முத்துராமலிங்க தேவர் ஜாதி வெறியனா? அப்போ நீங்கெல்லாம் யாரு??
இது வரை பார்பனர்களை மட்டுமே ஜென்ம வீரோதிகளாக கருதி வந்த பதிவர்கள் இப்பொழுது அதை விட கேவலமாகவும், அநாகரிகமாகவும் தேவர் இனத்தையும், மூத்துராமலிங்க தேவரையும் இழிவு படுத்தி எழுதி வருகிறார்கள். தேவர் ஜெயந்தி விழா சுவரொட்டியில் அம்பேத்கர் பெயரை போடாததனால் தான் இவ்வளவு வன்முறைக்கும் காரணமாம். அவன் சொந்த காசுல சுவரொட்டி அடிக்கும் போது யார் பெயரை போடுவது போடாமல் இருப்பது என்பது அவரவர் விருப்பம். அவர்கள் என்ன கல்லூரி பணத்திலா சுவரொட்டி அடித்தார்கள் மற்ற மாணவர்கள் கேள்வி கேட்க?
இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி பள்ளி கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் தான் அவர்களின் அடுத்த தலை முறையாவது இடஒதுக்கீட்டை பயன்படுத்தி வாய்ப்பு தேட வேண்டிய சூழ்நிலையை தவிர்க்க இயலும். அவன் இப்படி இருந்தால் நாங்களும் இப்படிதான் இருப்போம் என்றால் இன்னும் பத்து தலைமுறையானாலும் இப்படியே இருக்க வேண்டியது தான்.
பிற்படுத்த பட்ட சமுகத்தை சேர்ந்தவர்களும் அவர்கள் என்ன செய்தாலும் நியாயம் கற்பிக்கும் பதிவர்களும் முதலில் அவர்களுடைய தாழ்வு மணப்பான்மையை விட்டொழிக்க வேண்டும். அமெரிக்கா என்ன செஞ்சாலும் தப்பு, பார்பணர்கள் உயர் பொறுப்பில் இருந்தால் ஆத்திரம், தேவர் இனத்தை சேர்ந்தவர்களை கண்டால் வெறுப்பு. மொத்தத்தில் தன்னை விட மேல யாராவது இருந்தால் அவன் கெட்டவன். வன்முறையில் மட்டும் தான் உங்களால் அவர்களிடம் போட்டி போட முடியுமா?
வன்முறையில் போட்டி போடுவதை தவிர்த்து படிப்பில் போட்டி இடுங்கள். இந்தியாவில் இருக்கும் மருத்துவ,பொறியில்,சட்ட கல்லூரியில் மற்ற இனத்தவருடன் சேர்ந்து படிப்பால் மட்டும் மேலே வந்து விட முடியாது. நாலு வருடம் படிப்பு முடிந்து வெளியே செல்லும் போது, உயர் ஜாதியினர் என கூறி கொள்ளும் மாணவர்களை விட அதிக மதிப்பெண் எடுத்து காட்டுங்கள். அது தான் நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் சரியான பதிலடியாக இருக்கும்.
இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி பள்ளி கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் தான் அவர்களின் அடுத்த தலை முறையாவது இடஒதுக்கீட்டை பயன்படுத்தி வாய்ப்பு தேட வேண்டிய சூழ்நிலையை தவிர்க்க இயலும். அவன் இப்படி இருந்தால் நாங்களும் இப்படிதான் இருப்போம் என்றால் இன்னும் பத்து தலைமுறையானாலும் இப்படியே இருக்க வேண்டியது தான்.
பிற்படுத்த பட்ட சமுகத்தை சேர்ந்தவர்களும் அவர்கள் என்ன செய்தாலும் நியாயம் கற்பிக்கும் பதிவர்களும் முதலில் அவர்களுடைய தாழ்வு மணப்பான்மையை விட்டொழிக்க வேண்டும். அமெரிக்கா என்ன செஞ்சாலும் தப்பு, பார்பணர்கள் உயர் பொறுப்பில் இருந்தால் ஆத்திரம், தேவர் இனத்தை சேர்ந்தவர்களை கண்டால் வெறுப்பு. மொத்தத்தில் தன்னை விட மேல யாராவது இருந்தால் அவன் கெட்டவன். வன்முறையில் மட்டும் தான் உங்களால் அவர்களிடம் போட்டி போட முடியுமா?
வன்முறையில் போட்டி போடுவதை தவிர்த்து படிப்பில் போட்டி இடுங்கள். இந்தியாவில் இருக்கும் மருத்துவ,பொறியில்,சட்ட கல்லூரியில் மற்ற இனத்தவருடன் சேர்ந்து படிப்பால் மட்டும் மேலே வந்து விட முடியாது. நாலு வருடம் படிப்பு முடிந்து வெளியே செல்லும் போது, உயர் ஜாதியினர் என கூறி கொள்ளும் மாணவர்களை விட அதிக மதிப்பெண் எடுத்து காட்டுங்கள். அது தான் நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் சரியான பதிலடியாக இருக்கும்.
Labels: தேவர், பிற்படுத்தபட்டவர், வன்முறை

46 Comments:
At November 19, 2008 2:04 PM ,
வால்பையன் said...
அவங்களே தன்னப்பிக்கையோட தங்களின் திறமையால் முன்னுக்கு வரணும்ன்னு நினைச்சாலும் சாதி சரையல் பண்ணும் அரசியல்வாதிகள் விட மாட்டாங்களே!
அவர்கள் இன்னமும் கீழேயே இருப்பதற்க்கு அந்த கேடுகெட்ட அரசியல்வாதிகள் தான் காரனம் என்று தெரிந்து கொண்டாலே சமநிலை வந்துவிடும்
At November 20, 2008 8:53 PM ,
Arun Kumar said...
இணையத்தில் சாதி சண்டைகள் போடும் ஆட்களை விடுங்கள். பத்து பைசாவிற்க்கு பயன் இல்லாதவர்கள். பார்பான் பார்பாணியம் என்று ஜல்லி அடிப்பவர்களும் கூடவே தலித் மக்களுக்கு காவலன் போன்று நடிபப்வர்களுமே. இவர்கள் வெறும் இனைய போராளிகள். அம்புட்டுதேன்
மற்றபடி எந்த சாதியாக இருந்தாலும் நான் தான் சாதியால் உயர்ந்தவன் என்று சொல்வதும் மற்ற ஆட்களை சாதியின் பேரால் வன்முறையில் இறங்குவதும் தவறே. நம்மை பொருத்தவரை நாம் சாதி மதம் ஏதும் பாராமல் அடுத்த சக மனிதனோடு முதலில் பழக கற்று கொள்ளுவோம்.
