PM ,
..ச்சும்மா ... cchummaa said...
ஒரு காலத்துல ரெம்ப அடிச்சு ஆடினீங்க ....அப்பரம் கொஞ்சம் அமைதி ...
இப்போ சிங்கம் திரும்பவும் களத்துல இறங்கிட்டு போல ?..
At February 19, 2009 12:52 AM ,
அத்திரி said...
//நான் பத்து ருபாய்க்கு பேரம் பேசிட்டு இருக்கும் போது பக்கத்துல இருக்குற Oracle பொண்ணு இருபது ருபாய கொடுத்துட்டு கீப் த சேஞ்னு சொல்லிட்டு போய்ட்டான்.//
ஹாஹாஹா))00
At February 19, 2009 12:54 AM ,
அத்திரி said...
எங்க எப்படி எழுதினாலும் கடைசில கலைஞர் கிட்ட வராம இருக்க முடியாதோ... பாவம் அவரே வயசான காலத்துல..............விடுங்க தல
At February 19, 2009 10:59 AM ,
Bleachingpowder said...
//பாஸ்கர் said...
அவிங்க நடத்துற டிவியை பார்த்து நாம் அதே போல தமிழ் பேசினால் நாக்கு சுழன்று பல் எல்லாம் கொட்டிவிடும் !
சினிமாவை காட்ட மாட்டோம்னு சொல்லீட்டமேன்னு வீம்புக்கு அந்த சேனலை நடத்துறாங்க. அவங்க விட்டம்மாவே அந்த சேனலை பார்பாங்களானு சந்தேகம் தான்.
வருகைக்கு நன்றி பாஸ்கர் :)
At February 19, 2009 11:01 AM ,
Bleachingpowder said...
//.ச்சும்மா ... cchummaa said...
ஒரு காலத்துல ரெம்ப அடிச்சு ஆடினீங்க ....அப்பரம் கொஞ்சம் அமைதி ...
//
ஆமா தல ஆறு மாசமா ஆணி புடுங்குனதுல தலை முடியே கொட்டி போச்சு :)
At February 19, 2009 11:14 AM ,
Bleachingpowder said...
//அத்திரி said...
எங்க எப்படி எழுதினாலும் கடைசில கலைஞர் கிட்ட வராம இருக்க முடியாதோ... பாவம் அவரே வயசான காலத்துல..............விடுங்க தல
//
ஹாஹாஹாஹா...அவரை கலாய்க்காம எப்படி தல பதிவ முடிகிறது...ஈழத்தில் இருந்து வெளிவரும் புகைபடங்கள் காணும் போது ரொம்ப வேதனையாக இருக்கிறது அத்திரி. ரஜினி சொன்ன மாதிரி, எந்த நாடாக இருந்தாலும், ஏழை மக்கள், பாமர மக்கள், அப்பாவி மக்கள், குழந்தைகள், பெண்கள், முதியோர் அவர்களின் வேதனை... அந்த காற்று பட்டாலும் கூட அந்த நாடு உருப்படாது.
நாற்பது கிலோ மீட்டர் தொலைவில் மக்கள் அங்கே பரிதவித்துகொண்டிருக்க மத்திய அரசும், மாநில அரசும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.
At February 19, 2009 1:52 PM ,
ambi said...
ஆமா, பெங்களூர்ல எல்லா பயலும் பிளாட்பாரத்துல தான் வண்டிய ஓட்றான். மிக மிக கேவலமான ஒரு லூக் விடுவேன்.
சிலருக்கு புரியும். பலர் இன்னும் எ.மாவா தான் இருக்காங்க. (எ.மா கோச்சுக்குமோ?)
பதிவு கலக்கல்ஸ். :))
At February 19, 2009 2:26 PM ,
Bleachingpowder said...
ambi said...
ஆமா, பெங்களூர்ல எல்லா பயலும் பிளாட்பாரத்துல தான் வண்டிய ஓட்றான். மிக மிக கேவலமான ஒரு லூக் விடுவேன்
//
அட நீங்க வேற அம்பி. இப்பெல்லாம் ப்ளாட்பாரத்துல வண்டி ஓட்டிட்டு அவனுங்க வரும் போது எதிரில் நம்ம நடந்து வந்தா நம்மள முறைச்சுட்டே போறானுங்க.
//பதிவு கலக்கல்ஸ். :))//
நன்றி தலைவா :)
At February 19, 2009 2:31 PM ,
பரிசல்காரன் said...
சொல்லவேல்ல.. இது எப்ப எழுதினீங்க?
நல்லாத்தான் இருக்கு ஐடியாவெல்லாம். இதுக்கு சட்டம் கொண்டு வந்தா நான் ஃபுல் சப்போர்ட் பண்ணுவேன்!
btw.. அதெப்படி வால் உங்களுக்கு ஃபர்ஸ்ட் பின்னூட்டம் போடறாரு!!
At February 19, 2009 2:35 PM ,
Bleachingpowder said...
//பரிசல்காரன் said...
btw.. அதெப்படி வால் உங்களுக்கு ஃபர்ஸ்ட் பின்னூட்டம் போடறாரு!!
//
வாங்க தல...எல்லாம் நமக்கு நாமே திட்டம் தான் :)))
At February 19, 2009 4:04 PM ,
அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
//சினிமாவை காட்ட மாட்டோம்னு சொல்லீட்டமேன்னு வீம்புக்கு அந்த சேனலை நடத்துறாங்க//
ரஷ்ய மொழி படமெல்லாம் போடுவார்கள் .
தமிழ் மொழி படம் காசு கொடுத்து வாங்க வேண்டும் என்பதால் போடாமல் இருக்கிறார்களோ என்னவோ ?
At February 19, 2009 5:00 PM ,
Bleachingpowder said...
//அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
ரஷ்ய மொழி படமெல்லாம் போடுவார்கள் .
தமிழ் மொழி படம் காசு கொடுத்து வாங்க வேண்டும் என்பதால் போடாமல் இருக்கிறார்களோ என்னவோ ?
//
வாங்க பாஸ்கர்..ஏன் லேட்டு...அவங்க என்னைக்கு எதை காசு கொடுத்து வாங்கியிருக்காங்க. காடுவெட்டியை அனுப்பிச்சு அன்பா பேசி வாங்கி தானே பழக்கம்:)
At February 19, 2009 5:34 PM ,
நான் ஆதவன் said...
சொல்லவேயில்ல...இத எப்ப போட்டீங்க..கலக்கல் தல
(அடப்பாவிகளா இதுக்குமாடா நெகடிவ் ஓட்டு)
At February 19, 2009 5:43 PM ,
Bleachingpowder said...
//நான் ஆதவன் said...
சொல்லவேயில்ல...இத எப்ப போட்டீங்க..கலக்கல் தல//
வாங்க தல ஏன் இவ்வளவு லேட்டு, இன்னும் ரெண்டு வாரதுக்கு ஆணி புடுங்க்குற வேலை இல்லை தல அதான்.
//(அடப்பாவிகளா இதுக்குமாடா நெகடிவ் ஓட்டு)
//
அரசியல்ல இதெல்லாம் சாதரணப்பா :)))அரசியல்வாதிகள்னாலே தியாகிகள் தானே, இதெல்லாம் நாளைக்கு ஹிஸ்ட்ரில வரும், பசங்கெல்லாம் நோட்ஸ் எடுப்பாங்க...ஒரே குஷ்டமப்பா
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home