தனி மனித சீர்த்திருத்தமே நாட்டின் வேறுபாடுகளை அகற்றும்
At November 22, 2008 2:59 AM ,
சக்திவேல் said...
இதென்ன இனெ வெறித்தீக்குள்ளே எண்ணெய் ஊற்றும் செயல்???
முத்துராமலிங்கத்தேவரை கேவலமாக எழுதிய பதிவைக்காட்டமுடியுமா?.
At November 25, 2008 2:47 PM ,
Bleachingpowder said...
வாங்க வாலு, இப்ப தான் உங்க பின்னூட்டத்தை படிச்சேன். ஆணி புடுங்குற இடத்துல நிமிந்து கூட பாக்க வுட மாட்டேங்கறாங்க, எதோ புது ப்ராஜெட்டாம் அத என்னால மட்டும் தான் பண்ண முடியுமாம்னு சொல்லி உசுப்பேத்தி இந்த பாடாவதி ப்ராஜெட்டை என் தலையில கட்டீடாங்க அதான் உடனே பதில் போட முடியல.
At November 25, 2008 2:47 PM ,
Bleachingpowder said...
//சக்திவேல் said...
இதென்ன இனெ வெறித்தீக்குள்ளே எண்ணெய் ஊற்றும் செயல்???
முத்துராமலிங்கத்தேவரை கேவலமாக எழுதிய பதிவைக்காட்டமுடியுமா?.
//
வாங்க சக்திவேல், இந்த சுட்டிகளை படித்து பாருங்கள்.
http://poar-parai.blogspot.com/2006/07/blog-post_31.html
http://periyaryouth.blogspot.com/2008/11/blog-post_17.html
At November 25, 2008 2:52 PM ,
Bleachingpowder said...
//Arun Kumar said...
பார்பான் பார்பாணியம் என்று ஜல்லி அடிப்பவர்களும் கூடவே தலித் மக்களுக்கு காவலன் போன்று நடிபப்வர்களுமே. இவர்கள் வெறும் இனைய போராளிகள். அம்புட்டுதேன்
//
சூப்பர் :)))
வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி அருண் குமார்.
At November 25, 2008 8:36 PM ,
சக்திவேல் said...
//*
வாங்க சக்திவேல், இந்த சுட்டிகளை படித்து பாருங்கள்.
http://poar-parai.blogspot.com/2006/07/blog-post_31.html
http://periyaryouth.blogspot.com/2008/11/blog-post_17.html
*//
இந்த பதிவுகளில் தேவரை இழிவாக, மற்றும் கேவலமாக ஏதுவும் சொல்லலையே,. தேவர் காமராஜரை சொன்னது சரியில்லை என்றுதானே இருக்கு. எந்த இடத்திலும் தேவரை கேவலமாக குறிப்பிடவில்லையே.
உங்கள் தலைப்புதான் கேவலமாக இருக்கு "முத்துராமலிங்க தேவர் ஜாதி வெறியனா?"
இதைத்தான் சொன்னேன் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் செயல்ன்னு.
At November 26, 2008 9:50 AM ,
Bleachingpowder said...
அந்த பதிவின் தலைப்பே "
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன் -இந்துத்துவத்துக்கு விளக்குப் பிடித்த திருமகன்"
இதுவே உங்களுக்கு தப்பா தெரியலையா?
At November 26, 2008 10:02 AM ,
SurveySan said...
//அவன் சொந்த காசுல சுவரொட்டி அடிக்கும் போது யார் பெயரை போடுவது போடாமல் இருப்பது என்பது அவரவர் விருப்பம். ////
இந்தக் கதை நல்லால்ல. அதெப்படி? கல்லூரி பேர் போட்டு சுவரொட்டும் போது, 'லீகலா' இருக்கர சரியான பேர்தானே போடணும்? கொழுப்பெடுத்து வேணும்னே கிள்ளரது தப்பு.
/////வன்முறையில் போட்டி போடுவதை தவிர்த்து படிப்பில் போட்டி இடுங்கள்./////
நியாயமான வாக்கு.
ஆனா, குனிய குனிய குட்டுவாங்களோ?
'மொத்த' வெவகாரமும் தெரியாம, நாம எல்லாரும், நமக்கு தோணர, கருத்ஸ் சொல்ரதுதான் தப்பு ;)
இப்பதான் ஒவ்வொரு ரிப்போர்ட்டா வெளீல வருது. பொறுத்திருந்து பாப்போம்.
At November 26, 2008 11:07 AM ,
Bleachingpowder said...
//இந்தக் கதை நல்லால்ல. அதெப்படி? கல்லூரி பேர் போட்டு சுவரொட்டும் போது, 'லீகலா' இருக்கர சரியான பேர்தானே போடணும்? கொழுப்பெடுத்து வேணும்னே கிள்ளரது தப்பு.//
வாங்க சர்வேசன், உங்களுடைய கருத்து சரியானதே ஆனால் இங்கே யாராவது ஒருத்தர் விட்டு கொடுத்து தானே ஆக வேண்டும். ரெண்டு அமைப்பினருமே மல்லுக்கு நின்றால் இழப்பு இந்த சமுகத்திற்கு மட்டுமல்ல கல்லூரியில் படிக்கும் மற்ற சமுகத்தினரும் இதனால் பாதிக்க படுகிறார்கள்.
ஒரு வாதத்திற்கு இதே கல்லூரியின் பெயர் முத்துராமலிங்க தேவர் சட்ட கல்லூரி என்று இருந்தால், அம்பேத்கர் பிறந்தநாளின் போது "முத்துராமலிங்க சட்டக் கல்லூரி" என்று சுவரொட்டுவார்களா??
இரண்டு சமுகத்தை சேர்ந்தவர்களுக்கும் மற்ற இனத் தலைவரை ஏற்க மறுத்தால் ஒதிங்கி செல்வதில் பெரிய தவறு ஏதுமில்லை என்பது என் கருத்து.
கல்லூரியின் சார்பா சுவரொட்டி ஒட்டினால் தான் முழு பெயரையும் போட வேண்டும். குறிப்பிட்ட சமுகத்தை சேர்ந்த சிலர் சேர்ந்து விழா எடுத்தால் மற்ற சமுகத்தினர்,வீன் பிரச்சனைகளை தவிர்க்க ஒதுங்கி செல்வதே நல்லது என்பது என் தனிபட்ட கருத்து. இது அம்பேத்கர் பிறந்தநாள் விழாவிற்கும் பொருந்தும்.
அப்புறம் இந்த பள்ளி கல்லூரிகளுக்கு ஜாதி கட்சி தலைவர்கள் பெயரை வைத்த அறிவு ஜீவி யாருன்னு தெரியல.
//'மொத்த' வெவகாரமும் தெரியாம, நாம எல்லாரும், நமக்கு தோணர, கருத்ஸ் சொல்ரதுதான் தப்பு ;)
//
இந்தியனாச்சே அதிலும் தமிழன், வெறும் வாயையே ஒரு வாரம் மெல்லுவோம், இந்த மாதிரி மேட்டர்னா விடுவோமா...கண், காது, மூக்கு வச்சு ஜடை பின்னி பூ வச்சு பொட்டு வச்சு நாலு பேத்த உசுப்பேத்தி விட்டா தானே அவன் தமிழன் :))))
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சர்வேசன் :)
At November 26, 2008 6:09 PM ,
மகிழ்நன் said...
முத்துராமலிங்கம் சாதி வெறியன்தான்!
இதில் கருத்து மாறுபாடு ஏதும் தங்களுக்கு உள்ளதா?
தேவர் என்று தங்களை அடையாளம் காணுவது போதாதென்று, மற்ற சமூகத்தை இழிவுப்படுத்திவதை வாடிக்கையாக கொள்ளுதலை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?
அந்த நிகழ்வை பற்றி உண்மை அறியும் குழுக்களின் அறிக்கைகள், நக்கிரனில், ரிப்போர்டர் போன்ற வந்த செய்திகளை முதலில் ஆராயவும்.
முத்துராமலிங்கம் என்றாவது சாதி ஒழிய வேண்டும், மனிதர்களை மனிதர்களாக பார்க்கும் உள்ளம் வேண்டும் என்று எங்காவது கூறியதுண்டா? வாழ்வு முழுக்க சாதி வெறித்தூண்டி, கட்டப்பஞ்சாயத்து செய்து பிழைப்பு நடத்தி என் சகோதரனே என்னை ஏளனமாக பார்க்கும் நிலைக்கு வித்திட்டது அந்த சாதி வெறியனின் பங்கு.
அம்பேதகர் சாதித் தலைவராம்,
இப்படி கூறும் தங்களை போன்றவர்களெல்லாம் செருப்பால் அடித்து நிர்வாணமாய் சுட்டுத்தள்ள வேண்டும்.
(இந்த பின்னூட்டத்தை வேண்டுமென்றே தவிர்த்து விடாதீர்கள், இதே தொனியில் ஏற்கனவே பதிவே எழுதியிருக்கிறீர்கள்)
அம்பேத்கர் சாதி ஒழிப்பு போராளி, தம் வாழ்நாளையே இச்சாதி சகதியில் கிடந்து உளன்று நசுங்கி வாழும் அத்தனை பேருக்காகவும் போராடியவர்.
முதலில் “இப்படி வன்முறையில் இறங்குபவர்கள் வழக்கறிஞர் படிப்பு படித்து என்ன செய்யப்போகிறார்கள்” என்று சொல்வதற்கு பதிலாக “ இப்படி இத்தேசத்தின் மாபெரும் தலைவனின் பெயரை போடுவதற்கு கூச்சப்படும் சாதிவெறி நாய்கள் வழக்கறிஞராகி என்ன கிழிக்க போகிறார்கள்”என்ற கேள்வி வரட்டும்.
வன்முறைக்கு வித்தாக இருந்தவனை விட்டுவிட்டு வன்முறை திணிக்கப்பட்டவனையே குறைக்கூறுவது உங்கள் அறைவேக்காட்டுதனத்தை காட்டுகிறது.
இதை படியுங்கள் தோழரே!
உண்மையில் டாக்டர் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் மட்டும்தானா? அவர் தாழ்த்தப்பட்ட மக்களின் இடஓதுக்கிடுக்கு மட்டும்தான் பாடுபட்டாரா?
1948 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் எழுதிய ‘தீண்டப்படாதார் என்பவர் யார்? அவர்கள் எவ்வாறு தீண்டப்படதார் ஆயினர்?’ என்ற நூலுக்கான முன்னுரையை இப்படி துவக்குகிறர்:
“சூத்திரர்களைத் தவிர இதர மூன்று சமூகப் பிரிவினரை இந்து நாகரிகம் தோற்றுவித்துள்ளது. இத்தகைய இந்து மக்கள் இருந்து வருவது குறித்து எந்த அளவுக்கு அக்கறை காட்ட வேண்டுமோ அந்த அளவுக்கு அக்கறை காட்டப்படவில்லை. மேலே குறிப்பிட்ட மூன்று சமூகப் பிரிவினர் வருமாறு:
1) குற்றப் பரம்பரையினர், இவர்களது எண்ணிக்கை சுமார் 2 கோடி சொச்சம்;
11) ஆதிவாசிகள், இவர்களது எண்ணிக்கை ஏறத்தாழ 1.5 கோடி;
111) தீண்டப்படாதவர்கள், இவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 5 கோடி.
இப்படிப்பட்ட வகுப்பினர் இருந்துவருவது ஒரு மாபெரும் மானக்கேடாகும், அவக்கேடாகும். இந்த சமூக சீர்கேடுகளின், விபரீத விளைவுகளின் வெளிச்சத்தில், பகைபுலனில் பார்க்கும்போது, இந்து நாகரிகம் என்பது ஒரு நாகரிகம் என்று அழைப்பதற்கே அருகதையற்றதாகிவிடுகிறது! மனித குலத்தின் ஒரு பகுதியை இவ்வாறு அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்துவது என்பது கொடிதினும் கொடிதான, பேய்த்தனமான அவமானகரமான ஒரு சூழ்ச்சியாகும்: அப்பட்டமான வஞ்சகமாகும். பெரும்பழி, குரூர அவமதிப்பு என்பதுதான் இதற்குச் சரியான பெயராக இருக்கமுடியும்.”
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பேச வந்த டாக்டர் அம்பேத்கர், சமூகரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிற குற்றப் பரம்பரையினருக்காகவும் சேர்த்தேதான் குரல் கொடுக்கிறார்.
இந்த மனிதநேயரை எதிர்ப்பதற்குத்தானா இவ்வளவு ஆவேசம்.
http://mathimaran.wordpress.com
At November 27, 2008 6:41 AM ,
SurveySan said...
///கல்லூரியின் சார்பா சுவரொட்டி ஒட்டினால் தான் முழு பெயரையும் போட வேண்டும். குறிப்பிட்ட சமுகத்தை சேர்ந்த சிலர் சேர்ந்து விழா எடுத்தால் மற்ற சமுகத்தினர்,வீன் பிரச்சனைகளை தவிர்க்க ஒதுங்கி செல்வதே நல்லது என்பது என் தனிபட்ட கருத்து. இது அம்பேத்கர் பிறந்தநாள் விழாவிற்கும் பொருந்தும்./////
;) இதுவும் நியாயமில்லை. 'இந்திய விழா'ன்னு போஸ்டர் ஒட்டலாம். சிலருக்கு, தாங்கள் இருப்பது, தாங்கள் இருப்பது, இந்தியா இல்ல, 'தனி நாடு'ன்னு முடிவு பண்ணி, அவங்க இஷ்டத்துக்கு 'xyz விழா'ன்னெல்லாம் பேர் வெக்கக் கூடாது.
கல்லூரியின் பெயரில், ஆசாமிகளின் பேரை கொண்டு வருவது தவறுதான். ஆனா, அம்பேத்கார் 'சீப்பான' ஜாதி கட்சி தலைவரா என்ன? 'bharat ratna' அவரு. கண்டிப்பா பெரிய மனுஷன் தான். அவரின் பெயர் கல்லூரிக்கு வைப்பது தவறில்லை. afterall, he wrote our constitution.
மு.தேவர் பத்தி எனக்குத் தெரியாது.
முடிவில்லா சோகமிதெல்லாம். கல்லூரித் தலைமை, ஸ்ட்ராங்கா ஏதாவது நடவடிக்கை எடுத்து, வருமுன் காப்போம் செய்யணும்.
At November 27, 2008 12:58 PM ,
Bleachingpowder said...
வாங்க மகிழ்நன். உங்களுடைய பெரும்பாலான கருத்துகளுடன் நானும் உடன் படுகிறேன்.
ஆனால் அவன் ஒரு அடிச்சா நான் பத்து அடி அடிப்பேன்னு மல்லுக்கு நின்றால், இன்னும் எத்தனை தலைமுறையானாலும் இந்த இரண்டு சமுகத்திலும் எந்த முன்னேற்றமும் ஏற்பட போவதில்லை.
இவர்களுக்குள் இருக்கும் வன்முறையை பார்த்தால் எப்படியும் இவர்கள் பட்டம் வாங்க போவதில்லை. தேவர் இனத்தை சேர்ந்தவர்கள் தேவர் பேரவையிலும், பிற்படுத்த பட்ட இனத்தை சேர்ந்தவர்கள் பகுஜன் சமாஜ்,விடுதலை சிறுத்தைகள்,புதிய தமிழகம் போன்ற கட்சிகளில் அல்லகைகளாக சேர்ந்து கை தட்டி, விசில் அடித்து வாழ்க்கையை வீன் அடிக்க தான் வாய்ப்புகள் அதிகம்.
இந்த மாதிரி எந்த வன்முறையில் தலையிடாமல் நீங்கள் கூறும் பார்பண மாணவர்கள் நன்றாக படித்து வக்கீல்,மாஜிஸ்ரேட்,நீதிபதி என மேலே மேலே போய் கொண்டே இருப்பார்கள். அப்புறம் அடுத்த தலைமுறையும் பார்பாணை எதிர்த்தே காலத்தை ஓட்ட வேண்டும்.
இப்பொழுது இருப்பதை விட அம்பேத்கர் காலத்தில் தீண்டாமை அதிகமாகவே இருந்தது. அதற்காக அவரும் அருவாளையும்,கிரிக்கெட் மட்டையையும் எடுத்துக் கொண்டும் கூட ஒரு பத்திருபது பேரை துணைக்கு அழைத்து கொண்டு வம்பிழுத்தவனை துரத்தி துரத்தி அடித்து கொண்டிருந்தால் இன்று நாம் அவரை பற்றி பேசிக் கொண்டிருக்க மாட்டோம்.
பிற்படுத்த பட்ட சமுகத்தினருக்கு ஒரு அம்பேத்கர் மட்டும் போதும் என்று நினைத்து விட்டீர்களா மகிழ்நன்.
//அம்பேதகர் சாதித் தலைவராம்,
இப்படி கூறும் தங்களை போன்றவர்களெல்லாம் செருப்பால் அடித்து நிர்வாணமாய் சுட்டுத்தள்ள வேண்டும்.
(இந்த பின்னூட்டத்தை வேண்டுமென்றே தவிர்த்து விடாதீர்கள், இதே தொனியில் ஏற்கனவே பதிவே எழுதியிருக்கிறீர்கள்)
//
:) இதுவரை யார் பதிந்த எந்த பின்னூட்டத்தையும் இதுவரைக்கும் வெளியிடாமல் இருந்ததில்லை. என்னுடைய கருத்தை கூற எனக்கு எப்படி உரிமையுள்ளதோ அதே போல் தான் உங்களுக்கும்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மகிழ்நன்.
At December 16, 2008 10:55 AM ,
கார்க்கி said...
எங்க ஆளையேக் காணோம் சகா? பயங்கர பிஸீயா? இல்லை வலையுலகம் மேல கோவமா?
At December 25, 2008 12:04 AM ,
வித்யாசாகரன் (vidyasakaran) said...
பார்ப்பனர்கள் பாவம்போல தங்கள் கடமையைச் செவ்வனே ஆற்றிக்கொண்டிருந்தார்கள். பதிவர்கள்தான் தாந்தோன்றித்தனமாக, பார்ப்பனர்களை ஜென்ம விரோதியாகக் கருதி விட்டார்கள், இல்லையா?
//அவர்கள் என்ன கல்லூரி பணத்திலா சுவரொட்டி அடித்தார்கள் மற்ற மாணவர்கள் கேள்வி கேட்க?//
அவர்கள் என்ன உங்கள் பதிவிலா சாதி வெறியன் என்று எழுதினார்கள், நீங்கள் கேள்வி கேட்க? அவனவன் பதிவில் எவனெவனை சாதி வெறியன் என்று அழைப்பது என்பது அவனவன் விருப்பம். உங்கள் நியாயம் சரியாகப் பொருந்தி வருகிறதுதானே?
திருப்பி அடிப்பவனிடம் தாழ்வு மனப்பான்மையைப் பற்றிப் பேசி, அதற்கும் அவனையே குற்றவாளி ஆக்கிவிட்டால் பிரச்சினை தீர்ந்தது! சூப்பரப்பு!
துக்ளக்கில் சோ இதையேதான் எழுதியிருக்கிறது. அதைப் படித்துத்தான் இந்தக் கருத்து உதயமாயிற்றோ, உங்களுக்கு?
//அமெரிக்கா என்ன செஞ்சாலும் தப்பு, பார்பணர்கள் உயர் பொறுப்பில் இருந்தால் ஆத்திரம், தேவர் இனத்தை சேர்ந்தவர்களை கண்டால் வெறுப்பு. மொத்தத்தில் தன்னை விட மேல யாராவது இருந்தால் அவன் கெட்டவன். //
ஆக, இதெல்லாம் பொறாமையினால வர்றதுன்னுட்டீங்க! கலக்கிட்டீங்க நாட்டாமை!
//உயர் ஜாதியினர் என கூறி கொள்ளும் மாணவர்களை விட அதிக மதிப்பெண் எடுத்து காட்டுங்கள்.//
சரிங்க நாட்டாமை, போகும்போது சொம்பையும் தூக்கிட்டுப் போங்க!
உங்க தலைப்புக்கு...
ஆமா! முத்துராமலிங்கம் சாதி வெறியனேதான், நாங்க யாராயிருந்தாலும்.
அம்பேத்கரைச் சாதித் தலைவர்னு சொல்ற நாய்களும் சாதி வெறியர்கள்தான்.
At December 25, 2008 2:09 AM ,
முத்து தமிழினி said...
எந்த பிரயோசனமும் இருக்காதுன்னு முன்னாடி பின்னூட்டி இருக்கறவங்க வரலாறு சொன்னாலும் என் கருத்தையும் கேளுங்க.
பாப்பனர்களை மட்டும் குறி (?)வெச்சி தாக்கறாங்க.சாதி வளர்க்கற மத்த சாதிகாரனை தாக்கலன்னு ஒரு பக்கம் ஒப்பாரி வெச்சி அழுவறாங்க சிலர். இங்க இப்படியா?
என்ன கொடுமை சரவணன் இது?
At December 25, 2008 10:10 AM ,
அர டிக்கெட்டு ! said...
//அவன் சொந்த காசுல சுவரொட்டி அடிக்கும் போது யார் பெயரை போடுவது போடாமல் இருப்பது என்பது அவரவர் விருப்பம். அவர்கள் என்ன கல்லூரி பணத்திலா சுவரொட்டி அடித்தார்கள் மற்ற மாணவர்கள் கேள்வி கேட்க?//
என்ன பிரச்சனை ஓஞ்சுடுச்சேன்னு வருத்தம்மா...நல்ல பொழப்பு
அவன் ஆயா மண்டையப்போட்டதுக்கு அவன் போஸ்டர் அடிக்கல அவன் இஷ்டத்துக்கு அடிக்க...
At January 20, 2009 1:26 PM ,
கார்க்கி said...
பல ஏரியாவில உங்க தலை தெரியுது.. ஆனா நம்ம கடைக்கு வர மாட்டறீங்க.. ஏதாவ்து கோவம்? அப்படியே ஏதாவ்து எழுதலாமில்ல?
At January 20, 2009 3:14 PM ,
Bleachingpowder said...
//கார்க்கி said...
பல ஏரியாவில உங்க தலை தெரியுது.. ஆனா நம்ம கடைக்கு வர மாட்டறீங்க.. ஏதாவ்து கோவம்?
//
enna thala ippadi solliteenga :( offica laptopla font problem. type panna romba kastama iruku. evening veetiku vandhu soluren unga "உங்க குழந்தையின் வயசு என்ன? pathi..
Niraya iruku solrathuku, thats why didnt comment in office.
//அப்படியே ஏதாவ்து எழுதலாமில்ல?//
parisalkarar kaiyai katti pottutaaru :((
At August 21, 2010 10:40 PM ,
Vignesh said...
நான் தேவன் தான் என்னுடன் எல்லா ஜாதி நண்பர்களும் இருக்கிறார்கள்
உங்களுக்கு எப்படி அம்பேத்கரை புடிக்குமோ அந்த அளவுக்கு எங்களுக்கு
முத்துராம லிங்க தேவரை புடிக்கும் ஒரு சிலர் செய்யற தப்புக்காக எல்லாத்தையும்
தப்பா பேசாதிங்க நீங்க ஏன் உங்கள தாழ்ந்த ஜாதி னு நினைகிறிங்க உங்க தாழ்வு மனப்பான்மையை
முதல விடுங்க நாம எல்லாரும் ஒன்னுதான் தேவை இல்லாம தேவர் அ பத்தி தப்பா பேசாதிங்க
At August 22, 2010 7:47 PM ,
வால்பையன் said...
//நான் தேவன் தான் என்னுடன் எல்லா ஜாதி நண்பர்களும் இருக்கிறார்கள்//
தேவன்கிறது படிச்சு வாங்கின பட்டமா?
அது என்ன எல்லா சாதி நண்பர்களும் இருக்கிறார்கள், அவர்கள் சாதி எப்படி கண்டுபிடித்தீர்கள்!
கையை அறுத்து பார்த்தா ரத்தம் வேற கலர்ல வருதா என்ன?
At August 23, 2010 6:59 PM ,
Vignesh said...
என்னதான் நாம ஒன்னு நமக்குள்ள பிரிவு
இல்ல னு சொன்னாலும் நீங்க கேக்க மாட்டிங்க
சரி விடுங்க உங்கள திருத்த முடியாது . ஏன் உங்க
கண்ணனுக்கு /நான் தேவன் தான் என்னுடன் எல்லா ஜாதி நண்பர்களும் இருக்கிறார்கள்//
இந்த வரி தா தெரிஞ்சுத
//நீங்க ஏன் உங்கள தாழ்ந்த ஜாதி னு நினைகிறிங்க உங்க தாழ்வு மனப்பான்மையை
முதல விடுங்க நாம எல்லாரும் ஒன்னுதான்//
இந்த வரி தெரியலய
//கையை அறுத்து பார்த்தா ரத்தம் வேற கலர்ல வருதா என்ன?//
கையை அறுத்து பார்த்து தான் ஜாதிய கண்டு புடிக்கணும் னு
அவசியம் இல்ல தேவை இல்லாம பிரிவினைய ஏற்படுதாதிங்க
At August 23, 2010 6:59 PM ,
Vignesh said...
This comment has been removed by the author.
At August 23, 2010 7:56 PM ,
வால்பையன் said...
நான் விக்னேஷ்கிறது ஒரு அடையாளம், பொதுவா மனிதன்னு கூட சொல்லலாம்! அதில் எங்கிருந்து வருது தேவன்!
At August 23, 2010 9:55 PM ,
Vignesh said...
//நான் விக்னேஷ்கிறது ஒரு அடையாளம், பொதுவா மனிதன்னு கூட சொல்லலாம்! அதில் எங்கிருந்து வருது தேவன்!//
நண்பா
இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை னு எனக்கு
தெரியல நா தேவன் னு தான எழுதிருக்கேன்
மத்த ஜாதி ய பத்தி தப்பா ஏதும் எழுதுலையே
இதுல என்ன இருக்கு
At August 23, 2010 10:22 PM ,
வால்பையன் said...
// உங்களுக்கு என்ன பிரச்சனை னு எனக்கு
தெரியல நா தேவன் னு தான எழுதிருக்கேன்
மத்த ஜாதி ய பத்தி தப்பா ஏதும் எழுதுலையே
இதுல என்ன இருக்கு //
நான் பணக்காரன் என்று சொன்னால் மறைமுகமாக வேறு ஒருவனை ஏழை எனக்குறிக்கிறது, நான் இன்ன சாதி என்றால் உலகில் உள்ள சாதி அனைத்தையும் நான் ஏற்று கொண்டேன் என்று தான் அர்த்தம்! என்ன தான் மற்ற சாதியை பற்றி தப்பா பேசலையே என்று சொன்னாலும், உங்களுக்குள் இருக்கும் மேல்சாதி/ஆதிக்கசாதி உணர்வு தான் நான் தேவன் என்று சொல்லவைக்கிறது!
தூக்கிபோடுங்க அந்த சாதிய!
At August 24, 2010 9:49 PM ,
Vignesh said...
//உங்களுக்குள் இருக்கும் மேல்சாதி/ஆதிக்கசாதி உணர்வு தான் நான் தேவன் என்று சொல்லவைக்கிறது!//
நான் உங்களிடம் அப்போதே சொல்லி விட்டேன்
எல்லா ஜாதியும் ஒன்று தான் இதில் யாரும் மேல் ஜாதி
கிழ ஜாதி என்ற பிரிவினை இல்லை - ஏன் தேவர் ஜாதியை
மட்டும் மேல் ஜாதி னு நினைகிறிங்க உங்க ஜாதியை உம
மேல் ஜாதி நே நினச்சுகொங்க பிரச்சனையே வராது!
At August 24, 2010 10:43 PM ,
வால்பையன் said...
//நான் உங்களிடம் அப்போதே சொல்லி விட்டேன்
எல்லா ஜாதியும் ஒன்று தான்//
எல்லா சாதியும் ஒன்று தான் என்றால் எதற்கு தேவன் என்ற தனிசாதி!
// உங்க ஜாதியை உம
மேல் ஜாதி நே நினச்சுகொங்க பிரச்சனையே வராது!//
என் தாத்தா பெயர் மாயன்!
நான் சாதி மறுப்பாளன், ஏன் என் சாதி கீழே என்று கேட்பவன் அல்ல!
At August 25, 2010 4:19 PM ,
Vignesh said...
//எல்லா சாதியும் ஒன்று தான் என்றால் எதற்கு தேவன் என்ற தனிசாதி!//
ஜாதி இல்லை என்று சொல்வது உங்கள் கொள்கை
ஜாதி இருக்கு ஆனால் ஆதிக்க ஜாதி இல்லை என்பது
என் கருத்து என் முன்னோர்கள் செய்த நல்ல விசயங்களை
மற்றவர்களிடம் என் ஜாதி முன்னோர்கள் தான் செய்தார்கள்
என்று கூறுவதற்கு அடையாளமாக தான் நான் ஜாதியை
ஆதரிக்கிறேன் மற்ற ஜாதியை இழிவுபடுத்துவதற்காக
அல்ல !
//என் தாத்தா பெயர் மாயன்!
நான் சாதி மறுப்பாளன், ஏன் என் சாதி கீழே என்று கேட்பவன் அல்ல!//
ஜாதி இல்லை என்று சொல்லும் நீங்கள் ஜாதி
வாரியாக அளிக்கப்படும் இட ஒதிக்கிட்டை நிறுத்த
போராடுங்க அது நடந்துச்சுன நானும் உங்களுடைய
கொள்கையை ஏத்துக்கிறேன் !
At August 25, 2010 8:38 PM ,
வால்பையன் said...
//ஜாதி இருக்கு ஆனால் ஆதிக்க ஜாதி இல்லை என்பது
என் கருத்து//
சாதி ஏன் இருக்கு? அதன் தேவை என்ன என்று சொன்னால் நானும் தெரிந்து கொள்வேன்!
//என் முன்னோர்கள் செய்த நல்ல விசயங்களை
மற்றவர்களிடம் என் ஜாதி முன்னோர்கள் தான் செய்தார்கள்
என்று கூறுவதற்கு அடையாளமாக தான் நான் ஜாதியை
ஆதரிக்கிறேன் //
முன்னோர்கள் என்று வந்து விட்டாலே அங்கே வரலாறின் நம்பகந்தன்மை குறைந்து விடும், நம்ம மக்களுக்கு பத்தை நூறா சொல்லி தான் பழக்கம், அது இருக்கட்டும், என் தாத்தா இவ்வாறு செய்தார் என சொல்வதற்கு எதுக்கு சாதி! அவர் அந்த சாதியில் பிறந்ததால் தான் அவ்வாறு செய்திருக்கிறார் என நம்புகிறீர்களா?
//ஜாதி
வாரியாக அளிக்கப்படும் இட ஒதிக்கிட்டை நிறுத்த
போராடுங்க அது நடந்துச்சுன நானும் உங்களுடைய
கொள்கையை ஏத்துக்கிறேன் ! //
இடஒதுகிட்டல் பயனடையாதவர்களின் பேச்சு இது தான் எப்போதும், ஆண்டாண்டு காலமாக ஆண்டான் கொழிபதும், அடிமை சிறுப்பதும் தான் நடந்து கொண்டிருக்கிறது, அவனுக்கும் வாய்பளிக்கவே இடஒதுக்கீடு! அதிலும் பொருளதாரம் பார்த்து கொடுக்கனுமென்பதே என் கருத்து!
At August 25, 2010 10:36 PM ,
Vignesh said...
அதாவது உங்கள் ஜாதியால் பெருமையாக சொல்லி கொள்ள
ஒன்றும் இல்லை அதனால் மற்றவர்களும் ஜாதியை பயன்படுத்த
கூடாது என்று நினைப்பது தவறு
//இடஒதுகிட்டல் பயனடையாதவர்களின் பேச்சு இது தான் எப்போதும், ஆண்டாண்டு காலமாக ஆண்டான் கொழிபதும், அடிமை சிறுப்பதும் தான் நடந்து கொண்டிருக்கிறது, அவனுக்கும் வாய்பளிக்கவே இடஒதுக்கீடு! அதிலும் பொருளதாரம் பார்த்து கொடுக்கனுமென்பதே என் கருத்து!//
நீங்கள் சொல்வதை பார்த்தல் தேவர்களில் எல்லோருமே பணக்காரர்கள் போன்றும்
இட ஒதுக்கிடு பெறும் ஜாதிகளில் உள்ள அனைவரும் ஏழை என்பது போல் உள்ளது
இது எப்படி இருக்கு தெரியுமா கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பது போல் உள்ளது
உங்க தனிப்பட்ட கருத்தை வைத்து கொண்டு நாம் விவாதம் செய்ய இயலாது
அப்புறம் முதலில் உங்கள் கருத்தை இட ஒதுகிட்டை அனுபவிக்கும் பணக்காரர்களிடம் கூறுங்கள்
என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள் அதன் பின் என்னுடன் விவாதம்
செய்யுங்கள்
At August 25, 2010 10:44 PM ,
வால்பையன் said...
//அதாவது உங்கள் ஜாதியால் பெருமையாக சொல்லி கொள்ள
ஒன்றும் இல்லை அதனால் மற்றவர்களும் ஜாதியை பயன்படுத்த
கூடாது என்று நினைப்பது தவறு//
புத்திசாலி!
மாயன்னு யாரு பேரு வைப்பாங்கன்னு உங்க வீட்டு பெரியவங்களை கேட்டுப்பாரும்மா!
//நீங்கள் சொல்வதை பார்த்தல் தேவர்களில் எல்லோருமே பணக்காரர்கள் போன்றும்
இட ஒதுக்கிடு பெறும் ஜாதிகளில் உள்ள அனைவரும் ஏழை என்பது போல் உள்ளது//
பணக்காரனாக இல்லாவிட்டாலும், தன்னை விட தாழ்த்தபட்ப சாதி என அழைக்கப்படும் மக்களை கேவலபடுத்துவதை கண்ணால் பார்த்திருக்கேன், என் சொந்த ஊர் உசிலம்பட்டி அருகில் கன்னியம்பட்டி!
//முதலில் உங்கள் கருத்தை இட ஒதுகிட்டை அனுபவிக்கும் பணக்காரர்களிடம் கூறுங்கள்//
அதற்கு காரணம் சாதி தானே, அந்த எழவெடுத்த சாதி என்னாத்துக்கு?
தூக்கு போட்டு போக வேண்டியது தானே!
உங்களிடம் விவாதம் செய்ய எனக்கு வேறு என்ன என்ன தகுதிகள் வேண்டும் என்று சொல்லிவிட்டால் அதையும் செஞ்சிட்டு வருவேன்!
At August 27, 2010 4:11 PM ,
Vignesh said...
//பணக்காரனாக இல்லாவிட்டாலும், தன்னை விட தாழ்த்தபட்ப சாதி என அழைக்கப்படும் மக்களை கேவலபடுத்துவதை கண்ணால் பார்த்திருக்கேன், என் சொந்த ஊர் உசிலம்பட்டி அருகில் கன்னியம்பட்டி!//
இதற்கும் இட ஒதுக்கிடுகும் என்ன சம்மந்தம் ?
//முதலில் உங்கள் கருத்தை இட ஒதுகிட்டை அனுபவிக்கும் பணக்காரர்களிடம் கூறுங்கள்//
\\அதற்கு காரணம் சாதி தானே, அந்த எழவெடுத்த சாதி என்னாத்துக்கு?
தூக்கு போட்டு போக வேண்டியது தானே!\\
முதலில் நான் கூறிய கருத்தை புரிந்து கொண்டு பதில் அளியுங்கள் (இந்த தகுதி தான் வேண்டும் ).....
சரி அது எல்லாம் விடுங்க நான் என் ஜாதி பெயரை சொல்வதால்
என்ன தப்பு நடக்கும் என்று கூறுங்கள்
At August 27, 2010 7:51 PM ,
வால்பையன் said...
// நான் என் ஜாதி பெயரை சொல்வதால்
என்ன தப்பு நடக்கும் என்று கூறுங்கள் //
ஒருவன் தன்னை தானே புத்திசாலி என கூறி கொள்வது போலத்தான் சாதி சொல்லி கொள்வதும்! அதீத் தலைகனம் மனநோயில் கூட முடியலாம்! தப்பு நடக்காம பார்த்துகோங்க தோழர்!
At August 28, 2010 10:07 PM ,
Vignesh said...
நண்பா! என் மனதில் கடுகு அளவு கூட மற்ற ஜாதியை தாழ்ந்த ஜாதி என்று
நினைக்க மாட்டேன் நான் சொல்வதை புரிந்து கொள்ளுங்கள்
எவன் ஒருவன் தன் ஜாதி தான் பெரியது மற்ற ஜாதி காரர்கள்
தன் ஜாதியை விட தாழ்ந்தவன் என்று நினைகிறானோ அது தான்
உலகில் பெரிய தவறு என்னை போன்ற பலர் எல்லா ஜாதிகளும்
ஒன்று தான் இதில் உயர்ந்தது தாழ்ந்தது என்ற பிரிவு இல்லை என்று
நினைபவர்கள் . ஜாதி இல்லை என்பது உங்கள் கருத்து நீங்கள் பெரியாரை
தலைவராக ஏற்றுகொண்டிர்கள் நான் முத்துராமலிங்க தேவரை குருவாக
ஏற்றுக்கொண்டவன் உங்கள் கருத்தை பொறுமையாக எடுத்து கூறுங்கள்
அதை நாங்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்று கட்டயபடுத்ததிர்கள்
இதற்கு மேலும் நீங்கள் சொல்வதுதான் சரி என்றால் அதுவே இருக்கட்டும்
At August 29, 2010 8:30 PM ,
prem said...
MAகாத்மாவையே மறு வாசிப்பு செய்ய வேண்டும் என்று அவ்வப்போது எழும்
கூக்குரல்களிற்கு நடுவில் முத்துராமலிங்கத் தேவர் தனது பிம்பம் கலையாமல்
தமிழ்கத்தில் வளைய வந்துக் கொண்டிருக்கிறார்
At August 30, 2010 9:43 AM ,
வால்பையன் said...
//பெரியாரை
தலைவராக ஏற்றுகொண்டிர்கள் நான் முத்துராமலிங்க தேவரை குருவாக
ஏற்றுக்கொண்டவன்//
நான் எப்போ பெரியாரை தலைவராக ஏற்று கொண்டதாக உங்களுக்கு சொன்னேன், பெரியார் தான் உலகுக்கே நாத்திகம் கற்று கொடுத்ததா? நமக்கா சுயஅறிவு இல்லையா?
சாதி நமக்கு எந்த வகையில் பயனளிக்கிறது என யோசித்தால் போதாதா, அதை தூக்கி எறிய!
At August 30, 2010 8:47 PM ,
Vignesh said...
உங்களுக்கு சுயஅறிவு ரொம்ப அதிகம் !
அது எப்படி எவ்ளோ நல்ல விஷயம்
இருந்தாலும் எதாவது குற்றம் சொல்லிடே இருக்கீங்க
//சாதி நமக்கு எந்த வகையில் பயனளிக்கிறது என யோசித்தால் போதாதா, அதை தூக்கி எறிய!//
உங்களுக்கு பயனளிக்கவில்லை என்பதனால் எல்லோரையும் சாதி பற்றி யோசிக்க கூடாது னு
சொல்றது உங்களுகே கொஞ்சம் ஓவர் அ தெரியல
At August 30, 2010 8:47 PM ,
Vignesh said...
This comment has been removed by the author.
At August 30, 2010 8:54 PM ,
வால்பையன் said...
//உங்களுக்கு பயனளிக்கவில்லை என்பதனால் எல்லோரையும் சாதி பற்றி யோசிக்க கூடாது னு
சொல்றது உங்களுகே கொஞ்சம் ஓவர் அ தெரியல //
தப்பு தான்!
உங்களுக்கு எந்த வகையில் பயனளிக்குதுக்கு சொன்னிங்கன்னா, திருத்திக்க வசதியாக இருக்கும்!
நான் குற்றம் சாட்ட வரவில்லை, எதையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்பதே என் கருத்து!
At August 30, 2010 10:31 PM ,
Vignesh said...
பிற்படுத்தப்பட்டோர் உதவித் தொகை யுனால் தான்
என் பள்ளி படிப்பை என்னால் தொடர முடிந்தது !
எதையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணம் சரி தான்
ஆனால் பிறர் கூறும் நல்ல விசயத்தையும் கேட்கலாமே !
இப்போது நம் நாட்டில் ஜாதி இல்லை என்று குரல் குறைந்த அளவே
ஒலிக்கிறது சாதிகளுள் உயர்ந்தது தாழ்ந்ததுஇல்லை என்ற
குரல் தான் அதிகம் ஒலிக்கிறது அது தான் என் கருதும் கூட !
At August 30, 2010 10:36 PM ,
வால்பையன் said...
//பிற்படுத்தப்பட்டோர் உதவித் தொகை யுனால் தான்
என் பள்ளி படிப்பை என்னால் தொடர முடிந்தது !//
அதை வாங்கும் தகுதியில் தான் இருக்கிறோமா என்றால் சரிதான்! இல்லை படிக்க வைக்கும் வசதி இருப்பின் எதற்கு அரசு சலுகை, அது இல்லாதவர்களுக்கு போய் சேரட்டுமே! உங்கள் பெற்றார்கள் காலத்தில் வசதி குறைவாக இருக்கலாம், நீங்கள் நல்ல வேலையில் இருந்தாலும் சலுகை எதிர்பார்ப்பது சரியா, அதுவும் திறமை அடிப்படையில் இல்லாமல் சாதி அடிப்படையில் பார்ப்பது சரியா!?
// நம் நாட்டில் ஜாதி இல்லை என்று குரல் குறைந்த அளவே
ஒலிக்கிறது சாதிகளுள் உயர்ந்தது தாழ்ந்ததுஇல்லை என்ற
குரல் தான் அதிகம் ஒலிக்கிறது அது தான் என் கருதும் கூட ! //
சொல்லிகொள்ளலாம் தோழர் ஆனால் உண்மை அதுவல்லவே! இன்றும் சாதி வெறி தலைவிரித்து ஆடி கொண்டு தான் இருக்கிறது, இப்போதிருக்கும் தலைமுறையாவது சாதி பற்றீல் இருந்து வெளி வராவிட்டால் நம் குழந்தைகளின் எதிர்காலமும் அபடியே கழியும்!
At August 30, 2010 11:28 PM ,
முகிலன் said...
This comment has been removed by the author.
At August 30, 2010 11:31 PM ,
முகிலன் said...
ஒரு பெண் திருமணம் செய்யாமல் இருக்கிறாள் என்றால் அவளுக்கு கணவன் என்று யாருமே இல்லை என்றுதான் பொருள். எல்லா ஆண்களையும் கணவனாகப் பாவிக்கிறாள் என்று பொருள் இல்லை.
அது போலத்தான் சாதி ஒழிப்பும். சாதியே இல்லாமல் தான் போக வேண்டுமே ஒழிய எல்லாச் சாதியையும் சமமாகப் பாவித்தல் என்பது தீர்வாகாது.
At September 3, 2010 8:53 PM ,
Vignesh said...
ஜாதி என்பது ஒரு குறிப்பிட்ட சமுகத்தை சேர்ந்த பழக்கவழக்கங்களை குறிப்பதாகும். என்னை பொறுத்தவரையில் ஜாதி என்பது எனக்கு தேவை. மேல் நாடுகளில் ஜாதி இல்லை என்று சொல்லமுடியாது. கிறிஸ்தவர்களிலும், முஸ்லிம்களிலும், ஜாதி பிரிவினைகள் உண்டு. ஜாதி இல்லை என்று சொல்பவர்கள்தான் ஜாதியை வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். எனவே ஜாதி வாரியான கணக்கெடுப்பு முக்கியம். அதற்காக நான் ஜாதி வெறியன் என்று கருதினால் எனக்கு கவலையில்லை. நான் என் சமூகம் சார்ந்த பழக்கவழக்கங்களை விட்டுவிட்டு மேல் நாட்டு நாகரிகத்தையும் மற்றவற்றையும் பின்பற்றவேண்டிய அவசியம் இல்லை.நாம் பிறருக்கு தொல்லை கொடுக்காமல் நம் செயல்கள் அமைந்தாலே போதும்.
At April 9, 2011 12:39 PM ,
ashok said...
devar is prominent nobody can compete devar caste.from the ancient we are brave and freedom fighters.always devars are supreme and unbeateable.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home